Thursday, April 05, 2007

Floralia 2007 - பூக்களுக்கான உற்சவம் !

பண்டைக்கால ரோமேனியர்களின் நம்பிக்கைப்படி பூக்களுக்கும் இளவேனிற்காலத்திற்குமான தெய்வம் ஃப்ளோரா . இன்றைக்கு ஃப்ளோரா என்று செடி கொடிகளை அழைக்கக் காரணமும் இந்த தெய்வம்தான். இத்தெய்வத்தைக் கொண்டாடும் வகையில் ப்ளோரேலியா என்ற ஒரு திருவிழா இளவேனிற்கால தொடக்கத்தில் நடத்தப் பெறுமாம். கடுமையான பனிக்காலம் முடிந்து வாழ்வின் சுழற்சி மீண்டும் துவங்குவதைக் கொண்டாடும் விதமாக ஆட்டமும் பாட்டமுமாக நடைபெறும் விழா இது. பொதுவாக வெள்ளை துணிகளையே உடுத்தும் ரோமேனியர்கள் இந்த நாளன்று வண்ண வண்ணத் துணிகள் அணிந்து இத்தெய்வத்திற்குப் பாலும் தேனும் படைத்து வெகு விமரிசையாகக் கொண்டாடும் ஒரு விழா இது. அவர்கள் இத்திருவிழாவைக் கொண்டாடும் நாள் இன்றைய நாள்காட்டியின் படி ஏப்ரல் 28ஆம் தேதியாம்.

இப்போ எதுக்குடா ஹிஸ்டரி கிளாஸ், அதான் இந்த தொந்தரவு எல்லாம் வேண்டாமத்தானே ஸ்கூலிலேயே சாய்ஸில் விட்டோம் அப்படின்னு கேட்கறீங்களா? மேட்டர் இல்லாமலேயா இம்புட்டு பில்டப். நாம காலை எழுந்தது முதல் இரவு படுக்கப் போற வரை ஒரு விதமான பூவைப் பார்த்துக்கிட்டே இருக்கோமே. அந்த பூக்களையும் இந்தத் திருவிழாவில் சேர்த்துக் கொண்டாடலாம் அப்படின்னு ஒரு ஐடியா. அதுக்குத்தான் இந்த பில்டப். காலைல கண் முழிச்ச உடனே கடகடன்னு கிளம்பி ஆபீசுக்குப் போயி ஆணி புடிங்கி, சாயங்காலம் வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் தமிழ்மணத்தில் மேஞ்சுட்டு அப்புறமா படுத்தோமா தூங்கினோமான்னு இருக்கோம். இதுல எங்க பூவைப் பார்க்கறதுன்னு அப்படின்னு அலுத்துக்காதீங்க மக்களே. நான் சொல்ல வந்தது நம்ம வலைப்பூக்கள் பத்தி!

போதுண்டா பில்டப்பு, மேட்டரைச் சொல்லுன்னு நீங்க கத்தறதுக்கு முன்னாடி நானே சொல்லறேன்.

நிகழும் 2007ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி, சனிக்கிழமை, கூடிய சுபயோக சுபதினத்தில், அமெரிக்கா நியூ ஜெர்ஸி மாநிலத்தில், இளவேனிற் காலத்தைக் கொண்டாடும் வகையிலும், வலைப்பூக்களைக் கொண்டாடும் விதமாகவும் ப்ளோரேலியா 2007 என்ற திருவிழா நடக்க இருப்பதாக பெரியோர்கள் ஆசியுடன் நிச்சயிக்கப்பட்டு இருப்பதால் தாங்கள் தங்கள் குடும்பத்தாருடனும் இஷ்ட மித்ர பந்துக்களுடன் வந்திருந்து மேற்படி விழாவை சிறப்பாக நடத்தித் தந்து எங்களையும் கௌரவிக்க வேணுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

உலகெங்கிலும், முக்கியமாக அமெரிக்க வட கிழக்கு மாநிலங்களில், இருக்கும் பதிவர்கள் வந்து கலந்து கொண்டு இந்த விழாவை வெற்றிகரமான விழாவாக செய்துதர வேண்டுகிறோம். விழா நடக்க இருக்கும் இடம், நேரம் போன்றவை இனி வரும் நாட்களில் அறிவிப்பாக வெளி வரும். தேவையான கட்டமைப்பை செய்வதற்கு தங்கள் வருகையை பின்னூட்டங்கள் மூலம் உறுதி செய்தால் வசதியாக இருக்கும்.

