Tuesday, December 25, 2007

பூனைக்குட்டி என்ன பூனைக்குட்டி. கொரில்லாவே வெளியே வந்துவிட்டதே!

இந்த பூனைக்குட்டி என்ற வார்த்தைப் பிரயோகத்தைப் பார்த்த உடனேயே உங்களுக்கு ஞாபகத்தில் வரும் குறிச்சொற்கள் - விருது, OPML, திரட்டிகள், மட்டற்ற சுதந்திரம் என்பவைகளாக இருந்தால் நீங்க ரொம்ப நேரம் இணையத்தில் செலவழிக்கிறீர்கள். தமிழ்மணமேட்டிஸ் என்ற நோய் தாக்கி இருக்கும் வாய்ப்புகள் அதிகம். சனிக்கிழமைகளில் கணினி முன் உட்காராமல் சனி பகவானுக்கு எள் முடி ஏற்றினால் உசிதம். இல்லையென்றால் விருது குடுக்க உனக்கு என்ன தகுதி, நீயென்ன கிழிச்சன்னு கேட்டுக்கிட்டு அலைய வேண்டியதுதான். அப்புறம் நீங்க எதைக் கிழிப்பீங்கன்னு தெரியாம பீதியோட இருப்பாங்க உங்க கூட இருக்கறவங்க. சரி போகட்டும். விஷயத்துக்கு வருவோம்.

ஒரு வாரத்துக்கு முன்னாடி "நச் என்று ஒரு போட்டி" அப்படின்னு ஒரு பதிவு போட்டு இருந்தேன். ஒரு நகர் படம் ஒன்றைக் குடுத்து அதை ஒரே ஒரு முறை பார்த்துவிட்டு இரு கேள்விகளுக்கு விடை அளிக்க சொல்லி இருந்தேன். அதில் முதல் கேள்வியில் ஒரு பந்து தரையில் எத்தனை முறை தட்டப்பட்டது என கவனத்தை ஒரு முகப்படுத்தும்படியாக இருந்தது. அடுத்த கேள்வி வித்தியாசமாக எதாவது ஒரு சம்பவத்தை பார்த்தீர்களா என்றும் கேட்டிருந்தேன்.

நிறைய பேரு நிறையா விதமான பதில்களோட வந்திருந்தாங்க. ஆனா அங்க நடந்த ஒரு வித்தியாசமான சம்பவத்தைக் கவனிச்சு சொன்னவங்க ரொம்ப கொஞ்சம் பேருதான். அது என்ன தெரியுமா? பந்து விளையாடும் அரங்கில் கொரில்லா வேஷம் கட்டிய ஒருவர் நிதானமாக நடந்து வந்து ஒரு ஆட்டம் போட்டுவிட்டுப் போகிறார். ஆனால் இதைச் சொன்னவர்கள் வெகு சிலரே. அவர்களும் கூட முதல் முறை இதை பார்க்காமல், மீண்டும் பார்த்த பொழுதே இதை உணர்ந்து கொண்டதாகச் சொல்லி இருக்கின்றனர். பந்து தரையில் பட்டதை எண்ணும் ஜோரில் இதைப் பார்க்காமல் விட்டவர்கள் அனேகம்.

மீண்டும் ஒரு முறை இந்த நகர்படத்தைப் பார்க்க நினைத்தால் நீங்கள் சொடுக்க வேண்டிய உரல் இது.

இந்த விடியோவை பயன் படுத்துபவர்கள் யார் தெரியுமா? உலகப் புகழ் பெற்ற ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் (சுப்பிரமணியா சாமி நடத்தும் கிளாஸ் எல்லாம் இல்லைங்க) தலைமை பண்புகள் பற்றி எடுக்கப்படும் பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ள நகர்படம் இது. இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால் ஒரு தலைவரின் பண்பு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்றால், ஒரு சிறிய வேலையில் கவனம் செலுத்தும் பொழுது தன் கவனம் முழுவதையும் அதனில் செலுத்தாமல் சுற்றி நடப்பதையும் கவனிக்க வேண்டும் எனச் சொல்கிறார்கள். When engaged in solving a small problem, the leader should never miss the big picture.

இதனை நேரடியாகச் சொல்லாமல் இப்படி ஒரு படத்தைக் காண்பித்து ஒரு விளையாட்டாக இப்பாடத்தினைச் சொல்லித் தருகிறார்கள். இதனைச் சார்ந்த மற்றொரு பாடம் - Don't sweat the small stuff! அதாவது சிறு விஷயங்களுக்கு தேவையான அளவு கவனம் மட்டுமே தாருங்கள் என்பது. இதற்கும் ஒரு உதாரணம் தருகிறார்கள்.

