Sunday, March 05, 2006

ஒரு வாரமாய் பௌர்ணமி

இப்படித்தான் சொல்லத் தோணுது. பின்ன நம்ம நிலா இந்த வாரம் பூரா இப்படி ஒளி வீசும்போது பௌர்ணமி இல்லாம என்னவாம். வாழ்த்துக்கள் நிலா.

படமெடுத்து போடறாங்க, சந்தோஷமா எப்படி இருக்குக்கறதுன்னு சொல்லறாங்க, கல்கியில வந்த கதையை எடுத்து போடறாங்க, என்னென்னவோ பண்ணறாங்க. அதுல நமக்கு தெரிஞ்சது இந்த போட்டிதான். பூப்பறித்த அனுபவம்ன்னு அவங்க சொல்லிட்டாங்க. ஒரு போட்டியாளனா, சில சமயம் பார்வையாளனா நான் என்ன செஞ்சேன், திரைக்குப் பின் என்ன நடந்தது, எப்படி உணர்ந்தேன்னு சொல்லலாமேன்னுதான் இந்த பதிவு.

போட்டிக்கு முன்னால்

நம்ம நடத்துற புதிர்ப் போட்டிகளினால நிலாவைத் தெரியும். தெரியும்ன்னா என்ன, ஒரு சக பதிவர் என்ற முறையில் தெரியும் அவ்வளவுதான். இவங்ககிட்ட இருந்து ஒரு தனி மடல் வருது. நான் ஒரு போட்டி வைக்கப் போறேன், கலந்துக்கறீங்களான்னு. என்னடா இது, நமக்கு போட்டியா, இல்லை நமக்கே போட்டியான்னு ஒரு சந்தேகம். ரெண்டு, மூணு தடவை படிச்சு பாத்துட்டுதான் நான் ரெடி, நீங்க ரெடியான்னு பதில் போட்டேன். அமெரிக்காவில் இன்னும் ஒரு ஆளு வேணுமேன்னு திரும்பி வந்தாங்க. நம்ம இன்னொரு பிளாக்கர் ஐ.டி. பதிவு செஞ்சு டபுள் ஆக்சன் குடுக்கலாமான்னு ஒரு ஐடியா. அப்புறம் சரின்னு நம்ம கௌசிகனை இழுத்துவிட்டாச்சு.

அப்புறம் நமக்கு தோழர், நம்ம கைப்புன்னு சொன்னாங்க. சரி, காமெடி கிளப் அப்படின்னு அணிக்கு பேர் வச்சுக்கலாமேன்னு மனக்கோட்டை எல்லாம் கட்டி அவருக்கு மெயில் போட்டா ஆளு அப்பீட்டு. என்ன ஆனாருனே தெரியலை. நிலா நம்ம கிட்டயே வந்து இந்தியாவில் சப்ஸ்டிட்யூட் ஒரு ஆளைப் பிடிங்கன்னு சொன்னாங்க. சரின்னு அதுக்கும் நமக்கு புதிர் போட உதவர பெரியவர் பேரை சொல்லியாச்சு. சொல்லி இந்த பக்கம் திரும்பினா அடுத்த மெயில். ஜிரா விளையாட முடியாதுன்னு சொல்லிட்டார், அதனால அவர் இடத்திற்கு ஹரிஹரன்ஸை தள்ளியாச்சு. இன்னும் ஒரு ஆளைப் பிடியுங்கன்னு. எனக்கு ஒரு சந்தேகம். இப்படி ஆள் பிடிக்கிற திறமையை சோதிக்கத்தான் போட்டியோன்னு. (இது ஆறாம் சுற்றில் உண்மையாச்சு. அது பத்தி அப்புறம்.) நானும் சளைக்காம நம்ம பதிவுக்கு வரவங்களுக்கு மெயில் அனுப்பி பார்த்தா அவங்க எல்லரும் இந்தியாவிற்கு வெளில இருக்காங்க. (இதுல ஒருத்தரை நம்ம ரசிகர் மன்ற தலைவின்னு (ர.ம.த.) எல்லாம் எழுதிட்டாங்க. அதெல்லாம் இல்லைங்க. நீங்க மன்னிச்சு விட்டுருங்க. உங்களுக்கு ஓக்கேன்னா சொல்லுங்க. உங்க பேரைச் சொல்லறேன்.) ஆக மொத்தம் ரெண்டு பக்கமும் கமிஷன் வாங்கியிருந்தா இந்நேரம் கொஞ்சம் பணம் பண்ணியிருக்கலாம். ஹூம்.

கடைசில நமக்குத் தோழர் குமரன்னு முடிவாச்சு. நீங்க ரெண்டு பேருமே அமெரிக்காவில் இருக்கறதுனால உங்களுக்கு கொஞ்சம் பலகீனம்தான், சமாளிங்கன்னு வேற நிலா சொல்லிட்டாங்க. சரிதான் ஆடிப் பார்த்திட வேண்டியதுதான் என களத்தில் இறங்கியாகிவிட்டது. இதுக்கு நடுவிலே, நம்ம 4X4 பதிவுல இந்த போட்டியை பத்தி சொல்லப் போக, நீ எப்படி சொல்லலாம்ன்னு சண்டை வேற போட்டாங்க இந்த நிலா. இதற்கு வேற ஒரு KSKV (அதாங்க கதவை சாத்தி கால்ல விழறது) பண்ண வேண்டியதாப் போச்சு.

போட்டி
ஆறு சுற்று. எல்லாவற்றிலேயும் நல்லா செய்தாதான் வெற்றி. இவ்வளவுதான் தெரியும். இந்த ஆழமான அறிவோட போட்டியில இறங்கியாச்சு. ஒவ்வொரு ரவுண்டா பாக்கலாம்.

சுற்று 1
போட்டியன்று அமெரிக்க காலை. கண்விழித்தால் சுற்று 1-க்கான கேள்விகள் வந்திருந்தது. மொத்தம் 5 கேள்விகள். அதில் மூன்றுக்கு பதில் வேற சொல்லி முடித்துவிட்டார்கள். சரிதான் நமக்கு இந்த போட்டி சரிவரப் போவதில்லை என்றே முடிவு கட்டியாகிவிட்டது. பின் குமரனுடம் ஆலோசித்து இரண்டு தவறான விடைகளுக்குப் பின் ஒரு சரியான விடையை சொல்லியாகி விட்டது. நம்ம ர.ம.த (இப்போதைக்கு இப்படி சொல்லறேன், அவங்க பேர் போட அனுமதி தந்தாங்கனா அவங்க பேரைத்தான் படிக்கணும். ஓக்கே.) வேற தனிமடலில் விடையை சொல்லிப் போட சொன்னார்கள். மீதமிருந்த கேள்விக்கு விடையை தேடி நம்ம நண்பர் குழாமை முடுக்கி விட்டேன். ஐந்தே நிமிடங்களில் விடை வந்தது. ஆனால் நான் பார்க்காமல் விட்டுவிட்டேன். பார்த்து போடுவதற்குள் கௌசிகன் முந்தி விட்டார். மன்னியுங்கள் பதில் தந்த நண்பரே. ஆகவே கிடைத்தது 10 புள்ளிகள். விட்டது 40.

சுற்று 2
தலைவரை பத்தி பேசி உசுப்பேற்றி விட்டார்கள் நிலா. உடன் நண்பர்கள் குழாமுடன் ஆலேசனை. நல்லதாக ரெண்டு ஐடியாக்கள் கிடைக்க, அதை செய்வதற்குள் செல்வன் அதை ஒட்டியே ஒரு விளம்பரம் போட, மீண்டும் வரைபலகைக்கு. இந்த சுற்றுக்கு நேரம் இருக்கிறதே. பிறகு வரலாம் என்று விட்டோம். நடுவில், வந்தேண்டா பால்க்காரனை உல்டா செய்து குமரனுக்கு அனுப்பினேன். அவர் நமது தமிழை சரி செய்து, அவர் பங்குக்கு வார்த்தைகளைப்போட்டு விட்டு இதனை அனுப்பி விடலாம் அல்லது முதலில் ஆன மாதிரி வேறு யாராவது இதைப்போல் செய்துவிடப்போகிறார்கள் என சொன்னார். காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு. இது மிக அருமையாய் வந்திருக்கிறது என நாங்களே பாராட்டிக் கொண்டு அனுப்பி விட்டோம். அதன் பிறகு நண்பர்கள் திட்டியதை அச்சிலேற்ற முடியாது. விட்டு விடுவோம். நல்ல வேளை இம்முடிவு வரும் பொழுது எங்கள் அணி வலுவான நிலையில் இருந்ததால் தப்பித்தோம்.

சுற்று 3
இது கொஞ்சம் சுலபமாகவே இருந்தது. குமரனும் நானும் பேசி பதிலை அனுப்பி விட்டோம். நமது ர.ம.தவும் விடை சரியானதுதான் என உறுதி செய்தார். கூடவே மேலும் இரு விடைகளையும் போட்டோம். சிக்கலில்லாத சுற்று. குமரன் சொன்னது போல் இந்த சுற்று தான் எங்கள் தன்னம்பிக்கையை மீட்ட சுற்று. நாங்கள் இருவருமே அமெரிக்காவில் இருந்தது கலந்து பேசிக்கொள்ள உதவியாய் இருந்தது. இச்சுற்றின் பின்னூட்டத்தில்தான் ர.ம.தவிற்கு அப்பட்டம் கிடைத்தது! இச்சுற்றின் இறுதியில் நாங்கள் மல்லிகை அணியுடன் கூட்டாக இரண்டாமிடத்தில் இருந்தோம்.

