Sunday, June 24, 2007

சிவாஜி - (நம்) வாயிலே ஜிலேபி!!!

நானும் சிவாஜி பார்த்தாச்சு!!!


பி.கு. : பக்கத்தில் இருந்த நண்பன் சொன்னது - " எனக்கு விவேக் காமெடியை விட ரஜினி காமெடிதான் பிடிச்சு இருக்கு."

பி.பி.கு: அப்பொழுது ரஜினி சீரியஸாக சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.

பி.பி.பி.கு: தலையெழுத்து. இதுக்கெல்லாம் 16 டாலர் குடுத்து பார்த்தது.

பி.பி.பி.பி.கு: அதையும் நாம குடுக்காம ஓசியில் பார்த்ததுக்கே இவ்வளவு வயத்தெரிச்சல்.

பி.பி.பி.பி.பி.கு: நடிக்க முயற்சிக்காத வரையில் பார்க்க ஷ்ரேயா நல்லா இருக்கு. நயன் ஏன் இப்படி இளைச்சுப் போயிட்டாங்க?



பி.பி.பி.பி.பி.பி.கு: மொட்டை ரஜினி சூப்பர்!!



வர்ட்டா!!

53 comments:

said...

தேவு, இந்தப் படத்துக்கு எல்லாம் பாகம் பாகமா விமர்சனம் எழுதறியே. உனக்கே ஓவராத் தெரியலை? :))

said...

//
பி.பி.பி.பி.கு: அதையும் நாம குடுக்காம ஓசியில் பார்த்ததுக்கே இவ்வளவு வயத்தெரிச்சல்.//
கொத்ஸ் வேணாம் இது ந்ல்லா இல்ல அவன் அவன் 40$, 50$ குடுத்து பாத்து இருக்கான். வேணாம் எல்லாரும் வந்து கும்மி அடிச்சி அழுதுடுவோம்...

said...

வெலிங்டன்ல ஜூலை 8 தான் போடறாங்க. அதுவரைக்கும் விமரிசனங்கள மட்டும் படிக்கறதா முடிவு பண்ணியுருக்கென்

said...

//கொத்ஸ் வேணாம் இது ந்ல்லா இல்ல அவன் அவன் 40$, 50$ குடுத்து பாத்து இருக்கான். வேணாம் எல்லாரும் வந்து கும்மி அடிச்சி அழுதுடுவோம்...//

சந்தோஷமா வாங்க!! அதுக்குத்தானே பதிவு. கும்மி, காவடின்னு எல்லா ஆட்டமும் ஆடலாம். :))

said...

//வெலிங்டன்ல ஜூலை 8 தான் போடறாங்க. அதுவரைக்கும் விமரிசனங்கள மட்டும் படிக்கறதா முடிவு பண்ணியுருக்கென்//

சின்ன அம்மிணி, இப்படி எல்லாம் பதிவு போட்டா அப்புறம் விமர்சனம் மட்டுமே படிக்கிறதுன்னு முடிவு பண்ணிடப் போறீங்க. :)

said...

UPDATE!!!

ரசிகர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து இணங்கி ஷ்ரேயாவைப் பற்றி ஒரு வரியும் இரு படங்களும் சேர்த்தாகி விட்டது. சிபிக்காக கண்விண்மீனைப் பற்றியும் ஒரு வரி.

said...

ஹ்ம்ம்ம். இப்படியுமா? சீ சீ..

said...

இளா! என்ன சொல்ல வறீங்க?!

said...

//பி.பி.பி.பி.பி.பி.கு: மொட்டை ரஜினி சூப்பர்!!//

இதைச் சொல்லுறதுக்கு இம்புட்டு பில்டப்பா... :)))))

said...

//தேவு, இந்தப் படத்துக்கு எல்லாம் பாகம் பாகமா விமர்சனம் எழுதறியே. உனக்கே ஓவராத் தெரியலை? :)) //

எட்டு எட்டா வாழ்க்கையப் பிரிக்கச் சொன்னவருக்கு நாலு தான் போட முடிஞ்சதுன்னே நானே பயங்கர பிலீங்ல்ல இருக்கேன்...நீங்க வேற காமெடி எல்லாம் பண்ணிகிட்டு :(((

said...

நானும்தான் நேத்து ரஜினி படம் பார்த்தேன். உங்களை மாதிரியா கும்மி
அடிச்சேன்?

