Friday, November 16, 2007

சா(ை)ல சிறந்தது!

என்னாத்த சொல்ல? இந்த மாசம் இந்த போட்டோ பதிவு குழுவினர் குடுத்து இருக்கும் தலைப்பு "சாலை". நிறையா பேர் ரொம்ப ஆர்வமா கலந்துக்கிட்டு இருக்காங்க. இந்த ஜோதியில் என்னையும் சேரச் சொல்லி நம்ம வெண்பா வாத்தி படுத்தி எடுக்கறாரு. நாமளும் படம் எடுக்கத் தெரியாத விஷயத்தை வெளிய சொல்ல வேண்டாமேன்னு ரொம்ப வேலை அது இதுன்னு பந்தா விட்டா, யோவ் ரோட்டைதானே போட்டோ எடுக்கணும் சும்மா வீட்டு வாசலில் போயி எடுத்து அனுப்புமய்யா அப்படின்னு அன்பா ஆணையிட்டுட்டாரு.

சரின்னு நானும் ஒரு நாள் காலையில் ஆபீஸ் போகும் முன் காமிராவை எடுத்துக்கிட்டு போய் நின்னா, பனி விழும் நகர்புறம், தெரியாதே எதிர்புறம் அப்படின்னு பாலுமகேந்திரா படம் மாதிரி ஒரே பனியா இருக்கு. சரின்னு ஒரு படம் எடுத்தாச்சு.


அப்புறம் அந்த இடத்தையே ரெண்டு நாள் கழிச்சு பளிச்சுன்னு வெயில் அடிக்கும் போது போய் எடுத்தேன். எடுத்துட்டு தங்கமணி கிட்ட காமிச்சா ரோட்டை படம் எடுக்கச் சொன்னா என்ன இது வீட்டைப் படம் எடுத்துட்டு வந்து நிக்கறீங்க? ஒரு வேலை ஒழுங்காச் செய்யத் தெரியுமான்னு வழக்கமான பல்லவியைப் பாட ஆரம்பிச்சுட்டாங்க.
சரி அவங்க சொல்லிட்டாங்களேன்னு இந்தப் பக்கம் வந்து ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் படம் எடுத்துப் போட்டாச்சு. இலையுதிர் காலம் என்பதால் மரங்கள் எல்லாம் பச்சை யூனிபார்மை கழட்டிவிட்டு கலர் கலராய் ட்ரெஸ் பண்ணிக் கொண்டு அட்டகாசமாய் இருப்பதால் சாதாரண சாலைகளும் சும்மா சூப்பரா இருக்கு. கொஞ்சம் பிரயத்தனப்பட்டிருந்தால் நல்ல லொகேஷனாய் போய் படம் பிடித்திருக்கலாம். ஆனால் நம்ம சோம்பேறித்தனம்தான் ஊரறிஞ்சதாச்சே!!



நமக்கு இந்த போஸ்ட் ப்ரொடக்ஷன் கட் பேஸ்ட் எல்லாம் தெரியாது. அதனால எடுத்த படத்தை அப்படியே போட்டுடறேன். நடுவர்களா, கொஞ்சம் பார்த்து எதாவது செய்யுங்கப்பா.

60 comments:

said...

பதினைந்தான் தேதிதான் கடேசி நாளு
இவ்வளவு நாளு தூங்கிட்டி இப்ப சுறுப்பா வந்து இருக்கீறாக்கும்.

said...

அடடா, அவங்க போட்டியில் நம்ம படங்களை சேர்த்துக்க மாட்டாங்களாமே. மக்கள்ஸ் கொஞ்சம் ரெக்கமெண்டு பண்ணுங்கப்பா!! (இங்க வந்து பின்னூட்டத்தில் ஆதரவு தெரிவிச்சீங்கன்னா ரெக்கமெண்டு பண்ணுறாப்புலதான்!)

said...

இம்புட்டு நாள் நம்ம பக்கம் வந்து எட்டிப் பார்க்காத நீரு இன்னிக்கு வந்துட்டீரே. அது மட்டும் என்னா நியாயம்?

என்னய்யா செய்ய, இன்னிக்குத்தான் நேரம் கிடைச்சுது. கடைசி நாள் 15ஆம் தேதின்னு தெரியாம போச்சு. பேரைக் குடுக்கப் போனா அப்போதான் பார்த்தேன்.

சரி போகட்டும் படம் எப்படி இருக்கு? சொல்லவே இல்லையே. அம்புட்டு மோசமா?

said...

முதல் படம் பாலு மகேந்திரா படம் மாதிரி இருக்கு. (ரொம்ப நொந்துபோயிருக்கீங்களேன்னு ஒரு ஆறுதலுக்காக சொன்னேன்பா ;-))

said...

பதிவோ படங்களோ எனக்கு பெரிசாத்தெரியல. வேற ஒன்னும் எனக்கு பெரிய ஆச்சர்யமாவும், அதிசயமாவும் இருக்கு. அது என்னவா இருக்கும்னு சரியா சொல்லுங்க பார்க்கலாம்?

said...

கொத்தனார் ரோடு ஃபோட்டா நல்லாதான் இருக்கும்.

said...

படங்களைக்காட்டிலும் உங்க narration நல்லாயிருக்கு :)

said...

//ஆனால் நம்ம சோம்பேறித்தனம்தான் ஊரறிஞ்சதாச்சே..//

appada...naan mattum somberi illainu theriyum pothu romba santhosama irruku.
enna koths..ivalavu late submission..

said...

கொத்தனார் போட்ட ரோடு சூப்பர் முதல் ரெண்டு படங்களும் நல்லாருக்கு.இவ்வளவு அற்புதமான லொக்கேஷன்களை வைத்துக்கொண்டு
சோம்பேறித்தனம் ரொம்ப மோசம்.
நாங்கல்லாம் இப்படி இடங்கள் கிடைக்காதா..தவிக்கிறோம்......

said...