வாருங்கள்! கொண்டாடலாம் Floralia 2007!!


டிஸ்கி: என்னடா இது தமிழ் வலைப்பூக்களுக்கான விழாவுக்கு ஆங்கிலப் பேரா? வரிவிலக்கு கூட கிடைக்காதே எனக் கவலைப்படும் நண்பர்களே, அதுக்கும் காரணம் இருக்கு. இந்த விழாவுக்கு வருகை தரவிருக்கும் நட்சத்திரப் பதிவர் பாபா ஆச்சே! அதான் இப்படி!

72 comments:

said...

பூமலர்விழா2007 இனிதே நடந்தேற என் இதயங்கனிந்த நல்வாழ்த்துகள்!

அதுவும் பாபா வரார்னா கேக்கணுமா?
ஜமாயுங்க!

said...

இது குறித்து எதேனும் மேலதிகத் தகவல்கள் தேவையானால் இப்பதிவிலேயே பின்னூட்டம் இடலாம். தங்கள் மெயில் முகவரியோ அல்லது தொலை பேசி எண்ணோ இருக்கும் பின்னூட்டங்கள் வெளியிடப் ப்டாமல் தங்கள் தனிப்பட்ட விபரங்கள் பாதுக்காக்கப் படும்.

said...

உற்சவம் இனிதே நடை பெற வாழ்த்துக்கள்... எல்லாவற்றையும் விட நீங்க எழுதினது நல்லா இருக்குங்க..:-)

said...

சந்திப்பு இனியதாக நடைபெற வாழ்த்துக்கள் கொத்ஸ்.

said...

என்ன கொத்ஸ்! 22 சென்னை, அதே மாதம் நீங்களா, குட், நானும் ஏப்ரல் 31ம் தேதி துபாய்ல நடத்துல என் பேர மாத்திகோங்க!:-)

திஸ்கி#1: நீங்க என்ன பதில் சொல்வீங்கண்னு தெரியும்

திஸ்கி#2:திஸ்கி போட்டாதான் மரியாதையாம்.

said...

நானும் கலந்துக்கலாமா? என் பெயரிலும் flora உள்ளதே?

said...

//என்ன கொத்ஸ்! 22 சென்னை, அதே மாதம் நீங்களா, குட், நானும் ஏப்ரல் 31ம் தேதி துபாய்ல நடத்துல என் பேர மாத்திகோங்க!:-)//
அபி அப்பா பேரை நீங்க சொல்றீங்களா இல்ல நாங்க சொல்லலாமா? உங்க பேரை மட்டும் தான் மாத்துவிங்களா இல்ல பாப்பா பேரையும் மாத்துவிங்களா?

said...

ம்.. ம்ம் .. நடத்துங்க .. நல்லாவே நடக்கட்டும்

said...

ஏங்க இந்தியாக்காரங்க ஃபோன் பண்ணக்கூடாதா?

said...

பூமலர் விழா 2007!
வலைப்பூக்கள் மணக்கும் விழா!!
தளபதி கொத்ஸ் தலைமையில ஓகோன்னு கொண்டாடிவம்ல?

ஆயிரம் மலர்களே மலருங்கள்!

said...

இலவசம்,

பூக்கள் பொங்கி வழியும் பூங்காவில், எந்தப்பிரச்சினையும் செய்யாமல், புல்வெளியை மிதிக்காமல், பூக்களைப் பறிக்காமல், அமெரிக்கா என்பதால் வலது பக்கமாகவே நடந்து சென்று, அமோகமாக மணம் வளர்க்க வாழ்த்துகிறேன்.

said...

நடத்துங்க, நடத்துங்க....

அப்பரம் விரிவா அத பத்தி ஒரு பதிவு போட்ருங்க!!

said...