கொஞ்சம் வில்லத்தனமான ரோல் ஆரம்பத்துலே.
நாயகன் நாயகி காதல் வந்த 'லாஜிக்' ...................... சுவாரஸியப்படலை.

படத்துலே வந்த பலபேர் 'போயாச்சு'

பாட்டுங்க எல்லாமே பரவாயில்லை.

சில்க் நல்லா இருக்காங்க.

படம்: தங்கமகன்.

said...

50 வருஷம் களித்துப் பார்த்தாலும் சிரிக்கலாம், விழுந்து விழுந்து.
கிழவன் ரொம்பவே கஷ்டப்ப்டுறான்.

said...

//இதைச் சொல்லுறதுக்கு இம்புட்டு பில்டப்பா... :)))))//

அடப்பாவி, பதிவுல வேற எதுவுமே உனக்கு கண்ணில் படலையா? ரொம்ப பாஸிடிவான ஆளுதான்யா நீ.

உண்மையில் வயதெல்லாம் மறைக்காமல் வந்த மொட்டை ரஜினிதான் பெஸ்ட்.

said...

(வாயிலே) அல்வா இல்லியா?

said...

//எட்டு எட்டா வாழ்க்கையப் பிரிக்கச் சொன்னவருக்கு நாலு தான் போட முடிஞ்சதுன்னே நானே பயங்கர பிலீங்ல்ல இருக்கேன்...நீங்க வேற காமெடி எல்லாம் பண்ணிகிட்டு :(((//

அந்த படத்துக்கு எட்டு பதிவு வேணா போடய்யா. நான் ஒரு 50 தடவையாவது பார்த்து இருப்பேன். ஆனா அதுக்காக இந்த படத்து வக்காலத்து வாங்கறது எல்லாம் சரி இல்லை. அம்புட்டுதான்.

said...

//அவன் அவன் 40$, 50$ குடுத்து பாத்து இருக்கான்//

காமெடி :)

said...

//நானும்தான் நேத்து ரஜினி படம் பார்த்தேன். உங்களை மாதிரியா கும்மி
அடிச்சேன்?//

நீங்க நீங்கதான். நான் நாந்தேன். (ஒரு பதிவு போடற சான்ஸை மிஸ் பண்ணிட்டோமோன்னு உங்களுக்குத் தோணலை? நெஞ்சைத் தொட்டு சொல்லுங்க!) :)))

தங்கமகன் படத்தில் பாட்டெல்லாம் அருமையாக இருக்கும்.

said...

//50 வருஷம் களித்துப் பார்த்தாலும் சிரிக்கலாம், விழுந்து விழுந்து.
கிழவன் ரொம்பவே கஷ்டப்ப்டுறான்.//

களித்துப் பார்த்தால் சிரிக்கலாம். ஆனால் களிப்பு இல்லையே. அதான் வருத்தம்.

said...

தங்க மகனுக்கா இவ்வளவு குறிப்பு.-))

நான் சிவாஜி விமரிசனமோனு நினைச்சேன்.

நாங்களும் பார்த்துட்டு,தீபாவளிம்போது விமரிசிப்போமே.

said...

//(வாயிலே) அல்வா இல்லியா?//

சாம், நீர் யாருன்னு தெரியும். ஆனாலும் எங்க ஊரு ஸ்பெஷலான அல்வாவை இதுக்கெல்லாம் வேஷ்ட் பண்ணுவோமா? :)))

said...

////அவன் அவன் 40$, 50$ குடுத்து பாத்து இருக்கான்//

காமெடி :)//

அடுத்தவன் வலி உமக்குக் காமெடியா இருக்கா? நல்லா இரும்வோய்!

said...

//

தங்க மகனுக்கா இவ்வளவு குறிப்பு.-))

நான் சிவாஜி விமரிசனமோனு நினைச்சேன்.

நாங்களும் பார்த்துட்டு,தீபாவளிம்போது விமரிசிப்போமே.//

ஹலோ பதிவு போட்டது நாங்க. பதிவும் சிவாஜி பத்தி. அதெல்லாம் விட்டுட்டு அந்தம்மா(!) போட்ட பின்னூட்டம் மட்டும்தான் கண்ணுக்குத் தெரியுதாக்கும்?!

said...

உங்க வாயிலே ஜிலேபி-ன்னு படிச்சவுடனே...... ரொம்ப ஸ்வீட்டா விமர்சனம் பண்ணப்போறீங்கன்னு நினச்சு வந்தேன்... ஹ்ம்ம்ம்...

