Thursday, November 16, 2006

எப்படி இருந்த கைப்பு இப்படி ஆகிட்டியேப்பா!!!

இந்த வாரம் அலுவல் காரணமாக ஜெர்மனி செல்ல வேண்டி வந்தது. போகும் பொழுது லுப்தான்ஸா விமானமொன்றில் சென்றேன். அதிலிருந்த புத்தகத்தில் அவர்கள் விமானங்களில் காண்பிக்கப் படும் திரைப்படங்கள் பற்றிய விபரங்களும் அவை பற்றிய ஒரு சிறு குறிப்பும் காணப்பட்டது.

சென்னையிலிருந்து புறப்படும் விமானங்களில் இந்த மாதம் காண்பிக்கப் படும் திரைப்படம் நம் கைப்பு ஸ்பெஷலான இம்சை அரசன் 23ஆம் புலிக்கேசி. அட அயல்நாட்டு விமானங்களில் கூட நம்ம கைப்பு புகழ் கொடி கட்டிப் பறக்கிறதே என ஒரு மகிழ்ச்சியோடு, ரொம்ப ஆர்வமாய் அதன் கதைச்சுருக்கத்தைப் படித்தேன். நீங்களும் அந்த கொடுமையை அனுபவியுங்கள்.




படத்தை சொடுக்குங்கள். கொஞ்சம் பெரிதாகத் தெரியும்.

என்ன படித்தீர்களா? தாங்க முடிந்ததா? எழுத்துப் பிழைகளை விட்டுத் தள்ளுங்கள். சொல்லி இருக்கும் கதையைப் பாருங்கள். நம்ம இம்சை அரசனுக்கு வாய் பேச வராதாம். ஊமையாம். படம் பார்த்த அனைவரும் வந்து கொஞ்சம் பதில் சொல்லுங்கள், இது நான் பார்த்த இம்சை அரசன் படத்தின் கதைதானா அல்லது இரண்டாம் பாகம் எதாவது வந்துவிட்டதா?

மன்னா என அழைப்பவர்களை என்னா என ஒரு திமிரோடு கேட்ட கைப்புவை, கன்னாப்பின்னாவென கேள்வி கேட்டு காவலாளிகளை மடக்கிய இம்சையரசனை இப்படி பேசா மடந்தையாக்கிவிட்டார்களே! ஐயகோ இஃது என்ன கொடுமை! Dumb Child என்ற பதத்தை வாய்பேசாதவன் என மொழிபெயர்த்த அந்த மகானுபாவனை என்னவென்று சொல்லுவது? என்ன தண்டனை கொடுக்கலாம்? உங்கள் ஐடியாக்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

இந்த லட்சணத்தில் ஆங்கில சப்டைட்டில் வேறு இருக்கிறதாம். யாராவது சென்னையில் இருந்து லுப்தான்ஸாவில் வந்தீர்களானால் மறக்காமல் இந்த படத்தை சப்டைட்டில்களோடு பார்த்திவிட்டு அதைப் பற்றி எழுதுங்கள்.

66 comments:

said...

நானே போணி பண்ணிக்கறேன். ஆமாம், சப்டைட்டிலுக்கு தமிழில் என்ன?

said...

தெரியலியேப்பா!! :(((

கெடக்குது விடுங்க.. படத்தைப் பார்க்க முடிஞ்சிருந்தா நல்லா இருந்திருக்கும்! சப்டைட்டிலில் எத்தனை கோல் மால்னு பார்த்துச் சொல்லி இருக்கலாம் :))

said...

:))))
கொத்ஸு, நல்ல மொழி பெயர்ப்பு. யாரோ பண்ணியிருக்காங்க..

நாங்களெல்லாம் +2 (1979-81) படித்த புதிதில்.. அப்பத்தான் எகனாமிக்ஸ் தமிழ் மீடிய புத்தகங்களெல்லாம் புதிதாக எழுத ஆரம்பித்திருந்தார்கள்.

Everyone has a role to play in the economy of the country. என்ற வரியைத் தமிழ் மீடிய புத்தகத்தில் "நமது நாட்டுப் பொருளியலில் எல்லாரும் விளையாட ஒரு உருளை வைத்திருக்கிறார்கள்" என்று மொழிபெயர்த்திருந்தனர்.

11ம் வகுப்புத் தமிழ் பொருளியல் பாடப் புத்தகத்தில்.. தமிழ் நாட்டில்...

நம்பினால் நம்புங்கள் !!

என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...

said...

மொழி பெயர்த்தவரை கைப்புவிடமே மாட்டி விடுங்கள்.. அதை விட வெற என்ன தண்டனை தேவை..

