Tuesday, June 19, 2007

எட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சுக்கோ...

வெங்கட் ஐயா எழுதி இருக்காக, மாப்பிள்ளை இகாரஸ் எழுதி இருக்காக மற்றும் நம் வலைப்பதிவர் எல்லாம் எழுத இருக்காக வாம்மா மின்னல் அப்படின்னு நம்ம பாபா கூப்பிட்டுட்டாரு. அவர் பேச்சை மீற முடியுமா. நாலு, ஐந்து, ஆறு எல்லாம் முடிஞ்சு இப்போ எட்டு விளையாட்டு ஒரு எட்டு எடுத்து வெச்சு இருக்கு. நம்மளைப் பத்தி நாமே எட்டு விஷயம் சொல்லணுமாம். என்னத்த சொல்ல. பாபா மாதிரி இருந்தா ஒண்ணு வாங்குனா ஒண்ணு ப்ரீ அப்படின்னு 16 விஷயம் சொல்லலாம். (அவரை பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க அப்படின்னு சொன்னவங்க எல்லாம் இப்போ காலரைத் தூக்கி விட்டுக்கலாம்.) நமக்கு எட்டு விஷயமே தேடணும். ஹூம்.

1. சின்ன வயதில் ஹிந்தி ட்யூஷன் கிளாஸ் போகும் போது நம்ம படிப்பைக் கோட்டை விட்டுட்டு அவங்க பெரிய பசங்களுக்குச் சொல்லித் தரும் அக்கவுண்டன்ஸி பாடத்தைக் கற்றுக் கொண்டு, இது ஈஸியா இருக்கே என நினைத்து, அதைத்தான் படிக்கவேண்டும் என முடிவு செய்து கொண்டு, அதன் படியே அவ்வழி சென்று சி.ஏவிலும் ஐ.சி.டபிள்யூ.ஏவிலும் தேசிய அளவில் ரேங்க் வாங்கிப் பாசானது. அதற்குத் துளி கூட சம்பந்தமில்லாமல் ஆணி புடுங்குவது காலத்தின் கட்டாயம்.

2. சாதாரணமாக நாம் பயணம் செய்திருக்கும் பல வித வண்டிகளுடன் அறுவர் மட்டும் செல்லக் கூடிய சிறு விமானம் உட்பட பல விமானங்கள், ஹெலிகாப்டர், பாராசெய்லிங் பாராசூட், நீர்மூழ்கிக் கப்பல் என நிலத்தில், வானத்தில், தண்ணீரின் மேல், தண்ணீரின் கீழ் என பல விதமாக பயணம் செய்தாகிவிட்டது. அடுத்த மாதம் கே.ஆர்.எஸ். நம்மளை பலூனில் கூட்டிப் போவதாகச் சொல்லி இருக்கிறார். கான்கார்ட் விமானங்களில் செல்ல முடியாது போனது ஒரு வருத்தம்தான்.

3. ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா என பட இடங்களுக்குச் சென்று இன்று மக்கள் வாழும் கண்டங்களில் அவுஸ்திரேலியா மட்டும்தான் செல்லவில்லை. டீச்சர், டிக்கெட் வாங்கி அனுப்பியவுடன் அங்கும் சென்று கண்டம் வென்றோன் என்ற பட்டம் போட்டுக்க வேண்டியதுதான்.

4. நானும் என் நண்பனும் இன்றும் பேசிக் கொள்ளும் ஒரு நிகழ்ச்சி. இதையும் போட்டுக்க வேண்டியதுதான். ரொம்ம்ம்ப வருஷம் முன்னாடி நாங்க ரெண்டு பேரும் கிரிக்கெட் விளையாடிக்கிட்டு இருந்தோம். அவன் பவுல் பண்ணும் ஓவர்களில் ஐந்து பால்கள் தடவு தடவு எனத் தடவிவிட்டு ஆறாவது பால் மட்டும் எப்படியோ அடித்து நான்கு ரன்கள் எடுத்துக்கிட்டு இருந்தேன். இப்படி பல ஓவர்கள் அவுட் ஆகாம இருந்து அவனைக் கடுப்படிச்சதையும், ஆறாவது பந்து மட்டும் ஓவர் பிட்ச்சாகப் போட்ட அவன் திறமையையும் பத்தி இப்போ கூட பேசுவோம். :))

5. தமிழ் சினிமா பாடல்கள், ஆங்கில பாடல்கள் என பல புறம் மேய்ந்து விட்டு இப்பொழுது கர்நாடக சங்கீதம் கேட்டுப் பரவசப்படும் ஒரு காலம். உண்மையில் நுண்கலை என்பது என்ன எனத் தெரிந்து கொண்டேன். ஓரளவு ஆர்வமும், சரியாக திசை காட்ட ஒருவரும் அமைந்தால், கர்நாடக சங்கீதத்தைப் புரிந்து கொள்ள, அதன் இனிமையை உணர இதைவிட சிறந்த வழி இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன். இதில் இருக்கும் அற்புதங்களைக் கேட்கும் பொழுது இவ்வளவு நாட்கள் இதனைக் கற்றுக் கொள்ளாமல் போய் விட்டோமே என்ற வருத்தமும், இப்பொழுதாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரு ஆர்வமும் மேலிடுகிறது. எச்சரிக்கை : விரைவில் பாடல் பதிவு வரலாம்!!

6. எனக்கு பிடித்தமான சப்ஜெக்ட் பற்றி மட்டும் தான் படிப்பது என்றில்லாமல், வகை தொகை இல்லாமல் கண்டதையும் படித்து வைப்பது என் பழக்கம். இதனால் பல நேரங்களில் ஒரு புதிய கூட்டத்தில் இருக்கும் பொழுது அவர்கள் பேசும் விஷயத்தில் பங்கெடுத்துக் கொள்வது எளிதாகிறது. தனிமைப்படாமல் அக்கூட்டத்தில் கலந்து கொள்வதும் முடிகிறது. அதுக்காக ஹிந்தியில் எல்லாம் பேசப்பிடாது. அங்க எல்லாம் நிக்காம அப்படியே ஜூட் விட்டுடுவோமில்ல!