//அபி அப்பா பேரை நீங்க சொல்றீங்களா இல்ல நாங்க சொல்லலாமா? //

நானே சொல்கிறேன், ஒருவேளை "அபி தம்பிஅப்பா"ன்னு கூட மாத்திக்கலாம்:-)) கொத்ஸ் குழம்பட்டும்:-))

said...

அண்ணாச்சி பிளைட் டிக்கட்(பிஸினஸ் கிளாஸ் போதும்) மட்டும் எடுத்து குடுங்கண்ணே! நானும் வரேன்! :)

said...

வாழ்த்துக்கள் கொத்ஸ்.
மலர்கள் பூக்கும் நேரம் மகிழ்வாக
மணக்கவே

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

வர முடியவில்லையேனு வருத்தமாக இருக்கிறது.

said...

விழா இனிதே நடந்தேற வாழ்த்துக்கள்!

said...

தகவலுக்கு, நன்றிங்க!

கலந்துகொள்ள முயற்சிக்கிறேன்!

said...

// அபி அப்பா said...
ஏப்ரல் 31ம் தேதி //

ஆணி புடுங்கியது அதிக மப்பா ?! இல்லை கிடேசன் பூங்கா ஆரம்ப மப்பா ?!

said...

---விழாவுக்கு வருகை தரவிருக்கும் நட்சத்திரப் பதிவர் பாபா ---

பாஸ்டன் பாலாஜி, வெட்டிப்பயலைத்தானே சொல்றீங்க ;)

Gotcha :D

said...

வரப்போகிற மற்ற முக்கிய விருந்தினர்களான திருவாளர்கள் ஜானி வாக்கர், ஓல்ட் மங்க், நெப்போலியன், மானிட்டர், பெய்லி, ஸ்மிர்நோவ் போன்ற கனாவான்களின் பெயர்களை இருட்டடிப்பு செய்த்தை ஒட்டி அவர்கள் இச்சந்திப்பை புறக்கணித்து, அதே தேதியன்று இங்கே நடைபெறவிருக்கின்ற மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்க சொன்னார்கள். செய்துவிட்டேன்.

said...

ஃப்ளைட் டிக்கெட் வாங்கி அனுப்பிடுங்க கொத்ஸ், அவசியம் கலந்துக்கறேன் :)

said...

விழா நல்லபடி நடக்க வாழ்த்துக்கள்.

நானும் அபி அப்பா விழாவுக்கு ஏப்ரல் 31க்கு போறதா, இல்லே பேசாம ஏப்ரல் 32க்கு இங்கேயே
விழா நடத்திக்கலாமான்ற யோசனையில் இருக்கேன்:-)))))

said...

//ஆணி புடுங்கியது அதிக மப்பா ?! இல்லை கிடேசன் பூங்கா ஆரம்ப மப்பா ?! //

வெள்ளி கிழமையானா பட்டை போட்டுக்கும் என்னை பார்த்து இப்படி ஒரு அபாண்டமா..அய்யகோ!:-(

said...

//Boston Bala said...

---விழாவுக்கு வருகை தரவிருக்கும் நட்சத்திரப் பதிவர் பாபா ---

பாஸ்டன் பாலாஜி, வெட்டிப்பயலைத்தானே சொல்றீங்க ;)

Gotcha :D //

பாபா,
நீங்க சொன்னாலும் மக்களுக்கு பாபா யாருனு தெரியும்...

உலகுக்கு ஒரே சூரியன்...
ப்ளாகிற்கு ஒரே பாபா...
அது எங்கள் பாஸ்டன் பாலா...

said...

பூமலர்விழா2007 இனிதே நடந்தேற என் இதயங்கனிந்த நல்வாழ்த்துகள்!

said...

இப்பதான் சிங்கையில் நடந்த பதிவர் மீட்டிங்கை முடித்துவிட்டு வருகிறேன்,அசதியாக இருப்பதால்...
அவ்வளவு தூரம் வரமுடியாது.மன்னிக்கவும்.
:-))

said...

நான் ஆஜர்.

ரங்கா.

said...