/சப்டைட்டிலுக்கு தமிழில் என்ன/

இது எதுக்கு.. நான் பாட்டுக்கு மொழி பெயர்க்க, அப்புறம் என்னையும் கைப்பு கிட்ட மாட்டி விடவா.. நான் வரலை..

said...

இப்படிவியெல்லாம் கேட்டாவிநான் பதில்வி சொல்லவிமாட்டேன்:-))

சீமாச்சு சொன்னதுதான் செம ஜோக்:-)

said...

:-)) இப்பத்தான் இந்த படத்தை ஓசியில பார்த்தேன். இப்படி ஒரு கதை படத்தில இருக்கிற மாதிரி தெரியலியே...

subtitleக்கு உப தலைப்புன்னு
:-O வைச்சிக்குவோமா...

said...

சப் டைட்டில் - உப எழுத்து

சப் டைட்டில் - எல்லா டைட்டிலும்
(சப் என்பது ஹிந்தி எனில்)

said...

ஹி...ஹி...நல்ல மொழிபெயர்ப்பு தான் :)

ஆனா நியாயமா பாத்தா தமிழ் படத்தின் கதை சுருக்கத்தை தமிழ்லேருந்து தானே இங்கிலீசுக்கு மொழி பெயர்த்துருக்கணும்? எந்த அறிவாளி இப்படி பண்ணிருக்க முடியும்?
:))

said...

என்ன கண்றாவி நைனா இது.. நாமளே நல்லா ட்ரான்ஸ்லேட் பண்ணுவோம் போல கீதே...

said...

இதுல்ல ப.ம.க சதி எதுவும் இல்லையே கொத்ஸ்?

said...

அருமையான மொழி பெயர்ப்பு. மொழியையும் முழியையும் சேர்த்தே பெயர்த்திருக்கிறார்கள்:-)

சப்டைட்டிலுக்கு தமிழா? இவங்க ஸ்டைல்லேயே தின்க் பண்ணலாமா?

சார்-தலைப்பு.

(சப் இன்ஸ்பெக்டருக்கு தமிழ்லே சார் ஆய்வாளர்னு பாத்திருக்கேன்.)

said...

/சப்டைட்டிலுக்கு தமிழில் என்ன/

உதவி வாக்கியங்கள். (தமிழில் உதவி வாக்கியங்கள் - Sub Titles in Tamil)

:-)

said...

sub-title: இணைந்த - தலைப்பு
(அவங்க பாஷையில எழுதினேன்பா)

உண்மையிலேயே
sub-title - ????
சென்ஷி

said...

Hilarious

said...

போதும் போதும், விட்டுருங்கய்யா. நாங்களே தமிழை மெல்ல மெல்ல கொன்னுருவோம், நீங்க வேறையா?

said...

Wheatstone Bridge என்பதை கொதுமைக்கல் பாலம் என்று மொழிபெயர்த்து வைத்திருந்தார்கள் ஒரு மின்துறை அலுவலகத்தில்! அது ஒரு bridge circuit அதை கண்டுபிடித்தவரின் பெயர்தான் Weatstone.

subtitle என்பதை நேரடியாக மொழி பெயர்த்தால் அதன் பொருளைத் தருமாறு இல்லை.

தமிழ் துணை வசனம்
தமிழ்வரி உரையாடல்
வரிவடிவம்
மொழிவரிகள்
முகப்படி மொழித்துணை
வசன எழுத்துக்கள்
துணைவரிகள்

இப்படி எதையாவது பயன்படுத்தலாம்.

said...

ஆங்கிலப்படங்களுக்கு தமிழ் டப்பிங் குடுத்தா எப்படி இருக்குமோ அந்த மாதிரி இருக்கு இந்த மொழிபெயர்ப்பு!

:))

said...

கைப்பு இப்படி ஒரு அசிங்கம் உனக்கு தேவையா, இதுக்கு நீ அந்த விமானத்தில் பயணம் செய்து பாதி வழியில் ஏதாவது ஒரு கடலில் குதித்து விடு.....

said...

கொல கொடுமை!!

said...

//போதும் போதும், விட்டுருங்கய்யா. நாங்களே தமிழை மெல்ல மெல்ல கொன்னுருவோம், நீங்க வேறையா? //

அதானே.... இவனுங்க வேற போட்டிக்கு வரானுங்க....

said...

கொத்ஸ்,

சரியான காமெடிதான். ஆனா நானெல்லாம் அதே முழிபெயர்ந்திருந்தா சரியா வந்துருக்கும்.... ஹி ஹி ஏன்னா I Know Englipish very well!!!

said...

