Tuesday, December 11, 2007

அவள் பறந்து போனாளே...! (ந.ஒ.க.)

காலையில் எழுந்து ஒரு நடை நடந்துவிட்டு அப்படியே காலையுணவையும் முடித்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தான் இராகவன். கதவைத் திறக்கும் பொழுதே கண்ணில் பட்டது தரையில் கிடந்த அந்தக் கடிதம். உறையில் இருக்கும் கையெழுத்தைப் பார்த்த உடனேயே மலர்ந்தது அவன் முகம். கடிதம் வந்திருப்பது ஜானகியிடம் இருந்துதான். ஊரில் இருந்த வரை கூடவே இருந்தவளை இந்த சென்னைக்கு வந்த பின் பார்ப்பதே அரிதாகி விட்டது. தரையில் இருந்து கடிதத்தை எடுக்கும் பொழுதே அவன் மனம் ஊரை நோக்கிச் சென்றுவிட்டது.

ஜானகி அவனது பக்கத்து வீட்டுப் பெண்தான். அவனை விட இரு வயது சிறியவள். சிறுவயதில் இருந்தே இவனையே சுற்றி சுற்றி வந்தவள். ஊரார் அனைவரும் சிறு வயதில் இருந்தே அவர்களை கணவன் மனைவியாகக் கேலி செய்து வந்தது இருவர் மனதிலுமே ஆழமாக பதிந்து போய்விட்டது. பதின்ம வயது வந்த பின் ஜானகி முன்பு போல் அவனிடம் நெருங்கவில்லை என்றாலும் அவன் மீதான பிரியம் சற்றும் குறைந்ததில்லை. இவனுக்கும் அவளிடம் அன்றைய நிகழ்வுகளைச் சொல்லாமல் தூக்கம் வந்ததில்லை. அப்பொழுதுதான் இராகவன் வாழ்க்கையில் பேரிடியாக விழுந்தது அவன் தந்தையின் மரணம். படித்துக் கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு வேலை பார்த்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கடமை அவன் தலையில் விழுந்தது.

படித்து பட்டம் வாங்கியவர்களுக்கே வேலை கிடைக்காத போது பாதியில் வந்த இவனுக்கு என்ன வேலை கிடைக்கப் போகிறது. ஊரில் ஒன்றும் சரிவர அமையாமல் சென்னைக்கு வந்தும் ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் வேலை கிடைத்த பாடில்லை. இருந்த சிறு நிலத்தையும் விற்றுதான் ஊரில் இருப்பவர்களும் இவனும் ஜீவனம் செய்து கொண்டிருக்கிறாகள். இந்த முறை சென்ற நேர்காணலில்தான் வேலை கிடைத்துவிடும் போல் இருக்கிறது. நாளை வந்து பார்க்கச் சொல்லி இருக்கிறார்கள். நாளையே வேலைக்குச் சேர்ந்துவிட்டு, இந்த வார இறுதியில் சென்று ஜானகியிடம் சொல்ல வேண்டும். விரைவில் திருமணத்திற்கும் ஏற்பாடு செய்யச் சொல்ல வேண்டியதுதான்.

இவ்வாறாக நினைத்துக் கொண்டிருந்தவனை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது அவன் கையில் இருந்த கடிதம். திருமணம் பற்றிய நினைப்பால் எழுந்த புன்சிரிப்பு மாறாமல் கடிதத்தை படிக்கத் தொடங்கினான்.

அன்புள்ள ராகவனுக்கு,

என்னை மன்னித்து விடு. இப்படி ஒரு விஷயத்தை நேரில் கூட உன்னிடம் சொல்ல முடியாமல் கடிதம் எழுத வேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டேன். இந்தக் கடிதத்தை நீ படிக்கும் பொழுது நான் ஊரை விட்டுச் சென்றிருப்பேன். உன்னைத் தவிர வேறு ஒருவரையும் தெரியாத நான் வேறு ஒருவருக்கு மனைவியாகி இருப்பேன்.


நீ இங்கு வேலை கிடைக்காமல் சென்னைக்கு சென்ற நாள் முதலாகவே அப்பா மாற ஆரம்பிச்சுட்டாரு. காரணம் இல்லாமல் எம்மேல எரிஞ்சு விழறதும் உன்னைப் பற்றிய பேச்சு வந்தால் ஒண்ணுக்கும் உதவாதவன் என்றும் ஒரு வேலை சம்பாதிக்க தெரியாதவன்னும் உன்னை திட்டுவாரு. அது மட்டுமில்லாமல் எனக்கு வெளியிடங்களில் மாப்பிள்ளை பார்க்கவும் ஆரம்பிச்சுட்டாரு. நான் எவ்வளோ சொல்லியும் அவர் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. ஒரு வேலை தேட துப்பில்லை அவன் கையில் உன்னைக் குடுத்து உன் வாழ்க்கையை சீரழிக்க மாட்டேன்னே சொல்லிக்கிட்டு இருப்பாரு.