சுற்று 4
மீண்டும் 5 கேள்விகள் இந்திய பகல் நேரத்தில். ஆனால் சுற்று ஒன்றின் அனுபவம் காரணமாக அதிகாலையிலேயே எழுந்தாயிற்று. அதற்குள் தேவ் இரு பதில்களைப் போட்டு இருந்தார். நானும் கஷ்டப்பட்டு ஒரு பதிலைப் போட்டேன். மீதம் இருந்தது இரு கேள்விகள். என்ன தேடியும் விடைகள் கிடைக்கவில்லை. குமரன் நான் சம்பந்தப்பட்டவர்களுக்கு தனிமடல் அனுப்பி விடைகளை வாங்குகிறேன் என்றார். வாங்கியும் விட்டார். அதில் இவரைத் தவிர வேறு யாருமே மெயில் அனுப்பவில்லை என்று இருவரும் சொன்னதுதான் இவரின் முயற்சிக்கு சர்டிபிகேட். நிலா சொல்வது போல் இதுதான் இனிஷியேட்டிவ். பலருக்கும் இந்த சுற்று பிடிக்கவில்லை. ஆனால் நிலாவின் கருத்துகளை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆக மொத்தம் எங்களுக்கு 30 மதிப்பெண்கள். முக்கியமாக முதலிடத்தில் இருந்த சாமந்தியினருக்கு எதுவுமில்லை. இப்பதிவின் பின்னூட்டங்களை கட்டாயம் படியுங்கள். குமரனும் நானும் ஆடிய பிள்ளையார், முருகன் விளையாட்டு எனக்குப் பிடித்தது.

சுற்று 5
அணியினர் இருவரும் கலந்தாலோசித்தால் மட்டுமே பதில் கூற முடியும் என்பதான கேள்விகள். நாங்கள் இருவருமே அமெரிக்காவில் இருந்ததால் மிகச் சுலபமாக முடித்துவிட்டோம். விதிமுறைகளை சரியாகப் படிக்காததால் ஒரு 5 புள்ளிகள் கோட்டை விட்டேன். குமரனின் பெருந்தன்மை என்னை திட்டவில்லை. அது மட்டுமில்லை இப்பதிவின் பின்னூட்டத்தில் 'இங்கேயும் கொஞ்சம் அவசரப்பட்டு 5 புள்ளிகளைத் தவறவிட்டுட்டோம். ' என எழுதி என் தவறில் அவரும் பங்கெடுத்துக்கொண்டார். Hats Off Kumaran. இருந்தாலும், இச்சுற்றின் முடிவில் நாங்கள் முன்னணியில்.

சுற்று 6
இதுதாங்க நம்ம சுற்று. 5-ம் சுற்று வரும் போழுதே இதுவும் வந்துவிட்டது. ஆனால் அதைப் போடும் மும்முரத்தில் இதை கவனிக்கவில்லை. ஐந்தாம் சுற்றை முடித்துவிட்டு பார்த்தால் ஒரு வோட்டு கூட விழவில்லை. நிலா வேறு பிரச்சாரம் செய்யலாம் என்று முடுக்கிவிட்டார். என்ன செய்வது என்று ஆலோசனை. குமரனுக்கு அதிகம் பேரைத்தெரியுமென்பதால் அவர் வீடு வீடாகச் சென்று வோட்டு கேட்பது என்றும், நான் பதிவு போட்டு பொது மக்களை அழைப்பது என்றும் முடிவானது. நண்பர்களையும் வோட்டு சேகரிக்க அழைத்தோம். இந்த உத்தி சரியாக வேலை செய்ததால் மற்ற அணியினராலும் காப்பியடிக்கப்பட்டது.

அது மட்டுமில்லாமல் இரண்டாம் சுற்றின் முடிவுகள் தெரியாததால், இரண்டாமிடத்திலிருந்த சாமந்தியை விட குறைந்தபட்சம் 25 வாக்குள் பெற்றால் போட்டியை வென்றுவிடலாம் என கணக்கிட்டு, இதுதான் நமது இலக்கு என செயல்பட ஆரம்பித்தோம். நான்காம் சுற்றில் உதவிய சிவாவும், மதியும் முதலிரண்டு வோட்டுக்களை பதிய இச்சுற்று எங்களுக்கு சாதகமாகவே தொடங்கியது. செல்லக்கூடிய வோட்டுகளில் முதல் 20 வோட்டுகள் எங்களுக்கு விழுந்தது ஆச்சரியம்தான். சாமந்தியினரை விட 22 வாக்குள் மட்டுமே அதிகம் பெற முடிந்தாலும், (எங்கள் இலக்கு 25) இச்சுற்று எங்களுக்கு மகத்தான வெற்றி என்பதில் சந்தேகமில்லை. நிலா சொல்லியது போல் உழைப்பில்லாமல் இவ்வெற்றி வந்திருக்க வாய்ப்பேயில்லை. இதில் குமரனின் பங்கு அதிகம். சாமந்தியினர் இருவரும் வலையுலகிற்கு புதிது என்பதால் அவர்களுக்கு அதிகம் பேரைத்தெரியாமல் போனது அவர்களின் பலவீனமாய் ஆனது. எங்களுக்கு பெரும் பின்னடைவைத் தந்த இரண்டாம் சுற்றிற்கு மாற்றாக அமைந்தது இச்சுற்று.

வெற்றி! வெற்றி! இப்படியாக போட்டியை வென்றாகியாயிற்று.

போட்டிக்கு பின்

இதுவே பெரிய பதிவாய் போனதால் ஒரு வரி செய்திகள் வடிவத்தில்.

முதலாவது, இந்த போட்டியை, நினைத்து, நடத்தி, வெற்றிகண்ட நிலாவிற்கு பாராட்டுகள். கூடவே நம்ம குமரனுக்கும், வோட்டு போட்ட மக்கள்களுக்கும், உதவிய நண்பர்களுக்கும் எனது நன்றி. (ஆமாம் இப்பதான் பார்த்தேன். உங்க அறிமுக பதிவுல 'தமிழ்மணம் கொஞ்ச நாளா டல் அடிக்கிறமாதிரி ஒரு ஃபீலிங்.'ன்னு எழுதியிருக்கீங்களே நிலா, நாங்க போட்டி எல்லாம் நடத்தி, பின்னூட்ட சாதனையெல்லாம் பண்ணினது உங்க கண்ணில் படலையா?)

நல்ல நண்பர்களின் அறிமுகம். முக்கியமாக தருமி அய்யா. (ஆமாம் அய்யாதான், தருமி அய்யா!). அது மட்டுமில்லாது தெரியாத பலருக்கு நம்மை தெரிய வைத்த ஒரு சந்தர்ப்பம்.

நாங்கள் இருவருமே அமெரிக்காவில் இருந்த ஒரு பலகீனத்தை பலமாய் மாற்றி வெற்றி கண்டதில் கொஞ்சம் கூடுதல் பெருமை.

நமக்கும் புதிர்கள் அல்லாத சில வேலைகளைச் செய்ய முடியும் எனக்கண்டது ஆச்சரியம்தான். இதனால் புதிர்களிலிருந்து கொஞ்சம் விலகி வேறு பதிவுகளும் போடலாமென ஒரு ஐடியா. என்ன சொல்லறீங்க?

வீட்டில் இரு நாட்கள் ஒன்றும் செய்யாமல் இருந்ததற்கு பரிகாரமாக, நிலா பரிசாக தரும் DVDயை துணைவியாருக்கு பிடித்ததாய் தேர்ந்தெடுக்கச் சொல்லி ஒரு மாதிரி சரிகட்டிவிட்டேன். (அய்யய்யோ, நமக்கு கல்யாணம் ஆயிருச்சுன்னு சொல்லிட்டேனே)

நிலா, தருமி, தேவ் எல்லாரும் சேர்ந்து இ.கோ., மேஸ்திரி, கொளுத்து என்றெல்லாம் அழைக்கப்பட்ட நம்மை கொத்ஸ் ஆக்கிவிட்டார்கள். இப்படியே போய் தக்காளி கொத்ஸு, கத்திரிக்காய் கொத்ஸு என மாறி, கடைசியில் யோவ் தக்காளி, என்ன குண்டு கத்திரிக்காய் என்றெல்லாம் அழைக்கப்படாமல் இருந்தால் சரி. :)

நாம் ரெகமெண்ட் செய்த கௌசிகனும், ஹரிஹரன்ஸும் நன்றாக விளையாடி மானத்தை காப்பாற்றி விட்டார்கள். வாழ்த்துக்கள் நண்பர்களே.

இரண்டு நாட்களாக, இந்த போட்டியினால் செய்யாமல் விட்ட பணிகளை செய்ய வேண்டி வந்ததாலும், தூங்காமல் இழந்த தூக்கத்தை ஈடுகட்ட வேண்டியிருந்ததாலும், இப்பதிவு கொஞ்சம் லேட். மன்னிச்சுக்கோங்க. மறக்காம நிறையா பின்னூட்டம் போடுங்க. ஓக்கேவா?

125 comments:

said...

எந்த விழயத்தைக் கொடுத்தாலும் பக்கம் பக்கமாக எழுதுவீர் போலும்..ஸ்கூல்லே ஹிஸ்டரி ஜியாக்ரஃபி பரிட்சையில் எவ்வளவு பக்கம் எழுதினேரோ?

நல்லா இருக்கய்யா உங்க எழுத்து பாணி...keep it up

said...

வாழ்த்துகளுக்கு நன்றி பெரியவரே. ஹிஸ்டரி ஜியாக்ரஃபி பரிட்சையில் அவ்வளவு எழுதிய ஞாபகம் இல்லை. ஆனால் காமெர்ஸ் மற்றும் இகனாமிக்ஸ் தேர்வுகளில் இதுபோல் கதை விட்டு அதிக மதிப்பெண் வாங்கிய அனுபவமுண்டு.

said...