என்னது உங்களைப் போட்டியிலே சேர்த்துக்கல்லயா !!!!! ?????????????? :)))))

said...

கொத்ஸ் போட்ட படங்களைச் சேர்த்துக்க மாட்டாங்களாமா?


அதுலே நல்லா இருக்கும் ரெண்டு படத்தை என் பெயரிலும், சுமாரா இருக்கும் ரெண்டை கொத்ஸ் பேரிலும்
போடச்சொல்லி உண்ணும் விரதம் இருந்துறவேண்டியதுதான் போல.

said...

சரி இப்போ படம் பத்தி ஐ லைக் த லாஸ்ட் பிக்.. நல்லா இருக்கு ;-)

said...

சூப்பர் லொகேஷன் சாமி!

நல்லாவே ரோடு போட்டிருக்கீரு!

போட்டியில் இடம் பெறாமைக்கு ஆ.அ.
:))

said...

அட....

கொஞ்சம் எடிட்டிங் வேலை பாத்தீங்கனு வைங்க.... பிரமாதமா இருக்கும்.. அதை செய்ய சோம்பேறித்தனம் என்று சொல்லுங்க ஒத்துக்குறேன்.. ஆனா தெரியாதுனு சொல்லக் கூடாது

said...

உங்களை போட்டியில் சேர்த்துக் கொள்ளாதை கண்டித்து என்ன போராட்டம் நடத்துலாம் என்று சொல்லுங்க... அரை மணி நேரம் நடத்தினால் கூட போதும், அப்பால பேசி சமாளிச்சுக்கலாம்.. என்ன சொல்லுறீங்க...

said...

உங்களை போட்டியில் சேர்த்துக் கொள்ளாதை கண்டித்து என்ன போராட்டம் நடத்துலாம் என்று சொல்லுங்க... அரை மணி நேரம் நடத்தினால் கூட போதும், அப்பால பேசி சமாளிச்சுக்கலாம்.. என்ன சொல்லுறீங்க...

said...

//பனி விழும் நகர்புறம்,
தெரியாதே எதிர்புறம்//

அடடா .. கவிஜ .. கவிஜ ... படங்களைவிட இந்த வரிகள் காட்டும் காட்சி ரொம்ப நல்லா இருக்கு.

//ஒரு வேலை ஒழுங்காச் செய்யத் தெரியுமான்னு ..//

இந்த மாதிரி தங்கமணிகள் உண்மையைப் போட்டு உடைக்கும்போது மனசு ரொம்பவே உடஞ்சி போயிருது ... இல்ல?

said...

//முதல் படம் பாலு மகேந்திரா படம் மாதிரி இருக்கு. (ரொம்ப நொந்துபோயிருக்கீங்களேன்னு ஒரு ஆறுதலுக்காக சொன்னேன்பா ;-))//

இப்படி ஆறுதல் சொன்னதுக்கு சொல்லாமலேயே இருந்து இருக்கலாம் சேது ஆச்சி.

ஆமாம் அக்கா போயி ஆச்சி வந்ததுக்குக் காரணம் உங்க துடுக்குப் பேச்சுதான். :))

said...

//பதிவோ படங்களோ எனக்கு பெரிசாத்தெரியல. //

யோவ் வெண்பா வாத்தி. இப்ப சந்தோஷமாய்யா? நார்மலா பதிவு சுமாரா இருந்தா அதுக்கு பாவம் பார்த்து நல்லா இருக்குன்னு சொல்லிட்டுப் போவாரு. அதுக்கும் வெச்சுட்டியேய்யா ஆப்பு...... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((

//அது என்னவா இருக்கும்னு சரியா சொல்லுங்க பார்க்கலாம்?//

என்னென்னமோ தோணுது. அதெல்லாம் வெளிய சொல்லி நானே சொ.செ.சூ வெச்சிக்கும் அளவுக்கு இன்னும் போகலை. நீயே சொல்லிடு.

said...

//கொத்தனார் ரோடு ஃபோட்டா நல்லாதான் இருக்கும்.//

பாலா, சூப்பர் கமெண்ட். சிரிச்சு சிரிச்சு வயத்து வலியே வந்திருச்சு. எப்படிய்யா இதெல்லாம்? ரூம் போட்டு யோசிப்பீங்களோ? :))

said...

//படங்களைக்காட்டிலும் உங்க narration நல்லாயிருக்கு :)//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!

யோவ் வெண்பா வாத்தி, இப்படி ஏத்தி வுட்டு வேடிக்கை பாக்கறியே! இது உனக்கே நல்லா இருக்கா?

யய்யா சதங்கா. நல்ல வேளை எழுதறது சுமாரா இருக்குன்னு சொல்லிட்டுப் போனீரே. இல்லை கடையை இழுத்து மூட வேண்டியதுதான் போல.

said...

//appada...naan mattum somberi illainu theriyum pothu romba santhosama irruku..//

யம்மா துர்கா, இங்க எல்லாம் வந்தா தமிழில்தான் எழுதணும். நாங்க எல்லாம் சிங்கிங் இந்த ரெயின் பாட்டையே தமிழில் எழுதி வெச்சுக்கிட்டுதான் பாடுவோம்.

//enna koths..ivalavu late submission.//

அதான் சோம்பேறித்தனமுன்னு சொல்லியாச்சுல்ல. சும்மா அதையே குடைஞ்சுக்கிட்டு.

said...

//கொத்தனார் போட்ட ரோடு சூப்பர் முதல் ரெண்டு படங்களும் நல்லாருக்கு.//

வாங்க நானானி, ரொம்ப நன்றிங்க.