அப்பாட ரொம்ப நன்றி ரங்கா! யாராவது ஒருத்தராவது வந்து நான் வரேன்னு சொன்னாத்தான் பதில் சொல்லறது அப்படின்னு இருந்தேன். தென்றல் வந்து முயற்சி பண்ணறேன்னு சொல்லிட்டாரு. நல்ல வேளை நீங்களாவது கட்டாயம் வரேன்னு சொன்னீங்களே!!

வாங்க வாங்க!!

said...

//அதுவும் பாபா வரார்னா கேக்கணுமா?
ஜமாயுங்க!//

வி.எஸ்.கே, The more the merrier. நீங்க ஜமாயுங்க அப்படின்னு சொல்லாம ஜமாய்ப்போம் அப்படின்னு இல்ல சொல்லி இருக்கணும். என்ன இது விளையாட்டு?

said...

/இராமநாதன் said...
வரப்போகிற மற்ற முக்கிய விருந்தினர்களான திருவாளர்கள் ஜானி வாக்கர், ஓல்ட் மங்க், நெப்போலியன், மானிட்டர், பெய்லி, ஸ்மிர்நோவ் போன்ற கனாவான்களின் பெயர்களை இருட்டடிப்பு செய்த்தை ஒட்டி அவர்கள் இச்சந்திப்பை புறக்கணித்து, அதே தேதியன்று இங்கே நடைபெறவிருக்கின்ற மாநாட்டில் கலந்துகொள்வார்கள்
/
இப்ப எங்க போவனும்-னே குழப்பமா இருக்கே? ;)

said...

// இந்த விழாவுக்கு வருகை தரவிருக்கும் நட்சத்திரப் பதிவர் பாபா //

முந்தின வாரம் இந்தியா, அடுத்த வாரம் நியூஜெர்சி...

வர வர எங்க கூட்டம்னாலும் கலந்துகிறதில நம்மள மிஞ்சிடுவாரு போலருக்கேன்னு நல்லி குப்புசாமி செட்டியே பீதியில இருக்காராம் பாபாவ பாத்து :)

விழா இனிதே நடக்க வாழ்த்து கள். எல்லாரும் சும்மா தமாசுக்கு சொன்னது, ஆனா நான் சீரியஸாவே சொல்றேன். பிளைட்டு டிக்கெட்டு அனுப்பினா நானும் ஆஜர்.

said...

ரங்கா உங்களது வலைப்பதிவர் கூட்டம் பற்றிக் கூறினார். இது பற்றி மேலதிக விவரங்கள் தர இயலுமா? என் தொலைபேசி எண் 848 333 7435.

வலைப்பதிவிட்டு ஒரு வருடம் ஆனாலும் ஆர்வம் இருக்கிறது.. நேரம் தான் இல்லை.. எனவே நானும் வலைப்பதிவன் தான்.. :-)

அன்புடன் விச்சு.
neyvelivichu.blogspot.com

said...

---எங்க கூட்டம்னாலும் கலந்துகிறதில---

:))

சாரு நிவேதிதா யாரு ;)

said...

இடம் நேரம் சொல்லுங்கள், முடிந்தால் சந்திக்கலாம்.

said...

வாழ்த்துக்கள்.. கலக்குங்க!

said...

FreeMason,

Got your mail, thanks for the invite. Would love to attend, but I'll be leaving for India a few days after April 28 (on May 3), and would be quite busy (you know how it goes).

Hope you guys all have fun!

thanks,

Srikanth

said...

Azhaippuku nandri. kattayam varuven.

email me the location / time.

Sadisg

said...

அழைப்புக்கு நன்றி கொத்தனாரே. அந்த ஞாயிற்றுக்கிழமை எங்கள் தமிழ்சங்க தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி இருப்பதால் வர இயலாது. வலைப்பதிவர் சந்திப்பு நன்றாக நிகழ எங்கள் வாழ்த்துக்கள்.

முடிந்தால் சந்திப்பை முடித்துவிட்டு ரிச்மண்ட் வந்து தமிழிசை விழாவைக் கண்டு கேட்டு மகிழுங்கள்.

said...