//கைப்பு இப்படி ஒரு அசிங்கம் உனக்கு தேவையா, இதுக்கு நீ அந்த விமானத்தில் பயணம் செய்து பாதி வழியில் ஏதாவது ஒரு கடலில் குதித்து விடு.....
//

அப்படியெல்லாம் ஏதும் ஆகாதுன்ற தைரியத்தில்தான் நம்ம தலை ஃபிளைட்லயே டிக்கெட் இல்லாம போறாரு!

said...

//தெரியலியேப்பா!! :(((//

அப்படிச் சொன்னா எப்படி? எதாவது புதுசா போடலாமில்ல.

//கெடக்குது விடுங்க.. படத்தைப் பார்க்க முடிஞ்சிருந்தா நல்லா இருந்திருக்கும்! சப்டைட்டிலில் எத்தனை கோல் மால்னு பார்த்துச் சொல்லி இருக்கலாம் :))//

அதாங்க. உங்க நண்பர்கள் யாராவது வந்தா கொஞ்சம் பார்த்து சொல்லச் சொல்லுங்க. அதை வெச்சு புது படம் எடுக்கிற லெவலில்தான் இருக்கும். :))

said...

//தெரியலியேப்பா!! :(((//

அப்படிச் சொன்னா எப்படி? எதாவது புதுசா போடலாமில்ல.

//கெடக்குது விடுங்க.. படத்தைப் பார்க்க முடிஞ்சிருந்தா நல்லா இருந்திருக்கும்! சப்டைட்டிலில் எத்தனை கோல் மால்னு பார்த்துச் சொல்லி இருக்கலாம் :))//

அதாங்க. உங்க நண்பர்கள் யாராவது வந்தா கொஞ்சம் பார்த்து சொல்லச் சொல்லுங்க. அதை வெச்சு புது படம் எடுக்கிற லெவலில்தான் இருக்கும். :))

said...

இம்சை அரசனை இம்சைப் படுத்திய அந்த 25ம் இம்சை அரசன் யாருய்யா? அவரக் கூட்டீட்டு வந்து முதல்ல வெந்நீலயும் தண்ணீலயும் மாறீ மாறீ முக்கி எடுங்க.

சப்டைட்டிலுக்குத் தமிழ்ல துணைவசனம்னு சொல்லலாம். இல்லைன்னா உதவி வரிகள்னு சொல்லலாம். விளக்கவரி இன்னும் பொருத்தமா இருக்கும்னு தோணுது.

said...

சரி விடுங்க கொத்ஸ்...
தமிழ் படிக்க தெரிஞ்சவன் எவனும் இத படிச்சிட்டு படத்த பார்க்கமாட்டானு இவனுங்க இஷ்டத்துக்கு அடிச்சி விட்டுட்டானுங்க :-)

said...

கொத்ஸ்,

இதுக்கே இப்படி நொந்து போயிட்டிங்களே. நீங்க தமிழ்ப் பட DVD களை subtitle ஓட பாத்ததில்லையா? நல்ல தமாஷா இருக்கும் ))

said...

இந்த மொழிபெயர்ப்பைச் செஞ்சவரைப் பாத்தா சொல்லுங்க. சொல் ஒரு சொல் பதிவுல எழுதச் சொல்லலாம். :-)

இராகவனும் கண்டுக்கிறதில்லை. நானும் கண்டுக்கிறதில்லை. அதனால் சொல் ஒரு சொல் பதிவே ஏங்கிக் கெடக்கு. கொஞ்சம் இவரைக் கூட்டிக்கிட்டு வந்தா நல்லா இருக்கும். (கொத்ஸ். நீங்க வர்றீங்களா? )

said...

//"நமது நாட்டுப் பொருளியலில் எல்லாரும் விளையாட ஒரு உருளை வைத்திருக்கிறார்கள்" //

அப்போ விளையாட உருளையாவது இருந்தது. இப்போ என்னடான்னா பசங்களை உருளை மாதிரி விளையாடறாங்க அதிகாரிகள். என்னமோ போங்க.

ஆனா இந்த மாதிரி சிரிப்புகளுக்குன்னே தனி வலைப்பதிவு தொடங்கலாம் போல இருக்கே. அவ்வளவு கதைகள் வருதே!

said...

//மொழி பெயர்த்தவரை கைப்புவிடமே மாட்டி விடுங்கள்.. அதை விட வெற என்ன தண்டனை தேவை..//

அவரு அப்படி என்னங்க பண்ணறாரு? வேற எதாவது நல்ல ஐடியா இருந்தா சொல்லுங்கப்பா.