//இவ்வளவு அற்புதமான லொக்கேஷன்களை வைத்துக்கொண்டு
சோம்பேறித்தனம் ரொம்ப மோசம்.
நாங்கல்லாம் இப்படி இடங்கள் கிடைக்காதா..தவிக்கிறோம்......//

உண்மையில் வீட்டு வாசலில் எடுத்த படங்கள்தான். இன்னும் நல்ல இடங்கள் எல்லாம் இருக்கு. தெரிஞ்சும் போக முடியலை. ஆணி புடுங்கல்ஸ் + சோம்பேறித்தனம்தான் காரணம்.

said...

நல்லாத்தான் ஆணி புடுங்கினீங்க, போங்க!

said...

padangalai konjam tinkering panna top 10 la varum . verumE manal thaniya vachchirundha ..cement poosaatha kattadam... cement poosi vellaiyadichcha kattadam renduththula edthu nallla irukkum sollunga saami. naagai sivaa sonnadhe tha.. konjam menakkedunga.. ithe padam super aa varum

said...

//என்னது உங்களைப் போட்டியிலே சேர்த்துக்கல்லயா !!!!! ?????????????? :)))))//

எதுக்கு இம்புட்டு சிரிப்பு?! நீ யாரு அப்படிங்கிற உண்மையை மறந்துவிட்டு சிரிக்கும் சிரிப்பு.

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு, இங்கே நீ சிரிக்கும் புன்சிரிப்போ அறியாச் சிரிப்பு.

நண்பன் ஒருவன் சொல்கிறான் நீரும் போட்டியில் இருக்கிறீராம். அதனால் நான் வந்தால் எங்கே உமக்கு வெற்றி வாய்ப்பு இல்லாமல் போய் விடுமோ என எக்காளமிடுகிறீர்களாம்.

ஆனால் எனக்கா தெரியாது? எத்தனை மேடைகளேறி எனக்காக உயிரையும் தருவேன் என நீயும், உனக்கு என்ன கைமாறு செய்வேன் எனச் சொல்லத் தெரியாமல் நானும் கண்ணீர் மல்க கட்டியணைத்து நின்றிருக்கிறோம்.

உனக்கு வெற்றி வேண்டுமென்றால் அதற்காக மற்ற போட்டியாளர்கள் அனைவரையும் துரத்திவிட முன் நிற்பேன் நான் என அறியாதவனா தம்பி நீ?! இல்லை இல்லை. ஆனால் யாரோ ஒரு சதிகாரன் பேச்சைக் கேட்டு நீ தடுமாறி நிற்பது எனக்கு உன் சென்ற பதிவைப் பார்த்த உடன் புரிந்தது. அதனைப் பற்றி பேச வருகையில் இப்படி அடுத்த அடியும் கூட.

இந்த ஒரு போட்டியா நம் இடையே வரப் போகிறது? ஒரு இடைவெளியைத் தரப் போகிறது? அது ஒரு நாளும் நடக்காது.

கயவர்கள் நயவஞ்சகம் உனக்குப் புரியம் நாள் வெகுதூரத்தில் இல்லை. அன்று அண்ணா என நீ ஓடிவருகையில் உன்னை வரவேற்க இருகரம் நீட்டி நிற்பேன். இதுதான் நான் சொல்ல விரும்புவது.

said...

//கொத்ஸ் போட்ட படங்களைச் சேர்த்துக்க மாட்டாங்களாமா?//

ஆமா ரீச்சர், அப்படித்தான் சொல்லறாங்க.

//அதுலே நல்லா இருக்கும் ரெண்டு படத்தை என் பெயரிலும், சுமாரா இருக்கும் ரெண்டை கொத்ஸ் பேரிலும்
போடச்சொல்லி உண்ணும் விரதம் இருந்துறவேண்டியதுதான் போல.//

நான் ரெடி, நீங்க ரெடியா? இப்போ நான் ரெடி, நீங்க ரெடியா? என்ன மெனு?

said...

//சரி இப்போ படம் பத்தி ஐ லைக் த லாஸ்ட் பிக்.. நல்லா இருக்கு ;-)//

என்னவாகட்டும். தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் எனச் சும்மாவா சொன்னார்கள்?

என்னதான் நயவஞ்சகர்கள் உன் நெஞ்சில் நஞ்சினைக் கலந்தாலும் கிஞ்சித்தேனும் பாசம் இருப்பது தெரிகிறது அல்லவா? அதுதானே இந்த சத்தியமான வார்த்தையாய் வெளியே வருகிறது.

இந்த ஒரு வார்த்தை போதுமடா தம்பி. வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் உன் பெருமை எழுதப்படும். எப்படி என்று கேட்கிறாயா? தம்பியுடையான் படைக்கஞ்சான் என்று தரணி உன் புகழ் பாடும்.

உன் உள்மனதில் உட்கார்ந்திருக்கும் உண்மையை உலகிற்கு உணர்த்தியது உவகையளிக்கிறது. (அம்மாடி எல்லாமே உவன்னாவில் ஆரம்பிக்குதே!)

said...

//சூப்பர் லொகேஷன் சாமி!

நல்லாவே ரோடு போட்டிருக்கீரு!

போட்டியில் இடம் பெறாமைக்கு ஆ.அ.
:))//

நம்ம உணர்ச்சிகளை புரிஞ்சுக்கிட்டதுக்கு நன்றி ஐயா!!

said...

