Sunday, September 10, 2006

விடைபெறுகிறேன்

ஆஹா! தொல்லை விட்டுதுன்னு ஜாலியா பதிவை திறக்கும் மக்கள்களே. உங்களை அவ்வளவு சீக்கிரம் விடறதா இல்லை. கடந்த இரு நாட்களில் இரண்டு விடைபெறுதல்கள் நடந்தன. தத்தம் விளையாட்டுகளில் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த இருவர், விளையாடியது போதும் என முடிவெடுத்து விட்டனர். எனது ஹீரோக்களான அவர்களை வாழ்த்திடவே இந்தப் பதிவு.



முதலில் சனிக்கிழமை அன்று யூ.எஸ். ஓப்பன் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் தனது 50ஆவது வயதில் வெற்றி பெற்று சாதனை புரிந்த மார்டினா நவரத்திலோவா. கடந்த 30 வருடங்களுக்கு மேலாக டென்னிஸ் உலகில் தனது முத்திரையைப் பதித்த இவரது வெற்றிகளை முறியடிக்க இனி ஒருவர் பிறந்துதான் வர வேண்டும். தனது கடைசி ஆட்டத்திலும் மிகத் திறமையாய் விளையாடி கோப்பையை வென்ற இவருக்கு நமது வாழ்த்துக்கள்.



அடுத்ததாக இன்று இத்தாலிய கிராண்ட் பிரி போட்டியில் வெற்றிக் கனியை பறித்த கையோடு தனது ரிட்டயர்மெண்டை அறிவித்த மைக்கேல் ஷுமாக்கர். 90 வெற்றிகள், 68 முதலிடத் தகுதிகள், 1354 வெற்றிப் புள்ளிகள், 7 முறை உலக சாம்பியன் பட்டம் - வேறேதாவது சொல்ல வேண்டுமா? இந்த வருடமும் உலக சாம்பியன் பட்டம் பெற இவரை வாழ்த்தி, இவரின் இடத்திற்கு வர இருக்கும் கிமி ரெய்க்கோனனையும் வருக வருக என வரவேற்போம். ஃபெராரியில் மைக்கேலின் பங்கு என்னவென்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இருவரும் மனதே இல்லாமல்தான் பிரிவதாகத் தோன்றுகிறது. எல்லா வகைப்பட்ட சாதனைகளும் புரிந்திட்ட நிலையிலும் தாங்கள் பங்கு பெறும் ஒவ்வொரு போட்டியையும் ஒரு புதுமுகத்திற்குண்டான உற்சாகத்துடன் எதிர் கொண்ட இவர்கள் வாழ்வு நமக்கெல்லாம் ஒரு பாடம். இவர்களைப் பற்றி விரிவான பதிவுகள் வரும். வரவில்லையென்றால் நாமே போட வேண்டியதுதான்.

இந்த இருவருமே ஒரு வெற்றியோடு தாம் விலகுவதை அறிவித்த பாங்கு என்னைக் கவர்ந்தது. Way to go Champions!

படங்கள் இணையத்தில் திருடப்பட்டவை. தந்த தளங்களுக்கு நன்றி.

58 comments:

said...

good post. Good information.

Tamil blog world needs more good posts like this !!
thanks

Seemachu

said...

சீமாச்சு அண்ணா,

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

said...

/./
Seemachu said...
good post. Good information.

Tamil blog world needs more good posts like this !!
thanks

Seemachu
/./

இதுக்கு பேருதான் குசும்போ..::)

said...

ஏமாத்திட்டிங்களே கொத்ஸ்!!!

said...

Congrastulations and a big THANKS for both the stalwarts for entertaining us for so long!!

said...

இதே போன்று பல சாதனைகளை கண்டு பின்னர் கண்ணீருடன் (தோல்வியுடனும்) விடைபெற்ற அகாஸியை மறந்துவிட்டீர்களே

said...

oh God! when do you want to say good bye to us?

said...