போட்டி அனுபவத்தை நல்லா சொல்லியிருக்கீங்க கொத்தனாரே. ரொம்ப நன்றி.

//காமெர்ஸ் மற்றும் இகனாமிக்ஸ் தேர்வுகளில் இதுபோல் கதை விட்டு அதிக மதிப்பெண் வாங்கிய அனுபவமுண்டு//

அங்க எல்லாம் பதிலோட சைசப் பாத்துத் தான் மார்க்ஸா? :-)

said...

யோவ் கத்திரிக்கா கொத்சு!
ரீபசுக்குத் தான் இம்மாம் பெரிய பில்டப்புன்னு நெனச்சு படிச்ச என்னைய முழுசா கவுத்துட்டியேயா? ஒம்மை என்ன செஞ்சா தகும்?

said...

//அங்க எல்லாம் பதிலோட சைசப் பாத்துத் தான் மார்க்ஸா?//

சைஸ் இல்லைங்க. வெயிட்தான். வாத்தியரு சும்மா பழைய பேப்பர்காரன் மாதிரி தூக்கிப் பார்த்து மார்க் போடுவாங்க. :)

வாத்தியாருங்களா, இதெல்லாம் தாமாசுக்கு, கண்டுக்காம விட்டுடுங்க.

said...

கைப்பு,
தமிழ் படிக்க தெரியாதா? உம்மை மாதிரி ஆளுங்களுக்காகத்தானே இப்படி முதலிலேயே சொல்லியிருக்கேன்.

//ஒரு போட்டியாளனா, சில சமயம் பார்வையாளனா நான் என்ன செஞ்சேன், திரைக்குப் பின் என்ன நடந்தது, எப்படி உணர்ந்தேன்னு சொல்லலாமேன்னுதான் இந்த பதிவு.//

said...

(அய்யய்யோ, நமக்கு கல்யாணம் ஆயிருச்சுன்னு சொல்லிட்டேனே)

:-))))))))
அதைத்தான் மூணு பதிவுக்கு முன்னாடியே சொல்லியாச்சே!

ஆமா! இப்படி எழுதினதுக்கு இன்னொரு டிவிடி யா!!!!!!!!!

தியாக்

said...

//கைப்பு,
தமிழ் படிக்க தெரியாதா? உம்மை மாதிரி ஆளுங்களுக்காகத்தானே இப்படி முதலிலேயே சொல்லியிருக்கேன்.//

அது சரி...ஆதி பேரையும் போலி டோண்டு பேரையும் சொல்லி ரீபஸ் போட்ட ஆளு தானய்யா நீரு...நீங்க பவுர்ணமி, "//ஒரு போட்டியாளனா, சில சமயம் பார்வையாளனா நான் என்ன செஞ்சேன், திரைக்குப் பின் என்ன நடந்தது, எப்படி உணர்ந்தேன்னு சொல்லலாமேன்னுதான் இந்த பதிவு.//" சொன்னா எப்படி நம்புறதாம்? எங்கனா ஒரு ரீபஸ் ஒளிஞ்சிருக்கும்னு ஒரு கணக்கு தான்.

said...

அட ஆமாம் தியாக்,
நம்ம 4X4 பதிவை மறந்தே போயிட்டேன். நான் எழுதறதெல்லாமா ஞாபகம் வச்சிருக்கீங்க. சாக்கிரதையா இருக்கணும்டோய்.

நிலாக்கா, தியாக் சொல்லறது காதுல விழுதா?

said...

கைப்பு,

Dont judge a post by its titleன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்கா. (சரி, அவங்க புத்தகத்தைப் பத்திதான் சொல்லியிருக்காங்க. இப்போ என்ன?)
அந்த பதிவுகள் பேரு மட்டும்தான் அப்படி இருக்குமே தவிர விஷயம் ரீபஸ்தான்னு கரெக்ட்டா சொல்லியிருக்கோம்மில்ல. இதுல அப்படியா சொன்னேன்?

தப்பு கண்டுபிடித்தே பேர் வாங்க அலையுறாங்கப்பா.

said...

//தப்பு கண்டுபிடித்தே பேர் வாங்க அலையுறாங்கப்பா.//

யோவ்! போன தரம் நானூறு அடிச்சீரு...இந்த தரம் ஐநூறு அடிக்க வக்கலாம்னு பாத்தா நீரு நம்மளையே கவுக்கீரா? ஒம்ம பேச்சு நான் கா!

said...

கைப்பு,

இப்படி விஷயம் தெரியாத ஆளா இருக்கியேப்பா. நானா தப்பு கண்டுபிடிக்கறேன்னு ஒரு தன்னிலை விளக்கம் தரணும், அதுக்கு நான் தம்பி நாம இரு குழல் துப்பாக்கி அது இதுன்னு வசனம் பேசணும். அப்புறம் வைகோ, கலைஞர் (முன்னே இருந்தா) மாதிரி கண்ணீர் விடணும். இதெல்லாம் இல்லைன்னா எப்படி 500?

நீங்க கா விடறது எல்லாம் சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு.

said...

//நீங்க கா விடறது எல்லாம் சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு. //

இருந்துட்டு போட்டும். இருந்தாலும் கா கா தான்.

said...

எப்ப நமக்குள்ள இவ்ளோ ஆகிப் போச்சோ...இதுக்கப்புறம் நா எதிர் கட்சிக்குத் தாவிடலாமானு யோசிக்கிறேன்?

said...

//இருந்துட்டு போட்டும். இருந்தாலும் கா கா தான்//
மக்'கா',
முக்'கா'வாசி முடிவை மாத்திக்குவீங்க. மாட்டேன்னு சொல்ல நீங்க என்ன மக்'கா'?
ஒருக்'கா' மாத்தமாட்டேன்னு அடம் பிடிச்சா வந்து 'கா''கா' பிடிக்க வேண்டியதுதான்.
அதோட துளசியக்'கா', நிலாக்'கா', மதுமிதாக்'கா'ன்னு நம்ம அக்'கா'க்களை எல்லாம் சரிக்'கா' கவனிச்சு தூது போக சொல்ல்லாம்.
சும்மா இருக்'கா'ம, ஒரு கணக்'கா' பின்னூட்டம் போட்டு, ஒரு பிணக்'கா' பாவலா காமிச்சு, என்னை தனிக்'கா' புலம்ப விடறதுதானே உங்க திட்டம்?
எனக்'கா' தெரியாது?

said...

//மக்'கா',
முக்'கா'வாசி முடிவை மாத்திக்குவீங்க. மாட்டேன்னு சொல்ல நீங்க என்ன மக்'கா'?
ஒருக்'கா' மாத்தமாட்டேன்னு அடம் பிடிச்சா வந்து 'கா''கா' பிடிக்க வேண்டியதுதான்.
அதோட துளசியக்'கா', நிலாக்'கா', மதுமிதாக்'கா'ன்னு நம்ம அக்'கா'க்களை எல்லாம் சரிக்'கா' கவனிச்சு தூது போக சொல்ல்லாம்.
சும்மா இருக்'கா'ம, ஒரு கணக்'கா' பின்னூட்டம் போட்டு, ஒரு பிணக்'கா' பாவலா காமிச்சு, என்னை தனிக்'கா' புலம்ப விடறதுதானே உங்க திட்டம்?
எனக்'கா' தெரியாது?//

கத்திரிக்கா,
இப்பிடியெல்லாம் ஆன் - தி - ஸ்பாட் கா கா வா சிலேடையெல்லாம் எழுதுனீங்கன்னா, நாம ஏதோ சொல்லி வச்சுக்கிட்டு தான் கேம் ஆடறோம்னு நெனச்சுக்கப் போறாங்க. எதுவானாலும் கொஞ்சம் யோசிச்சி பாத்து செய்யயா!

said...

//எப்ப நமக்குள்ள இவ்ளோ ஆகிப் போச்சோ...இதுக்கப்புறம் நா எதிர் கட்சிக்குத் தாவிடலாமானு யோசிக்கிறேன்?//

இன்று வெளியே சென்றாலும், உமக்காக எம் கதவுகள் என்றுமே திறந்து இருக்கும், எம் மனதில் உமக்கு என்றுமே தனி இடம் காத்திருக்கும். வெளிஉலகம் உன் முதுகில் குத்திய பின் சாய்ந்தழ எம்தோள்கள் தயாராக இருக்கும்.

தம்பீ, நீ எங்கேயும் செல்லவில்லை, இங்கேதான் வருவாய். (கடைசி வரி எனக்கும் புரியலை. ஆனா பின்நவீனத்துவ இலக்கியம் இப்படித்தான் இருக்கணுமாமே)

said...

//நாம ஏதோ சொல்லி வச்சுக்கிட்டு தான் கேம் ஆடறோம்னு நெனச்சுக்கப் போறாங்க.//

நினைக்கட்டுமே. எனக்கு வேண்டிய மாதிரி 20 பின்னூட்டம் இதுனால வந்தாச்சுல்ல. (இப்போ 18தான், இருந்தாலும் உங்க பதிலும், அதற்கான என் பதிலும் வரமயா போயிடும்)

said...

///நான் எழுதறதெல்லாமா ஞாபகம் வச்சிருக்கீங்க///

கோயமுத்தூரப்பத்தி எழுதினதுல இருந்ததாலதாங்கண்ணா!
ஆமா! சைக்கிள் கேப்புல அதையும் NILA கிட்ட கேட்டுட்டேளே! பேஷ்! பேஷ்!

ம்! பௌர்ணமின்னெல்லாம் சொல்லியிருக்கீங்க...கிடைச்சாலும் கிடைக்கும்........
:-))))

தியாக்

said...