//இது எதுக்கு.. நான் பாட்டுக்கு மொழி பெயர்க்க, அப்புறம் என்னையும் கைப்பு கிட்ட மாட்டி விடவா.. நான் வரலை..//

உம்ம பதிவ பார்த்தா அப்படி ஒண்ணும் பயந்த ஆளா தெரியலையே.... :)

said...

//இப்படிவியெல்லாம் கேட்டாவிநான் பதில்வி சொல்லவிமாட்டேன்:-))

சீமாச்சு சொன்னதுதான் செம ஜோக்:-)

//

இவிபோ நீங்கவி செய்யவிறது ரொவிம்ப மோவிசம். :))

said...

//தமிழில் எந்த அறிவாளி மொழிப்பெயர்தாரோ! ,
அட அவர் படத்தை கூடவா பார்த்திருக்கமாட்டார்.....
ஒன்றுமே புரியவில்லையே..?????!@@@@#@#//

டக்குன்னு மூணு வரியில கேட்டுட்டீங்க. இதைத்தான் நான் ஒரு பதிவா எழுதி கேட்டு இருக்கேன். :D

said...

//:-)) இப்பத்தான் இந்த படத்தை ஓசியில பார்த்தேன். இப்படி ஒரு கதை படத்தில இருக்கிற மாதிரி தெரியலியே...//

அப்படியா. நல்ல வேளை, நாந்தான் சரியா பாக்கலையோன்னு நினைச்சேன்! :-D

//subtitleக்கு உப தலைப்புன்னு
:-O வைச்சிக்குவோமா... //

உப - தமிழா?
தலைப்பு - ஏன்யா வசனம் எல்லாமே தலைப்பா? அப்போ எப்படியா போஸ்டர் அடிப்பாங்க?

said...

//சப் டைட்டில் - உப எழுத்து//
உமக்கும் அதே கேள்விதான். உப தமிழா? டைட்டில் என்றால் எழுத்தா?

//சப் டைட்டில் - எல்லா டைட்டிலும்
(சப் என்பது ஹிந்தி எனில்)//

இதுக்குத்தான்யா உம்மைத் தேடறது. சரி சப் என்ற வார்த்தையை எல்லா என மாற்றிய உமக்கு டைட்டில் தமிழ் போல் தெரிகிறதா? இப்படி மாற்றாமல் விட்டு விட்டீரே.

said...

//ஹி...ஹி...நல்ல மொழிபெயர்ப்பு தான் :)//

வெகுண்டு எழுவீருன்னு பார்த்தா வெறும் சிரிப்போட நிறுத்திட்டீரே.

//ஆனா நியாயமா பாத்தா தமிழ் படத்தின் கதை சுருக்கத்தை தமிழ்லேருந்து தானே இங்கிலீசுக்கு மொழி பெயர்த்துருக்கணும்? எந்த அறிவாளி இப்படி பண்ணிருக்க முடியும்? :))//

ஒரு வேளை வேற விமான கம்பெனியோட பத்திரிகையில் வந்த கதையை சுட்டு தமிழாக்கம் பண்ணி இருப்பாரோ?

நல்லாத்தான்யா யோசிக்கறீங்க!

said...

//என்ன கண்றாவி நைனா இது.. நாமளே நல்லா ட்ரான்ஸ்லேட் பண்ணுவோம் போல கீதே...//

அக்காங்பா. நானு கூட என்னமோ இவனுங்க பெரிய பருப்புன்னு நினைச்சுக்கினு போனா நம்ம மேட்டர் எவ்வளவோ தேவலாம்பா.

said...

//இதுல்ல ப.ம.க சதி எதுவும் இல்லையே கொத்ஸ்?//

ஆஹா, தம்பி தேவு, உடனே பாலிடிக்ஸ் பண்ண கிளம்பிருவீங்களே. நீ இதெல்லாம் செய்யக்கூடாதுன்னுதானே ரெண்டு எடத்திலயும் பொறுப்பு குடுத்து உக்கார வெச்சிருக்கோம். அதையும் தாண்டி இப்படி எல்லாம் செஞ்சா நான் என்ன செய்யறது?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(

said...

//சப்டைட்டிலுக்கு தமிழா? இவங்க ஸ்டைல்லேயே தின்க் பண்ணலாமா?

சார்-தலைப்பு.//

சிறுகதைகளில் வரும் தபால்காரர் கூவும் சார் போஸ்ட் என்பது போல இருக்கிறதே. வித்தியாசமான சிந்தனைதான். இருக்கட்டும். ஆனா இது தலைப்பா? அதுதான் எனக்கு புரியலை.

said...