கொத்ஸ்,

எங்க 'பக்கத்து வீட்டுலே' இருந்து ரெண்டு பேர் வாழ்க்கையிலே இருந்து
எதிர்பாராத விதமா ரிட்டயர் ஆகிட்டாங்க. அதைப் பத்திதான் இந்தப் பதிவுன்னு நினைச்சுக்கிட்டே
வந்தேன்.

மார்ட்டினா & மைக்கேல்.

ரெண்டு பேரும் நல்லா இருக்கட்டும்.

said...

கொத்ஸ்,
தலைப்பை பார்த்தவுடன் ஒரு நிமிடம் பயந்துவிட்டேன்... பின்னூட்ட புயலார் எங்கே வலையுலகைவிட்டு போகிறாரோ என்று.

சாதனை நாயகன் அகஸியையும் சேர்த்திருக்கலாம். ஒரு வேளை அவர் இறுதி போட்டியில் வெற்றி பெறவில்லை என்று விட்டுவிட்டீர்களா?

said...

//இதுக்கு பேருதான் குசும்போ..::)//

மின்னல் அந்த மாதிரி எல்லாம் அண்ணா பண்ண மாட்டாரு. இருந்தாலும் உம்மை மாதிரி ஆளுங்க வந்து வம்பு பண்ணறதுக்கு முன்னாடி சீரியஸா பதில் போட்டுட்டோமில்ல.

said...

//ஏமாத்திட்டிங்களே கொத்ஸ்!!//

என்னாச்சு தம்பி?

said...

//Congrastulations and a big THANKS for both the stalwarts for entertaining us for so long!!//

அதே. அதே.

said...

///இதே போன்று பல சாதனைகளை கண்டு பின்னர் கண்ணீருடன் (தோல்வியுடனும்) விடைபெற்ற அகாஸியை மறந்துவிட்டீர்களே//

மறக்கவில்லை. ஆனால் இவர்கள் இருவரும் என்னைக் கவர்ந்த அளவில் அவர் என்னைக் கவரவில்லை. அவர் விளையாடிய சமயத்தில் நான் ஒரு சாம்பிராஸ் ரசிகன். உண்மையைச் சொல்லப் போனால் பெக்கருக்கு பிறகு எனக்கு ஆண்கள் டென்னிஸில் அவ்வளவு ஆர்வம் இல்லாமல் போய்விட்டது.

said...

//எங்க 'பக்கத்து வீட்டுலே' இருந்து ரெண்டு பேர் வாழ்க்கையிலே இருந்து
எதிர்பாராத விதமா ரிட்டயர் ஆகிட்டாங்க.//

டீச்சர்,

அதைப் பத்தி நீங்க இல்ல போடணும். நான் எப்படி.

//மார்ட்டினா & மைக்கேல்.

ரெண்டு பேரும் நல்லா இருக்கட்டும்.//

நல்லா இருக்கட்டும்ன்னு எல்லாரும் வாழ்த்தலாம்.

said...

//தலைப்பை பார்த்தவுடன் ஒரு நிமிடம் பயந்துவிட்டேன்... //

அதுக்குத்தானே அப்படி வெச்சது.

//பின்னூட்ட புயலார் எங்கே வலையுலகைவிட்டு போகிறாரோ என்று.//

அவ்வளவு சீக்கிரம் போயிடுவோமா? :)

//சாதனை நாயகன் அகஸியையும் சேர்த்திருக்கலாம்.//

மேலே பார்க்கவும்.

said...