தியாக்,
நீங்க பாத்துட்டீங்க. ஆனா அந்த அக்கா பாக்கணுமில்ல.
ஆமாம் நீங்க ஏன் ஒரு வலைப்பூ ஆரம்பிச்சு உங்களைப் பத்தி எழுதக் கூடாது. முன்னமே செஞ்சிருந்தீங்கன்னா எங்களுக்கு ஒரு வோட்டு கிடைச்சிருக்குமில்ல.

said...

//(இப்போ 18தான், இருந்தாலும் உங்க பதிலும், அதற்கான என் பதிலும் வரமயா போயிடும்)//

மக்'கா',
உம்மோட ஒரு அளவுக்'கா' வச்சுக்கணும் போலிருக்கே! ஒம்ம சூதாட்டத்தில நம்மள பகடக்'கா'வா ஆக்கிட்டீரு. நல்லாருந்தா சரி தான்!

said...

தம்பீ, நீ எங்கேயும் ***செல்லவில்லை***, இங்கேதான் ***வருவாய்***.

pun intended ?
:-)))

said...

///ஒம்ம சூதாட்டத்தில நம்மள பகடக்'கா'வா ஆக்கிட்டீரு.//

நம்ம கூட இருக்கும்போதே இப்படி. வெளிய போனா என்ன ஆகும்ன்னு யோசிச்சு பாத்தீங்களா?

//இதுக்கப்புறம் நா எதிர் கட்சிக்குத் தாவிடலாமானு யோசிக்கிறேன்?//

இப்படி எல்லாம் பேசப்பிடாது. என்ன?

said...

//தம்பீ, நீ எங்கேயும் ***செல்லவில்லை***, இங்கேதான் ***வருவாய்***. //

பின்நவீனத்துவ இலக்கியம்ன்னு போட்டவுடனே என்னவெல்லாம் கண்டுபிடிக்கறாங்கப்பா.

இல்லைங்க. அவ்வளவு யோசிக்கலை. அந்தாளு ஏற்கனவே வெளிய போறேன்னு துள்ளிக்கிட்டு இருக்கார். நீங்க வேற ஏத்திவிடாதீங்க. :)

said...

நீர் தான் அக்கா அக்கா என்கிறீர்!
அங்க பின்னூட்ட பிதாமகள் உம்மை பத்தி ஊருக்கு போன உடனே பொறாமை படறாரே!

சங்கத்து ஆளுங்கள கூட்டிகிட்டு அங்க போங்கப்பா!!!!!!!!

எதோ என்னால முடிந்தது :-)))))))))))

இன்னைக்கு உமக்கு தூக்கம் அம்பேல்!!!!!!!!!!!!!

தியாக்

said...

நீர் தான் அக்கா அக்கா என்கிறீர்!
அங்க பின்னூட்ட பிதாமகள் உம்மை பத்தி ஊருக்கு போன உடனே பொறாமை படறாரே!

சங்கத்து ஆளுங்கள கூட்டிகிட்டு அங்க போங்கப்பா!!!!!!!!

எதோ என்னால முடிந்தது :-)))))))))))

இன்னைக்கு உமக்கு தூக்கம் அம்பேல்!!!!!!!!!!!!!

தியாக்

said...

////ஆமாம் நீங்க ஏன் ஒரு வலைப்பூ ஆரம்பிச்சு ///////


'சாக்கிரதையா இருக்கணும்டோய்.' அப்படின்னு சொல்லிட்டு அதையே என்னையும் சொல்ல வைக்கிறீரே. வுடு ஜுட்............

THYAG

said...

//அங்க பின்னூட்ட பிதாமகள் உம்மை பத்தி ஊருக்கு போன உடனே பொறாமை படறாரே!//

அங்கதான் வசிஷ்டர் வாயால பிரம்மரிஷி பட்டம் வாங்கியாச்சே. குடும்பத்தில இதெல்லாம் சகஜமப்பா. (நீங்க என்ன ஃபேமலிடா இதுன்னு சொல்லறது கேக்குது)

//சங்கத்து ஆளுங்கள கூட்டிகிட்டு அங்க போங்கப்பா!!!!!!!! //

அங்க கூட்டிக்கிட்டு போனா என்னியதாம்பா அடிப்பாங்க. வேணாம். நான் கைப்பு மாதிரியில்ல. அடிதாங்கற உடம்பு இல்லைய்யா நமக்கு.

//இன்னைக்கு உமக்கு தூக்கம் அம்பேல்!!!!!!!!!!!!!//
போன வாரம் பூரா நிலா. இன்னிக்கு நீங்களா. சரியாப் போச்சு.

said...

//வுடு ஜுட்............//

ஒரு நாள் ஆர்வக்கோளாறுல ஆரம்பிப்பீங்க. செல்லம், அப்போ வைக்கறண்டி ஆப்பு.

said...

///செல்லம், அப்போ வைக்கறண்டி ஆப்பு.////

அன்பா வைக்கிறது ஆப்பாக இருந்தாலும் இன்முகத்துடன் ஏற்றுக்கொள்வோம்..........
எப்பிடி......

வர்ட்ட்டா.........

தியாக்

said...

//வர்ட்ட்டா.........//

என்னமேப்பா, நல்லா இருந்தா சரி.

said...

முக்கியமாக தருமி அய்யா. (ஆமாம் அய்யாதான், தருமி அய்யா!).// - அட போங்கய்யா!!

நிலா, தருமி, தேவ் எல்லாரும் சேர்ந்து இ.கோ., மேஸ்திரி, கொளுத்து என்றெல்லாம் அழைக்கப்பட்ட நம்மை கொத்ஸ் ஆக்கிவிட்டார்கள்.//- நான் என்ன நினச்சுக்கிட்டு இருக்கேன்னா, கொத்ஸ்-ன்னு நாமகரணம் பண்ணினது நாந்தேன்னு..?

வெயிட்தான். வாத்தியரு சும்மா பழைய பேப்பர்காரன் மாதிரி தூக்கிப் பார்த்து மார்க் போடுவாங்க. :)
வாத்தியாருங்களா, இதெல்லாம் தாமாசுக்கு, கண்டுக்காம விட்டுடுங்க.//
அது எப்படி முடியும்? நாங்க இப்ப வேற டெக்னிக் வச்சிருக்கோம்; ஒரு பெரிய ஹால்ல கட்டம் போட்டு (பாண்டி விளையாட்ட்டு விளையாடுவோமில்ல, அது மாதிரி) அதில மார்க் எழுதிட்டு, பேப்பர் கட்டை ஒரு ஓரத்தில வச்சிக்கிட்டு, ஓஓஓஓங்கை ஒரு எத்து. எந்த பேப்பர் எந்த கட்டத்தில உழுதோ அதுக்கு அந்தந்த மார்க்! - இது எப்படி இருக்கு?

Dont judge a post by its titleன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்கா. //- நானெல்லாம் இப்படி சொல்லவே இல்லையே; ஆனாலும் நல்லா இருக்கு.

கைப்புள்ள..! போன தரம் நானூறு அடிச்சீரு...இந்த தரம் ஐநூறு அடிக்க வக்கலாம்னு பாத்தா // என்னங்கப்பு, ஏதோ 'மில்லி' கணக்கு மாதிரில்ல இருக்கு!சரி..சரி... 100 மில்லியில என்ன ரொம்ப ஏறப்போகுது, இல்ல?

இதுக்கப்புறம் நா எதிர் கட்சிக்குத் தாவிடலாமானு யோசிக்கிறேன்?// - நம்ம கட்சிக்குத்தானே, கைப்பு? வாங்க...வாங்க..

said...

டுபுக்கு சொல்வது
//vote kekurathukku, post pottachunu mail adikarathukku
ithellam correcta pannungaiya...
pottikku aal serkum pothu mattum enna marandhurunga...//

said...

டுபுக்கு,
இந்தியா, அமெரிக்கா ஆளுங்கன்னு முடிவு செஞ்சது நானில்லை, உங்க ஊர்க்காரங்கதான். அவங்களை நேரடியா கேட்டுக்கோங்க. நான் விடு ஜூட்.

said...

கொத்ஸூ,
காலங்காத்தால பல்லைக் கூட தேக்காம என்ன அலம்பல் வேண்டி கிடக்கு? பின்னூட்டத்துக்கு இப்படியா அடிச்சுக்கறது?

இப்பவே சொல்லிட்டேன் - "Give respet take respet". இப்ப பாத்துக்கிட்டீரா நமக்கு எதிர்கட்சியிலிருந்தும் ஆதரவு இருக்கு. இனிமே என்னய வைஞ்சீங்க, அப்பிடியே எதுத்த வீட்டுக்குத் தாவிப்புடுவேன் ஆமா!

said...

//கொத்ஸ்-ன்னு நாமகரணம் பண்ணினது நாந்தேன்னு..?// சத்தியமா நீங்கதான் அய்யா. அவங்க் ரெண்டு பேரும் பதிவு பதிவாப் போய் பிரச்சாரம்தான் செஞ்சாங்க. அதான் கத்திரிகான்னு கூப்பிட ஆரம்பிசுட்டாய்ங்களே. சந்தோசந்தானுங்களே.

said...

//பேப்பர் கட்டை ஒரு ஓரத்தில வச்சிக்கிட்டு, ஓஓஓஓங்கை ஒரு எத்து. // அதாவது ஒரு எத்து விடர அளவு ஹயிட், வெயிட் வேணும்ன்னு சொல்லறீங்க. அப்படின்னா ஒரு 50 பக்கமாவது வேணும்மில்ல.

உண்மையா நான் எகனாமிக்ஸ் பேப்பர் 85-90 பக்கமெல்லாம் எழுதுவேன். நல்ல மர்ர்க்கும் வரும். எங்க பசங்களும் விடாம வாத்தியாரை பக்கதுக்கு எவ்வளவு மார்க்ன்னு கேட்டு நச்சு பண்ணுவாங்க.

said...