தீவிரமா மாப்பிள்ளை தேடிக்கிட்டு இருந்த அவரு ஒரு நாள் அவர் நண்பர் குடும்பத்தோட வந்து என்னைப் பெண் பார்க்க ஏற்பாடு செஞ்சுட்டாரு. அவங்களும் பையன் அமெரிக்கா திரும்பப் போறதுக்கு முன்னாடி கல்யாணம் முடிக்கணும் அப்படின்னு அவசரப்பட்டு அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணம் நடத்தச் சொல்லிட்டாங்க. நான் எவ்வளவோ மாட்டேன்னு சொல்லியும் எங்கப்பா கல்யாணம் நடந்தே தீரும் அப்படின்னு சொல்லிட்டாரு. அன்னிக்கு ராத்திரி நான் ரொம்ப சண்டை போட்டதால பூச்சி மருந்தை குடிச்சு தற்கொலை செஞ்சுக்க போயிட்டாரு எங்க அப்பா. ஒண்ணு இந்த கல்யாணம் நடக்கணும் இல்லைன்னா செத்துடுவேன் என மிரட்டி என்னை கல்யாணத்துக்கு ஒத்துக்க வெச்சுட்டாரு. உன் கழுத்தில் ஒரு தாலி ஏறினாத்தான் என் கழுத்தில் தாலி நிக்கும். அதை செய்வியாடின்னு கேட்ட எங்கம்மாவிற்கு, செய்வேம்மான்னு சொல்வதைத் தவிர வேறு வழியே இல்லாமப் போச்சு. இப்படி கட்டாயப் படுத்தி என்னை அந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க வெச்சுட்டாங்க.

என்னை மறந்து விடுன்னு எல்லாம் என்னால சொல்ல முடியாது ராகவன். நானும் உன்னை மறக்க முடியாது. உன்னாலும் என்னை மறக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும். ஆனால் வாழ்க்கைல நாம ஆசைப்பட்ட எவ்வளவோ நடக்காமல் போனாலும் நாம பாட்டுக்கு நம்ம வழியைப் பார்த்துக்கிட்டுப் போகலையா, அந்த மாதிரி இதையும் தாண்டி போகலாம். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்தால் நாம இருந்ததும் இழந்ததும் ஞாபகத்திற்கு வந்து நம்மை நிம்மதியாவே இருக்க விடாது. அதனால் இனி நமக்குள்ள தொடர்பே வேண்டாம்.


இப்படிக்கு
கண்ணீருடன்
ஜானகி


தொடர்ந்து பிரச்சனைகளையே சந்தித்துக் கொண்டிருந்த இராகவனுக்கு கடிதத்தின் ஒவ்வொரு வரியும் சாட்டையடியாக விழ உடைந்து போய் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினான்.

அழுகுரல் சத்தத்தைக் கேட்டு துணுக்குற்ற புதிய காப்பாளர் " என்னய்யா இது, சேர்ந்த முதல் நாளே இப்படி அழுகைச் சத்தம், வா என்னான்னு பார்ப்போம்" எனக் கிளம்பினார். கூட இருந்த உதவியாளர், "அதெல்லாம் கவலைப்படாதீங்கய்யா. இது இந்த காப்பகத்தில் பத்து வருஷமா நடக்கறதுதான். காலையில் சாப்பாடு முடிஞ்ச உடனே வந்து அந்த பழைய கடிதாசியைப் படிப்பான். அப்புறம் நாள் பூரா ஓன்னு அழுவான். மத்தபடி ஆபத்தில்லாதவந்தான்யா." என்றார்.

(சர்வேசனின் நச் என்று ஒரு கதை போட்டிக்காக)


71 comments:

said...

மக்கள்ஸ், இதுதான் என் முதல் கதை. மேட்டர் ஒண்ணும் புதுசு இல்லை. ஆனா எழுத பினாத்தல்தான் இன்ஸ்பிரேஷன். அதே மாதிரி ஆங்கில கலப்பில்லாம எழுத முயற்சி செஞ்சிருக்கேன். நல்லா இருக்கான்னு சொல்லுங்கப்பா.

(நல்லா இருக்குன்னு சொன்னா ரெகுலரா கதை எழுதி கடுப்படிச்சாலும் அடிப்பேன், ஜாக்கிரதை!)

said...

அடப்பாவமே......இப்படி மனச தொடர ட்விஸ்ட்டா வச்சுட்டீங்களே.....பாஸ் மார்க்.......பாக்கலாம் ஒங்க குரு என்ன சொல்ராருன்னு :):)

//ஆங்கில கலப்பில்லாம எழுத முயற்சி செஞ்சிருக்கேன்//

இதுக்கு முதுகில ஒரு ஷொட்டு.!!!

said...

ஷொட்டு என்ற சமஸ்கிருத வார்த்தையை பாவித்த ராதாவுக்கு ஒரு குட்டு :-)

இலவசம், முதல் முயற்சின்னுட்டீங்க. போயிட்டு போகுது கதைக்கு மார்க்கு பாஸ் மார்க்.ஆனா பரிசு எங்கள் இளைய திலகம் மங்களூர் சிவாவுக்கே. பையன் போட்ட கதையைப் படித்துவிட்டு, பின்னுட்டம் கூட போட முடியாமல்
அப்படியே மெய் மறந்து இல்லே போய்விட்டேன்

said...