//ஐயா
நீங்க எல்லாம் ஆகாசவானி தமிழ் செய்திகள் கேட்டதில்லீயா..

கேளுங்க இன்னும் நல்ல ஜோக் கிடைக்கும்..//


வாங்க திருப்பூரான்,

அதெல்லாம் அந்த காலத்தில் கேட்டது. இப்போ எல்லாம் சன் டீவியில் ஹாலிவுட் டைம்ஸ் என்ற நிகழ்ச்சிக்கு வரும் விளம்பரம்தான் இந்த மாதிரி சிரிப்புக்கு.

said...

///சப்டைட்டிலுக்கு தமிழில் என்ன/

உதவி வாக்கியங்கள். (தமிழில் உதவி வாக்கியங்கள் - Sub Titles in Tamil)

:-)//

வாக்கியங்களா? இன்பா, அது இருக்கட்டும். அது என்ன பிராக்கெட்டில் விளக்கம்? அது இல்லைன்னாலும் புரிய மாதிரிதான் எழுதி இருக்கீங்க.

said...

//sub-title: இணைந்த - தலைப்பு
(அவங்க பாஷையில எழுதினேன்பா)//

சென்ஷி, அது என்ன sub என்றால் இணைந்த? புரியலையே.

said...

//Deepa said...

Hilarious
//

நன்றி தீபா.

said...

//போதும் போதும், விட்டுருங்கய்யா. நாங்களே தமிழை மெல்ல மெல்ல கொன்னுருவோம், நீங்க வேறையா?//

ஏம்பா இளா, ஒரு டவுட்டு. நீ போதும் போதும் அப்படின்னு அந்த மொழிபெயர்த்தவரை பார்த்து சொல்ல வந்தயா இல்லை என்னைப் பார்த்தா?

எதுக்கும் சேஃப்பா கேட்டு தெரிஞ்சுக்கலாமேன்னுதான். கொஞ்சம் வந்து சொல்லிடப்பா.

said...

//Wheatstone Bridge என்பதை கொதுமைக்கல் பாலம் என்று மொழிபெயர்த்து வைத்திருந்தார்கள் ஒரு மின்துறை அலுவலகத்தில்! அது ஒரு bridge circuit அதை கண்டுபிடித்தவரின் பெயர்தான் Weatstone.//

ஆஹா! இந்த கதை கேட்டது இல்லையே. நம்ம சென்னை அம்பட்டன் வாராவதி கதை மாதிரி இல்ல இருக்குது.

//தமிழ் துணை வசனம்
தமிழ்வரி உரையாடல்
வரிவடிவம்
மொழிவரிகள்
முகப்படி மொழித்துணை
வசன எழுத்துக்கள்
துணைவரிகள்//

இப்படி ஒரு லிஸ்ட் போட்டு குடுத்திட்டீங்களே. நம்ம மக்கள் ஆதரவு எதுக்கு இருக்குன்னு பார்க்கலாம்.

said...

//ஆங்கிலப்படங்களுக்கு தமிழ் டப்பிங் குடுத்தா எப்படி இருக்குமோ அந்த மாதிரி இருக்கு இந்த மொழிபெயர்ப்பு! //

ஆமாம் தம்பி, அதே மேட்டர்தான். அதுவும் சன் டிவியில் அந்த மாதிரி படங்கள் போட்டா முதல் வேலை சேனல் மாத்தறதுதான். அதைப் போயி ஞாயித்துக்கிழமை வீட்டில் இருக்கும் நேரமா வேற போட்டு தொலைப்பாங்க.

said...

// Anonymous said...

dumb also means stupid/unintelligent//

அப்படிங்களான்னா? அது தெரியாமத்தான் இம்புட்டு பெரிய பதிவு போட்டு தெரிஞ்சுக்க வேண்டியதாப் போச்சு! :-D

said...

//கைப்பு இப்படி ஒரு அசிங்கம் உனக்கு தேவையா, இதுக்கு நீ அந்த விமானத்தில் பயணம் செய்து பாதி வழியில் ஏதாவது ஒரு கடலில் குதித்து விடு.....//

நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன், நீர் போற ரூட் ஒரு மார்க்கமாத்தேன் இருக்கு. சும்மா இருக்கிற அந்த ஆளைப் போயி கடலில் குதி, நெருப்பில் புகுந்தெளு அப்படின்னு உசுப்பேத்திக்கிட்டே இருக்க.

அப்படி எதாவது நடந்து அப்படியே சங்க 'தல'மையை 'கைப்ப'ற்றலாமுன்னு எதனா ஐடியாவா? இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிட்டேன். ஆமா!

said...