//கொஞ்சம் எடிட்டிங் வேலை பாத்தீங்கனு வைங்க.... பிரமாதமா இருக்கும்.. அதை செய்ய சோம்பேறித்தனம் என்று சொல்லுங்க ஒத்துக்குறேன்.. ஆனா தெரியாதுனு சொல்லக் கூடாது//

சாமி. உண்மையில் அதெல்லாம் இது வரை செஞ்சதே கிடையாது. இனிமே கத்துக்க வேண்டியதுதான். சரியா வரலைன்னா இருக்கவே இருக்கு - இதெல்லாம் செய்வது படமெடுப்பது இல்லை. அது கட் பேஸ்ட் விளையாட்டு என்கிற கட்சி. அங்க போய் சேர்ந்துக்க வேண்டியதுதான். என்ன சொல்லறீங்க? :)

said...

//உங்களை போட்டியில் சேர்த்துக் கொள்ளாதை கண்டித்து என்ன போராட்டம் நடத்துலாம் என்று சொல்லுங்க... அரை மணி நேரம் நடத்தினால் கூட போதும், அப்பால பேசி சமாளிச்சுக்கலாம்.. என்ன சொல்லுறீங்க...//

உங்க கூட்டத்தில் நீ ஒருத்தனாவது சுயபுத்தியோட இருக்கியே. நல்லா இருப்பா.

(என்னது? இல்லை இல்லை. கல்யாணம் ஆகாம இருக்கிறதுக்கும் இந்த சுயபுத்திக்கும் சம்பந்தம் இல்லை. ஆமாம். ஆமாம். சம்பந்தமே இல்லை. தேவ் சொல்லறதை எல்லாம் காதில் போட்டுக்காதே!))

said...

//உங்களை போட்டியில் சேர்த்துக் கொள்ளாதை கண்டித்து என்ன போராட்டம் நடத்துலாம் என்று சொல்லுங்க... அரை மணி நேரம் நடத்தினால் கூட போதும், அப்பால பேசி சமாளிச்சுக்கலாம்.. என்ன சொல்லுறீங்க...//

போன தடவை போட்ட அதே பின்னூட்டம்தான். இருந்தாலும் ரெண்டு தடவை போட்டதுக்கு ரெண்டு தடவை நன்னி சொல்வது என் கடமை என்பதால்..... மீண்டும்.....

உங்க கூட்டத்தில் நீ ஒருத்தனாவது சுயபுத்தியோட இருக்கியே. நல்லா இருப்பா.

(என்னது? இல்லை இல்லை. கல்யாணம் ஆகாம இருக்கிறதுக்கும் இந்த சுயபுத்திக்கும் சம்பந்தம் இல்லை. ஆமாம். ஆமாம். சம்பந்தமே இல்லை. தேவ் சொல்லறதை எல்லாம் காதில் போட்டுக்காதே!))

said...

//அடடா .. கவிஜ .. கவிஜ ... படங்களைவிட இந்த வரிகள் காட்டும் காட்சி ரொம்ப நல்லா இருக்கு.//

அடடா நீங்களுமா என்னைத் திட்டும் கும்பலில் சேர்ந்துட்டீங்க? பின்ன என்னையும் கவுஜையையும் ஒரே வரியில் சொன்னா திட்டாம என்னவாம்? :-X

//இந்த மாதிரி தங்கமணிகள் உண்மையைப் போட்டு உடைக்கும்போது மனசு ரொம்பவே உடஞ்சி போயிருது ... இல்ல?//

இம்புட்டு வருசத்தில இது இன்னுமா பழகலை?! சின்ன பசங்க நாங்களே பழகிக்கிட்டு இதுக்கெல்லாம் அசராம நிக்கிறோம். நீங்க என்னடான்னா தமிழ் சினிமா செகண்ட் ஹீரோ மாதிரி அழுதுக்கிட்டு இருக்கீங்க!! சியர் அப் ஓல்ட் மேன்! :))

said...

தலைவரே..காலத்தின் கோலமிது இன்று மக்கள் பிரச்சனையைக் கருத்தில் கொண்டு நீங்களும் நானும் காலத்தின் அவசியத்தில் வேறு வேறு இடங்களில் நின்றாலும்.. என்றும் என் தலைவர் நீங்கள் தான் என் ஆசான் நீங்கள் தான்.. நீங்கள் சொல்லிக் கொடுத்தப் பாடத்தை நீங்கள் மறந்திருக்கலாம் ஆனால் மறக்கும் அளவிற்கு எனக்கு பாடம் கற்று தரவில்லையே.... கடைசி மூச்சு உள்ளவரை உள்ளத்தில் இருக்கும் படியல்லவா அறிவு பாலைப் புகட்டினீர்கள்...

அய்யோகோ என்னக் கொடுமை இது கற்பித்த ஆசானுக்கே அவர் பாடத்தை நான் திரும்பச் சொல்லுவதா.. இந்த இக்கட்டான சூழ்னிலை எந்த மாணவனுக்கும் வரக் கூடாதய்யா வரக்கூடாது...

முன்னொருக் காலத்தில் சொன்னீர்களே இடுக்கண் வருங்கால் நகுக என்று,,, அந்தப் பொன்மொழியினை நான் நெஞ்சில் நிறுத்தி நகைத்தால் நீங்கள் ஏன் இந்த நகைப்பு எனக் கேட்பது எத்தனை திகைப்பு அய்யா

ஆசானே,,, பாடங்களை நீங்கள் மறந்தாலும் உங்கள் மாணவன் நான் மறவேன்...

said...

//நல்லாத்தான் ஆணி புடுங்கினீங்க, போங்க!//

பதிவுல இதைப் பத்தி தெளிவாச் சொல்லியாச்சு. சும்மா வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சாதீங்க நானானி!

said...

//padangalai konjam tinkering panna top 10 la varum . verumE manal thaniya vachchirundha ..cement poosaatha kattadam... cement poosi vellaiyadichcha kattadam renduththula edthu nallla irukkum sollunga saami. naagai sivaa sonnadhe tha.. konjam menakkedunga.. ithe padam super aa varum//

யோவ் உசுப்பி விட்டு உசுப்பி விட்டுப் படம் போட வெச்சீரு. இப்போ இதுல இங்கிலிபீசு வேற.