7. எங்கு தண்ணீரைக் கண்டாலும் குதித்துக் குளிக்கப் பிடிக்கும். ஆறு, குளம், அருவி என தண்ணீரில் ஆட்டம் போடுவது சிறுவயதில் இருந்து இன்று வரை நம்மோடு ஒட்டிக் கொண்டிருக்கும் பழக்கம். நயாகராவில் Cave of the winds என்னும் இடத்தில் சொட்டச் சொட்ட நனைந்ததும், முஸோரியில் ஒரு அருவி அருகில் வேடிக்கை பார்க்கச் சென்ற இடத்தில் குளிர்காலம் என்பதையும் மீறி போட்டிருக்கும் ஸ்வெட்டரைக் கூட கழட்டத் தோன்றாமல் தண்ணீரில் குதித்து ஆடியதும் மறக்க முடியாத ஆட்டங்கள்.

8. இப்படி எட்டு விஷயங்கள் எழுதறதே ஒரு பெரிய விஷயம்தான் அப்படின்னு சொல்லிட்டு ஆட்டத்தைக் க்ளோஸ் பண்ண மனசு வரலை. ஆனா இப்படி நாமும் எதையாவது எழுதுவோம் அதைப் படிக்கவும் ஆட்கள் இருக்காங்க என்பது நான் கொஞ்சமும் நினைத்திராத ஒரு விஷயம்தாங்க. அதனால வலைப்பதிதல் என்ற இந்த மேட்டரையும் இந்த பட்டியலில் சேர்த்துக்கிறேன்.

நான் அழைக்கும் எட்டு பேர்
  1. தம்பி தேவ்
  2. வி.எஸ்.கே
  3. கண்மணி
  4. ஜிரா
  5. உஷாக்கா
  6. டுபுக்கு
  7. கீதாம்மா
  8. செல்வன்
(நம்மளைப் பத்தின எட்டு குறிப்புகளைக்கூட எழுதிடலாம் எட்டு பேரை கூப்பிட ரொம்பவே கஷ்டமா இருக்கு சாமி!)


விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

அழைத்தவர் பதிவில் சென்று அழைப்புக்கு நன்றி, பதிவு போடுகிறேன் என ஒரு பின்னூட்டம், போட்டாச்சு என ஒரு பின்னூட்டம் என குறைந்த பட்சம் இரண்டு பின்னூட்டங்களாவது போட வேண்டும் என்று ஒரு புதிய விதியையும் சேர்த்துக்கலாமா! ;-)

87 comments:

said...

வழக்கம் போல முதல் போணி நம்மளே பண்ணிக்க வேண்டியதுதான். பதிவுக்கான டார்கெட் எட்டு எட்டாக ஏற்றப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். :)

said...

அழைத்தவர் பதிவில் சென்று அழைப்புக்கு நன்றி, பதிவு போடுகிறேன் என ஒரு பின்னூட்டம்!!

போட்டாச்சு!!

பதிவு போட்டதும், மீண்டும் வந்து அடுத்த பின்னூட்டம் இடுகிறேன்!!!

அல்ம்பலான விஷயம் தான் எழுதணுமா?

ஹி, ஹி, உங்க பதிவைப் படிச்சதும் மனசுல பட்டது!

ரொம்ப நல்லா சொல்லீயிருக்கீங்க!

'கல்லாதது உலகளவு' என்ற பழமொழி உங்க பதிவைப் பார்த்ததும் தோணிச்சு!

[Pl. check the validity before publishing]

said...

எனக்கு ஆவாத எண்-8. நல்ல வேளை என்னைக் கூப்பிடலை.

said...

தலைவ... நன்றி :)

---சி.ஏவிலும் ஐ.சி.டபிள்.யூவில் ---

இதெல்லாம் பாஸ் செய்யறதே பிரம்மப்பிரயத்தனம். ராங்க்!! இனிமேல் உங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணும் ;)

---நிலத்தில், வானத்தில், தண்ணீரின்---

சுருக்கமா 'அன்பே சிவ'த்திலும் திருடா திருடா-விலும் காட்டப்படும் அனைத்து சாதனங்களிலும் பயணித்திருக்கீர் :))

---வலைப்பதிதல் என்ற இந்த மேட்டரையும் ---

ரசிகர்களைக் குசியாக்குவதில் நீர் இணைய சூப்பர்ஸ்டார் :D

said...

அய்யா இலவசம் எங்களை இலவசமாகவே கொல்ரிங்களே அய்யா எப்படி அய்யா உங்களால மட்டும் முடியுது.

said...

ஆர்.டி.ஓல்ல எட்டு போட்டு லைசென் ஸ் வாங்குனதுக்கு அப்புறது இப்போ தலைவரின் ஆணை ஏற்று எட்டு போட கிளம்புகிறேன்... ஆசி கொடுங்க தலைவா....

said...

உங்க எட்டுல்ல ஒண்ணுல்லயும் உங்க குட்டு உடையாம லட்டு மாதிரி ஸ்வீட் எஸ்கேப்பா.. ம்ம் நடத்துங்க...

மறுபடியும் படிச்சுப் பாக்குதேன் எங்கிட்டாவது சிக்குவீங்களாப் பாக்குறேன்..

said...

//அழைத்தவர் பதிவில் சென்று அழைப்புக்கு நன்றி, பதிவு போடுகிறேன் என ஒரு பின்னூட்டம்!!

போட்டாச்சு!!

பதிவு போட்டதும், மீண்டும் வந்து அடுத்த பின்னூட்டம் இடுகிறேன்!!!//

குட் பாய். கீப் இட் அப்!!

//அல்ம்பலான விஷயம் தான் எழுதணுமா?

ஹி, ஹி, உங்க பதிவைப் படிச்சதும் மனசுல பட்டது!//

ஆனாலும் இந்த பின்னூட்டம் ரொம்ப அலம்பலா இருக்கு!!

//ரொம்ப நல்லா சொல்லீயிருக்கீங்க!

'கல்லாதது உலகளவு' என்ற பழமொழி உங்க பதிவைப் பார்த்ததும் தோணிச்சு!//

என்ன சொல்லறீங்க?!! பயமா இருக்கே!! ரொம்ப தற்பெருமையாப் போச்சோ. அதான் அந்த பழமொழி எல்லாம் ஞாபகத்துக்கு வருதா? மாப்பு ஐயா மாப்பு. அப்படி எழுதச் சொல்லி உத்தரவு போட்டுட்டாங்க அதான் இப்படி.....