//கப்பி பய said...

கொல கொடுமை!!//

யோவ் கப்பி, சரியாச் சொல்லுமைய்யா, நீர் அந்த மொழிபெயர்ப்பை பற்றி சொல்லறீரா அல்லது அதை பதிவா போட்ட நம்மளைப் பத்தியா?

பசங்க எல்லாம் ரொம்ப டென்ஷனில் இருக்காங்க.

said...

////போதும் போதும், விட்டுருங்கய்யா. நாங்களே தமிழை மெல்ல மெல்ல கொன்னுருவோம், நீங்க வேறையா? //

அதானே.... இவனுங்க வேற போட்டிக்கு வரானுங்க....//

அதாம்பா அன்னைக்கே உலக நாயகன், சிங்கார வேலன் என்ற காப்பியத்தில் இந்த கைப்புவிடமே 'ஆங்கிலம் இனி மெல்லச் சாகும்' எனச் சொல்லிச் சென்றான். அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே இதனை கருத வேண்டியதாக உள்ளது.

said...

//கொத்ஸ்,

சரியான காமெடிதான். ஆனா நானெல்லாம் அதே முழிபெயர்ந்திருந்தா சரியா வந்துருக்கும்.... ஹி ஹி ஏன்னா I Know Englipish very well!!!//

ராம்ஸு, இதெல்லாம் பார்த்தா இது உம்ம திருவிளையாடல்தான் போல தெரியுது. தொழிலை மாத்தீட்டீரா? :))

said...

//அப்படியெல்லாம் ஏதும் ஆகாதுன்ற தைரியத்தில்தான் நம்ம தலை ஃபிளைட்லயே டிக்கெட் இல்லாம போறாரு!//

நான் புலிக்கு சொன்னதைத்தான் உமக்கும் சொல்லணும் போல இருக்கு. இந்த சங்க மெம்பர்ஸ் போக்கே சரி இல்லைப்பா. எப்படியாவது அந்த ஆளைத் துரத்திட்டு பதவியை அடையறதுலயே குறியா இருக்கீங்களே.

ஐயாம் தி எஸ்கேப்.
நாராயண! நாராயண!

said...

//இம்சை அரசனை இம்சைப் படுத்திய அந்த 25ம் இம்சை அரசன் யாருய்யா? அவரக் கூட்டீட்டு வந்து முதல்ல வெந்நீலயும் தண்ணீலயும் மாறீ மாறீ முக்கி எடுங்க.//

நம்ம சினிமாவில் நாத்தம் புடிச்சவன், நாறவாயன் என்றெல்லாம் திட்டுவதை இப்படி நாகரீகமா சொல்வதில் உம்மை மிஞ்ச ஆளே இல்லை ஐயா! வெந்நீரிலும் தண்ணீரிலும் மாறி மாறி முக்கி எடுத்தாலாவது நாற்றம் போகாதா என்ற உங்கள் ஆதங்கமும், தமிழ் பற்றும் நன்றாகவே விளங்குகிறது.

//சப்டைட்டிலுக்குத் தமிழ்ல துணைவசனம்னு சொல்லலாம். இல்லைன்னா உதவி வரிகள்னு சொல்லலாம். விளக்கவரி இன்னும் பொருத்தமா இருக்கும்னு தோணுது.//

ஜிரா, இந்த வரிகள் மேட்டரே வேண்டாம். வரி விலக்குக்காக தமிழ் பெயர் வைப்பவர்கள், இந்த வரியை பார்த்து எதாவது குறைச்சு பாதி வசனம் புரியாம போகப் போகுது.

துணை வசனம், இணை வசனம் எல்லாம் அரசியல் பதவி மாதிரி இருக்கே. பிறமொழி வசனம் அப்படின்னு வேணா வெச்சுக்கலாமா?

said...

//சரி விடுங்க கொத்ஸ்...
தமிழ் படிக்க தெரிஞ்சவன் எவனும் இத படிச்சிட்டு படத்த பார்க்கமாட்டானு இவனுங்க இஷ்டத்துக்கு அடிச்சி விட்டுட்டானுங்க :-)//

வெ.பை.

அது எப்படி மேன் விட முடியும். ஒரு வெளிநாட்டுக்காரன் நம்ம கைப்ஸ் போட்டோவைப் பார்த்து இம்ப்ரெஸ் ஆகி, இந்த கதையை படிச்சிட்டு படம் பார்த்தான்னா, அதுவும் அந்த சப்பை டைட்டிலோட பார்த்தான்னா, அவன் நெலமை என்ன ஆவறது? கொஞ்சம் யோசிச்சி பாருங்க. :))

said...