அடுத்தது டாப் 10 ஆசையைக் காட்டுதீரு. இதுல எங்க துறையைக் காட்டி உதாரணம் வேற. உம்ம பேச்சைக் கேட்டு சாதாரணமா இருந்த நான் சதா ரணமா அலையுறேன், இந்த உதாரணம் காட்டி ரணமாக்குற வேலை எல்லாம் வேண்டாம். சொல்லிட்டேன்.

said...

//தலைவரே..காலத்தின் கோலமிது இன்று மக்கள் பிரச்சனையைக் கருத்தில் கொண்டு நீங்களும் நானும் காலத்தின் அவசியத்தில் வேறு வேறு இடங்களில் நின்றாலும்.. என்றும் என் தலைவர் நீங்கள் தான் என் ஆசான் நீங்கள் தான்..//

கண்ணே, உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா? உன் பாசம்தான் எனக்குப் புரியாதா? உன் ரத்தம் இள ரத்தம் அதனால் கொதிக்கிறது. அதனால் அதில் அவசரம் தெறிக்கிறது. ஆராயாமல் அடிக்கடி வெடிக்கிறது. கம்பெடுத்து அடிக்கிறது.

ஆனால் இன்று ஒன்று சொல்கிறேன் கேள். பொறுத்தாரே பூமிகாவை... ச்சீ பூமி ஆள்வார்.

//நீங்கள் சொல்லிக் கொடுத்தப் பாடத்தை நீங்கள் மறந்திருக்கலாம் ஆனால் மறக்கும் அளவிற்கு எனக்கு பாடம் கற்று தரவில்லையே.... கடைசி மூச்சு உள்ளவரை உள்ளத்தில் இருக்கும் படியல்லவா அறிவு பாலைப் புகட்டினீர்கள்...//

நிதானமே நன்மை பயக்கும். ஆகையால் ஒன்று நடக்கையில் அது எதனால் நடக்கிறது என்பதை யோசித்துப் பார். எதேனும், அது நான் சொன்னதாக இருந்தாலும், அது அச்சமயத்தில் செய்வது சரியா என சிந்தித்துப் பார்.

நான் சொல்வதை நீ இப்படி சிரமேற்கொண்டு செய்வதைப் பார்த்தால் பூரிப்பாக இருந்தாலும் இப்படி அடுக்கு மொழியில் மயங்கி அதன் உட்பொருளை மறப்பது நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது. இப்படிக் கிளிப்பேச்சு பேசுவது போல் நான் சொல்வதைத் திருப்பிச் சொல்லும்படியாகவா உன்னை வளர்த்திருக்கிறேன். தம்பி நீ சிந்தித்துப் பார்.

//முன்னொருக் காலத்தில் சொன்னீர்களே இடுக்கண் வருங்கால் நகுக என்று,,, அந்தப் பொன்மொழியினை நான் நெஞ்சில் நிறுத்தி நகைத்தால் நீங்கள் ஏன் இந்த நகைப்பு எனக் கேட்பது எத்தனை திகைப்பு அய்யா//

சொன்னேன். அது மட்டுமா சொன்னேன்? அடுத்தவரைக் கடித்து விஷத்தைக் கக்கும் பாம்பினைப் போல் கடுமொழிகள் பேசாதே என்றும் சொன்னேன். ஆனால் பாம்பு அடிபடாமல் இருக்க வேண்டுமானால் சீறித்தான் ஆக வேண்டும் என்பதையும் சொன்னேனே தம்பி, அதனை மறந்து விட்டாயா?

ஒரு திரைப்படத்தில் நண்பர் செந்தில் செய்ததைப் போல் ஒருவரின் அன்னையார் மறைவுக்குச் சொன்ன ஆறுதல் வார்த்தைகளை ஒருவரின் மனைவி இறந்து போன பொழுது சொல்லுதல் ஆகுமா?

நமக்கு ஒரு அநியாயம் நிகழ்கையில் அதனை நினைத்து நமக்கு நாமே சிரித்துக் கொண்டாலும் அதனை எதிர்க்கும் பொழுது நாம் தீவிரத்தை அல்லவா காண்பிக்க வேண்டும். அங்கும் போய் சிரித்துக் கொண்டு நின்றிருந்தால் நம்மை இளிச்சவாயன்கள் என்று அல்லவோ நினைப்பார்கள்?

இதனை சரியாகச் சொல்லித் தராமல் போய்விட்டேனே என்ற ஆற்றாமையினால் அல்லவோ அவ்வளவு பெரிய வியாக்கியானம் தர வேண்டியதாய் போயிற்று. போது பொறுத்தது என் உடன்பிறப்பே. பொங்கி எழு. நாம் யார் என்பதை அந்த சிறு நரி கூட்டத்திற்குக் காட்டு.

இந்த 'சாலை' போட்டியில் வெற்றியுடன் திரும்பி வா. அதுவரை 'வழி'மேல் விழி வைத்துக் காத்திருப்பேன்.

இப்படிக்கு உன் அருமை அண்ணன்..

said...

தலைவா.. எத்தனைத் தியாகங்கள் செய்து இருப்பீர்கள் பமக இயக்கத்தின் வளர்ச்சிக்கு... உங்கள் பின்னூட்டங்கள் வலையுலகச் சாலைகளில் தேரோட்டம் நடத்தியக் காலம் என் நினைவுகளில் இன்னும் நீங்கவில்லையே... எதோ ஒரு முட்டுச் சந்தில் கம்பின்றி கீழே கிடந்த பமகக் கொடி பறக்க உங்கள் தேரைக் கொடுத்து விட்டு வழியில் வந்த விவாஜியாரின் நீங்கள் லிப்ட் கேட்டு ஏறிய அந்த சம்பவத்தைச் சரித்திரம் மறந்தால் சரித்திரம் தரித்திரமாகும் என எச்சரிக்கிறேன்...