"உண்மையைச் சொல்லப் போனால் பெக்கருக்கு பிறகு எனக்கு ஆண்கள் டென்னிஸில் அவ்வளவு ஆர்வம் இல்லாமல் போய்விட்டது."
அப்ப, சார் இன்னும் சானியா மிர்சா பக்தரா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

//அப்ப, சார் இன்னும் சானியா மிர்சா பக்தரா?//

டோண்டு சார்! நீங்களுமா! இப்ப விளையாடற 'குழந்தைகளை' எல்லாம் பார்த்தா டென்னிஸை எங்க பாக்கறது. அவனவன் மகளிர் ஒற்றையர் ஆட்டத்தைப் பார்த்துட்டு டீ.வி.யை ஆஃப் பண்ணிட்டுப் போகும் போது வேலை மெனக்கட்டு கலப்பு இரட்டையர் ஆட்டம் பாக்கும்போதே நம்ம நிலமை உங்களுக்குத் தெரியலையா? :(

said...

//some of wish one of our great champions follow suit in the same magnanimous way//

with the stage set for a mega event, may be at least one of them might want to win it in a big way before saying bye.....

said...

// Anonymous said...

oh God! when do you want to say good bye to us? //

கடவுளே பை சொல்லிட்டாருன்னா நம்ம கதி என்ன ஆகறது அனானி? என்னது? கடவுளைச் சொல்லலையா? என்னைச் சொன்னீங்களா?

நான் பாட்டுக்கு ஒரு ஓரமா இருந்துட்டுப் போறேன். உங்களுக்கு என்னங்க அவ்வளவு கடுப்பு? நீங்க சொல்லறீங்கன்னு அவ்வளவு ஈசியா விட்டுட்டு போக மாட்டேன். ஆமா.

said...

"டோண்டு சார்! நீங்களுமா!"
நானும்தேன். அப்படி என்ன எனக்கு வயசாகி விட்டது? இப்பொதுதானே சமீபத்தில் 1946-ல் பிறந்தேன்! :)))

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

சரி, ஏன் நம்ம (ஆண்) மக்களுக்கு டென்னிஸ் ரொம்பப் பிடிச்சுருக்கு? என் சித்தப்பா ஒருத்தருக்கு பெண்கள் இரட்டையர் மேட்சின்னா சாப்பாடு கூட வேண்டியதில்லைன்னு கேள்விப்பட்டிருக்கிறேன்.

அப்படி என்னப்பா இருக்கு அந்த கேம்ல?

சரி, சரி உங்க விஸ் மைக்கேல் இன்னொரு வருஷமிருந்து உங்கள சந்தோஷ படித்தியிருக்கலாம், நடக்காம போச்சு.

said...

//"டோண்டு சார்! நீங்களுமா!"
நானும்தேன். அப்படி என்ன எனக்கு வயசாகி விட்டது? இப்பொதுதானே சமீபத்தில் 1946-ல் பிறந்தேன்! :)))//

அட! குழந்தைகளைப் பார்க்கறதுல சொல்லலை சார். நம்மளை ஓட்டறவங்க கும்பலில் சேர்ந்துட்டீங்களே. அதுக்குச் சொன்னேன்.

மத்தபடி உங்க சமீப கால விஷயங்கள் எல்லாம் எனக்கு அத்துப்படிதானே. ஹிஹி.

said...

//சரி, ஏன் நம்ம (ஆண்) மக்களுக்கு டென்னிஸ் ரொம்பப் பிடிச்சுருக்கு?//

அதாம்ப்பா எனக்கும் தெரியலை. எதுக்கும் டோண்டு சாரைக் கேட்டு பாக்கலாம். :)

//என் சித்தப்பா ஒருத்தருக்கு பெண்கள் இரட்டையர் மேட்சின்னா சாப்பாடு கூட வேண்டியதில்லைன்னு கேள்விப்பட்டிருக்கிறேன்.//

கொஞ்சம் சரக்கு அடிச்சிட்டுப் பார்க்கச் சொல்லுங்க. எட்டு பொண்ணுங்க ஆடுவாங்க. அப்போ மூச்சு விடக்கூட மறந்தாலும் மறப்பாரு. :)

//உங்க விஸ் மைக்கேல் இன்னொரு வருஷமிருந்து உங்கள சந்தோஷ படித்தியிருக்கலாம//

அதாங்க வருத்தம். ஒரு வருஷம் இவரும் கிமியும் ஃபெராரிக்கு ஓட்டி இருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்... ஹூம்ம்...

said...