//[Pl. check the validity before publishing]//

ஏங்க எஸ்.கே., இந்த பின்னூட்டத்தை போட்டது ஒரிஜினல் நீங்கதானே. ஆமாம் / இல்லைன்னு சரியா வந்து ஒரு பின்னூட்டம் போட்டுடுங்க!! :))

said...

//எனக்கு ஆவாத எண்-8. நல்ல வேளை என்னைக் கூப்பிடலை.//

இந்த சங்கிலியில் எட்டாவதாக சேர்பவர் உங்களை அவர் அழைக்கும் எட்டாவது நபராகத் தேர்ந்தெடுக்க வாழ்த்துக்கள்!!

said...

//இதெல்லாம் பாஸ் செய்யறதே பிரம்மப்பிரயத்தனம். ராங்க்!! இனிமேல் உங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணும் ;)//

பாபா, பதிவுகள்தான் பொதுவா காப்பி பேஸ்ட், அங்க எல்லாம் காப்பி அடிக்கலை ஐயா. பயப்பட வேண்டாம். :))

//சுருக்கமா 'அன்பே சிவ'த்திலும் திருடா திருடா-விலும் காட்டப்படும் அனைத்து சாதனங்களிலும் பயணித்திருக்கீர் :))//

மூன்று முடிச்சில் கமலை ரஜினி அனுப்பின பயணம் பண்ணாத வரை சரி!! :))

//ரசிகர்களைக் குசியாக்குவதில் நீர் இணைய சூப்பர்ஸ்டார் :D//

நிறையா பேர் கையில் குச்சி இருக்கு பாருங்க. போட்டு தாக்க ரெடியா வராங்க. நான் ஜூட். :)

said...

ஆணி பிடுங்கும் பிஸியிலும் இப்படித் தத்துவத்தைப் பொழிந்த கடமை உணர்வைப்
பாராட்டுகின்றேன்.

ராங்கரா......... கொக்கா? :-))))))

said...

//தலைவ.//

பாபா, தலைவா அப்படின்னு கூப்பிடும் போதே காலை வார இப்படி ரெடியா இருக்கீங்களே. உங்க உள்குத்துக்கு அளவே கிடையாதா!! :)))

said...

//அய்யா இலவசம் எங்களை இலவசமாகவே கொல்ரிங்களே அய்யா எப்படி அய்யா உங்களால மட்டும் முடியுது.//

இதெல்லாம் எங்க BOSS சொல்லிக்குடுத்த சோஷியல் சர்வீஸுங்க. இதுக்கெல்லாம் காசு வாங்குன நல்லாவா இருக்கும்? அதான் இலவசமாகவே சேவை!!

said...

//ஆர்.டி.ஓல்ல எட்டு போட்டு லைசென் ஸ் வாங்குனதுக்கு அப்புறது இப்போ தலைவரின் ஆணை ஏற்று எட்டு போட கிளம்புகிறேன்... ஆசி கொடுங்க தலைவா....//

வண்டி வாங்குன ஆர்சி புக் தானா கிடைக்குமே அதுக்கு எதுக்கு ஆர்.டி.ஓ ஆபீஸில் எட்டு போடணும்?

ஓ!! நீங்க கேட்டது ஆசியா?!!சாரி பார் தி கன்பியூஷன். நம்ம ஆசி உமக்கு எப்பவுமே உண்டய்யா!!

said...

//மறுபடியும் படிச்சுப் பாக்குதேன் எங்கிட்டாவது சிக்குவீங்களாப் பாக்குறேன்..//

இதுக்குப் பேர்தான் பிரிச்சு மேயறதா? இப்போதான் நான் டீச்சர் கிளாஸில் அப்படி பிரிச்சு மேஞ்சுட்டு வரேன். இங்க நீங்க எனக்கேவா? இருக்கட்டும்.

said...

//ஆணி பிடுங்கும் பிஸியிலும் இப்படித் தத்துவத்தைப் பொழிந்த கடமை உணர்வைப்
பாராட்டுகின்றேன்.//

தத்துவமா? டீச்சர், பெருசு கேட்டது எதாவது தெரியாம உள்ள போயிருச்சா?

//ராங்கரா......... கொக்கா? :-))))))//

அப்படித்தான் தெரியுது. எதுக்கும் ரெண்டு ரெண்டா தெரிய வரை வேற வலைப்பூ பக்கம் போகாதீங்க டீச்சர்.

said...

eight Feats?அப்படியெல்லாம் சொல்லிக்க நம்ம கிட்ட சரக்குக் கிடையாதுப்பா.

எட்டெட்டும் பதினாறுக்கு விஷயங்கள் இருக்கும் போலிருக்கே உங்ககிட்ட.
எழுதப் போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
எழுதினவங்களுக்கும்தான்:)))

said...

// Eight Feats - Ilavasakothanar //

பாபா, என்னைப் பத்தி எட்டு விஷயங்களை எழுதச் சொல்லிட்டு அதை சாதனை அப்படின்னு போடறது எந்த விதத்தில் நியாயம் அண்ணா?

Are these feats? Why isn't this guys 'feet' on the ground? அப்படின்னு யாராவது கேட்கப் போறாங்க. பாபா, தலைப்பை மாத்து!!

said...

//eight Feats?//

அதாங்க நானும் பாபா கிட்ட கேட்டேன். இதெல்லாம் சாதனையா? ஏன் இப்படி ராங் கிளாசிபிக்கேஷன்? அப்படின்னு. :))

//அப்படியெல்லாம் சொல்லிக்க நம்ம கிட்ட சரக்குக் கிடையாதுப்பா.//
என்ன சொல்ல - நிறைகுடம்!!

//எட்டெட்டும் பதினாறுக்கு விஷயங்கள் இருக்கும் போலிருக்கே உங்ககிட்ட.//

நீங்க வேற. இந்த எட்டு எழுதவே தாவு தீர்ந்து போச்சு. :)

said...

அழைப்புக்கு நன்றி தலைவா..சீக்கிரம் பதிவு போட்டுடறேன்.

//சி.ஏவிலும் ஐ.சி.டபிள்யூ.ஏவிலும் தேசிய அளவில் ரேங்க் வாங்கிப் பாசானது.//

சபாஷ்.