ஆனால் இன்று கவிதையாய் காட்சியைக் கருத்தாய் பதிவு செய்து அதை பதிவிலே இட்டும்.. ஒரு நாள் தாமதம்... அதற்கு உங்களை ஆட்டயையில் சேர்க்க மறுக்கும் நிர்வாக..இதைக் கேள்விப் பட்டு பமக இயக்கம் துடித்திருக்க வேண்டாமா.. பொங்கி பொங்கல் வைத்திருக்க வேண்டுமா,, விமான வீதிகளில் மேகங்களுக்கு தார் பூசி தம் எதிர்ப்பைக் காட்டிக் கலக்கியிருக்க வேண்டாமா...

ஆனால் எதுவும் நடக்க வில்லையே....

பமக இயக்கமும் அதன் முன்னோடியினரும் ரங்கமணிகளுக்கு எதிரான மிகப் பெரும சதி தீட்டுவதில் மதி மயங்கிவிட்டனர்.. இங்கு ஒரு ரங்கமணியின் புகைப்படம் போட்டிக்கு ஏற்கபடவில்லை.. அதைக் கேள்விக் கேட்காமல் மவுனம் சாதிக்கிறார்கள்...

ரஷ்யாவில் ரத்தம் இந்நேரம் ரத்தம் சூடாகி இருக்க வேண்டாமா?

said...

//பமக இயக்கமும் அதன் முன்னோடியினரும் ரங்கமணிகளுக்கு எதிரான மிகப் பெரும சதி தீட்டுவதில் மதி மயங்கிவிட்டனர்.. இங்கு ஒரு ரங்கமணியின் புகைப்படம் போட்டிக்கு ஏற்கபடவில்லை.. அதைக் கேள்விக் கேட்காமல் மவுனம் சாதிக்கிறார்கள்...//

சங்கத்தின் போர்வாளே... எங்களின் வாழ்வே...

அவங்கள் கோஷ்டி பூசலில் சிக்குண்டு கிடக்கிறார்கள் என்பதை இன்னுமா உன் உள்ளம் ஒத்துக் கொள்ள மறுக்கிறது. காலம் விடை கூறும் ஆனால் கண்டிப்பாக ரஷ்யாவிடம் இருந்தோ அமீரகத்தில் இருந்தோ எந்த ஒரு பதிலும் வர போவது இல்லை. அப்படியே வந்தாலும் அது வெறும் வாய் வார்த்தையாக தான் இருக்குமே ஒழிய உள்ளத்தின் வெளிப்பாடாக அமையாது என்பது திண்ணம்

said...

//இதைக் கேள்விப் பட்டு பமக இயக்கம் துடித்திருக்க வேண்டாமா.. பொங்கி பொங்கல் வைத்திருக்க வேண்டுமா,, விமான வீதிகளில் மேகங்களுக்கு தார் பூசி தம் எதிர்ப்பைக் காட்டிக் கலக்கியிருக்க வேண்டாமா...//

மீண்டும் மீண்டும் தவறு செய்கிறாயே நண்பா. ஆனையை அடக்க அங்குசம் வேண்டும் அற்ப புழுவினை நசுக்க அதுவா தேவை?

அது மட்டுமா? ஒரு தாய்க்கு எப்போ மகிழ்ச்சி வரும் தன் மகனை மற்றவர்கள் சான்றோன் எனக் கேட்கும் பொழுது.

சில மரங்கள் ஆல மரம் மாதிரி. நிழல் தரும். நிறையா பறவைகள் உட்கார்ந்து இருக்கும். ஆனா அதுக்குக் கீழ ஓண்ணுமே வளர முடியாது.

ஒரு கிரிக்கெட் அணி இருக்கு. அதுல நிறையா அனுபவம் உள்ள வீரர்கள் இருக்காங்க. ஆனா ஒரு ஜாலியான விளையாட்டு வந்தா அவங்க எல்லாரும் அதில் ஆடணும் அப்படின்னு அவசியம் இல்லை. அணியில் மற்றவர்களுக்கு இடம் கொடுத்து வேடிக்கை பார்ப்பார்கள். அவர்கள் விளையாடாமல் அணியினைக் கைவிட்டு விட்டார்களா? இல்லை.

சரி இன்னும் ஒரு காட்சியினைப் பார்ப்போம். ஒரு குழந்தை எழுந்து நடக்க முயல்கிறது. அப்பொழுது கீழே விழுகிறது. அதனைப் பார்த்துக் கொண்டிருக்கும் தாய்க்கு மனம் வலிக்கிறது. அக்குழந்தையைத் தூக்கி அரவணைக்கத் துடிக்கின்றது. ஆனால் அப்படிச் செய்யாமல் அந்தத் தாய் சும்மா இருக்கிறாள். அவளுக்கு அரக்க குணமா? இல்லை. தன் மகன் தானாக எழுந்து நிற்க வேண்டும், நடக்க வேண்டும், ஓட வேண்டும் என்று எண்ணியல்லவோ சும்மா இருக்கிறாள்? அப்படி அந்தக் குழந்தை முதலடி எடுத்து வைக்கும் பொழுதுதான் அவளுக்கு எவ்வளவு சந்தோஷம் இருக்கும்?