படம் பார்த்தவுடன நமக்கு தோணினது... கொஞ்சம் வெயிட் பண்ணி கலைஞர் டிவிலயே பாத்திருக்கலாம்.

சிவாஜி-யில் நடித்த ரஜினியை விட... சிவாஜி ரிலீஸ ஒரு திருவிழா மாதிரி ஆக்கி, இத்தாம் பெரிய பூக்கூடையை காதில மாட்டிக்கிட்டு கம்பீரமா திரியற அந்த ரசிகன நான் ரசிக்கிறேங்க. இப்படிப்பட்ட ரசிகர்கள் இருக்கற வரைக்கும் அவரோட அடுத்த படத்துக்கு பட்ஜெட் 100 கோடிதான். Enjoy Makkals!

said...

நல்ல வேளை நான் இன்னும் படம் பார்க்கவில்லை.15 டாலர் கொடுத்து காசை வீணாக்க வேண்டாம்.இருக்கவே இருக்கு டிவி.அதுல பார்த்துக்குறேன்.அவசரமே இல்லை :D
//
பி.பி.கு: அப்பொழுது ரஜினி சீரியஸாக சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.
//
பறந்து பறந்து அடிச்சாரா?

நான் ஒன்னும் சொல்லவில்லை.இந்த தேவ் அண்ணா வேறு ரஜினி பத்தி ஏதாச்சும் சொன்னால் சண்டைக்கு வருகின்றார்.எனக்கு ஏன் வம்பு.நான் எஸ்கேப்

said...

வயிற்றெரிச்சல் பதிவுய்யா....

said...

//பக்கத்தில் இருந்த நண்பன் சொன்னது - " எனக்கு விவேக் காமெடியை விட ரஜினி காமெடிதான் பிடிச்சு இருக்கு."//

உண்மை தான்....

said...

//பி.பி.கு: அப்பொழுது ரஜினி சீரியஸாக சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.//

அதுக்கும் ஒரு தனி திறமை வேணும்ல.....

said...

கொத்ஸ்,

ஹி ஹி ......

நாங்கெல்லும் தான் படத்தை பார்த்தோம்.... இப்பிடியா சிவாஜி மேனியா பதிவு போட்டோம்..?????

said...

//பி.பி.பி.கு: தலையெழுத்து. இதுக்கெல்லாம் 16 டாலர் குடுத்து பார்த்தது.//

61 $ கொடுத்து பார்த்தவங்களே ஆஹோ ஒஹோ னு பேசிக்கிட்டு இருக்கானுன்ங்க... 16 $ க்கு ஒது ஒவர் சவுண்ட் சொல்லிட்டேன்...

said...

//பி.பி.பி.பி.கு: அதையும் நாம குடுக்காம ஓசியில் பார்த்ததுக்கே இவ்வளவு வயத்தெரிச்சல்.//

தலைவர் படத்தை எப்படியும் பார்க்க வேண்டும் என்று அடுத்தவனை அரித்து டிக்கெட் வாங்கி பாத்துட்டு இப்படி எல்லாம் பேசப்பிடாது....

said...

//பி.பி.பி.பி.பி.கு: நடிக்க முயற்சிக்காத வரையில் பார்க்க ஷ்ரேயா நல்லா இருக்கு.//

அதானே நமக்கு வேணும்.... நல்ல லட்சணமா இருக்காங்கள....

// நயன் ஏன் இப்படி இளைச்சுப் போயிட்டாங்க?//

என்னய்யா இது வம்பா போச்சு. கொஞ்ச சதை போட்டாலும் என்ன நயன் இப்படி ஸ்கீரின் முழுக்க தெரியுறாங்கனு கேட்க வேண்டியது, கொஞ்சம் சிலிம் ஆனா இப்படி இளைச்சுப் போயிட்டாங்கனு கேட்க வேண்டியது....

said...

//பி.பி.பி.பி.பி.பி.கு: மொட்டை ரஜினி சூப்பர்!!//

சூப்பர்... சூப்பர்... சூப்பர் ஸ்டார் என்று சூப்பர்.

கமல் ரசிகர்களே... சூப்பரை சூப்பரோ சூப்பர் என்று ஒத்துக் கொள்ள வைக்கும் திறமை நம் சூப்பருக்கு மட்டுமே நடக்கும் சூப்பரான விசயம்.

said...