//கொஞ்சம் சரக்கு அடிச்சிட்டுப் பார்க்கச் சொல்லுங்க. எட்டு பொண்ணுங்க ஆடுவாங்க. அப்போ மூச்சு விடக்கூட மறந்தாலும் மறப்பாரு. :) /

:-))) செம ஐடியா. அப்புறம் இந்த மேட்ச் பாக்கிற அம்பூட்டு பேறும் அட்லீஸ்ட் விளையாட்டு மைதானத்துக்கு ரெகுலர போயி பாட் மிட்டனாவது விளையாண்டு அவங்க சீரியச மேட்ச் மட்டும்ம்ம்தான் பார்க்கிறாங்கன்னு ப்ரூ பண்ணணும், என் சித்தப்பா செய்ற மாதிரி :-))))

said...

//விளையாட்டு மைதானத்துக்கு ரெகுலர போயி பாட் மிட்டனாவது விளையாண்டு அவங்க சீரியச மேட்ச் மட்டும்ம்ம்தான் பார்க்கிறாங்கன்னு ப்ரூ பண்ணணும், என் சித்தப்பா செய்ற மாதிரி :-))))//

அங்க பக்கத்துக் கோர்டில் யாரு விளையாடறாங்கன்னு பாருங்க. அப்புறமா ஒரு முடிவெடுப்போம்.. :)

(பாவம்ங்க உங்க சித்தப்பூ. இப்படி நம்ம வாயில விழுந்து புறப்படணமுன்னு அவரு தலையில எழுது இருந்தா நாம என்ன பண்ணறது?)

said...

//அங்க பக்கத்துக் கோர்டில் யாரு விளையாடறாங்கன்னு பாருங்க. அப்புறமா ஒரு முடிவெடுப்போம்.. :)//

அட பாவி மக்கா அங்க போயிம் அதான முதல்ல பாக்கணும்... ;-) நாம எப்போதுமே கேம் ரசிச்ச்ச்சு பாக்கிறதோட சரி. நம்ம ஸ்டெஃபி க்ராஃப் கல்யாணம் கட்டிகிட்டு ஆண்ட்ரூ வோட போனப்ப எனக்கு ஆண்ட்ரூ பரம எதிரி ஆகிட்டாரு.

அப்புறம் இன்னொரு உண்மை, எனக்கும் ஸ்டெஃபி குட்டிக்கும் ஒரே வயசுதான், தெரியுமா, இ.கொ?

//(பாவம்ங்க உங்க சித்தப்பூ. இப்படி நம்ம வாயில விழுந்து புறப்படணமுன்னு அவரு தலையில எழுது இருந்தா நாம என்ன பண்ணறது?) //

he serves like ஒரு பாணை சோத்துக்கு ஒரு சோறு பதம்மின்னு சொல்லுவோமில்ல, அது மாதிரி, அவரு நாம இந்திய ஆண்களின்.... :-))))

said...

//நம்ம ஸ்டெஃபி க்ராஃப் கல்யாணம் கட்டிகிட்டு ஆண்ட்ரூ வோட போனப்ப எனக்கு ஆண்ட்ரூ பரம எதிரி ஆகிட்டாரு.//

யோவ் அது ஆந்த்ரே ஆண்ட்ரூ இல்ல.

//அப்புறம் இன்னொரு உண்மை, எனக்கும் ஸ்டெஃபி குட்டிக்கும் ஒரே வயசுதான், தெரியுமா, இ.கொ?//

குட்டி ஸ்டெஃபி ரொம்ப சின்ன வயசாச்சேப்பா. ஓ! ஸ்டெஃபிக் குட்டியா?!