அந்த தாய்க்கு இருக்கும் பரிவும் பாசமும் அல்லவா உங்கள் சங்கத்தினைப் பார்த்து எங்கள் பெரும் கட்சிக்கு இருக்கிறது. நீங்கள் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக அல்லவா நெஞ்சு துடித்தாலும் சும்மா இருக்கிறது அந்த பெரும் இயக்கம். நீங்கள் போரினை நடத்தி வெற்றி பெற வேண்டும் அதனைப் பார்த்து நாங்கள் சந்தோஷப்பட வேண்டும் என்ற கருணையினால் அல்லவா அது கைகளைக் கட்டிக் கொண்டு இருக்கிறது.

இது புரியாமல் பேசிவிட்டாயே தங்கமே, என் சிங்கமே. போகட்டும் இப்பொழுதாவது புரிந்து கொள். இது உனக்கான சந்தர்ப்பம். இதனை இரு கரம் கொண்டு எடுத்துக் கொள். ஆனால் உனக்காக இந்த இயக்கமே உன் பின் நிற்கின்றது. தேவையெனில் அது களத்தில் இறங்கத் தயங்காது. இத்தெளிவு கொள்.

said...

//அப்படியே வந்தாலும் அது வெறும் வாய் வார்த்தையாக தான் இருக்குமே ஒழிய உள்ளத்தின் வெளிப்பாடாக அமையாது என்பது திண்ணம்//

மீண்டும் உள்ளத்தைக் குளிர்விக்கச் செய்யும் செய்கை. ராமன் நினைக்கும் பொழுதினில் அதனைச் செய்து முடிப்பானாம் இலக்குவன். அது போல உங்கள் அனைவருக்கும் இப்படி ஒருமித்த கருத்து இருப்பதைப் பார்த்து எவ்வளவு பெருமிதமாக இருக்கிறது தெரியுமா?

மற்ற இடங்களில் பாருங்கள். இயக்கத்தினுள் இருப்பவரிடையே எத்தனை வேற்றுமை. ஆனால் இங்கு பாருங்கள் எவ்வளவு ஒற்றுமை. நல்ல படி இப்படியே இருங்கள் என் தம்பிகளே.

இப்பொழுதுதான் தேவினை சிங்கமே என அழைத்து ஒரு சில சொற்கள் சொல்லி இருக்கிறேன். நீ புலி! நீயும் அதனைப் பார். இனி வெறும் புறத்தோற்றத்தில் மயங்காது உட்பொருள் அறிந்து கொள்.

நடப்பதனைத்தும் நன்மைக்கே.

said...

படங்கள் மட்டுமல்ல , வார்த்தை ஜாலமும் அருமையாய் இருக்கிறது கொத்தனாரே..

said...

வெகு சுமார். ஆண்களின் இயல்பான பொறுமையின்மையை படங்கள் தெளிவாய் காட்டுகின்றன.
இப்படிக்கு,
அதே பெண்ணீய அக்கா

said...

//அதே பெண்ணீய அக்கா//
பொறுமையின்மையா?

எப்படி நல்ல படம் போடுவது?

லாஸ் ஏஞ்சலீஸ்லேர்ந்து நியு யார்க் வரைக்கும் ஸ்க்ரோல் பண்ணற மாதிரி படங்கள வலையேத்தியா? :)

said...

அண்ணா..நானும் உண்ணும் விரதத்துக்கு வரேன்..ஏனா நானும் late entry...:-))

http://avanthikave.blogspot.com/2007/11/blog-post_17.html

அண்ணா..சூப்பர் படங்கள் எல்லாம்

said...

நாட்டாமைகள் ஒருத்தரையாவது வெளியே தள்ளி மார்க் போடறத தவிர்க்கிறாங்க போல!உங்களையும் 49வதா ஆட்டத்துல சேர்த்தி ஒரு நாட்டாமையும் ஒப்புக்கு சப்பாணியா நின்னு அரை சதத்துல போட்டிய நிறுத்தியிருக்கலாமில்ல!

(தூங்காம வந்திருந்தீங்கன்ன கடைசி பத்துல நீங்களும் வந்து இருப்பீங்க!)

said...

கடைசி போட்டோ சூப்பரு.... :)

said...

கடைசி போட்டோ சூப்பரு.... :)

said...

//படங்கள் மட்டுமல்ல , வார்த்தை ஜாலமும் அருமையாய் இருக்கிறது கொத்தனாரே..//

ரசிகன், நீங்கதான்யா ரசிகன். ரெண்டுமே நல்லா இருக்குன்னு சொன்ன உங்க வாய்க்கு சர்க்கரைதான் போடணும். உடனே கிச்சனில் போய் அள்ளிப் போட்டுக்குங்க. கூடவே கொஞ்சம் தேங்காயும் போட்டுக்கிட்டா இன்னும் சூப்பரா இருக்கும்!! :))

said...

//வெகு சுமார். ஆண்களின் இயல்பான பொறுமையின்மையை படங்கள் தெளிவாய் காட்டுகின்றன.
இப்படிக்கு,
அதே பெண்ணீய அக்கா//

வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க!! கிடைச்ச கேப்பில் ஆண்களை மட்டம் தட்டிப் பெயர் வாங்கப் பார்க்கும் பெண்ணீய அக்காவே. அந்தப் போட்டியில் 10 பேர் தேர்ந்தெடுக்கப்படப் போறாங்களாம். அதுல எத்தனை பேர் ஆண்கள் அப்படின்னு பார்க்கலாமா? ஒரு வேளை அவங்க எல்லாம் ஆம்பிள்ளைங்க இல்லையா?

ஆமாம் போட்டியில் இருக்கும் 40 பேரில் எத்தனை பெண்கள்? ஒரு வேளை இன்னும் நல்ல லொக்கேஷன் பார்த்துக்கிட்டு இருக்காங்களா? இவ்வளவு பொறுமை இருந்தாலும் நல்லது இல்லீங்க!!

இல்லை 1980ல எடுத்த படத்தைப் போடறதுக்குத்தான் பொறுமை வேணுமா என்ன? ;-)

said...