//கான்கார்ட் விமானங்களில் செல்ல முடியாது போனது ஒரு வருத்தம்தான்//

உண்மை. அந்த விமானங்களை இனி மியூசியத்தில் தான் பார்க்க முடியும்....வரும்காலத்தில் திரும்ப வந்தாலும் வரலாம்.

said...

//அழைப்புக்கு நன்றி தலைவா..சீக்கிரம் பதிவு போட்டுடறேன்.//

போடுங்க போடுங்க!

//வரும்காலத்தில் திரும்ப வந்தாலும் வரலாம்.//

வந்தா கொஞ்சம் செலவானாலும் போயிட வேண்டியதுதான். என்ன சொல்லறீங்க.

said...

CA,ICW படிச்சிட்டு,நீங்க ஆணி புடுங்கிரதை பார்த்தால்,நானும் புடுங்கலாம் போல இருக்கே!!:-))

said...

செய்யலாமே குமார். உங்க துறையில் பட்டம் வாங்குனவங்க நிறையா பேரு எங்க கம்பெனியில் ஆணி புடுங்கறாங்க தெரியுமா!!

said...

ஹ்ம்ம்ம்... முதல் சாதனையே எல்லாத்தையும் தூக்கி சாப்பிட்டுடும் போல இருக்கே... எங்கியோ போயிட்டிங்க தலை...

சீக்கிரமேவ அவுஸ்திரேலியா ப்ரயாணம் ப்ரப்திரஸ்து!

பலூன்ல பறக்கறது எல்லாம் சரி....
கர்நாடக சங்கீதத்துல பாடல் பதிவு போடப் போறீங்களா?
சரி சரி நாளைக்கு யாராவது 'சொதப்பல் பத்து' ஆரம்பிச்சாங்கன்னா மேட்டர் வேணுமில்ல... :-P (ச்சும்மா ஒளஒளாகட்டிக்கு. நீங்க கலக்குங்க தலை!)

said...

//நயாகராவில் Cave of the winds என்னும் இடத்தில் சொட்டச் சொட்ட நனைந்ததும், //

தனியாகவா... இல்ல சோடி போட்டா...... ;-)

said...

//ஆனா இப்படி நாமும் எதையாவது எழுதுவோம் அதைப் படிக்கவும் ஆட்கள் இருக்காங்க என்பது நான் கொஞ்சமும் நினைத்திராத ஒரு விஷயம்தாங்க.//

விதி வலியது....

said...

//CA,ICW படிச்சிட்டு,நீங்க ஆணி புடுங்கிரதை பார்த்தால்,//

தேவையில்லாத ஆணிய புடுங்குறதுக்கு ஏதை படிச்சு இருந்தா என்ன?

சும்ம்மாஆஆஆஆஆஆஆஅ

said...

எட்டா! இதெல்லாம் நாயமா? மொதல்ல பதிவு போட்டவங்களுக்குக் கூப்பிட எட்டு பதிவர்கள் கிடைப்பாங்க. அடுத்தடுத்து வர்ரவங்க எங்க போய் ஆள் பிடிக்குறது. இதெல்லாம் சரியில்லை. கொஞ்சம் கொறைச்சிக்கோங்க.

என்னது தண்ணீல இருக்குறதுன்னா ரொம்பப் பிடிக்குமா? வலையுலகமே தெரியும்னு சொல்லுதேய்யா....

கருநாடக சங்கீதம் நுண்கலை. அதாவது பல இடங்களில் இருந்து எடுத்துக்கொண்டு இலக்கணம் வகுத்துக்கொண்டு வளருவது. நானும் பல பாடல்களை ரசித்திருக்கிறேன். சில பாடல்கள் ஓரளவுக்கு. ஆனால் ஒன்றைத் தெரிந்து கொண்டால்தான் ரசிக்க முடியும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. சாட்டிலைட் டிவி பாக்க சாட்டிலைட் டெக்னாலஜி தெரியனுமா என்ன!

said...

அஹா....ஆரம்பிச்சுட்டாங்கப்பா :)

said...

தலைப்ப பாத்துட்டு, நீங்களும் ஏதோ தத்துவம்தான் சொல்லியிருக்கீங்கன்னு நினைச்சேன் :)

நல்ல விளையாட்டு ! சீக்கிரமே 'கண்டம் வென்றோன்' பட்டம் பெற வாழ்த்துக்கள் !!

said...

ம்ம்ம்ம்... நாங்க இம்புட்டு எட்ட எங்குன போய் தேடுவோம்.. :((

அருமை உங்க எட்டுச் சாதனை.. அதுலையும் முதல் சாதனை.. ஐயகோ...

said...

நா வரல பா இந்த வெள்ளாட்டுக்கு, சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் :-(

said...

பாலாஜி சொன்னது போல சுவைபட எழுதுவதும் ஒரு சாதனை. நமக்கும் எல்லா விஷயமும் கத்துக்கிறதில விருப்பம் உண்டு.

இன்னமும் நிறைய மனமகிழ்ச்சி தரும் செயல்கள் செய்ய வாழ்த்துக்கள்

said...

//எங்கியோ போயிட்டிங்க தலை...//

யோவ் எங்கேயும் போகலை, இங்கதான் இருக்கேன். விட்டா நீரே பார்ஸல் பண்ணி அனுப்பிடுவீரு போல இருக்கே.

//சீக்கிரமேவ அவுஸ்திரேலியா ப்ரயாணம் ப்ரப்திரஸ்து!//

உம்ம வாக்கு பலிக்கட்டும், உம்ம வாய்க்கு நீரே சர்க்கரை போட்டுக்கச் சொல்லி ரெக்கமெண்ட் பண்ணறேன்.

//கர்நாடக சங்கீதத்துல பாடல் பதிவு போடப் போறீங்களா?
சரி சரி நாளைக்கு யாராவது 'சொதப்பல் பத்து' ஆரம்பிச்சாங்கன்னா மேட்டர் வேணுமில்ல... :-P//

அதான் எச்சரிக்கை குடுத்தாச்சு இல்ல. ஆனா எப்போ பாட்டு கத்துக்க ஆரம்பிச்சு, எப்போ பதிவை போட்டு அதுக்கு அப்புறம் சொதப்பல் பத்து எழுதறது. லாங் டேர்ம் பிளான் தான்.