//இதுக்கே இப்படி நொந்து போயிட்டிங்களே. நீங்க தமிழ்ப் பட DVD களை subtitle ஓட பாத்ததில்லையா? நல்ல தமாஷா இருக்கும் ))//

வாங்க ஜெயஸ்ரீ, தமிழ்ப்படம் பாக்கறதே குறைஞ்சு போச்சு, இதுல எங்க இந்த சப்டைட்டிலோட பாக்கறது? சன் டிவியில ஆங்கில படங்களோட தமிழ் வெர்ஷன் பத்தின விளம்பரங்கள்தான் நான் பாத்து நொந்து போறது.

ஆனா நீங்க சொல்லிட்டீங்க இல்ல, அடுத்த தமிழ் பட டிவிடி சப் டைட்டிலோடதான்!

said...

//இந்த மொழிபெயர்ப்பைச் செஞ்சவரைப் பாத்தா சொல்லுங்க. சொல் ஒரு சொல் பதிவுல எழுதச் சொல்லலாம். :-)//

அது உண்மையிலேயே தமிழ்தான்னு நினைச்சேன். இந்த தமிழ் மாதிரி தில்லாலங்கடி வேலைதானா?!

//இராகவனும் கண்டுக்கிறதில்லை. நானும் கண்டுக்கிறதில்லை. அதனால் சொல் ஒரு சொல் பதிவே ஏங்கிக் கெடக்கு. கொஞ்சம் இவரைக் கூட்டிக்கிட்டு வந்தா நல்லா இருக்கும். //

அது சரி, நல்ல சீரியஸான பதிவை காமெடி பதிவா மாத்த போறீங்களாக்கும்.

//(கொத்ஸ். நீங்க வர்றீங்களா? )//

அண்ணா, அந்த முழிபெயர்ப்பாளர் வந்தா நல்லா இருக்குமுன்னு சொல்லிட்டு உடனே நம்மளையும் கூப்பிடறீங்க. நம்மளை வெச்சு காமெடி எதுவும் பண்ணலையே?!

said...

@ கொத்ஸ்,

சில நாட்களாக தங்கள் பதிவுகளை தொடர்ந்து கொண்டிருந்தாலும், முதல் பின்னூட்டம் இது தான்.

மாயங்கள் செய்வது உன் சூழ்ச்சி..
என் மார்புக்கு நடுவினில் நீர்விழுச்சி..

இதோட ஆங்கில சப்டைட்டில சபை நாகரிகம் கருதி இங்கே வெளியிடவில்லை..

கொடுமை கொடுமை னு கோவிலுக்கு போனா அங்கே ஒரு கொடுமை ஜிங் ஜிங்னு ஆடிட்டு இருந்ததாம்.

:))

said...

//சில நாட்களாக தங்கள் பதிவுகளை தொடர்ந்து கொண்டிருந்தாலும், முதல் பின்னூட்டம் இது தான். //

வாங்க ஸ்ரீகாந்த். பின்னூட்டம் போட ஆரம்பிச்சுட்டீங்க இல்ல. இனிமே புகுந்து விளையாடுங்க. :)

//இதோட ஆங்கில சப்டைட்டில சபை நாகரிகம் கருதி இங்கே வெளியிடவில்லை..//

வேண்டாம். தமிழ் வரிகள் மட்டும் ரொம்ப நாகரிகமாவா இருக்கு. என்னவோ போங்க.

//கொடுமை கொடுமை னு கோவிலுக்கு போனா அங்கே ஒரு கொடுமை ஜிங் ஜிங்னு ஆடிட்டு இருந்ததாம். //

:-D

said...

கொத்ஸ், இந்த காமடி மொழிபெயர்ப்பு வச்சு நிறைய லொள்ளு பண்ணுவோம் லேடீஸ் ஹாஸ்டல்ல - உங்களுக்கு சில சீக்ரட் போட்டு குடுக்கிறேன்!
"ரவுண்டடிக்கான் பேக்கால" - அப்படின்னா "பின்னாடியே சுத்துறான்"னு அர்த்தம்.
சில சமயம் திருவள்ளுவர் கனவுல வந்தார்னுட்டு காமன் இங்க்லீஷ் வார்த்தையெல்லாம் சுத்த தமிழ்ல விட்டு லொள்ளு பண்ணுவோம்.
"கண்ணோட்டம் கண்டாயோ" - அப்படின்னா "சைட்டு பாரு மக்கா"ன்னு அர்த்தம்!!! :) ..
இப்ப இந்த பாட்டு பாடி பாருங்க:
"மாங்கொ குயிலே, ஃப்லவரு குயிலே, ந்யூஸு ஒண்ணு ஹியரு"
இந்த மாதிரி டண் கணக்கா பாட்டு உண்டு! :) ...

said...