//பொறுமையின்மையா?

எப்படி நல்ல படம் போடுவது?

லாஸ் ஏஞ்சலீஸ்லேர்ந்து நியு யார்க் வரைக்கும் ஸ்க்ரோல் பண்ணற மாதிரி படங்கள வலையேத்தியா? :)//

ஐயா, பேரு தெரிஞ்சு என்ன செய்யப்போறீங்க?, இந்த மாதிரி எல்லாம் முகமூடி போட்டுக்கிட்டா, தனியா கட்டம் கட்டிடுவாங்கய்யா!!

அது மாதிரி படங்களை வலையேத்த அகலபட்டை கனெக்ஷன் வேணுமய்யா, வெறும் பொறுமை எல்லாம் போதாது!!! :))

said...

//அண்ணா..நானும் உண்ணும் விரதத்துக்கு வரேன்..ஏனா நானும் late entry...:-))

http://avanthikave.blogspot.com/2007/11/blog-post_17.html

அண்ணா..சூப்பர் படங்கள் எல்லாம்//

கண்ணு, கவலைப்படாதே, போட்டியில் சேர்த்துக்காத படங்கள் அப்படின்னு ஒரு போட்டி வைக்கலாம் போல அம்புட்டு பேரு இருக்கோம்!! :))

said...

//நாட்டாமைகள் ஒருத்தரையாவது வெளியே தள்ளி மார்க் போடறத தவிர்க்கிறாங்க போல!//

ஆமாம் நட்டு. எல்லாம் பொறாமை. என்னாத்த சொல்ல!!

//தூங்காம வந்திருந்தீங்கன்ன கடைசி பத்துல நீங்களும் வந்து இருப்பீங்க!//

அண்ணா, நம்மளை வெச்சு காமெடி எதுவும் செய்யலையே!!!

said...

//கடைசி போட்டோ சூப்பரு.... :)//

ராயலு, என்ன இருந்து என்ன செய்ய, அதான் நம்மளை ஒரேடியா ஒதுக்கி வெச்சுட்டாங்களே.

என்னென்னமோ சொல்லத் தோணுது, அதை எல்லாம் இங்க சொல்லாம தனி மடல் அனுப்பறேன்! :))

said...

//கடைசி போட்டோ சூப்பரு.... :)//

ராயலு, என்ன இருந்து என்ன செய்ய, அதான் நம்மளை ஒரேடியா ஒதுக்கி வெச்சுட்டாங்களே.

என்னென்னமோ சொல்லத் தோணுது, அதை எல்லாம் இங்க சொல்லாம தனி மடல் அனுப்பறேன்! :))

(நீர் ரெண்டு தடவை ஒரு பின்னூட்டம் போட்டா, நாங்களும் ரெண்டு தடவை அதே பதிலைப் போடுவோமில்ல!! ) :))

said...

யப்பா, கடைசியா பின்னூட்டம் போட்ட அனானி, உங்க பின்னூட்டத்தை வெளியிடலை. அதில் தெரியாத மேட்டர் ஒண்ணும் இல்லைன்னாஅலும், வாழைப்பழத்தை தோல் உரிச்சுக் குடுத்தா மாதிரி இருக்கா அதான் தரலை.

அதுல என்னங்க சொ.செ.சூ? நமக்கென்ன்ன ஆட்டோவா வரப் போகுது?

இதெல்லாம் சும்மா ப்ரீயா விடு மாமே!!

said...

/ராயலு, என்ன இருந்து என்ன செய்ய, அதான் நம்மளை ஒரேடியா ஒதுக்கி வெச்சுட்டாங்களே.

என்னென்னமோ சொல்லத் தோணுது, அதை எல்லாம் இங்க சொல்லாம தனி மடல் அனுப்பறேன்! :))//


இந்த பதிலுக்கு அந்த தனிமெயிலையே போட்டுருக்கலாம்.... அது நல்லாதான் இருக்கு.... :)

said...

//(நீர் ரெண்டு தடவை ஒரு பின்னூட்டம் போட்டா, நாங்களும் ரெண்டு தடவை அதே பதிலைப் போடுவோமில்ல!! ) :))//

ஹி ஹி... அது டெக்னிக்கல் ஃபால்ட்... :)

said...

//யம்மா துர்கா, இங்க எல்லாம் வந்தா தமிழில்தான் எழுதணும். நாங்க எல்லாம் சிங்கிங் இந்த ரெயின் பாட்டையே தமிழில் எழுதி வெச்சுக்கிட்டுதான் பாடுவோம்.

//

தமிழ் கி போர்ட் இருந்து இருந்தா தமிழில் டைப் பண்ணி இருக்க மாட்டேனா :P
இப்போ இருக்கு.நல்ல பாருங்க தமிழில் தட்டச்சு

said...

நாங்கதான் அறுபதாவது கமென்டா:))

மாறும் வண்ணப் படம் அருமை.

உங்களுக்கு முதல் இடம் கொடுத்திட்டா சபையில எல்லாரும் வருத்தப் படுவாங்களேனு பார்க்கிறேன்.
லேட் எந்டிரீனாலும் லேட்டஸ்டா நல்ல படங்களைக் கொடுத்த கொத்ஸ் வாழ்க.
உண்ணும் விரதத்திற்கு எங்க பேரையும் எடுத்துக்கங்க.

பின்வருமாறு மெனு வைக்கவும்.

சிரோட்டி,
பதிர்பேணி,
பாதாம் ஹல்வா,
ஆந்திரா மிளகாய் பஜ்ஜி,
கட்டா பானிப்பூரி,இன்னும்
பலப்பல ஐட்டம் இடம் பெறுமாறு பார்த்துக் கொள்ளவும்:))