//அது மாதிரி, அவரு நாம இந்திய ஆண்களின்.... :-))))//

இந்திய ஆண்களே இந்த இந்த பொய்க்குற்றச்சாட்டை தவறென நிரூபித்து உங்கள் மாசற்ற நல்மனத்தைக் காட்ட புயலெனக் கிளம்பி வாருங்கள்.

said...

சே உப்பு சப்பே இல்லப்பா

said...

இளா,

இது உண்மையிலேயே இப்படி நம்ம தலைங்க ரெண்டு சாஞ்சதால கொஞ்சம் வருத்தமாப் போட்ட பதிவு. அதான் அப்படி. அதான் பின்னுட்டத்தில அதிகம் உப்பு காரம் சேர்த்து சரி பண்ணப் பாக்கறேனே.

said...

அப்பா ஒரு ஆளு தமிழ் பதிவை விட்டு போறாரு அவருடைய பின்னூட்டங்களை அப்படொயே ராவிடலாம் என வந்தேன்
இப்படி ஏமாத்திட்டீங்களே

said...

ஆகா! ஆகா! ஏமாந்தீங்களா சிவா. அதுக்குத்தான் அந்த மாதிரி பேர் வைக்கறது....

said...

உங்கள் பதிவை நமது கங்குலிக்கு அனுப்பலாம்.

மார்ட்டினாவிற்கும் மைக்கேலிற்கும் நானும் தலைவணங்குகிறேன்.

said...

I was lttle bit afraid for a moment.whether u r coming to india and kovai.Thankaathu poomi.
really it is a loss to the millions of fans of these two players and they deserve a good farewell.Thanks u have done it

said...

எப்படிங்க புடிக்கறீங்க இந்த மாதிரி தலைப்பை எல்லாம் :-))) ????

***

இலவசக் கொத்தனார் கிளம்பறார்ன்னு ஆசையா ஓடோடி வந்தா, ஏமாத்திட்டீங்களேய்யா :-))))))

***

விடைபெறும் இருவருக்கும், அதை வித்தியாசமாய் பதிவிட்டு நிறைய பேரை அதை படிக்க வைத்ததற்காக உங்களுக்கும் வாழ்த்துக்கள் !!!(போனாப்போவுது)

said...

//உங்கள் பதிவை நமது கங்குலிக்கு அனுப்பலாம்.//

அனுப்பிட்டு சொல்லுங்க. என் பதிவுக்கு இன்னும் ஒரு பிரபலம் வாசகர் அப்படின்னு விளம்பரம் பண்ணிக்கறேன்.

//மார்ட்டினாவிற்கும் மைக்கேலிற்கும் நானும் தலைவணங்குகிறேன்.//

நானும்.

said...

//எப்படிங்க புடிக்கறீங்க இந்த மாதிரி தலைப்பை எல்லாம் :-))) ????//

எல்லாம் உங்களை மாதிரி ஆளுங்களை வர வைக்கத்தான். எவ்வளவு கஷ்டப்படப் படறேன் பாருங்க.

//இலவசக் கொத்தனார் கிளம்பறார்ன்னு ஆசையா ஓடோடி வந்தா, ஏமாத்திட்டீங்களேய்யா :-))))))//

இந்த மாதிரி எவ்வளவு பேரு கிளம்பி இருக்கீங்கய்யா?! என்ன சொன்னாலும் சரி அவ்வளவு சீக்கிரம் போகறதா இல்லை.

//விடைபெறும் இருவருக்கும், அதை வித்தியாசமாய் பதிவிட்டு நிறைய பேரை அதை படிக்க வைத்ததற்காக உங்களுக்கும் வாழ்த்துக்கள் //

நன்றி வாத்தியாரே.

//(போனாப்போவுது)//

ஆனாலும் உங்களுக்கு அநியாயத்துக்குப் பெரிய மனசு!

said...