அயலகத்தில் அண்ணன் கொத்தனார் தலைமையில் நடைபெறவிருக்கும் மாநாட்டிற்கு அலைக் கடலெனத் திரண்டு வர இருக்கும் அகில உலகப் பின்னூட்ட நாயகன் கொத்ஸ் ரசிகர்களை அன்போடு வரவேற்கிறேன்...

தேவ்
தலைமை மன்றம் - சென்னை கொட்டிவாக்கம்

said...

சனிக்கிழமை அன்று பதிவுலக அனைத்து சனீஸ்வரர்களும் சந்திக்க இருக்கீன்றீர்களா.....

உம்ம்ம்ம் நடத்தும் நடத்தும்....

said...

naanum Babavum ooril illaatha samayam paarthu pathivar manaattai avasara avasaramaaka erpaadum seiyum koththanaarai vanmaiyaaka kandikiren....

said...

unga azaipithaLa paatha udane pona commenta pottutten...

Baba varra message ippathaan theriyum... avar Indiala nadakura bloggers meetukkum varraaru... angayum varraaru... athu epdi??

said...

மங்கை, சந்தோஷ்
வாழ்த்துக்களுக்கு நன்றி.

said...

//என்ன கொத்ஸ்! 22 சென்னை, அதே மாதம் நீங்களா, குட், நானும் ஏப்ரல் 31ம் தேதி துபாய்ல நடத்துல என் பேர மாத்திகோங்க!:-)//

அபி அப்பா, உங்கள் சந்திப்பு கிடேசன் பார்க்கிலா அல்லது வேறு எங்காவதா? எனக்கு தகவல் கொடுங்கள். பாபாவின் டிக்கெட் புக் செய்ய வேண்டும். நாங்கள் கஜாவின் கள்ளத்தோணி ஏறிவருகிறோம். இறங்கியவுடன் யாரும் மலையாளம் பேசாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கொலை விழும்.

அப்புறம் உங்க பேரைத்தான் மாத்தியாச்சே தம்பி!!

said...

//நானும் கலந்துக்கலாமா? என் பெயரிலும் flora உள்ளதே?//

ப்ளோரையாரே, நீங்க மட்டும் இல்லை உலகெங்கிலும் உள்ள வலைப்பதிவர்கள், படிப்பவர்கள் அனைவருக்குமேதான் அழைப்பு. கட்டாயம் வாருங்கள்.

வந்தால் ப்ளோரா என பெயர் கொண்ட உமக்கு ஒரு சிறப்பு நிகழ்ச்சி உண்டு!

said...

தருமி,

வாழ்த்துக்களுக்கு நன்றி. விரைவில் சில தொலைபேசி எண்கள் தருகிறோம். நீங்கள் கூப்பிட்ட வசதியாக. ஆனால் அதுக்கு அப்புறம் காமெடி சீன் எல்லாம் போடச் சொல்லக் கூடாது. :))

said...

பினாத்தலாரே, ராதா ஸ்ரீராம்

வாழ்த்துக்களுக்கு நன்றி.

said...

//அண்ணாச்சி பிளைட் டிக்கட்(பிஸினஸ் கிளாஸ் போதும்) மட்டும் எடுத்து குடுங்கண்ணே! நானும் வரேன்! :)//

அம்பி, ப்ளைட் டிக்கெட்டை எல்லாம் பிஸினஸ் கிளாசில் அனுப்பும் வசதி இல்லையேப்பா.

நீ பேசாம வழக்கம் போல ரெட்டை மாட்டு வண்டியை கிளப்பிக்கிட்டு ஜில்ஜில்ன்னு வா. இப்ப கிளம்பினா சரியா இருக்கும். :)

said...

வல்லியம்மா, அனானி

வாழ்த்துக்களுக்கு நன்றி.

வல்லியம்மா சில தொலைபேசி எண்கள் அனுப்பி வைக்கறேன். முடிந்தால் பேசுங்களேன்.

said...

தென்றல், கட்டாயம் வாங்க. முகமறியா பல நண்பர்களை நேரில் சந்தித்துப் பேச ஒரு அரிய வாய்ப்பு.

said...