//Dont judge a post by its titleன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்கா. //- நானெல்லாம் இப்படி சொல்லவே இல்லையே; ஆனாலும் நல்லா இருக்கு.//

இல்லீங்க. நீங்க சொன்னது Dont Judge a Book by its Cover. (சரிதானுங்காளே?) அதையே கொஞ்சம் வலைப்பூ உலகதிற்கு ஏத்தா மாதிரி பிச்சு போட்டு கொத்தியது நம்ம வேலைதானுங்க.

அதான் இப்படி ஒரு திஸ்கி போட்டாச்சே. //(சரி, அவங்க புத்தகத்தைப் பத்திதான் சொல்லியிருக்காங்க. இப்போ என்ன?)//

said...

//என்னங்கப்பு, ஏதோ 'மில்லி' கணக்கு மாதிரில்ல இருக்கு!சரி..சரி... 100 மில்லியில என்ன ரொம்ப ஏறப்போகுது, இல்ல?//

அய்யய்யோ இது ஊற்றிக் கொண்டபின் ஊட்டம் சரக்கெல்லாம் இல்லீங்க. வெறும் பின்னூட்டம்தான். இதுல 100 இல்லை, ஒவ்வொண்ணுமே முக்கியம்தான்.

இப்போ நீங்களே பாருங்க. 6 பின்னூட்டமா போட வேண்டியதை மொத்தமா ஒரு பின்னூட்டமாய் போட்டு, நம்ம பொழப்புல மண்ணள்ளி போடறீங்க பாத்தீங்களா.

said...

//இதுக்கப்புறம் நா எதிர் கட்சிக்குத் தாவிடலாமானு யோசிக்கிறேன்?// - நம்ம கட்சிக்குத்தானே, கைப்பு? வாங்க...வாங்க..//

இதுதாங்க நம்ம ஆளுங்க. ஒரு தேர்தலில் விட்டா கூட உடனே அடுத்த தேர்தல் பத்தி நினைச்சு இப்பமே ஆள் சேக்கறாங்க பாருங்க. ஒரு நாளாவது கட்சி உடையுமாங்கிற பயம் இல்லாம தூங்க விடறாங்களா. சட்.

said...

//அப்பிடியே எதுத்த வீட்டுக்குத் தாவிப்புடுவேன் ஆமா!//

யோவ் கைப்பு, மதுரைக்காரய்ங்க கிட்ட சாக்கிரதையா இரு அப்புறம், ஆலைக்காணும் தோலைக் காணுங்கப் பிடாது. சொல்லிப்புட்டேன்.

உம்மை வைகைப் புயல், நம்மூருன்னு பாசமா கூப்பிடராய்ங்க. வேத்தாளுன்னு தெரிஞ்சுது வெட்டி பொலி போட்டுருவாய்ங்க. அவ்வளவுதான் சொல்லுவேன்.

said...

//பின்ன நம்ம நிலா இந்த வாரம் பூரா இப்படி ஒளி வீசும்போது பௌர்ணமி இல்லாம என்னவாம். வாழ்த்துக்கள் நிலா.
//

என்ன... இப்ப என்னத்துக்கு அடிப்போடறாப்ல???

(கொத்ஸ், சும்மா வெளாட்டுக்கு... கொவிச்சுக்கப்படாது)

said...

//அமெரிக்காவில் இன்னும் ஒரு ஆளு வேணுமேன்னு திரும்பி வந்தாங்க. நம்ம இன்னொரு பிளாக்கர் ஐ.டி. பதிவு செஞ்சு டபுள் ஆக்சன் குடுக்கலாமான்னு ஒரு ஐடியா. //
சரியான டேஞ்சர் ஆளய்யா நீர்... :-))

said...

//
என்ன... இப்ப என்னத்துக்கு அடிப்போடறாப்ல???//

இதுக்குத்தான் முழுசும் படிக்கணும்கிறது. பின்னூட்டத்தையெல்லாம் படியுங்க. உங்களுக்கு ரொம்ப வேலை இருக்குல்லா.

said...

//சரியான டேஞ்சர் ஆளய்யா நீர்... :-))//

நாந்தேன் முன்னமே சொன்னேனே, உங்களுக்கு என்னப் பத்தி சரியா தெரியலைன்னு.

ஆமா இதுல என்ன டேஞ்சரை கண்டீரு?

said...

//இப்படி ஆள் பிடிக்கிற திறமையை சோதிக்கத்தான் போட்டியோன்னு. //

:-)))

said...

நக்கலா சிரிப்ப பாத்தா டென்சனாத்தேன் இருக்கு. அடியாத்தீ நெசமாலே அப்படி ஒரு நெனப்பு இருந்திச்சா?

said...

//ஆமா இதுல என்ன டேஞ்சரை கண்டீரு? //

நான் பாட்டுக்கு மாங்கு மான்குன்னு போட்டி நடத்திக்கிட்டிருக்க, நீர் பாட்டுக்க்கு ரெண்டு டீம்லயும் இருந்துக்கிட்டு சேம் சைடு கோல் போட்டுக்கிட்ருந்தீர்னா எல்லாரும் ஒண்ணும் புரியாம டென்ஷனாகி இருப்போம்ல:-))

said...

அம்பி வேற. அன்னியன் வேற. அம்பி வந்தா அன்னியன் வரமாட்டார். அன்னியன் வந்தா அம்பி வரமாட்டார். அதனால உங்களுக்கு அந்த கவலை வேண்டாம்.

சரி அப்படித்தான் செய்யலையே. அட்லீஸ்ட் செய்யலைன்னு சொல்லவாவது சொல்லறேனே. :) இப்ப என்ன?

said...

ஆகா ஐம்பது ஆச்சு. முதல் படி தாண்டியாச்சு.

said...

கொத்தனாரே,

போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

ரசிகர் மன்றத்துக்கு நீங்கள் ஒதுக்கும் நிதியைப்(!) பொறுத்து தலைவியாகத் தொடர்வதா, இல்லையா என முடிவெடுக்கிறேன் -)))).

said...

//இதற்கு வேற ஒரு KSKV (அதாங்க கதவை சாத்தி கால்ல விழறது) பண்ண வேண்டியதாப் போச்சு.//

என்னெல்லாம் கண்டுபிடிக்கிறீங்க சாமி

:-))

said...

//ரசிகர் மன்றத்துக்கு நீங்கள் ஒதுக்கும் நிதியைப்(!) பொறுத்து தலைவியாகத் தொடர்வதா, இல்லையா என முடிவெடுக்கிறேன் -)))).//

ஏங்க இதயத்தில் இடம் கொடுக்கறவங்க கட்சியிலே நிதியெல்லாம் குடுக்க மாட்டாங்க. தெரியுமில்ல. எல்லாம் கைக்காசு போட்டுதான் பண்ணணும். உடனே கட்சி மாறப்போறேன்னு கிளம்பாதீங்க. அங்க போனா காலில் விழுந்து, கை கட்டி நிக்கணும். அதெல்லாம் உங்களுக்கு சரி வராது. :)

said...

//அங்க போனா காலில் விழுந்து, கை கட்டி நிக்கணும். அதெல்லாம் உங்களுக்கு சரி வராது. ://

-))

said...

த.தா.
சும்மா சிரிச்சா எப்படி? நீங்க கண்டினியூ தானே?

said...

யோவ்,
என்னய்யா அநியாயமா இருக்கு. நமக்கு நாமே திட்டம் இருக்கலாம் தான். அதுக்காக இப்படியா? இவ்ளோ முழ நீள பதிவு, அதுக்கு முன்னாடியே மெயில்ல ஆள் சேர்த்து பின்னூட்ட வளர்ப்பு. நல்ல உருப்பட்டுட்டீரு.

எதுவும் சொல்லிக்கறா மாதிரி இல்ல. அவ்ளோ தான். வேறென்னத்த சொல்ல?

said...

மருந்து,
50ஆவது போட முடியலையேன்னு ஆதங்கமா? கொஞ்சம் மனசு வச்சீங்கனா நூறே போடலாமே.

said...

50- ஜாஸ்தின்னு சொன்னா..

நூறு வேணுமா? ரீபஸ் போட்டு ஓட்டினீரு. இப்ப என்னடான்னா ஹரி அண்ணா சொல்றா மாதிரி ஹிஸ்டரி, ஜியாகரபி பதிவுக்கெல்லாம் நூறு கேக்குதா? காலம் ரொம்ப கெட்டுப்போச்சுப்பா..

said...

தருமி அய்யா சொல்லற கெட்ட பழக்கம் மாதிரி பளகிருச்சுங்களே. எல்லாம் உங்களைப்போல ஆளுங்க ஆரம்பிச்சு விட்டீங்க. இப்போ எங்க போய் நிக்குதுன்னு பாத்தீங்களா?

said...

////இதற்கு வேற ஒரு KSKV (அதாங்க கதவை சாத்தி கால்ல விழறது) பண்ண வேண்டியதாப் போச்சு.//

என்னெல்லாம் கண்டுபிடிக்கிறீங்க சாமி//

இதெல்லாம் தொன்று தொட்டு வர விஷயம்தானே. நான் என்ன கண்டுபிடிச்சேன். உங்க வீட்டுல இதெல்லாம் பண்ணறது இல்லையா?

said...

//ர.ம.தவும் விடை சரியானதுதான் என உறுதி செய்தார். //
ர.ம.த-க்கு பாதி டிவிடியைப் பிச்சுக் குடுக்கணும் போலிருக்கு?

said...

அவங்களுக்கு படம் காட்டிடலாம் விடுங்க. அட உங்க டி.வி.டி படத்தை சொன்னேன்.

said...