//நீங்க கலக்குங்க தலைவ!)//

பாபா ஒரு காலை வாரிட்டாரு, அடுத்த கால் நீங்க. இப்படி ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு அரை விட்டா நான் தாங்குவேனா? :))

said...

கொத்ஸ் என் மேல என்ன கோபம் இப்படி மாட்டி உட்டுட்டீங்களே.
எட்டு மேட்டர் சிக்குனா எட்டு பதிவே[மொக்கைதான்] போட்ருவேனே
ஓகே.டைம் குடுங்க இந்த வாரத்துக்குள் அசைன்மெண்ட் சப்மிட் பண்ரேன்.[ஹூம் படிக்கிற காலத்துல கூட தப்பிச்சிட்டேன்.]

said...

முழிச்ச மூஞ்சி சரியில்லை. இன்னிக்குத் தான் அது நல்லாப் புரியுது! :P

said...

//சி.ஏவிலும் ஐ.சி.டபிள்யூ.ஏவிலும் தேசிய அளவில் ரேங்க் வாங்கிப் பாசானது.//

வாவ்.. முன்பு ஒரு முறை sales tax பற்றிய உங்களுடைய பின்னூட்டத்தை படித்த போது, மிகவும் வியந்தேன்.. வெளிநாட்டில் ஆணி பிடுங்கும் ஒருவர், இப்படி வரி பத்தி பின்னறாரேன்னு.. இப்போ குழப்பம் தீர்ந்தது... :D :D

வாழ்த்துக்கள்..

said...

இதில் எந்த எட்டில் இப்ப இருக்க நினைச்சுக்கோனு அடுத்த வரிலயே சொல்லிருக்காரே...

said...

//சி.ஏவிலும் ஐ.சி.டபிள்யூ.ஏவிலும் தேசிய அளவில் ரேங்க் வாங்கிப் பாசானது. //

சி.ஏன்னா comment accrual... i.c.w.a னா என்ன????? நேஷனல் என்ன.. நீர் தான் இண்டர்நேஷனல் லெவல்லேயே டாப்ல வருவீரு....

said...

// பல விமானங்கள், ஹெலிகாப்டர், பாராசெய்லிங் பாராசூட், நீர்மூழ்கிக் கப்பல் என நிலத்தில், வானத்தில், தண்ணீரின் மேல், தண்ணீரின் கீழ் என பல விதமாக பயணம் செய்தாகிவிட்டது.//

இதெல்லாத்தையும் விட அஞ்சால் அலுப்பு மருந்துதான் உம்ம பேவரிட் மோட் ஆப் ட்ரான்ஸ்போர்டேஷனு ஜிரா சொல்லுறாரு.. உண்மையா?

said...

//ஆறாவது பந்து மட்டும் ஓவர் பிட்ச்சாகப் போட்ட அவன் திறமையையும் பத்தி இப்போ கூட பேசுவோம்.//

ஈ.எஸ்.பி.என் கிளாசிக் மாட்சஸ்ல காட்டுனபோது ரிக்கார்ட் பண்ணி வச்சிருக்கேன்பா...

said...

//இப்பொழுதாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரு ஆர்வமும் மேலிடுகிறது.//
//எச்சரிக்கை : விரைவில் பாடல் பதிவு வரலாம்!!//

சத்தமா சொல்லாதீங்க... "அடங்குடா மவனே"னு ஜி.என்.பி வந்து கனவுல குட்டிட்டு போயிறப்போறாரு..

said...

//தண்ணீரில் ஆட்டம் போடுவது சிறுவயதில் இருந்து இன்று வரை நம்மோடு ஒட்டிக் கொண்டிருக்கும் பழக்கம்//

ரொம்ப சரி நம்ம பழக்கமும் அதுதான் சாமி நானும் H2O வை தான் சொல்கிறேன்.

மற்ற தண்ணீ பழக்கம் கொஞ்சம் பெரிதானவுடன் வந்தது சரிதானே

இவ்வளவு குறும்பும் பண்ணிட்டு சி ஏ வில் அகில இந்திய ராங்கா? சூப்பர். தலையிலே மூளையா? இல்லே உடம்பு பூராவும் மூளையா?

கூடிய சீக்கிரம் சி.பி.ஏ வில் அமெரிக்காவில் முதல் ராங்க் வாங்க வாழ்த்துக்கள்

said...

//
உம்ம வாக்கு பலிக்கட்டும், உம்ம வாய்க்கு நீரே சர்க்கரை போட்டுக்கச் சொல்லி ரெக்கமெண்ட் பண்ணறேன்.
//

வாக்கு பலிக்கிறது இருக்கட்டும். அவுஸ்திரேலியாவுல போய் எங்கயாவது 'டீ'கடையில போய் உங்க கட்சி தலைவர் பேரை சொல்லிட்டுகிட்டிருக்காதேயும். உஷார்!


//
நீங்க கலக்குங்க தலைவ!

பாபா ஒரு காலை வாரிட்டாரு, அடுத்த கால் நீங்க. இப்படி ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு அரை விட்டா நான் தாங்குவேனா? :))
//
அதான் 'காலை' வாரிட்டு ஒரு 'கொம்பை' (!) கொடுத்திருக்கேன் இல்ல... பிடிச்சிட்டு சமாளிங்க தல :-))

said...

//சி.ஏவிலும் ஐ.சி.டபிள்யூ.ஏவிலும் தேசிய அளவில் ரேங்க் வாங்கிப் பாசானது.அதற்குத் துளி கூட சம்பந்தமில்லாமல் ஆணி புடுங்குவது காலத்தின் கட்டாயம்.
//

எல்லாரும் அப்ப‌டித்தான் . பின்ன‌ வாழ்க்கையில‌ ஒரு திருப்ப‌ம் வேண்டாம்?/

said...

எட்டடுக்கு மாளிகையே கட்டிவிட்டீரேய்யா!! :)

said...

//தனியாகவா... இல்ல சோடி போட்டா...... ;-)//

புலி, இங்க போனது மாமனார், மாமியார், தங்கமணி, அவங்க அக்கா குடும்பம், பையன் அப்படின்னு ஒரு பெரிய கும்பலே. ஆனாலும் அதிகம் நனைஞ்சது நாமதாமில்ல!!

said...

//விதி வலியது....//

விதி வலியது, காலத்தின் கட்டாயம் - இந்த வார்த்தைகள் எல்லாம் எப்படி சாகாவரம் பெற்றிருக்கு பார்த்தீங்களா!!

said...