//ஆணி புடுங்கியது அதிக மப்பா ?! இல்லை கிடேசன் பூங்கா ஆரம்ப மப்பா ?!//

அபிஅப்பாவிற்கு மப்பு வர காரணம் வேண்டும் என்ற இந்த உள்குத்தை வன்முறையாகக் கண்டிக்கின்றோம். :)

said...

//பாஸ்டன் பாலாஜி, வெட்டிப்பயலைத்தானே சொல்றீங்க ;)//

பாபா யாரும் நம்பலைங்க. உங்க புகழ் அப்படி இருக்கு. பட்டமெல்லாம் வேற கிடைக்குது.

said...

//அதே தேதியன்று இங்கே நடைபெறவிருக்கின்ற மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்க சொன்னார்கள்.//

ஐயா, அதன் பின் எங்களுக்குத் தொலைபேசி, அம்பி(இருந்தால்), ரெமோ மற்றும் அந்நியனுடன் பேச ஒரு சந்தர்ப்பம் தருமாறு தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்.

said...

//ஃப்ளைட் டிக்கெட் வாங்கி அனுப்பிடுங்க கொத்ஸ், அவசியம் கலந்துக்கறேன் :)//

வந்துட்டு முதல் ரவுண்டிலேயே அப்பீட் ஆவீங்க. எதுக்கும் உங்க ஸ்பான்ஸர்கள் கிட்ட கேட்டுப் பாருங்க. :))

said...

//நானும் அபி அப்பா விழாவுக்கு ஏப்ரல் 31க்கு போறதா, இல்லே பேசாம ஏப்ரல் 32க்கு இங்கேயே
விழா நடத்திக்கலாமான்ற யோசனையில் இருக்கேன்:-)))))//

டீச்சர்

வாழ்த்துக்களுக்கு நன்றி. இருக்கிற விழா எல்லாம் போதாதா? சொல்லுங்க. அப்படி ஏப்ரல் 32தான் வேணுமுன்னா அதுக்கு ஒரு பந்த் நடத்திடலாம்.

said...

//உலகுக்கு ஒரே சூரியன்...
ப்ளாகிற்கு ஒரே பாபா...
அது எங்கள் பாஸ்டன் பாலா...//

வெட்டி, சரியாச் சொன்னப்பா, இது பத்தி தலைவர் கூட தெலுங்குல சூப்பரா சொல்லி இருக்காருப்பா

ஏக்ஹீ பாபா ஹை இஸ் ஜக்கேலியே!!! அப்படின்னு. அவரு வரும் போது ஒரு போன் அடி. பாபா, பாபா டேண் டடடேண்... அப்படின்னு ஒரு மீஜிக் போடலாம்.

said...

இரவி, வடுவூரார்

வாழ்த்துக்களுக்கு நன்றி.

said...

//இப்ப எங்க போவனும்-னே குழப்பமா இருக்கே? ;)//

தென்றல், சில்லி பாய். நோ கன்பியூஷன். :))

said...

//முந்தின வாரம் இந்தியா, அடுத்த வாரம் நியூஜெர்சி...//

அதுக்கு அடுத்தது ஏப்ரல் 31 கிடேசன் பார்க், ஏப்ரல் 32 நியூசிலாந்து. இதை எல்லாம் விட்டுடீங்களே!!

//வர வர எங்க கூட்டம்னாலும் கலந்துகிறதில நம்மள மிஞ்சிடுவாரு போலருக்கேன்னு நல்லி குப்புசாமி செட்டியே பீதியில இருக்காராம் பாபாவ பாத்து :)//

பாபா உங்க கடையில் ருக்குமணி கிடைப்பாங்களா? ச்சீ ருக்குமணி கட்டின மாதிரி புடவைகள் கிடைக்குமா? :))

//விழா இனிதே நடக்க வாழ்த்து கள். எல்லாரும் சும்மா தமாசுக்கு சொன்னது, ஆனா நான் சீரியஸாவே சொல்றேன். பிளைட்டு டிக்கெட்டு அனுப்பினா நானும் ஆஜர்.//

நீங்கதான் வரலை. (டிக்கெட் அனுப்ப முடியாதுன்னு நாசூக்கா சொல்லியாச்சி!) அந்த 'கள்' அது மட்டுமாவது அனுப்பக் கூடாதா? :))

said...