நவரத்திலோவா அக்காவை(அக்காவா, அத்தையா, ஆயாவா?...எதோ ஒன்னு) சின்ன வயசுலேருந்து பாத்துட்டு இருக்கேன்.டென்னிஸ்ல அவங்க அளவுக்கு இனிமேல் ஒருத்தர் சாதிக்கறது ரொம்ப கஷ்டம்னு தான் நெனக்கிறேன். ஆனா ஷுமேக்கரைக் கவனிக்க ஆரம்பிச்சது சமீபகாலமாத் தான். எஃப்-1 ரேஸ் எல்லாம் போன ரெண்டு வருஷமாத் தான் பாக்குறேன்...நான் பாக்க ஆரம்பிச்ச நேரத்துல அலோன்சோ பேசப்பட்ட அளவுக்கு ஷுமி பேசப்படலை(காரணம் அவரது பெர்ஃபார்மன்ஸ்). ஆனா இப்ப சமீபகாலத்துல போடியம் ஃபினிஷ் எல்லாம் பண்ணிட்டு நல்ல பேரோட வெளியே போறாரு போல. ரெண்டு பேத்துக்கும் என்னோட ஆல் தி பெஸ்டை சொல்லிடுங்க கொத்ஸ்.

கொத்ஸ்! எம்புட்டோ கயமைத் தனம் பாத்துருக்கோம்யா...ஆனா பதிவு ரெண்டு தடவை தமிழ்மணத்துல தெரியச் செய்யற கயமைத் தனத்தை இப்பத் தான்யா முத முறையா பாக்குறேன்...அதுலயும் கமெண்ட் எண்ணிக்கையும் ரெண்டு சுட்டிலயும் விழ விழ மாறிக்கிட்டே இருக்கு? இது என்னய்யா மந்திரம் எங்களுக்கும் கொஞ்சம் சொல்லிக் குடுக்கறது?

said...

//டென்னிஸ்ல அவங்க அளவுக்கு இனிமேல் ஒருத்தர் சாதிக்கறது ரொம்ப கஷ்டம்னு தான் நெனக்கிறேன். ஆனா ஷுமேக்கரைக் கவனிக்க ஆரம்பிச்சது சமீபகாலமாத் தான்.//

நானும் மார்டினா பத்தி நீங்க நினைக்கறதையேத்தான் நினைக்கறேன். ஆனா நீங்க ஷுமாக்கரின் பொற்காலத்தை மிஸ் பண்ணிட்டீங்க.

//ரெண்டு பேத்துக்கும் என்னோட ஆல் தி பெஸ்டை சொல்லிடுங்க கொத்ஸ்.//

கட்டாயம் சொல்லறேன் கைப்ஸ்.

//கொத்ஸ்! எம்புட்டோ கயமைத் தனம் பாத்துருக்கோம்யா...//

அப்படி என்னவெல்லாம் பார்த்து இருக்கீரு. அதைப் பத்தி ஒரு பதிவு போடும் பார்க்கலாம். ஆமா, இதையெல்லாம் பாத்துக்கிட்டே இருக்கீரு. அப்ப நீர்தான் போலீஸ்காரா?

//இது என்னய்யா மந்திரம் எங்களுக்கும் கொஞ்சம் சொல்லிக் குடுக்கறது?//

அவ்வளவு ஈஸியா சொல்லிருவோமாய்யா? அதெல்லாம் வரமய்யா வரம். :)

said...

கொத்ஸு,
சீமாச்சு சொன்னதுபோலவே பயனுள்ள பதிவு. யாருக்கு பயன்னு கேக்குறீரா? டிவி பொட்டிங்கற ஒண்ணே இல்லாத ப்ராட்பாண்ட் கனெக்டட் கிராமத்துல. அதுவும் கூட அங்க இண்டர்நெட்டுல ப்ளாக்ஸ்பாட் தவிர வேறெந்த தளமும் ஓப்பனாகாத கனெக்ஷனா இருக்கணும்.

said...