கதை ரொம்ப நல்ல இருக்கு கொத்ஸ்...
தாரளமா நிறைய முயற்சி செய்யலாம்...

said...

நல்லா இருக்கு கொத்ஸ்!

ஆங்கில கலப்பில்லாம எழுதிட்டீங்க. சூப்பரு. நமக்குதான் ஈஸியா அதெல்லாம் வரமாட்டேங்குது.

said...

முதல் கதையா கொத்தனார்?

ரொம்ப நல்லா வந்திருக்கு. ஏறத்தாழ இதே கருவோட ஒரு கதையை எப்பவோ எங்கேயோ படிச்ச ஞாபகம் வந்தாலும்:-) (ஆனா ட்விஸ்ட் மட்டும்தாங்க, மெயின் கதை புதுசுதான்)

ஆங்கிலம் கலக்காம எழுதினாலும், கதையோட இயல்பும் நடையும் கெடவில்லை.

கலக்குங்க.. கதை எழுதித்தள்ளுங்க!

said...

கொத்ஸ்! மொத முயற்சி மாதிரியே தெரியலங்க. அதுவும் ஆங்கிலம் கலக்காமலே. நெறைய எழுதித்தள்ளுங்க. வாழ்த்துக்கள்!

said...

ஆகா..மொத கதையிலயே ஒருத்தனை கிறுக்கன் ஆக்கியாச்சா? :))

//நல்லா இருக்குன்னு சொன்னா ரெகுலரா கதை எழுதி கடுப்படிச்சாலும் அடிப்பேன், ஜாக்கிரதை!//

அந்த பயம் இருந்தாலும் சொல்லாம விடமுடியுமா..நல்லாயிருக்கு கொத்ஸ் :)

said...

//ஆகா..மொத கதையிலயே ஒருத்தனை கிறுக்கன் ஆக்கியாச்சா? :))//

அட...
காப்பகம்-னு தான சொல்லி இருக்காரு, கப்பி.
காப்பகத்தில் வேலைக்குச் சேந்த மக்களும், மொதக் கொஞ்ச நாள் உணர்ச்சி வசப்பட்டு அழுவறதில்லையா என்ன?

முதல் முயற்சி நல்லாயிருக்கு கொத்ஸ்! வாழ்த்துக்கள் :-)
அடுத்த முறை உரையாடலும் இடையிடையே கொடுங்க!

said...

சிங்கத்தை சாய்ச்சுப்புட்டாங்களே!

தனிக்காட்டு ராஜா சுத்திக்கிட்டு இருந்த உங்கள புகைப்பட பொட்டிய தூக்க வச்சு, இப்ப கதையும் எழுது வச்சுட்டாங்க. அது ஒரு கவுஜு எழுதிட்டா ஒரேடியா சாய்ச்சுப்புடலாம்.

சூப்பரா இருக்கு (நல்லா இருக்குனு சொல்லல, அதை மனசுல வச்சுக்கனும் சொல்லிட்டேன்)

said...

நச்சுன்னு இருக்குன்னு சொல்லலாம்னுதான் நெனச்சேன். ஆனா படிச்சு முடிச்சதும் கடைசில மனசு என்னவோமாதிரி ஆயிடுச்சு. என்னவோ போங்க.

said...

//பதின்ம வயது வந்த பின் முன் ஜானகி முன்பு போல் அவனிடம்//

பின் & முன்?

முன் வேண்டியதில்லை. அடிக்கணும்.

கதையைத் திருத்தியாச்சு.

டீச்சர்.

முதல் முயற்சி என்பதால் பாஸ் பண்ணியிருக்கேன்:-)

said...

நல்லா இருக்கு இலவசக்கொத்தனார் சார். தொடர்ந்து நிறைய எழுதுங்க...
அன்புடன்
வினையூக்கி
www.vinaiooki.com

said...

ஏதேது நிறைய கடுப்படிங்கன்னு சொல்ல வச்சுடுவீங்க போல இருக்கே?

said...

BUT!!!, I really didnt expect last 'NACH'!!!;-)

said...

நல்லா வூடு கட்டறீங்க. தொடர்ந்து கட்டுங்க. வாழ்த்துக்கள்.

said...

கதை சூப்பர். எதிர் பாராத முடிவு. கலக்கல்!!

said...

//
ramachandranusha(உஷா) said...

ஆனா பரிசு எங்கள் இளைய திலகம் மங்களூர் சிவாவுக்கே. பையன் போட்ட கதையைப் படித்துவிட்டு, பின்னுட்டம் கூட போட முடியாமல்
அப்படியே மெய் மறந்து இல்லே போய்விட்டேன்
//
அக்கா ஜி திட்டறதா இருந்தா டைரக்டா திட்டுங்க! எவ்வளவோ தாங்குறோம் இன்னொன்னை தாங்க மாட்டமா??

அப்புறம் இன்னைக்கு இன்னொரு புது கதை போட்டிருக்கேன் இது பின் குறிப்பு.

said...

Awesome story!! :-D
nicely written! :-)

said...