//"சிவாஜி - (நம்) வாயிலே ஜிலேபி!!!" //

தியேட்டர்குள்ள போகும் போது இனிப்பு கொடுத்தாங்களா நம் ரசிக கண்மணிகள்... பாசக்கார பயப் புள்ளைங்க... கொடுத்தாலும் கொடுத்து இருப்பார்கள்.


வர்ட்டா.....

said...

கொத்ஸ், எட்டு போட அழைத்து இருக்கிறேன்.. வாருங்கள்..

said...

இந்த கழிசடைப் படத்தை இண்டெர்நெட்டில் ஓசியா போட்டாகூட எவனும் பார்க்க மாட்டானு இதுவரைக்கும் போடல. நீங்க எதுக்குய்யா
காசு கொடுத்து பார்த்தீங்க?!

said...

//உங்க வாயிலே ஜிலேபி-ன்னு படிச்சவுடனே...... ரொம்ப ஸ்வீட்டா விமர்சனம் பண்ணப்போறீங்கன்னு நினச்சு வந்தேன்... ஹ்ம்ம்ம்...//

என்ன செய்ய.. கொஞ்சமா அல்வா குடுத்தா சந்தோஷமா இருந்திருக்கலாம். இது திகட்டிப் போச்சே.

//படம் பார்த்தவுடன நமக்கு தோணினது... கொஞ்சம் வெயிட் பண்ணி கலைஞர் டிவிலயே பாத்திருக்கலாம்.//

அதே அதே. கலைஞர் டீவி வருமான்னு தெரியாது. அதனால நான் நினைச்சது திருட்டு டி.வி.டி. :(

//இப்படிப்பட்ட ரசிகர்கள் இருக்கற வரைக்கும் அவரோட அடுத்த படத்துக்கு பட்ஜெட் 100 கோடிதான். Enjoy Makkals!//

தேவ் அவர்களை திட்டணமுன்னா நேரடியா அவர் பதிவுல திட்டுங்க. எதுக்கு இங்க எல்லாம் வந்து.... :)))

said...

//இருக்கவே இருக்கு டிவி.அதுல பார்த்துக்குறேன்.அவசரமே இல்லை :D///

துர்கா, இந்த சின்ன வயசுல உங்களுக்கு இருக்கிற அறிவும் நிதானமும் எங்களுக்கு இல்லாமப் போச்சேக்கா!! :))

//பறந்து பறந்து அடிச்சாரா?//
படத்தைப் பாருங்க தெரியும். (யாம் பெற்ற இன்பம்....)

//இந்த தேவ் அண்ணா வேறு ரஜினி பத்தி ஏதாச்சும் சொன்னால் சண்டைக்கு வருகின்றார்.எனக்கு ஏன் வம்பு.நான் எஸ்கேப்//
தேவு, என்னை மட்டும் தனியாக் கூப்பிட்டு ஆட்டோ வரும் அப்படின்னு மிரட்டினதா நினைச்சேன். இப்படி ஊரே பயப்படுதேய்யா!!!

said...

//வயிற்றெரிச்சல் பதிவுய்யா....//

அதே அதே!!

said...

//உண்மை தான்....//

அவரு உண்மையில் காமெடி செஞ்சா எனக்கு பிடிக்கும். ஆனா......

said...

//அதுக்கும் ஒரு தனி திறமை வேணும்ல.....//

புலி, அவர் காமெடி திறமை பத்தி எனக்கு சந்தேகம் இல்லை. ஆனா அவரையே காமெடியாக்கறவங்க திறமைதான் பயம் தருது.

said...

//நாங்கெல்லும் தான் படத்தை பார்த்தோம்.... இப்பிடியா சிவாஜி மேனியா பதிவு போட்டோம்..?????//

தம்பி ராயலு. உன்னை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு. ஒத்தை வரி எழுதினாலும் எம்புட்டு உள்குத்து ஐயா!!

கொல்லும் படம் எனச் சொல்ல வந்து கால் ஒடிந்து விடும் என்ற பயத்தில் அதையே அழகாக கெல்லும் படம் எனச் சொன்னதைச் சொல்லவா?

அல்லது கண்டமேனிக்கா பதிவு எனச் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறோம். அதையே சிவாஜிமேனியா பதிவு எனச் சொல்லி சிவாஜி = கண்டம் (தமிழ் கண்டமா? அல்லது ஆங்கில Condemnஆ) எனச் சொன்னதைச் சொல்லவா?

ரொம்ம்ம்ம்ம்ப பெருமையா இருக்கு ராசா!! :))

said...