இ.கொ,

//நீர் தான் அக்கா அக்கா என்கிறீர்!
அங்க பின்னூட்ட பிதாமகள் உம்மை பத்தி ஊருக்கு போன உடனே பொறாமை படறாரே!//


போகட்டும் விடுங்க. அவுங்கெல்லாம் 'பாசமலர்' பார்க்காதவங்களா இருக்கலாமுல்லே? இப்படி
'மூட்டிவிடறதே' வாழ்க்கை லட்சியமாக் கொண்டு பலர் இருக்காங்கதானே?:-))))

குடும்ப ஒற்றுமையைக் கலைக்க நாம் யாரையும் அனுமதிக்கக் கூடாதுங்க.


ஆச்சு. என் பங்குக்கு ஒண்ணு

said...

தியாக்,

இக்கட சூடு. இனி உங்க உள்குத்து, வெளிக்குத்து எல்லாம் வேலைக்கு ஆவாது. புரிஞ்சுதா?

//குடும்ப ஒற்றுமையைக் கலைக்க நாம் யாரையும் அனுமதிக்கக் கூடாதுங்க.//

said...

ஆமா கௌசு,

பிளாக்கர் ஐ.டி. வச்சு பாக்கும்போது அவங்களாட்டும்தான் தெரியுது. இப்படி குண்டக்க மண்டக்க யோசிக்கிறவங்கதான் உங்களுக்கு ஓட்டு போட்டிருப்பாங்க. :)

said...

அது சரி கௌசு,
நீங்க இகனாமிக்ஸ், காமெர்ஸ் எல்லாம் படிச்ச ஞாபகம் இல்லையே.

said...

யப்பா ராசா கௌசு,

நாங்க இவ்வளவு பெருசா எழுதி இருக்கோம் அது பத்தி ஒரு சத்தமுமில்லை. அது என்ன பின்னூட்டங்களை மட்டும் படிச்சு பின்னூட்டம் போடறது?

said...

ஏம்பா இப்படி தனிமடலெல்லாம். உனக்கு சொல்ல வேண்டியதை இங்க வந்து சொல்லு. அவங்க போட வேண்டிய பதிலை இங்க வந்து போடட்டும். அப்படி அவங்க போடாமல் இருந்தா நம்ம ரசிக கண்மணிகள் கௌசிகனின் கேள்விக்கு பதில் எங்கேன்னு கோஷம் போடுவாங்க. நானுன் சிவனேன்னு பின்னூட்டத்தை எண்ணிக்கிட்டு இருப்பேன்.
என்ன சொல்லுதீயா?

said...

//எந்ந நிலாக்கா, போட்ட மடலுக்கு பதிலையே காணோமே, . //

வருது வருது.

said...

வருது வருது, அட விலகு விலகு
வேங்கை வெளியே வருது

அதான் வேங்கை, சிறுத்தை எல்லாம் உள்ள போயிருச்சே. என்னும் என்ன வருது? :)

நினைச்சு பாத்தா அந்த அம்மா கையில ஒரு சாட்டையை குடுத்தா ரிங் மாஸ்டர் மாதிரிதான் இருப்பாங்க இல்லை?

said...

// (ஆமாம் இப்பதான் பார்த்தேன். உங்க அறிமுக பதிவுல 'தமிழ்மணம் கொஞ்ச நாளா டல் அடிக்கிறமாதிரி ஒரு ஃபீலிங்.'ன்னு எழுதியிருக்கீங்களே நிலா, நாங்க போட்டி எல்லாம் நடத்தி, பின்னூட்ட சாதனையெல்லாம் பண்ணினது உங்க கண்ணில் படலையா?)//

என்னா சாதனை பெரிய்ய்ய்ய்ய சாதனை...
ஏண்டா இம்புட்டு சனம் பின்னுட்டம் போடுதேன்னு ஒருக்கா போய் பாத்தா ஒரே கூத்தாவில கெடந்துச்சி. எண்ணிக்கை ஏறணும்னு கூட்டுக்காரகள்லாம் சேந்து செஞ்சுக்கறது பெரிய்ய சாதனையாய்யா :-))))

(ச்ச்ச்சும்மா....)

உண்மையாகவே பின்னூட்டத்தை ஏத்தறதுக்கு ஒரு திறமை வேணும் கொத்ஸ். இது கிட்டத்தட்ட டி.வில லைவ் ஷோ நடத்திற மாதிரிதான். எதிராளி திரும்பவந்து பதில் சொல்ல வைக்கறதுக்கு சுவாரஸ்யமா அவங்களை என்கேஜ் பண்ற திறமை வேணும். அது உங்ககிட்டே நிறைய இருக்கு. அதனால உங்களுக்கு பின்னூட்டச் சக்கரவர்த்திங்கற பட்டத்தை வழங்கறேன்:-))


நான் இதுவரைக்கும் யார் பதிவிலயும் இத்தனை பின்னூட்டங்கள் போட்டதில்லை. கௌசிகன மாதிரி நிறைய தனிமடலுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கு. அதனால இப்போ எஸ்கேப்

said...

//நினைச்சு பாத்தா அந்த அம்மா கையில ஒரு சாட்டையை குடுத்தா ரிங் மாஸ்டர் மாதிரிதான் இருப்பாங்க இல்லை? //

அந்தம்மான்னா நானா? அக்கா போய் அம்மா ஆகியாச்சா?

வேலைல எனக்கு ரிங் மாஸ்டர்னுதான் பேரு. எப்படி அய்யா தெரியும் உமக்கு?

said...

என்னய்யா நடக்குது இங்கே!

said...

//நீங்களே சொல்லிட்டீங்களே எழுத்து பாணி நல்லாருக்குன்னு. நல்லா இருந்தா நீளம் அகலம் பாக்கக் கூடாது.//

நமக்கும் ஆதரவா ஒரு கொரலு! கௌசு, ரொம்ப நன்னிங்கோவ்.

said...

//unga pathivila chila samayam best part pinnoottam thaan. chila samayamnu sollitten.//

இதப் பாருடா. இப்பந்தான் நன்னி சொன்னேன். உடனே இப்படி. நம்மாளுங்கள புரிஞ்சுக்கவே முடியலையே!

said...

//unga pathivila chila samayam best part pinnoottam thaan. chila samayamnu sollitten.//

மத்த சமயத்துல அதுவும் நல்லாயில்லையா? அதுக்கு நான் பொறுப்பு இல்லை. எல்லாரும் வந்து நிறையா பின்னூட்டம் போடுங்கடோய்.

said...

//yov kothanaare, adu inda blog sambathapattathu illaya. Adunaala thaan thani madal.//

நான் எனக்கு சம்பந்தப் பட்டது மட்டும்தான் போடணும்ன்னு எங்கயாவது சொல்லி இருக்கேன். நம்ம பின்னூட்டங்கள் எல்லாம் படிச்சசப்புறம் இப்படி ஒரு சந்தேகமா?

//adu seriya work out aaga maattinguthu. nila akka vukku mail anupparathukku padila ingaye vanthu pinnoottam pottudaren.//
இது இது. இதத்தான் சொல்லறேன்.

said...

//நான் இதுவரைக்கும் யார் பதிவிலயும் இத்தனை பின்னூட்டங்கள் போட்டதில்லை.//

இது மட்டும் பௌர்ணமி, அமாவாசைன்னு இல்லைன்னா இந்த பக்கம் வந்திருப்பீங்க?

:) (பாருங்க ஸ்மைலி எல்லாம் போட்டச்சு. அப்புறம் கோவப்பட்டு வராமா எல்லாம் இருக்கப்பிடாது)

said...

//என்னா சாதனை பெரிய்ய்ய்ய்ய சாதனை...
ஏண்டா இம்புட்டு சனம் பின்னுட்டம் போடுதேன்னு ஒருக்கா போய் பாத்தா ஒரே கூத்தாவில கெடந்துச்சி. எண்ணிக்கை ஏறணும்னு கூட்டுக்காரகள்லாம் சேந்து செஞ்சுக்கறது பெரிய்ய சாதனையாய்யா :-))))//

நீங்களே கூத்துன்னு சொல்லறீங்க. நீங்களே 'டல் அடிக்கிறமாதிரி ஒரு ஃபீலிங்'ன்னு சொல்லறீங்க.

இப்போ என்ன சொல்ல வறீங்க?

said...

//அதனால உங்களுக்கு பின்னூட்டச் சக்கரவர்த்திங்கற பட்டத்தை வழங்கறேன்:-)//

இதெல்லாம் நமக்கு பிடிக்காது. இருந்தாலும், உங்க மனசு கஷ்டப்படக்கூடாதேன்னு....

ஆனா இதைப் படிச்சா துளசியக்கா, மருத்துவர், குமரனெல்லாம் அடிக்க வருவாங்க. அதெனால, இது நமக்குள்ளயே இருக்கட்டும். ஓக்கேவா?

விளாவெல்லாம் வேண்டாம். எதுக்கு வீண் செலவு.

said...

//நான் இதுவரைக்கும் யார் பதிவிலயும் இத்தனை பின்னூட்டங்கள் போட்டதில்லை.//

இனிமேயாவது இப்படி இருக்காம கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க.

said...

//அந்தம்மான்னா நானா? அக்கா போய் அம்மா ஆகியாச்சா?//

நான் உண்மையிலேயே அந்த அம்மாவைத்தான் சொன்னேன். நீங்க இன்னும் அக்காதான்.

said...

//வேலைல எனக்கு ரிங் மாஸ்டர்னுதான் பேரு. எப்படி அய்யா தெரியும் உமக்கு?//

ஆகா. இதுதான் போட்டு வாங்கறதுன்னு சொல்லறது. நீங்களே சொல்லிட்டீங்க பாருங்க. :)

said...