அப்பாடி!! கடைசியிலாவது "ஆபத்தில்லாதவன்" என்று தெரிந்தத்தே!!

said...

இப்படி எல்லாரும் போட்டிக்கு வந்தா சரி இல்லை சொல்லிட்டேன்!!! போட்டின்னா தனியா ஓடி முதல் பிரைஸ் வாங்கனும் அது போட்டி என்னது சின்ன புள்ளதனமா ஆள் ஆளுக்கு கதை எழுதிக்கிட்டு!!!

அப்புறம் கதை சூப்பர். குருவை மிஞ்சிய சிஷ்யன்! ( வந்த வேலை முடிந்தது)

said...

@இ கோ என்ன இயல், இசை, நாடகம் ஒன்னையும் விட்டு வைக்கப் போவதில்லையா?
கதை கொஞ்சம் சினிமாடிக்க ஆரம்பித்து(கிரேஸி மோகன் நாடகக் கதாநாயகியின் பெயரும் ஜானகிதான் எப்பவும்) முடிவு எதிர்பாராதது. "சபாஷ்". வர நினைத்தால் வரலாம் வழியா இல்லை வலைப்பதிவில்.

said...

Sorry for the English here :-(

//சிங்கத்தை சாய்ச்சுப்புட்டாங்களே!

தனிக்காட்டு ராஜா சுத்திக்கிட்டு இருந்த உங்கள புகைப்பட பொட்டிய தூக்க வச்சு, இப்ப கதையும் எழுது வச்சுட்டாங்க. அது ஒரு கவுஜு எழுதிட்டா ஒரேடியா சாய்ச்சுப்புடலாம்.
//

repeat-aiiii :-))))

Soon we can expect a pattimanram for your 100th story. :-))

said...

வேர வழியே இல்ல நானு கதை எழுத போறேன்:-)))

said...

உங்களுக்கும் இந்த வியாதி தொத்திகிச்சா? அதான்பா கதை விடற வியாதி..

காலம் கலிகாலமா போச்சு...

said...

சில பக்தி பாடல்களை இடைச்செருகினால்...

1. மனநிலை அறியேனடி சகியே (கடிதம் கண்டவுடன்)

2. தாயே யசோதா உந்தன் (பாடலின் துவக்கத்தில் பால்ய கால விளையாட்டுப் பருவம்; பாடல் இறுதியில் பதின்ம வயது)

3. பால் வடியும் முகம் (ஜானகி தனியாகப் பாடுகிறாள்)

4. கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் (பிரிவுத்துயர்)

5. நானொரு விளையாட்டு பொம்மையா (வேலை தேடும்போது)

இறுதியாக...
'குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா '

said...

//ஷொட்டு என்ற சமஸ்கிருத வார்த்தையை பாவித்த ராதாவுக்கு ஒரு குட்டு :-)//

...
உஷா எனக்கு தெரிஞ்ச சமஸ்க்ருதம்....
"அஷ்வதாமா அதஹா குஞ்சரஹா"
அதாவது.....அஷ்வதாமன் என்கிற யானை இறந்தது.....
இந்த மாதிரி கலங்கடிசுறுவேன் ஜாகிரதை
ஷொட்டுக்கா குட்டு குடுக்கரீங்க....be careful??:):)
! sorry kothSs for out of post message.....

said...

ஆச்சரியம் ஆனால் உண்மை..கதை நல்லாயிருக்கு தல :))

said...

கதை ரொம்ப நல்லா இருக்கு, நடை ரொம்ப நல்லா இருக்கு இடையில் சிறிது நடை கலப்பு இருந்தாலும் போகப்போக நன்றாக வந்துள்ளது. ஆனால் சின்ன வருத்தம் …ஏங்க காதலுக்கெல்லாமா ஒருத்தனை பையித்தமா ஆக்கறது..

said...

//.....பாஸ் மார்க்.......பாக்கலாம் ஒங்க குரு என்ன சொல்ராருன்னு :):)//

ஆகா மொத பின்னூட்டமே ராதாக்கா, அதுவும் பாஸ் மார்க். சூப்பர்தான் போங்க.

எங்க குருகிட்ட ஆசீர்வாதம் வாங்காம கதையை ரிலீஸ் பண்ணி இருப்பேனா.. என்னக்கா நீங்க.

//இதுக்கு முதுகில ஒரு ஷொட்டு.!!!//
அம்மா.... அக்கா இவ்வளவு பலமா ஷொட்டு குடுத்தா அதுக்கு பேர் வேறக்கா... :))

said...

உங்க கதைய படிச்சு இன்ஸ்பையர் ஆகி, விட்டுட்டு போன காதலி/மனைவியோட கடிதத்தை படிச்சு ஒருத்தன் அழற மாதிரி நானும் ஒரு கதை எழுதியிருக்கேன். :))

said...

//ஷொட்டு என்ற சமஸ்கிருத வார்த்தையை பாவித்த ராதாவுக்கு ஒரு குட்டு :-)//

ஏங்க, என் பதிவுக்குத்தானே வந்தீங்க. அதென்ன என்னை விட்டுட்டு முன்னாடி வந்த லேடீஸோட சண்டை போட கிளம்பறீங்க. இவங்களுக்குப் பஞ்சாயத்துப் பண்ணியே நம்ம ஆயிசு போயிரும் போல!! ரெண்டு பேர் சேர்ந்தாலே இப்படியா?