//61 $ கொடுத்து பார்த்தவங்களே ஆஹோ ஒஹோ னு பேசிக்கிட்டு இருக்கானுன்ங்க... 16 $ க்கு ஒது ஒவர் சவுண்ட் சொல்லிட்டேன்...//

நாலே நாலு வரி. அதுவும் மெயின் போஸ்ட் கூட இல்லை. எல்லாம் பின்குறிப்புகள். இதுவே ஓவரா? என்ன கொடுமை இது சரவணன்?

said...

//தலைவர் படத்தை எப்படியும் பார்க்க வேண்டும் என்று அடுத்தவனை அரித்து டிக்கெட் வாங்கி பாத்துட்டு இப்படி எல்லாம் பேசப்பிடாது....//

நல்ல படியா ஒரு நாலு பதிவு போட விஷயம் தேத்தலாம் அப்படின்னு போயிட்டு, மூணரை மணி நேரம் அவஸ்தைப் பட்டதுதான் ராசா இப்படி...

said...

//அதானே நமக்கு வேணும்.... நல்ல லட்சணமா இருக்காங்கள....//

அக்காங்ப்பா..

//என்னய்யா இது வம்பா போச்சு. கொஞ்ச சதை போட்டாலும் என்ன நயன் இப்படி ஸ்கீரின் முழுக்க தெரியுறாங்கனு கேட்க வேண்டியது, கொஞ்சம் சிலிம் ஆனா இப்படி இளைச்சுப் போயிட்டாங்கனு கேட்க வேண்டியது....//

அட ஏன் இம்புட்டு ரென்சன்? ஊருன்னா அப்படித்தான்யா. எதாவது பேச விஷயம் வேணுமில்ல. படத்துல வெறி வராம பேச வேற எதுவுமில்லை. பின்ன என்னத்த பேச?

said...

//கமல் ரசிகர்களே... சூப்பரை சூப்பரோ சூப்பர் என்று ஒத்துக் கொள்ள வைக்கும் திறமை நம் சூப்பருக்கு மட்டுமே நடக்கும் சூப்பரான விசயம்.//

என்னமோ சொல்லி இருக்கீங்க. நான் என்ன கமல் ரசிகனா? அந்தாளு படத்தையும் இப்படி கிழிப்போமில. நாம எல்லாம் நல்ல சினிமாவின் ரசிகன். (அப்படியான்னு தங்கமணி பக்கத்தில் நின்னு கேட்டுக்கிட்டு இருக்கு.)

said...

//தியேட்டர்குள்ள போகும் போது இனிப்பு கொடுத்தாங்களா நம் ரசிக கண்மணிகள்... பாசக்கார பயப் புள்ளைங்க... கொடுத்தாலும் கொடுத்து இருப்பார்கள்.//

அப்படி இருந்தாத்தான் பரவாயில்லையே. குடுத்த 16க்கு கொஞ்சமாச்சும் வசூலாகி இருக்கும். இவனுங்க உள்ள குடுத்தானுங்க பாரு ஸ்வீட்டு. தாங்கலைடா சாமி.

//வர்ட்டா.....//

வாங்க வாங்க.

said...

//கொத்ஸ், எட்டு போட அழைத்து இருக்கிறேன்.. வாருங்கள்..//

அக்கா, நாம எல்லாம் எட்டு போட்டு நாளாச்சுங்களேக்கா. நம்ம பக்கமெல்லாம் ரெகுலரா வரதில்லை போல.

said...

//இந்த கழிசடைப் படத்தை இண்டெர்நெட்டில் ஓசியா போட்டாகூட எவனும் பார்க்க மாட்டானு இதுவரைக்கும் போடல. நீங்க எதுக்குய்யா
காசு கொடுத்து பார்த்தீங்க?!//

தேடித் தேடி பார்த்து கிடைக்கலைன்னு வருத்தம் போல? :))) நிதானமா திருட்டி விசிடி வரும். பாருங்க.

said...

இந்த மாதிரி ஒரு விமர்சனத்தை போன வார இறுதி பார்ட்டியில் சொல்ல போக அனைவரும் என்னை ஒரு மாதிரி பார்த்தார்கள். தமிழ் பதிவுகள் எழுதற ஆட்கள் எல்லாம் சிறிது மறை கழண்டவர்கள் எண்ணம் அவர்களிடைய பரவி விட்டது. என் பெட்டர் ஆப் வேறு "ஊரோடு ஒத்து வாழவேண்டிய தானே அதென்ன உங்க அதி மேதாவிதனத்தை கும்பலில் காட்டுவது. அடுத்த பார்ட்டியில் சிவாஜி மிக நல்ல படம், குரு அருமையான படம் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸர்ஸ் ஐயர் உலக தரம் வாய்ந்தது என பேசா விட்டால் வீட்டில் சாப்பாடு கிடையாது" என கண்டிஷன் போட்டாகிவிட்டது.