மகாஜனங்களே,
ரிட்டையர் ஆகற வயசுள்ள ஆளுகளுக்கு ஆர்வமா இருக்கும் ஒரு ரிட்டையர் ஆன ஆளு ரிட்டையர் ஆகற ரெண்டு ஆளுங்களப் பத்தி பதிவு போட்டுருக்காரேன்னு... யூத்ஸுக்கு??

said...

யோவ்,

என்ன நக்கலா? நானே நம்ம தலைங்க எல்லாம் இப்படி விழறாங்களேன்னு ஃபீலிங்ஸ் பதிவு போட்டா, நான் என்னமோ உலகத்துல அடுத்தவங்களுக்குத் தெரியாத விஷயத்தைப் பத்திச் சொல்ல வந்தா மாதிரி ஓட்டறீரே.

என்னாது? இந்த மாதிரி தெரிஞ்ச விஷயத்தைப் பத்தி போட்டா அது பதிவு கயமைத்தனமா? பதிவு கவுண்ட் ஏத்த இப்படி போடறேனா? இதெல்லாம் கேட்க நீர் யாரய்யா? நீர் என்ன பதிவு போலீஸ்காரா?

said...

இன்னிக்கு என்ன நாள்? எப்பேர்ப்பட்ட நன்னாள்? தமிழ்நாட்டின் யூத்தே பேசிக்கிற ஒரே விஷயம் சூர்யா -ஜோ கல்யாணம். அதுக்கு அசின் குட்டி வேற வந்துட்டு போயிருக்கு. அதப்பத்தி ஒரு நாலுவரி, அட வேணாம்பா... ஒரே ஒரு படம் புடிச்சு போட வக்கிருக்கிறதா என்று டோட்டல் தமிழ்நாடே கொத்தனாரைப் பார்த்துக் கேட்கிறதே, அது அவருக்குக் கேட்கிறதா?

said...

நீர் என்ன சொன்னாலும் நான் ரிட்டயர் ஆகறதா இல்லை. என்ன வேணா ட்ரை பண்ணும்.

அப்புறம் நம்ம பதிவுக்கு வந்து படிச்சி பின்னூட்டம் போடறவங்க எல்லாரையும் ரிட்டயர் ஆகுற வயசுன்னு அபாண்டமா பழி சுமத்துறதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சமீபத்துல 1946ல் பிறந்தவங்க எல்லாரும் வராங்க. தெரியுமில்ல. :)

said...

அதான் ஆளாளுக்கு படம் போடறாங்களே. அதைத்தான் பாக்கறோமே.

சினிமா மாயையை விடுத்து இதெல்லாம் பத்தி ஒரு சமூக அக்கறையோட பதிவு போட ஒரு பொறுப்புணர்ச்சியோட (இந்த வார்த்தையை கன்னாப்பின்னான்னு பிரிச்சிப் படிச்சிட்டு அதுக்கு வேற தனியா எதாவது சொல்லபிடாது.) இருக்கும் என் மேல் இப்படித் தனிமனித தாக்குதல் நடத்துவது ஏன் என நாடே கேட்பது உம் காதில் விழுகிறதா?

said...

முதல்ல கேள்வியைக் கேளுங்க ;)

said...

என்ன கப்பி, என்ன கேட்கச் சொல்கிறாய்?

said...

//என்ன கப்பி, என்ன கேட்கச் சொல்கிறாய்?
//

விடை பெறுகிறேன்னு சொன்னீங்க..கேள்வி கேட்டா தானே நாங்க வடையை..ச்சே..விடையைத் தர முடியும்..நீங்க பெற முடியும்!

said...

//விடை பெறுகிறேன்னு சொன்னீங்க..கேள்வி கேட்டா தானே நாங்க வடையை..ச்சே..விடையைத் தர முடியும்..நீங்க பெற முடியும்!//

ஓஹோ! அப்படி வரீங்களா? நான் விடைபெறுகிறேன்னு எழுதினது நான் சொன்னது இல்லையே. சொன்னவங்க சரியான விடை கிடைச்சுதானே கிளம்பிப் போறாங்க.