//இலவசம், முதல் முயற்சின்னுட்டீங்க. போயிட்டு போகுது கதைக்கு மார்க்கு பாஸ் மார்க்.//

நீங்களும் மார்க்கா? எல்லாமே ஒரு 'மார்க்'கமா இருக்கீங்களே. பெரிய ரீச்சர் பேமிலி போல! இருக்கட்டும் இருக்கட்டும். :)

//ஆனா பரிசு எங்கள் இளைய திலகம் மங்களூர் சிவாவுக்கே. //
அவரு எம்புட்டு குடுத்தாரு? உடனே கோபம் வந்திருக்குமே. அவரு கதையைக் எவ்வளவு கிண்டிக் குடுத்தாருன்னு கேட்டேன்.

//பையன் போட்ட கதையைப் படித்துவிட்டு, பின்னுட்டம் கூட போட முடியாமல்
அப்படியே மெய் மறந்து இல்லே போய்விட்டேன்//

ஏங்க அவரு ஒரு கதையா குடுத்தாரு? வேளைக்கு ஒண்ணுன்னு ஒரு நாளைக்கு மூணு கதை போடறாரு. எந்த கதைன்னு சொல்லுங்க. அவ்வளவு நல்லா இருந்தா சுட்டி குடுத்து போஸ்டர் ஒட்டலாமில்ல...

said...

//கதை ரொம்ப நல்ல இருக்கு கொத்ஸ்...
தாரளமா நிறைய முயற்சி செய்யலாம்...//

வெட்டி, சொல்லிட்டீரு இல்ல, செஞ்சிருவோம் :))

said...

//நல்லா இருக்கு கொத்ஸ்!//

ரொம்ப டேங்க்ஸ்பா.

//ஆங்கில கலப்பில்லாம எழுதிட்டீங்க. சூப்பரு. நமக்குதான் ஈஸியா அதெல்லாம் வரமாட்டேங்குது.//

அதெல்லாம் ரொம்ப சிம்பிளுங்க. ரொம்ப ரென்சனாவாம திங்க் பண்ணுங்க. வர்ட்டா....

said...

//முதல் கதையா கொத்தனார்?//

அதிலென்ன சந்தேகம்? முதல் கதைதான்.

//ரொம்ப நல்லா வந்திருக்கு. //

டாங்க்ஸு தல!

//ஏறத்தாழ இதே கருவோட ஒரு கதையை எப்பவோ எங்கேயோ படிச்ச ஞாபகம் வந்தாலும்:-) (ஆனா ட்விஸ்ட் மட்டும்தாங்க, மெயின் கதை புதுசுதான்)//

அதான் மொத பின்னூட்டத்திலேயே ஆண்டிசிபேட்டரி பெயில் வாங்கிட்டேனே அப்புறம் என்ன அதையே நோண்டிக்கிட்டு.

//ஆங்கிலம் கலக்காம எழுதினாலும், கதையோட இயல்பும் நடையும் கெடவில்லை.//

ஆமாங்க. எனக்கே கொஞ்சம் ஆச்சரியம்தான்.

//கலக்குங்க.. கதை எழுதித்தள்ளுங்க!//

சொல்லிட்டீங்க இல்ல. செஞ்சிருவோம்.

said...

//கொத்ஸ்! மொத முயற்சி மாதிரியே தெரியலங்க. அதுவும் ஆங்கிலம் கலக்காமலே. நெறைய எழுதித்தள்ளுங்க. வாழ்த்துக்கள்!//

நன்றி இளா, செஞ்சிருவோம்.

said...

//ஆகா..மொத கதையிலயே ஒருத்தனை கிறுக்கன் ஆக்கியாச்சா? :))//

கப்பி, இதுக்கு முன்னாடி யாரையும் ஆக்குனதே இல்லைன்னு சொல்லி நம்மை அவமானப்படுத்தறீரா?

//அந்த பயம் இருந்தாலும் சொல்லாம விடமுடியுமா..நல்லாயிருக்கு கொத்ஸ் :)//

நன்னிபா.

said...

//அட...
காப்பகம்-னு தான சொல்லி இருக்காரு, கப்பி.
காப்பகத்தில் வேலைக்குச் சேந்த மக்களும், மொதக் கொஞ்ச நாள் உணர்ச்சி வசப்பட்டு அழுவறதில்லையா என்ன?//

ரவி, பத்து வருஷமா அழுதுக்கிட்டு இருக்கான்னு சொல்லறேன். அப்புறமுமா இப்படி எல்லாம் சந்தேகம்? :((

//முதல் முயற்சி நல்லாயிருக்கு கொத்ஸ்! வாழ்த்துக்கள் :-)
அடுத்த முறை உரையாடலும் இடையிடையே கொடுங்க!//

ஓக்கே தல

said...