//தேவையில்லாத ஆணிய புடுங்குறதுக்கு ஏதை படிச்சு இருந்தா என்ன?

சும்ம்மாஆஆஆஆஆஆஆஅ//

மெய்யாலுமே நீ சொல்றது சரிதாம்பா. ஆனா பாரு, ஆணி புடுங்க நம்மளை எல்லாம் உள்ள விட அதுதானே நமக்கு பாஸ்போர்ட் விசா எல்லாம். அது இல்லாம இங்க வந்திருக்க முடியுமா? :)

said...

//எட்டா! இதெல்லாம் நாயமா? மொதல்ல பதிவு போட்டவங்களுக்குக் கூப்பிட எட்டு பதிவர்கள் கிடைப்பாங்க. அடுத்தடுத்து வர்ரவங்க எங்க போய் ஆள் பிடிக்குறது. இதெல்லாம் சரியில்லை. கொஞ்சம் கொறைச்சிக்கோங்க.//

அதான் உங்களை முதல் ரவுண்டுகளிலேயே கூப்பிட்டாச்சே. அடுத்தவங்க எல்லாம் கூப்பிட்டு காலி பண்ணறதுக்கு முன்னாடி பதிவைப் போட்டு நீங்க கூப்பிடற வழியைப் பாருங்க.

//என்னது தண்ணீல இருக்குறதுன்னா ரொம்பப் பிடிக்குமா? வலையுலகமே தெரியும்னு சொல்லுதேய்யா....//

சொல்லும் சொல்லும். என் நிலமை புரியாமப் பேசறீரு.....:(

//கருநாடக சங்கீதம் நுண்கலை. அதாவது பல இடங்களில் இருந்து எடுத்துக்கொண்டு இலக்கணம் வகுத்துக்கொண்டு வளருவது. நானும் பல பாடல்களை ரசித்திருக்கிறேன். சில பாடல்கள் ஓரளவுக்கு. ஆனால் ஒன்றைத் தெரிந்து கொண்டால்தான் ரசிக்க முடியும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. சாட்டிலைட் டிவி பாக்க சாட்டிலைட் டெக்னாலஜி தெரியனுமா என்ன!//

தெரிய வேண்டாம். ஒன்றுமே தெரியாமலும் ரசிக்க முடியும். ஆனா வெறும் புர்ஜி சாப்பிட்டு இருக்கு அப்படின்னு சொல்லாம, அட ஒரு முட்டை, கொஞ்சம் வெங்காயம், உப்பு மிளகாய்ப் பொடியை வெச்சி என்ன அட்டகாசமா பண்ணி இருக்காண்டா அப்படின்னு கொஞ்சம் விஷய ஞானத்தோட பாராட்டறது வேற மாதிரி இல்லையா. இதுவும் அப்படித்தான் மக்கா.

said...

//அஹா....ஆரம்பிச்சுட்டாங்கப்பா :)//

ஆமாங்க.

ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுட்டாங்க.

இப்படி இல்ல சொல்லணும்? :)

said...

//தலைப்ப பாத்துட்டு, நீங்களும் ஏதோ தத்துவம்தான் சொல்லியிருக்கீங்கன்னு நினைச்சேன் :)//

கதிரவன், அதான் முன்னமே சொல்லி இருக்கோமே. Don't judge a post by its title! :)

//நல்ல விளையாட்டு ! சீக்கிரமே 'கண்டம் வென்றோன்' பட்டம் பெற வாழ்த்துக்கள் !!//

நன்றிங்க.

said...

//ம்ம்ம்ம்... நாங்க இம்புட்டு எட்ட எங்குன போய் தேடுவோம்.. :((//

பள்ளிக்கூடத்தில் கிரிக்கெட் விளையாடினது எல்லாம் சாதனையா? நல்லாத்தான் கிண்டல் அடிக்கறீங்கப்பா.

//அருமை உங்க எட்டுச் சாதனை.. அதுலையும் முதல் சாதனை.. ஐயகோ...//

நீங்க ஐயகோன்னு சொல்லறீங்க. நம்ம கூடப் படிச்ச பசங்க எல்லாம் ஐயோன்னு தலையில் அடிச்சுக்கிட்டாங்க. என்னத்த சொல்ல! :)

said...

//நா வரல பா இந்த வெள்ளாட்டுக்கு, சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் :-(//

உஷாக்கா என்ன இது புதுசா தன்னடக்கமெல்லாம்?!! :)))

சாதனை எல்லாம் நம்ம பாபா பண்ணின வேலை. இந்த விளையாட்டில் உங்களைப் பத்தி எதாவது 8 விஷயங்கள் பகிர்ந்துக்க வேண்டியதுதான். 8 Random facts about you.

அதனால இந்த தன்னடக்க பந்தா எல்லாம் தள்ளி வெச்சுட்டு பதிவைப் போடற வழியைப் பாருங்க.

said...

//பாலாஜி சொன்னது போல சுவைபட எழுதுவதும் ஒரு சாதனை. நமக்கும் எல்லா விஷயமும் கத்துக்கிறதில விருப்பம் உண்டு.

இன்னமும் நிறைய மனமகிழ்ச்சி தரும் செயல்கள் செய்ய வாழ்த்துக்கள்//

வாங்க பத்மா. நீங்க சொல்றதும் சரிதான். இங்கயே பாருங்க எத்தனை பேர் கதை கட்டுரைன்னு கலக்கறாங்க!!

வாழ்த்துக்களுக்கு நன்றி.

said...

//கொத்ஸ் என் மேல என்ன கோபம் இப்படி மாட்டி உட்டுட்டீங்களே.//

சிரிக்க சிரிக்க எழுதுவீங்க படிக்கலாமுன்னுதான். இதுல என்ன கோபம். :))

//எட்டு மேட்டர் சிக்குனா எட்டு பதிவே[மொக்கைதான்] போட்ருவேனே//

அதனாலதான் கூப்பிட்டது.

//ஓகே.டைம் குடுங்க இந்த வாரத்துக்குள் அசைன்மெண்ட் சப்மிட் பண்ரேன்.[ஹூம் படிக்கிற காலத்துல கூட தப்பிச்சிட்டேன்.]//

தட் இஸ் தி ஸ்பிரிட். தப்பில்லாம, அடுத்தவங்களைப் பார்க்காம சீக்கிரம் எழுதி சப்மிட் பண்ணுங்க.

said...