//வலைப்பதிவிட்டு ஒரு வருடம் ஆனாலும் ஆர்வம் இருக்கிறது.. நேரம் தான் இல்லை.. எனவே நானும் வலைப்பதிவன் தான்.. :-)

அன்புடன் விச்சு.//

ஒரு முறை பதிவு செய்தாலும் வாழ்நாள் முழுதும் வலைப்பதிவர்தான் விச்சு. தகவல்கள் தெரிவிக்கின்றோம் கட்டாயம் வாருங்கள்.

said...

//சாரு நிவேதிதா யாரு ;)//

:))

said...

//இடம் நேரம் சொல்லுங்கள், முடிந்தால் சந்திக்கலாம்.//

பத்மா, நீங்க கட்டாயம் வரணும்.

said...

சேதுக்கரசி,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

உங்க கவுஜ போட்டிக்கு விளம்பரம் பாத்தீங்களா? ஒரு பதிவா போடாமா அங்க 14ம் தேதி வரை நிக்கும் பாருங்க.

said...

ஸ்ரீகாந்த்.

இந்திய பயணம் நல்லபடியாக நடக்க வாழ்த்துக்கள். அடுத்த முறை கட்டாயம் வர வேண்டும். :)

said...

சதீஷ்

தொடர்ந்து இங்கு இந்த சந்திப்பு பற்றிய செய்திகள் வரும். கட்டாயம் வந்து கலந்து கொள்ளுங்கள்.

said...

நாகு,

உங்கள் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நல்ல விதமாக நடக்க வாழ்த்துக்கள்.

said...

தேவ், புலி, ஜி

வாழ்த்துக்களுக்கு நன்றி,

ஜீ, அதுதான் பாபா. முகமூடி பின்னூட்டத்தைப் படிக்கலையா? :))

said...

ஆகா.. கவிதைப் போட்டி விளம்பரத்துக்கு ரொம்ம்ம்ப நன்றி. (இதை ஒரு மாசம் முன்னாடியே செய்யறதுக்கு என்னவாம்?)

said...

சேது,

செய்யணமுன்னு நினைச்சேன் மறந்து போச்சு, ஞாபகப்படுத்த நீங்களும் இல்லை. வந்து சத்தம் போட்ட உடனே செஞ்சுட்டேன். இப்போ இதைப் பார்த்துட்டு இன்னும் ஒரு அப்ளிகேஷன் வந்திருக்கு. 14 தேதி நீங்க திண்ணையை காலி பண்ணினா அதுக்கு அப்புறம் அதை போடணும். :))

said...

//14 தேதி நீங்க திண்ணையை காலி பண்ணினா அதுக்கு அப்புறம் அதை போடணும். :))//

திண்ணை கிடைச்சதே ரெண்டு மூணு நாளைக்குத் தான்.. 14ம் தேதி இந்திய நேரப்படி நள்ளிரவு 12 மணிக்கு முன்னாடி அறிவிப்பைத் தூக்கினீங்க... அப்புறம்... அப்புறம்... என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது :-)

உங்க மின்னஞ்சல் முகவரி மட்டும் என் கிட்ட இல்லாமப் போச்சு. இல்லன்னா ஒரு ஏழு வாட்டி ஞாபகப்படுத்தியிருப்பேன். பதிவுலக மன்னர்கள்லாம் இவ்ளோ லேட்டா அறிவிப்பு கொடுக்கப்படாது! (செந்தழலாரும் இந்த வாரம் தான் செஞ்சார்! அவர் மின்னஞ்சலுக்கு நினைவூட்டல் எல்லாம் போனபிறகு!)

said...

அறிவிப்பைத் தூக்குறதுக்கு மட்டும் யாரும் ஞாபகப்படுத்த வேண்டாம் போலிருக்கே? ம்...

said...

so is it happening right now ? I dont know the venue. can someone post the venue info ?