//சிங்கத்தை சாய்ச்சுப்புட்டாங்களே!//

புலி, சொன்னா நம்ப மாட்டே. கதை எழுதி முடிச்ச உடனே என் மனசுல வந்த நினைப்பு இதுதான்யா!!

//அது ஒரு கவுஜு எழுதிட்டா ஒரேடியா சாய்ச்சுப்புடலாம்.//

புலி, மனசுல எதாவது வெச்சுக்காதே. எதாவது பிரச்சனைன்னா நேரா சொல்லு. இந்த மாதிரி என்னை கவுஜர்ன்னு எல்லாம் திட்டாதே. சொல்லிட்டேன்.

//சூப்பரா இருக்கு (நல்லா இருக்குனு சொல்லல, அதை மனசுல வச்சுக்கனும் சொல்லிட்டேன்)//

மனசுல வெச்சுக்கறேன் ப்ரதர்.

said...

//நச்சுன்னு இருக்குன்னு சொல்லலாம்னுதான் நெனச்சேன். ஆனா படிச்சு முடிச்சதும் கடைசில மனசு என்னவோமாதிரி ஆயிடுச்சு. என்னவோ போங்க.//

என்ன சின்ன அம்மிணி இவ்வளவு ரென்சனாகறீங்க. freeயா விடுங்க அக்கா...

said...

//டீச்சர்.//

ரீச்சருன்னா ரீச்சர்தான். யார் கண்ணுலேயும் படாத தப்பு உங்க கண்ணில் பட்டிருச்சே... :))

//முதல் முயற்சி என்பதால் பாஸ் பண்ணியிருக்கேன்:-)//

என்னங்க தாய்குலம் எல்லாம் சொல்லி வெச்ச மாதிரி இதையே சொல்லறீங்க....

said...

//நல்லா இருக்கு இலவசக்கொத்தனார் சார். தொடர்ந்து நிறைய எழுதுங்க...
அன்புடன்
வினையூக்கி//

சாரா? என்னிய வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே...

எல்லாம் உங்க பேய் கதைகளை படிச்ச எபெக்ட்டுதாங்க.

said...

//ஏதேது நிறைய கடுப்படிங்கன்னு சொல்ல வச்சுடுவீங்க போல இருக்கே?//

மதுரையம்பதி :))

said...

//BUT!!!, I really didnt expect last 'NACH'!!!;-)//

யோசிப்பவரே, நீங்க கூட யோசிக்காத நச் முடிவா? :))

said...

//நல்லா வூடு கட்டறீங்க. தொடர்ந்து கட்டுங்க. வாழ்த்துக்கள்.//

நன்றி நக்கீரன், உங்களுக்காக பெனாத்தல் பதிவில் இன்னும் ஒரு கதை சொல்லி இருக்கேன் பாருங்க.

said...

//கதை சூப்பர். எதிர் பாராத முடிவு. கலக்கல்!!//

நன்றி சிவா. உங்களை மாதிரி சரமாரியா எல்லாம் எழுத முடியாது. எதோ எனக்குன்னு ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு.

என்னாது. நானும் கதையைத்தான்யா சொன்னேன். வெவகாரம் புடிச்சப் பசங்கப்பா... :))

said...

//அக்கா ஜி திட்டறதா இருந்தா டைரக்டா திட்டுங்க! எவ்வளவோ தாங்குறோம் இன்னொன்னை தாங்க மாட்டமா??//

அதானே!! :))

//அப்புறம் இன்னைக்கு இன்னொரு புது கதை போட்டிருக்கேன் இது பின் குறிப்பு.//

சுட்டி குடுத்து போஸ்டர் ஒட்டி இருக்கலாமில்ல. எல்லாம் நம்ம கோனார் நோட்ஸை படிக்கிறதே இல்லைப்பா.

said...

//Awesome story!! :-D
nicely written! :-)//

நன்றி சிவிஆர்

said...

//அப்பாடி!! கடைசியிலாவது "ஆபத்தில்லாதவன்" என்று தெரிந்தத்தே!!//

ஆமாங்க, அவன் ஆபத்தில்லாதாவந்தான். ஆனா இப்போ என்னைக் கண்டாதான் மக்கள்ஸ் எல்லாம் எஸ் ஆகறாங்க. ஏங்க? :))

said...

//இப்படி எல்லாரும் போட்டிக்கு வந்தா சரி இல்லை சொல்லிட்டேன்!!! போட்டின்னா தனியா ஓடி முதல் பிரைஸ் வாங்கனும் அது போட்டி என்னது சின்ன புள்ளதனமா ஆள் ஆளுக்கு கதை எழுதிக்கிட்டு!!!//

இதையேத்தான்யா நிறையா பேரு சொல்லிக்கிட்டு திரியறோம்!!

//அப்புறம் கதை சூப்பர். குருவை மிஞ்சிய சிஷ்யன்! ( வந்த வேலை முடிந்தது)//

என்னமோ எதிர்பார்த்து வந்திருக்கீரு. அதெல்லாம் அவுட் ஆப் சிலபஸ். விட்டுடுங்க.

said...