அடடா, போன மாசம் நாங்கூட லுப்தான்ஷாவிலே போயிட்டு வந்தேன்! அதிலே பிரத்தியோகமா தமிழுக்குன்னு தனி பக்கம் போட்டு சினிமா படங்களை போட்டுருந்ததை பார்க்க பெருமையா இருந்தது! ஆன இப்படி மொழி பெயர்ப்பு வில்லங்கத்தை நான் பார்க்கல சரியா, சரி வேறெ மாதிரி கதை சொன்ன த்மிழ் ஜனங்க பார்க்குமுன்னுட்டு எழுதி இருக்காங்களோ, என்னமோ!

said...

வாங்க மதுரா. இதெல்லாம் காலேஜ் படிக்கும் போது சொல்லிக் குடுத்திருந்தா கொஞ்சம் யூஸ்புலா இருந்திருக்கும். இப்போ டூ லேட்!

said...

வெ.க.நாதரே,

நானும் அப்படிப் பெருமையாத்தான் பாக்க ஆரம்பிச்சேன். அப்புறம்தான் கதை இப்படி பேப்பரை கிழிக்கும் அளவிற்கு போச்சு! :)

said...

வாங்கய்யா வாங்க...

எப்படிங்க இது... ஒரு சின்ன மேட்டர் வச்சிக்கிட்டு பெரிசா பதிவு போட்டுட்டுறது, அதில தமிழ் வார்த்தைக்கு ஒரு கேள்வி வேற... எப்படியோ ஒரு 100 பின்னூட்டம் தேத்திருவீங்க. நான் என்னமோ வந்ததும் வராததுமா முக்கி முக்கி ஒரு விக்கிப் பதிவு போடுங்வீங்க-னு எதிர்பார்த்துகிட்டு இருக்க... என்னமோ போங்க....

சில சமயம் DVD பார்க்கும்போது இப்படித்தான்... சப்-டைட்டில்-னு சொல்லிட்டு 'ச்சப்ப்'னு தப்புத் தப்பா ஏதாவது போட்டு நம்மள 'டைட்' ஆக்கி விட்டுடுவாங்க...

சரியான மொழிபெயர்ப்பு-னு பார்த்தா - 'துணை தலைப்பு'னு சொல்லனும். ஆனா 'தலைப்பு' தமிழ்ல வேற மாதிரி அர்த்தம் வரும். 'துணை வசனம்'னு வச்சிக்கலாம். ('உப' வடமொழியில் கடன் வாங்கியது-னு நினைக்கிறேன்)

இந்தப் படத்த பொருத்தவரையில், 'சப் டைட்டில்' என்பதற்கு 'இலவச இம்சை' அப்படினுதான் அர்த்தம் எடுத்துக்கனும். அதையே பரிந்துரைக்கிறேன். :-)))))

said...

//நான் என்னமோ வந்ததும் வராததுமா முக்கி முக்கி ஒரு விக்கிப் பதிவு போடுங்வீங்க-னு எதிர்பார்த்துகிட்டு இருக்க...//

இது லீவுக்கு முன்னாடி போட்ட பதிவுங்க.

//இந்தப் படத்த பொருத்தவரையில், 'சப் டைட்டில்' என்பதற்கு 'இலவச இம்சை' அப்படினுதான் அர்த்தம் எடுத்துக்கனும். அதையே பரிந்துரைக்கிறேன். :-)))))//

ஆஹா! அற்புதம். சூப்பர் வெங்கட். :-D

said...

வாங்க சின்னத்தம்பி,

//SUBTITLE = வசனவாசகம்//

நல்லா இருக்கே. இனி இப்படியே கூப்பிடலாம் போல. மக்கள்ஸ் என்ன சொல்லறாங்கன்னு பார்க்கலாம்.

said...

துணைதலைப்பு - அப்டியே ட்ரான்ஸ்லேட் பண்ணினா..

துணைவசனம் - அப்டீன்னு போட்டுக்கலாமா?

said...

வாங்க ஜி,

அது எல்லாம் மக்கள்ஸ் சொல்லிட்டாங்களே. எனக்குப் பிடிச்சது வசனவரிகள். நல்லா இருக்கா?

இந்த மாதிரி பழைய பதிவு எல்லாம் தேடிப் படிங்க. ஆனா புதுசாப் போட்ட வெண்பா பதிவுன்னா மட்டும் எஸ் ஆயிடுங்க. :))