(இப்ப என்ன சொல்றீங்க, இப்ப என்ன சொல்றீங்க? :D)

said...

இகொ

சந்தொசமாக உள்ளே வந்தேன்..:)

ஏமாத்திடீங்க....:D

said...

//சந்தொசமாக உள்ளே வந்தேன்..:)//

சிபா, நீங்களுமா? என்னமோ போங்க. ஆனா சரியா வந்து 50 அடிச்சிட்டீங்க. வாழ்த்துக்கள். :)

said...

//சொன்னவங்க சரியான விடை கிடைச்சுதானே கிளம்பிப் போறாங்க.
//

அப்போ விடை பெற்றுவிட்டேன் தானே??

//
(இப்ப என்ன சொல்றீங்க, இப்ப என்ன சொல்றீங்க? :D)
//
'' ;)

மனசுக்குள்ள திட்டாதீங்ண்ணா :))

said...

இகொ,

சும்மா ஜாலியாக போட்ட கமன்ட்..

தப்பா நினைச்சுக்காதீங்க..

உங்களுக்கு எப்பொழுதும் என் ஆதரவு உண்டு..

50 க்கு வாழ்த்துக்கள்...

said...

//அப்போ விடை பெற்றுவிட்டேன் தானே??//

கப்பி, உங்களைப் பத்தி தெரியாதா? அதான் இந்த பின்னூட்டத்துக்கு முன்னாடியே பதில் யோசிச்சி வெச்சாச்சு.

அது பாருங்க, அவங்க ரிட்டயர் ஆனதுக்கு பின்னாடி பேசி இருந்தாங்கன்னா நீங்க சொல்லறது சரி. ஆனா அவங்க இத எப்ப சொன்னாங்க? ரிட்டயர் ஆகறேன்னு அறிவிக்கும்போது சொன்னாங்க அதான் விடை பெறுகிறேன். அதே இன்னைக்கு சொன்னாங்கன்னா விடை பெற்றுவிட்டேன். என்ன நாஞ்சொல்லறது?

(அப்பாடா சமாளிச்சாச்சு!)

said...

சிபா,

சிரிப்பான் போட்டா என்ன வேணாலும் சொல்லலாமாமே. நீங்களும் சிரிப்பான் போட்டீங்க. நானும் போட்டாச்சு. அப்புறம் என்ன அடிச்சி ஆடுங்க! :D

உங்க ஆதரவு எனக்கு உண்டுன்னு தெரியும். உங்க வாழ்த்துக்கு நன்றி.

said...

// ரிட்டயர் ஆகறேன்னு அறிவிக்கும்போது சொன்னாங்க அதான் விடை பெறுகிறேன். அதே இன்னைக்கு சொன்னாங்கன்னா விடை பெற்றுவிட்டேன். என்ன நாஞ்சொல்லறது?

(அப்பாடா சமாளிச்சாச்சு!)
//

நீங்க சொல்றீங்க..சரி ஒத்துக்கறேன் :)

said...

//நீங்க சொல்றீங்க..சரி ஒத்துக்கறேன் :)//

அப்பாடா!

said...

//எல்லா வகைப்பட்ட சாதனைகளும் புரிந்திட்ட நிலையிலும் தாங்கள் பங்கு பெறும் ஒவ்வொரு போட்டியையும் ஒரு புதுமுகத்திற்குண்டான உற்சாகத்துடன் எதிர் கொண்ட இவர்கள் வாழ்வு நமக்கெல்லாம் ஒரு பாடம். //

மிக சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.

பின்னூட்டப் புயலாவது, விடைபெறுவதாவது ...))

said...

//மிக சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.//

நன்றி ஜெயஸ்ரீ.

//பின்னூட்டப் புயலாவது, விடைபெறுவதாவது ...))//

அதே. அதே.

அப்புறம் என்ன இவ்வளவு லேட்டு? அடுத்த பதிவும் போட்டாச்சு. பாருங்க.