//இ கோ என்ன இயல், இசை, நாடகம் ஒன்னையும் விட்டு வைக்கப் போவதில்லையா?//

களவையே கற்று மறக்கச் சொல்லறாங்க. முழுசா செய்யலைனாலும் கத்து வெச்சுக்கிறது நல்லதுதானேங்க.

//(கிரேஸி மோகன் நாடகக் கதாநாயகியின் பெயரும் ஜானகிதான் எப்பவும்) //

ஆமாம் எழுதும் போதே தோணுச்சு.

//வர நினைத்தால் வரலாம் வழியா இல்லை வலைப்பதிவில்.//

வாங்க வாங்க. ரெகுலரா வாங்க

said...

//
repeat-aiiii :-))))

Soon we can expect a pattimanram for your 100th story. :-))//

நல்லா ஏத்திவிடறீங்கப்பா....

said...

//வேர வழியே இல்ல நானு கதை எழுத போறேன்:-)))//

முதலில் தப்பில்லாம தமிழ் எழுதுங்க. இப்போ சொல்ல வந்தது - வேற வழியே இல்லாம நானும் கதை எழுதப் போறேன். இதுதானே? எம்புட்டு தப்பு இருக்கு எண்ணிப் பாத்துக்குங்க.

said...

//உங்களுக்கும் இந்த வியாதி தொத்திகிச்சா? அதான்பா கதை விடற வியாதி..

காலம் கலிகாலமா போச்சு...//

அஃதே அஃதே. (இலக்கியவியாதி ஆயாச்சு. இனிமே ஃக்கன்னா எல்லாம் பயன்படுத்தணும் இல்ல!)

said...

//Boston Bala said...

சில பக்தி பாடல்களை இடைச்செருகினால்...//

பாபா, ஒரு முடிவாத்தான் இருக்கீங்க.

தாலி செண்டிமெண்ட், தற்கொலை செண்டிமெண்ட், அம்மா செண்டிமெண்ட் இருக்கு.

காதல், காதல் தோல்வி இருக்கு.

அப்பாவை வில்லனா வெச்சுக்கலாம்.

ஒரே பாட்டில் சின்னப் பிள்ளைகளா இருந்தவங்க வளர்ந்தாச்சு.

இதோட ஒரு குத்துப்பாட்டு நாலு பைட் சீன் இருந்தா படமே எடுக்கலாம் போல!!

நல்லா இருங்கடே!!

said...

//! sorry kothSs for out of post message.....//

ராதாக்கா என்னைப் பத்தி இப்படி ஒண்ணுமே தெரியாம இருக்கீங்களே.... உஷாக்காவையே கேளுங்க :))

said...

//ஆச்சரியம் ஆனால் உண்மை..கதை நல்லாயிருக்கு தல :))//

என்ன கோபி, இலவசத்திடம் இருந்து இப்படி ஒரு கதையான்னு ஆச்சரியமா?? எனக்கும்தான்!! :))

said...

//கதை ரொம்ப நல்லா இருக்கு, நடை ரொம்ப நல்லா இருக்கு //

நன்றி கிருத்திகா!!

//இடையில் சிறிது நடை கலப்பு இருந்தாலும் போகப்போக நன்றாக வந்துள்ளது. //

அந்த கடிதம் கொஞ்சம் கலோக்கியல் தமிழா இருந்தா யதார்த்தமா இருக்குமேன்னு அப்படி எழுதினேன். சரியா வரலையோ?

//ஆனால் சின்ன வருத்தம் …ஏங்க காதலுக்கெல்லாமா ஒருத்தனை பையித்தமா ஆக்கறது..//

என்னங்க இப்படி எல்லாம் கேட்பீங்கன்னு நினைச்சுதானே //தொடர்ந்து பிரச்சனைகளையே சந்தித்துக் கொண்டிருந்த இராகவனுக்கு கடிதத்தின் ஒவ்வொரு வரியும் சாட்டையடியாக விழ உடைந்து போய் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினான்.// இப்படி எழுதி இருக்கேன். This was the proverbial last straw.

said...

//உங்க கதைய படிச்சு இன்ஸ்பையர் ஆகி, விட்டுட்டு போன காதலி/மனைவியோட கடிதத்தை படிச்சு ஒருத்தன் அழற மாதிரி நானும் ஒரு கதை எழுதியிருக்கேன். :))//

அரைபிளேடு - இப்படி எல்லாம் சொல்லும் போது சுட்டி குடுத்து போஸ்டர் ஒட்டிக்க வேண்டாமா? போகட்டும்.

நீங்க இங்க வந்து இந்த பின்னூட்டம் போடும் போதே நான் அங்க போயி படிச்சு பின்னூட்டம் போட்டாச்சே! அல்லி நோடு குரு!

said...

முடிவு எதிர்பாராதது, அது என்ன கதைப் போட்டி ஏதும் வச்சிருக்காங்களா என்ன, ஆளாளுக்குக் கதை எழுதித் தள்ளிட்டு இருக்கீங்களே?

said...

கீதாம்மா, இதெல்லாம் சர்வேசன் நடத்தும் நச் என்று ஒரு கதை போட்டிக்கு. கதைக்குக் கீழ பொடி எழுத்தில் ஒரு லிங்க் இருக்கு பாருங்க.

said...