//வேலைல எனக்கு ரிங் மாஸ்டர்னுதான் பேரு. எப்படி அய்யா தெரியும் உமக்கு?//

வேலைல மட்டுமா, வீட்டுலையுமான்னு ராஜுவைக் கேட்டாதான் தெரியும். ராஜு சார், நீங்களும் வந்து (பயப்படாமா) சொல்லுங்க.

said...

//என்னய்யா நடக்குது இங்கே!//

என்ன சுரேசு? இப்படி கேட்டுப்புட்டீங்க. இதுதானே நம்ம கொல்கை. (ஸ்பெல்லிங் தப்பு மாதிரி தெரியுதே!) இதைப் பத்தி நீங்களே இப்படி கேட்டா எப்படி? :)

said...

//sorry nila akka, inda pattam "has already been taken".
yov vaithiyare engiya poy tholainjeeru. neer adikkadi varalennathum unga pattathiyum pudungittanga. pochu. ivvalavu kaalama kashtappatthathellam pochu.//

சரி போனா போகுது. இளைய திலகம் மாதிரி எதாவது கொடுங்க. மருத்துவரை பகைச்சுகிட்டா நமக்கு பொழப்பு கெடும்.

அவரை சமயம் பாத்து முதுகுல குத்தறேன். :)க்

said...

//nila akka venumna anda pattathai renda piruchudalam.

pinnoottam ethara chakaravarthi, pinnoottam vangara chakravarthinnu.

kothanaare, vaithiyare enna ippo rendu perukkum santhosham thaane.//

யாருக்கு எதுன்னு கொஞ்சம் தெளிவா சொல்லேம்பா.
நீ பாட்டு இப்படி ரெண்டு பேருக்கு கொடுத்தா துளசியக்கா, குமரனெலாம் கோவப்பட போறாங்க. நமக்கு நாமே திட்டத்தை விரிவுபடுத்தி எல்லாருக்கும் ஒண்ணு குடுங்கப்பா.

said...

//
pinnoottam ethara chakaravarthi, pinnoottam vangara chakravarthinnu.
//

கொத்ஸ், இதிலே நீர் எதுலே சேத்தின்னு உமக்கே தெரியும்...

said...

கௌசிக், பின்னோட்டத்தை ஏத்தனமுன்னே, இந்த கொத்ஸ் உம்மை உசுப்பி விட்டுக்கினுகிறாரு. நீயும் அதுக்குள்ள விழுந்துட்டேரே, என்னங்காணும்?

said...

எனக்கு தெரிஞ்சாலும் வெளிய சொல்ல தன்னடக்கம் தடுக்குதே. அதான்.

அதுமட்டுமில்லை. சொல்லியிருந்தா ஒரு பின்னூட்டம். இப்போ பாருங்க. அவருக்கு ஒரு கேள்வி, அவர் பதில் போடுவார், நீங்க ஒரு கேள்வி, உங்களுக்கு என் பதில், அதற்கு நீங்கள் சொல்வது(சொல்லாமலேயா போவீங்க?) இப்படி போகுது பாருங்க.

said...

இவ்வளவு தொலநோக்கோட சிந்தனை பண்ணி நாமெல்லாம் பின்னூட்டம் போடறோம். இந்த நிலாக்கா வந்து சிம்பிளா 'என்னா சாதனை பெரிய்ய்ய்ய்ய சாதனை...' இப்படி எழுதிட்டு போறாங்க.
ஹூம்

said...

ஆமாம் கொத்ஸு, 100வது பின்னோட்டத்திற்கு, நிலாக்கா மாருதி ஏதானும் கிஃப்ட் கொடுப்பியளா?

said...

//கௌசிக், பின்னோட்டத்தை ஏத்தனமுன்னே, இந்த கொத்ஸ் உம்மை உசுப்பி விட்டுக்கினுகிறாரு. நீயும் அதுக்குள்ள விழுந்துட்டேரே, என்னங்காணும்?//

இதுதானே நம்ம தொழில். புதுசா என்னத்த கண்டீரு? அந்தா அக்காவே வாய தொறந்து நல்லதா ஒரு வார்த்தை சொல்லிட்டாங்க.

said...

என்ன சார். 100வது பின்னூட்டம் வந்தாச்சு. சந்தோசமா? இனிமேலாவது உங்கள் டிஸ்கசனை சாட்டில வச்சுக்கோங்க. பின்னூட்டத்துல வேணாம். :-)

இது 101வது பின்னூட்டமா? அப்படின்னா இது மொய்ப் பின்னூட்டம்.

said...

பெருசு,
விஷயம் தெரியாம இப்படி கேக்கீயளே. இதெல்லாம் அன்புக்கு சேர்ந்த கூட்டம். ஆசைப்பட்டு வர கூட்டமில்லை.

இருந்தாலும் கேட்டுட்டீக. அதனால அந்த அக்கா தர படத்த ஒருவாட்டி போட்டு காட்டறேன்.

குடுக்கறவங்களைப் பத்தி நம்ம கிட்ட கேக்காதீங்க. அப்புறம் அவிங்களுக்கு இல்லைன்ன எப்படி கூட்டம் வரும்ன்னு எடக்கு மடக்கா எதனா சொல்லுவேன். வம்புல மாட்டாதீக சாமி. :)

said...

இல்லை குமரன்.
உங்களுது 102ஆவதா போயிடுச்சு. அதானால என்ன. 501ஆ மொய் எழுத மாட்டீங்க. ஹிஹி.

said...

//உங்கள் டிஸ்கசனை சாட்டில வச்சுக்கோங்க. பின்னூட்டத்துல வேணாம். :-)//

குமரன், நீங்களுமா? உங்களுக்கு பின்னூட்ட சம்திங் பட்டம் குடுக்க சொன்ன ரெகமெண்டேஷன் கான்சல். :(

said...

கொத்ஸ், நிலாக்கா, கௌசிக், குமரன், கைப்புள்ள, தியாக், லதா, தருமி, ஜெயஸ்ரீ, இராமனாதன், சுரேஷ் மற்றுமெல்லோரும் நோட் பண்ணிக்கோங்கோ...முதலாவது பின்னோட்டமும் நானே, நூறாவது பின்னோட்டமும் நானே.

வைத்தியர் எங்கேப்பா? (franch ஆயில் எங்கேப்பா ஸ்டைல்லே படிங்கோ)...

said...

//50- ஜாஸ்தின்னு சொன்னா..

நூறு வேணுமா? ரீபஸ் போட்டு ஓட்டினீரு. இப்ப என்னடான்னா ஹரி அண்ணா சொல்றா மாதிரி ஹிஸ்டரி, ஜியாகரபி பதிவுக்கெல்லாம் நூறு கேக்குதா? காலம் ரொம்ப கெட்டுப்போச்சுப்பா..//

மருந்து, இப்போ என்ன சொல்லறீங்க? நீங்க சொல்லற ஹரி அண்ணாவே வந்து 100-ஆவது போட்டுட்டாரு. உமக்கு நார்மலா கிடைக்கிற மரியாதை போச்சு. உம்மை எல்லாருமா சேந்து ஏமாத்திட்டாங்க. எப்பவும் காலரை தூக்கி விட்டுக்கற நீங்க, இப்பவாவது பேண்ட்டை தூக்கி விட்டுக்கோங்கோ.

said...

//முதலாவது பின்னோட்டமும் நானே, நூறாவது பின்னோட்டமும் நானே.//

பெரியவர் ஹரிஹரன் வாழ்க.
பெரியவர் ஹரிஹரன் வாழ்க.

யாருப்பா அங்க? குமரனுக்கு எடுத்து வச்ச பட்டத்தை இப்போ பெரியவருக்கு குடுங்கப்பா.

said...

//வைத்தியர் எங்கேப்பா? (franch ஆயில் எங்கேப்பா ஸ்டைல்லே படிங்கோ)...//

படிச்சா மட்டும் போதாது. ரெண்டு பாட்டில் குடுத்து அனுப்புங்கப்பா.

வைத்தியருக்கே மருந்தா? ஹிஹி.

வைத்தியரே, இதெல்லாம் ஜாலிக்கு. இது உங்களுக்கும் தெரியும். வழக்கம் போல் வந்து ஆதரவு குடுங்க. எதிரி கட்சிக்கெல்லாம் போகாதீங்க.

said...

//தம்பீ, நீ எங்கேயும் ***செல்லவில்லை***, இங்கேதான் ***வருவாய்***.//
அப்படிப் போட்டுத் தாக்குங்க. சாமந்திக்கு ஓட்டுப் போட்ட லதா அக்காவா நீங்க ?

ஆமாம் கௌசிக்,

வலைப்பதிவரின் பின்னூட்டங்களையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று blogger-க்கு ஒரு விண்ணப்பம் அனுப்ப வேண்டும். இந்தக் கொத்தனாரின் பின்னூட்டத் தொல்லை தாங்க முடியவில்லையம்மா.
ச்ச்சும்ம்ம்மா டமாசுக்கு:-)))

said...

ஏங்க லதா,
நான் என்ன பாவம் பண்ணினேன். முதல்ல வோட்டு போடலை. இப்போ அடிமடில கை வைக்கறீங்க.
இதெல்லாம் தப்புங்க.

said...

/////இக்கட சூடு. இனி உங்க உள்குத்து, வெளிக்குத்து எல்லாம் வேலைக்கு ஆவாது. புரிஞ்சுதா?

//குடும்ப ஒற்றுமையைக் கலைக்க நாம் யாரையும் அனுமதிக்கக் கூடாதுங்க./////


எக்கட சூடறதுப்பா! உமக்கு குடும்ப பாசம் கண்ண மறைக்குது ஓய்..........