உம் கலிகாலம்டா சாமி

said...

//கொத்ஸ் வேணாம் இது ந்ல்லா இல்ல அவன் அவன் 40$, 50$ குடுத்து பாத்து இருக்கான். வேணாம் எல்லாரும் வந்து கும்மி அடிச்சி அழுதுடுவோம்...
//

ரிப்பீட்டே..இதெல்லாம் நல்லாயில்ல சொல்லிட்டேன்.

ரஜினி சும்மா அதிருதுல்லனு சொன்ன உடனே நான் உட்கார்ந்திருந்த சீட்டே அதிருது. என்னடா ரஜினி இவ்வளவு எஃபெக்ட் குடுக்கறாருன்னு புல்லரிச்சு பார்த்தா, பின்னால சீட்ல உட்கார்ந்திருக்கற வாண்டு என் சீட்டை உதைச்சிட்டு இருக்கான் :)

said...

அப்பாடி...இங்க எல்லாரும் கூட்டம் கூட்டமாப் போயிப் படம் பாத்தப்போ நாம மட்டும் போய்ப் பாக்காம விட்டுட்டோமோன்னு மனசுக்குள்ள ஒரு முக்குல லேசான சலனம் இருந்துச்சு. உங்க பதிவப் படிச்சடுந்தான் 50யூரோவக் காப்பாத்தீருக்கோம்னு புரிஞ்சது. டிக்கெட்டு 20 யூரோ. போக வர 30 யூரோ. அத்தோட ஒரு நாள். மெதுவா டிவிடி வரட்டும் அப்புறம் பாத்துக்கலாம்.

சன் டீவி விமர்சனம் பாத்தேன். விமர்சனம் ரஜினி படத்துக்கா விஜய் படத்துக்கான்னு சந்தேகம் வர்ர அளவுக்குக் காட்சிகள். அட..லாஜிக்கை விடுங்க. எல்லா மசலாப் படங்களும் இப்பிடித்தான் எடுக்குறாங்க. சாலமன் பாப்பையா வந்தாரு. அத்தோட என்னோட ஆத்திரம் அண்டாவுக்குள்ள குதிச்சி டங்குடங்குன்னு ஆடுச்சு. என்னங்க வசனம் அது.

பாப்பையா: இதுதான் என்னோட பொண்ணு அங்கவை

விவேக் : என்னது அங்க வைக்கனுமா

அத்தோட கருப்புப் பெண்களாக் காட்டிக் கிண்டல் வேற. இந்தாளு தொலி கருப்பா இருந்தா வைரமுத்து, காமராஜரு, ராமரு, கிஷ்னருன்னு தொணைக்குக் கூப்புடுவாங்களாம். திராவிடத்தின் உண்மையான நிறமே கருப்புதான்னு வசனம் பேசுவாங்களாம். அங்கவைக்கும் சங்கவைக்கும் தொலி கருப்பா இருந்தா கதாநாயகருக்குப் பிடிக்காதாம். சீச்சீ. அப்படி ஒரு காட்சீல நடிக்கவே வெக்கமாயில்லை. இதுல லாஜிக் பாக்காம ரசிக்கனுமாம். அடப் போங்கய்யா! விஜய் படம் மாதிரிதான் ரஜினி படம் இருக்கும்னு இப்பத்தான் தெரியுது.

said...

தமிழ்மணப்பக்கத்துக்கே கொஞ்ச நாளைக்கு வராமல் இருப்பமெண்டு நினைச்சுவராமல் இருந்தன். இன்னும் இந்த கருமாந்திரம் பற்றி முடியவே இல்லையா. போங்கையா நீங்களும் உங்கடை சினிமாத்தனமும். திருந்தவே மாட்டீங்களா.

said...

//சாம், நீர் யாருன்னு தெரியும்//
பெயரை மறைக்கிறதுக்காக சாம் அப்டின்னு போடலை. அந்த user name-ல் இருந்தமையால் அந்தப் பெயர் (தவறுதலாக) வந்துவிட்டது. அவ்வளவே ..