//முழிச்ச மூஞ்சி சரியில்லை. இன்னிக்குத் தான் அது நல்லாப் புரியுது! :P//

டெய்லி எழுந்த உடனே கண்ணாடியைத்தான் பார்ப்பீங்களாமே... :))

என்னங்க எழுதச் சொல்லிக் கூப்பிட்ட எல்லாரும் இப்படி அலுத்துக்கறீங்க. நம்ம பசங்க எல்லாரும் ஓக்கே சொல்லறாங்க. உங்க சைடில் கண்மணி மட்டும்தான் ஓக்கே சொன்னது.

said...

//
வாவ்.. முன்பு ஒரு முறை sales tax பற்றிய உங்களுடைய பின்னூட்டத்தை படித்த போது, மிகவும் வியந்தேன்.. வெளிநாட்டில் ஆணி பிடுங்கும் ஒருவர், இப்படி வரி பத்தி பின்னறாரேன்னு.. இப்போ குழப்பம் தீர்ந்தது... :D :D//

குழப்பம் தீர்ந்துச்சா!! என்னைக் கேட்டா நானே சொல்லி இருப்பேனே!

வாழ்த்துக்களுக்கு நன்றி ஏஸ்!

said...

//இதில் எந்த எட்டில் இப்ப இருக்க நினைச்சுக்கோனு அடுத்த வரிலயே சொல்லிருக்காரே...//

எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமய்யா, பதிவுல எட்டும் படி சொல்லப் போற பாரய்யா!!

அப்படின்னும் சொல்லி இருக்காரா? சீக்கிரம் பதிவைப் போடய்யா!!

said...

//சி.ஏன்னா comment accrual... i.c.w.a னா என்ன????? நேஷனல் என்ன.. நீர் தான் இண்டர்நேஷனல் லெவல்லேயே டாப்ல வருவீரு....//

Incentivized Comment Warehousing Application - இது சரியா இருக்கா? :)))

said...

//இதெல்லாத்தையும் விட அஞ்சால் அலுப்பு மருந்துதான் உம்ம பேவரிட் மோட் ஆப் ட்ரான்ஸ்போர்டேஷனு ஜிரா சொல்லுறாரு.. உண்மையா?//

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே....நிற்கும் இடத்திலேயே பறக்க மட்டுமே அஞ்சால் அலுப்பு மருந்து...

said...

//ஈ.எஸ்.பி.என் கிளாசிக் மாட்சஸ்ல காட்டுனபோது ரிக்கார்ட் பண்ணி வச்சிருக்கேன்பா...//

அப்படியா? எனக்கும் ஒரு காப்பி அனுப்பய்யா. அந்தக் காலத்தில் ஒரு 10 - 20 ஸ்பான்ஸர்கள் எல்லாம் பிடிச்சுப் போடாம வெறும் விளையாட்டு விளையாட்டுன்னே இருந்துட்டேன்.

said...

//சத்தமா சொல்லாதீங்க... "அடங்குடா மவனே"னு ஜி.என்.பி வந்து கனவுல குட்டிட்டு போயிறப்போறாரு..//

ஜிஎன்பியா, நம்ம ஸ்ரீதரே சொல்லிட்டாரே... :))

said...

//ரொம்ப சரி நம்ம பழக்கமும் அதுதான் சாமி நானும் H2O வை தான் சொல்கிறேன்.//

அப்படியா? அடுத்த முறை நீங்கள் இங்கு வந்தாலோ நாங்கள் அங்கு வந்தாலோ ஒரு தண்ணிப் பார்ட்டி அரேஞ்ச் பண்ணிடலாம். :))

//மற்ற தண்ணீ பழக்கம் கொஞ்சம் பெரிதானவுடன் வந்தது சரிதானே//

ஹூம் ஹூம்

//இவ்வளவு குறும்பும் பண்ணிட்டு சி ஏ வில் அகில இந்திய ராங்கா? சூப்பர். தலையிலே மூளையா? இல்லே உடம்பு பூராவும் மூளையா?//
அதுக்கு மூளை வேணுமுன்னு யாரு சொன்னா? :))

//கூடிய சீக்கிரம் சி.பி.ஏ வில் அமெரிக்காவில் முதல் ராங்க் வாங்க வாழ்த்துக்கள்//
அதெல்லாம் செய்யுற ஐடியா இல்லை.

said...

//வாக்கு பலிக்கிறது இருக்கட்டும். அவுஸ்திரேலியாவுல போய் எங்கயாவது 'டீ'கடையில போய் உங்க கட்சி தலைவர் பேரை சொல்லிட்டுகிட்டிருக்காதேயும். //

அதெல்லாம் தைரியமா சொல்லுவோமில்ல. ஆனா டீக்கடைக்குப் போறதுதான் சந்தேகம்.

//அதான் 'காலை' வாரிட்டு ஒரு 'கொம்பை' (!) கொடுத்திருக்கேன் இல்ல... பிடிச்சிட்டு சமாளிங்க தல :-))//

சூப்பர். இனிமே எவனாவது நீ என்ன பெரிய கொம்பாடா அப்படின்னு கேட்கட்டும். ஆமான்னு சொல்லிட மாட்டோம்.

said...

//எல்லாரும் அப்ப‌டித்தான் . பின்ன‌ வாழ்க்கையில‌ ஒரு திருப்ப‌ம் வேண்டாம்?//

சின்ன அம்மணி, திருப்பங்கள் எல்லாம் சரிதான். இதெல்லாம் தெரிஞ்சா அப்போ அம்புட்டு கஷ்டப்படாம, அடுத்த திருப்பத்திற்காக உட்கார்ந்து இருக்கலாம். ஹிஹி.

said...

//எட்டடுக்கு மாளிகையே கட்டிவிட்டீரேய்யா!! :)//

மாளிகையா. நீங்க வேற, எட்டுவிஷயம் எழுதவும் அடுத்த எட்டு பேரைக் கூப்பிடவும் தாவு தீர்ந்து போச்சு.

said...