துளசியக்கா! சங்கத்துல இதெல்லாம் சகஜமுங்கோ..... தப்பா நினைக்காதீங்க...

ஆனாலும் 'பாசமலர்' எல்லாம் கொஞ்சம் ஒவரா தெரியரதா - சங்கத்துல பேசிக்கறாங்கப்பா!
:-)))))))))))

THYAG

said...

யோவ் தக்காளி கொத்சு!
ஒரு சேஞ்சுக்காச்சும் பதிவு போடைய்யா! உனக்கே இது கொஞ்சம் ஓவராத் தெரியலே?

said...

//ஆனாலும் 'பாசமலர்' எல்லாம் கொஞ்சம் ஒவரா தெரியரதா - சங்கத்துல பேசிக்கறாங்கப்பா!//

இன்னைக்கு மகளிர் தினம்ன்னு பேசிகிட்டாங்களேன்னு அப்ப்படியே பக்கதில இருக்கற லேடீஸ் கிளப் பக்கம் போனேன். (ஏதாவது கொடி ஏத்தி மிட்டாய் தருவாங்களான்னு நினச்சுதான்.)

அங்கயும் நம்ம பேச்சுதான் அடிபட்டிச்சு. அக்கா தம்பி பாசத்தை பத்தி கேள்வி கேக்கறானுங்க. இவனுங்க எல்லாம் அக்கா தங்கச்சியோட பிறந்தவனுங்களான்னு எல்லாம் பேசினாங்க. நானும் சிவசிவான்னு காதை மூடிகிட்டு வந்துட்டேன்.

தியாக், அந்த பக்கம் போயிறாதீங்கப்பூ.

:)

said...

//யோவ் தக்காளி கொத்சு!
ஒரு சேஞ்சுக்காச்சும் பதிவு போடைய்யா! உனக்கே இது கொஞ்சம் ஓவராத் தெரியலே?//

//namakku theriyathathaa ennatha ezhuthitteeru pathivula, pinnoottam podarathukku. unga pathivila chila samayam best part pinnoottam thaan.//

ஆமாய்யா. நீங்க இப்படி எல்லாம் எழுதுவீங்க. நாங்க ஒரு நாளைக்கு ரெண்டு பதிவு போடணும். ஹூம். போங்கய்யா.

நிலாக்கா போட்டியும்போது செய்யாத வேலையே தலைக்கு மேல இருக்கு. இந்த வாரக்கடைசிக்குள்ள முடிக்கணும். அப்புறந்தான் பதிவெல்லாம். அதுவரை இங்க வந்தே வெளையாடுங்க. வராம இருந்திராதீங்க. ஓக்கேவா?

said...

// Hi, a nice blog you have here... You will surely get an bookmark :) Fleshlight//

யாரோ தமிழ் தெரிஞ்ச அம்மா போலிருக்கு. அதுக்காக அவங்க குடுத்த சுட்டி எல்லாம் கிளிக் பண்ணாதீங்க. (நான் பண்ணிப் பாத்துட்டேன். டயம் வேஸ்ட். ;))

இருக்கட்டும். இந்த பின்னூட்டத்தில ஹைப்பர் லிங்க் போடற வித்தையை யாராவது கொஞ்சம் சொல்லிக் குடுங்களேன். உபயோகமா இருக்கும்.

said...

ennappa thamasayellam serious-a eduthukkaranga

sorry - I'm giving up this

THYAG

said...

//ennappa thamasayellam serious-a eduthukkaranga
sorry - I'm giving up this//

என்ன தியாக் ஸ்மைலி போட்டு இருக்கேனே கவனிக்கலையா? நம்ம பின்னூட்டத்திலே என்னிக்குமே சீரீயஸ் எல்லாம் கிடையாது.

நீங்க கிவ்வை தூக்கி மேல வச்சீங்கனா, என் பொழப்பு என்ன ஆகறது? சும்மா வந்து ஆடுங்க.

said...

தியாக்,

தப்பா எதாவது சொல்லியிருந்தேன்னா சாரி. தப்பா எடுத்துக்காதீங்க.

said...

எதுக்கு சாரியெல்லாம்.கொத்தனாரே!
இப்படியாவது கழண்டுக்கலாம்னு பார்த்தேன் :-)))))))))))))))))

ஆனா விடமாட்டீங்க போல இருக்கே! என்ன டார்கெட் ? 200 ரா?
சொல்லுங்கப்பூ .....
THYAG

said...

//ஒரு சேஞ்சுக்காச்சும் பதிவு போடைய்யா! உனக்கே இது கொஞ்சம் ஓவராத் தெரியலே?//

apdi podu kaippu:-))

said...

//இப்படியாவது கழண்டுக்கலாம்னு பார்த்தேன்//

அப்படின்னா இனிமே ஸ்மைலி போடுங்க. ஓக்கே. உங்களுக்கு இந்த நிலா அக்காவுக்கு எல்லாம் இதே வேலையா போச்சு.

said...

////ர.ம.தவும் விடை சரியானதுதான் என உறுதி செய்தார். //
ர.ம.த-க்கு பாதி டிவிடியைப் பிச்சுக் குடுக்கணும் போலிருக்கு?//

நிலாக்கா,

இப்போந்தானே இங்கன வந்திருக்கீக. பதிவு முச்சூடும் படிச்சு பின்னூட்டம் போடுங்க. அப்புறம் பாக்கலாம் அடுத்த பதிவ. என்ன.

said...

:-)))))
ippa pottutten

Yaruppa adhu?
Kaipulla , Nila ellam adikka varangala..... Aiyo.. Aiyo..

ESCAPEEEEEEEEEEEEEE

THYAG

said...

யாருப்பா அது தியாக தொரத்தரது? நானே நம்ம ர்.ம்.த. கிட்ட சொல்லி அவருக்கு எதாவது பொறுப்பு குடுக்க சொல்லலாமான்னு பாக்கறேன். இந்த நேரத்தில அவரை எதனாச்சும் பண்ணிடாதீங்க.

said...

//ஆமா! இப்படி எழுதினதுக்கு இன்னொரு டிவிடி யா!!!!!!!!!
//

எங்க வீட்டுக்காரரும் எனக்கு வர்ற பின்னூட்டத்தைப் பாத்து இப்படித்தான் கேக்குறாருங்க.

யாரும் நல்லாருந்தா சில பேருக்கு பொறுக்காதே :-))))

said...

//எங்க வீட்டுக்காரரும் எனக்கு வர்ற பின்னூட்டத்தைப் பாத்து இப்படித்தான் கேக்குறாருங்க.//

என்ன கேட்குறாரு?

1) அவருக்கும் டி.வி.டி வேணுமா? அவருக்கு குடுங்க முதல்ல.
2) பின்னூட்டத்துக்கு டி.வி.டியா? சொல்லவே இல்லையே?
3) இப்போ எனக்கு இன்னுமொரு டி.வி.டி உண்டா கிடையாதா?
4) இப்போவரைக்கும் பின்னூட்டத்துக்கு பின்னூட்டமாவே ஓடுதே, எப்போ பதிவுல எழுதிருக்கறதுக்கு பின்னூட்டம் போடுறதா உத்தேசம்?

அவசரபடுத்தல. அதை மறந்துறாதீங்கன்னு சொல்லறேன். அவ்வளவுதான்.

said...

//போனா போறாங்கன்னு விட்டுடுங்க.//

லதாக்கா சொல்லறது எல்லாம் விளையாட்டுக்கு. இது தெரியாதா கௌஸ், இல்லைன்னா, டெய்லி காலைல்ல எழுந்து ஏன் நம்ம பதிவுக்கு வராங்க. சரிதானே லதாக்கா?

அவங்க போட்டது உங்களை மாதிரி யாராவது கேப்பாங்க, நானும் பதில் சொல்லுவேன், கொஞ்சம் கவுண்ட் ஏறும்ன்னு ஒரு நல்ல எண்ணம்தான். எனக்கு தெரியும். :)

said...

// இந்தக் கொத்தனாரின் பின்னூட்டத் தொல்லை தாங்க முடியவில்லையம்மா.
ச்ச்சும்ம்ம்மா டமாசுக்கு:-))) //

இ.கொ. / கௌசிக்,

ச்ச்சும்ம்ம்மா டமாசுக்கு என்றுதான் அப்போதே எழுதினேனே பார்க்கவில்லையா? ;-)

said...

// இந்தக் கொத்தனாரின் பின்னூட்டத் தொல்லை தாங்க முடியவில்லையம்மா.
ச்ச்சும்ம்ம்மா டமாசுக்கு:-))) //

இ.கொ. / கௌசிக்,

ச்ச்சும்ம்ம்மா டமாசுக்கு என்றுதான் அப்போதே எழுதினேனே பார்க்கவில்லையா? ;-)

said...

லதாக்கா,
நீங்க சொல்லறதுக்கு முன்னாடி நாந்தான் இப்படி சொல்லிடேனே.
//அவங்க போட்டது உங்களை மாதிரி யாராவது கேப்பாங்க, நானும் பதில் சொல்லுவேன், கொஞ்சம் கவுண்ட் ஏறும்ன்னு ஒரு நல்ல எண்ணம்தான். எனக்கு தெரியும். :)//

நீங்க கவலைப்படாம வந்து பின்னூட்டம் போடுங்க. :D

said...

Ellarun ivvalavu comments pota appuram namma baya snehaidharkkaga oru line pinnotam podlaumne - good job mate - keep it up!
-muthusamy

said...

நண்பா முத்துசாமி,

வந்து படிக்கற விஷயம் தெரியும். உன் கிட்ட இப்படி பின்னூட்டம் எல்லாம் வாங்கறது எனக்கு ஆச்சரியம்தான்.

தாங்க்ஸ் வாத்தியாரே.