குமரன், நம்ம கதைக்கு A+ க்ரேட் தந்ததுக்கு நன்றி. :))

said...

The story has nice flow but the ending somewhat feels like a sterotype one :)

said...

கொத்ஸ்,


கதை நல்லாயிருந்தது... :)

said...

கொதஸ்... அருமை.

அந்தத் திருப்பம் வந்தப்புறம் ஒரு திக் அல்லது மகிழ்ச்சி அல்லது சோகம் அல்லது ஏதாவது ஒரு உணர்ச்சி நெறைய வரனும். நான் படிச்ச வரையிலயும் மூனே மூனு கதையிலதான் அது வந்துச்சு. ஒன்னு பினாத்தலாரின் பொன்னியின் செல்வன். அடுத்தது ஜெனி புல்லாங்குழல் ஊதுனது. அடுத்தது ராகவன் பைத்தியமானது.

மத்தவங்க கருத்து என்னன்னு தெரியாது. ஆனா உங்க கதை நல்லாருக்கு.

said...

//Srikanth said...

The story has nice flow but the ending somewhat feels like a sterotype one :)//

ஸ்ரீகாந்த், முதல் வருகைன்னு நினைக்கிறேன். அட்லீஸ்ட் முதல் பின்னூட்டமா இருக்கும்.

முடிவு ரொம்பவும் புதுசு இல்லைன்னாலும் ரொம்ப தெரிஞ்சதும் இல்லைன்னு நினைச்சேன். பின்னூட்டினவங்க நிறையா பேரும் அதைத்தான் சொல்லி இருக்காங்க.

உங்களுக்கு தெரிஞ்ச மேட்டரா இருந்திருக்கலாம். வாழ்த்துக்களுக்கு நன்றி.

said...

//கொத்ஸ்,


கதை நல்லாயிருந்தது... :)//

என்ன ராயல், இம்புட்டு லேட்டா? இருந்தாலும் நல்லா இருக்குன்னு சொன்னதுக்கு நன்றி தல!

said...

//அந்தத் திருப்பம் வந்தப்புறம் ஒரு திக் அல்லது மகிழ்ச்சி அல்லது சோகம் அல்லது ஏதாவது ஒரு உணர்ச்சி நெறைய வரனும். //
நச்சுன்னு ஒரு கதை என்ற உடனேயே நானும் எதிர்பார்த்தது இதைத்தான். அந்த கடைசி பேரா படிச்ச உடனே ஒரு விதமான உணர்ச்சித் தாக்கம் இருக்கணும்.

//ஒன்னு பினாத்தலாரின் பொன்னியின் செல்வன். அடுத்தது ஜெனி புல்லாங்குழல் ஊதுனது. அடுத்தது ராகவன் பைத்தியமானது.//
முதல் ரெண்டுமே நான் படிச்சு ரசிச்ச கதைதான். அவங்க ரெண்டு பேருமே நல்ல கதைகள் நிறையா எழுதினவங்க. இந்த வரிசையில் என் கதையையும் சேர்த்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

//மத்தவங்க கருத்து என்னன்னு தெரியாது. ஆனா உங்க கதை நல்லாருக்கு.//
அக்காங்க எல்லாம் வந்து பாஸ்மார்க் போட்டுட்டாங்க. நீங்க குமரன் பெனாத்தல் எல்லாம் நல்ல மார்க் குடுத்து இருக்கீங்க. நம்ம முதல் கதைக்கு இப்படி எல்லாரும் நல்லா இருக்குன்னு சொன்னது ரொம்ப பெருமையா இருக்கு. ஆனா அடுத்த கதையில் சொத்ப்பாம இருக்கணுமேன்னு பயமாவும் இருக்கு.

said...

இன்னைக்கு காலையில கடிதம் வந்துச்சுங்களா?

:))

நல்லாயிருந்துச்சு நச்.

said...

//இன்னைக்கு காலையில கடிதம் வந்துச்சுங்களா?

:))//

அடப்பாவிகளா எழுதறது எல்லாமே சொந்த அனுபவமுன்னு முன்முடிவோட படிச்சா எப்படி? இருக்கட்டும் இருக்கட்டும் நீர் இப்படி ஒரு கதை எழுதாமலேயா போவீரு?

//நல்லாயிருந்துச்சு நச்.//

நல்லா இருந்ததா!! நன்றி தல! நம்ம பக்கத்தில் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நாள் கழிச்சு பின்னூட்டம் போட்டு இருக்கீங்க!

said...

//
முடிவு ரொம்பவும் புதுசு இல்லைன்னாலும் ரொம்ப தெரிஞ்சதும் இல்லைன்னு நினைச்சேன்.
//

அதே அதே...
Freemason சார், நான் சொல்ல வந்ததும் அதேதான். காதல்-னா உடனே தோல்வி... பைத்தியம் பிடிக்கறது இப்படி இருக்கறது ஒரு general conception - steriotypical என்று சொல்ல வந்தேன்...

இதெல்லாம் 'சுதந்திர சிற்பிக்கு' தெரியாததா? :))