//சி.ஏவிலும் ஐ.சி.டபிள்யூ.ஏவிலும் தேசிய அளவில் ரேங்க் வாங்கிப் பாசானது //

நியூ ஜெர்ஸி எந்தப் பக்கம் ? இங்கே இருந்தே கும்பிட்டுக்கறேன் )))

Hats off !!

said...

ஜெயஸ்ரீ, அது எதோ மச்சம், அதெல்லாம் பெரிசா சொல்லிக்கிட்டு. வாழ்த்துக்களுக்கு நன்றி.

அடுத்த புதிர் பதிவு போட்டாச்சு பாருங்க.

said...

நான் என்ன 300 பின்னூட்டமா வாங்கிட்டேன், இப்படி வாயைப் பிளக்க? :P எட்டு போட்டாச்சு, நீங்க ஏமாந்தால் நான் பொறுப்பில்லை.

said...

300 பின்னூட்டம் கிடக்குது. 300 பதிவு போடறதுன்னா சும்மாவா?

அதுதான் எட்டு பதிவா? நமக்கு எட்டுனது அவ்வளவுதான்னு வெச்சுக்கறேன். :-D

said...

அண்ணே..இப்படி அசத்திட்டு அங்க வந்து ரொம்ம்ப தன்னடக்கத்தோட பின்னூட்டம் போட்டிருக்கீங்க? :))

said...

எட்டு பதிவு போட்டாச்சுங்க

http://gragavan.blogspot.com/2007/06/blog-post_23.html

said...

Hi - Came to your blog through dubukku..Very interesting.
I have a question for you. I am very interested in learning Carnatic music, but I am unable to find teachers in my area. Are there any websites from which I can learn to appreciate Carnatic music?

said...

வாங்க ஸ்ரீ,

டீச்சர் மூலமா கத்துக்கிறதுதான் பெட்டர் என்பது என் அபிப்பிராயம்.

எந்த ஊரில் இருக்கீங்க? நமக்குத் தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களான்னு வலை வீசலாமா?

அது வரை இங்க போய் பாருங்க. ஆடியோ பாடங்கள் என்ற தலைப்பில் சில பாடங்கள் இருக்கின்றன. முயன்று பாருங்கள்.

said...

ஆற அமர பின்னூட்டம் இட வந்திருக்கிறேன்.
சூப்பர்ஸ்டார் பக்கத்தில் உடனே போக முடியுமா ?

பதிவுலகை கலகலக்க வைக்கும் உங்களைப் பற்றி அறிந்துகொள்ள இந்த இடுகை உதவியது. இந்த விளையாட்டிற்கு அந்தவகையில் நன்றி.

said...

உங்களுக்கு மென்மேலும் வெற்றிகள் கிட்ட வாழ்த்துக்கள் !!

said...

டியர் கோல்ட் மெடலிஸ்ட்,
ஏதோ எனக்கு தகுந்த எள்ளுருண்டை போட்டிருக்கிறேன். பார்க்க நுனிப்புல்

said...

//ஆற அமர பின்னூட்டம் இட வந்திருக்கிறேன்.
சூப்பர்ஸ்டார் பக்கத்தில் உடனே போக முடியுமா ?//

சிவாஜி படம் பார்க்கப் போகாம இங்க வந்துட்டீங்களா? இப்போ பார்த்தாச்சா? :)))

//பதிவுலகை கலகலக்க வைக்கும் உங்களைப் பற்றி அறிந்துகொள்ள இந்த இடுகை உதவியது. //

ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கத்தானே இந்த விளையாட்டு. அப்படி புரிஞ்சுக்கிட்டா சண்டை போடறது குறையுமில்ல.

said...

//உங்களுக்கு மென்மேலும் வெற்றிகள் கிட்ட வாழ்த்துக்கள் !!//

வாழ்த்துக்களுக்கு நன்றி மணியன்.

said...

//டியர் கோல்ட் மெடலிஸ்ட்,//

எனக்கு யாரும் அந்த மெடல் எல்லாம் தரலையே. நடுவில் புகுந்து அடிச்சுட்டாங்களா? :P

//ஏதோ எனக்கு தகுந்த எள்ளுருண்டை போட்டிருக்கிறேன். பார்க்க நுனிப்புல//

எள்ளுருண்டை சுவையோ சுவை!! :))

said...

Koths, finally I could leave a comment today ... Can never find ou during IST!!! Had been wondering from the day I read your blog here about your submarine adventure...

Where did you travel in a submarine! I have done all the rest except the submarine!!!

ekschews me for inglipees.
Desperately want to know about the submarine tour and no tamil font access now!

said...

oops forgot,
Many happy returns of the day!
:)

said...

//Koths, finally I could leave a comment today ... //

இவ்வளவு நாள் பின்னூட்ட மனசே வரலையா?

//Can never find ou during IST!!!//

நான் இருக்கிறது US EST ஆச்சே!!

// Had been wondering from the day I read your blog here about your submarine adventure...Where did you travel in a submarine! I have done all the rest except the submarine!!! //

அது ஒரு இனிமையான பயணம். கேமேன் தீவுகள் (Cayman Islands) என்ற ஒரு இடம். இங்க இருந்து பக்கம்தான். ஆனா அப்போ நான் இருந்தது இந்தியா. அதனால வேலைக்காக உலகின் மறுபக்கம் வரை வர, அங்கதான் இந்த நீர்மூழ்கிக் கப்பல் பயணம் நமக்கு வாய்த்தது. கடலில் பவழப் பாறைகளைச் சென்று பார்த்தது நல்ல அனுபவம்.

said...

//oops forgot,
Many happy returns of the day!
:)//

நன்றி மதுரா.

said...

எட்டு பற்றிய உங்கள் போஸ்ட் இன்றுதான் படித்தேன்.
நீங்கள் இலவசக் கொத்தனார் ஆக முதலில் எங்கு தயாரானீர்கள்
என்று சொல்ல வில்லையே?
நானும் ஒரு எட்டு வைத்து சீக்கிரம் எழுதுகிறேன்.
சகாதேவன்.

said...

வாங்க சகாதேவன். நம்ம எட்டு பதிவுக்கு ஒரு எட்டு வந்துட்டுப் போனதுக்கு நன்றி.

நம்ம முதல் மூணு பதிவைப் படியுங்க. ஏன் இலவசக்கொத்தனார் அப்படின்னு தெரியும்.

உங்க எட்டுப் பதிவோட உரலை இங்க தந்திடுங்க. நன்றி.