ஒரு ஜாடி நிறைய பெரும் கற்களைப் போட்டுவிட்டு அந்த ஜாடியில் இதற்கு மேல் எதையாவது போட முடியுமா எனக் கேட்கிறார் ஒருவர். ஜாடி நிறைந்து பெரும் கற்கள் இருப்பதால் முடியாதென்றே மற்றவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இந்த விளையாட்டை நடத்துபவர் கொஞ்சம் அளவில் சிறிய கற்களை எடுத்து அந்த ஜாடியில் போடும் பொழுது அவை அப்பெரிய கற்களின் இடைவெளியில் சென்றுவிடுகின்றன. அதற்கு மேலும் அளவில் சிறியதான கற்களை போட அவைகளும் இடைவெளிகளுக்குள் சென்று விடுகின்றன. இறுதியாக அந்த கற்களுக்கு மேல் முடிந்த அளவு மணலையும் கொட்டுகிறார். கணிசமான அளவு மணலும் அந்த ஜாடியில் சேருகிறது.

அவர் அதற்குப் பின் "இந்த ஜாடியானது உங்களுக்கு இருக்கும் நேரத்தைக் குறிக்கிறது. அதனை முதலில் மணல் போன்ற சிறிய வேலைகளுக்குப் பயன்படுத்தினால் அதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாது. ஆனால் அதையே முதலில் பெரிய காரியங்களுக்கு பயன்படுத்தினால் அதன் பின் சிறிய வேலைகளுக்கும் நேரம் கிடைக்கும்." என்று விளக்கம் தருகிறார். இவ்வாறு விளக்கியபின், அதே ஜாடியில் ஒரு பியரையும் ஊற்றினார் இதற்கென்ன பொருள் என்று மாணவர்கள் கேட்டதற்கு எவ்வளவு வேலை இருந்தாலும், பியருக்குக்காகவும் பொழுதுபோக்குக்காகவும் நேரம் நிச்சயம் கிடைக்கும் என்றார்.

இப்படி பலவிதமான உதாரணங்களின் மூலம் மேலாண்மை குறித்த பாடங்கள் கற்றுத் தரப் படுகின்றன என்று அவ்விதமான பயிற்சிக்கு சென்ற ஒருவர் என்னிடம் கூறினார். அவர் என்னோடு பகிர்ந்து கொண்டதில் சிலவற்றைத்தான் நான் இந்த இரு பதிவுகளில் பகிர்ந்து கொண்டேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

34 comments:

said...

பல ஆயிரம் டாலர்கள் கட்டணமாக செலுத்திப் படிக்க வேண்டிய பாடங்கள் உங்களுக்கு இலவசமாக கிடைப்பது இங்கேதான்!! :))


போன பதிவின் பின்னூட்டங்களை வெளியிட்டாகி விட்டாது.

said...

//இதனை நேரடியாகச் சொல்லாமல் இப்படி ஒரு படத்தைக் காண்பித்து ஒரு விளையாட்டாக இப்பாடத்தினைச் சொல்லித் தருகிறார்கள். //

இதே போல வலைப்பதிவுகளிலும் செய்த ஒரு வித்தகரின் வலைப்பூ முகவரி: http://penathal.blogspot.com

said...

நண்பரிடம் கேட்டு இன்னும் சில பதிவுகள் ஒரு தொடராக போடுங்களேன்.

இலவச கொத்தனாரின் இலவச எம்.பி.ஏ?.... :)

said...

கடைசியா பியர ஊத்தி அத குடிக்கவும் நேரம் உண்டுன்னு சொண்ணீங்க பாருங்க, அங்க நிக்கறீங்க

said...

ஆஹா..... நம்ம வகுப்புக்கும் ஒரு குரங்கு வேணும். உடனே ஏற்பாடு செய்யுங்க.

அப்பாடா....கிளாஸ் லீடர்கிட்டே சொல்லிட்டேன். இனி அவர் பார்த்துக்குவார்:-)))))

said...

//ஆஹா..... நம்ம வகுப்புக்கும் ஒரு குரங்கு வேணும். உடனே ஏற்பாடு செய்யுங்க.//

ரிப்பீட்டேய்!

//பல ஆயிரம் டாலர்கள் கட்டணமாக செலுத்திப் படிக்க வேண்டிய பாடங்கள் உங்களுக்கு இலவசமாக கிடைப்பது இங்கேதான்!! :))
//

வாழ்க கொத்ஸ் அண்ணே! வளர்க அவரது புகழ்!

said...

//இவ்வாறு விளக்கியபின், அதே ஜாடியில் ஒரு பியரையும் ஊற்றினார் இதற்கென்ன பொருள்//

அய்யோ! ஒரு பாட்டில் பியரை வேஸ்ட் பண்ணிட்டானே படுபாவி! என்ற ஒரே பொருள் தான் எனக்கு தோணுது. இதை பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க? :))

நீங்க நினைக்கறது ஒரு பக்கம் இருக்கட்டும், பூரிகட்டை இப்ப உடைய போகுது!னு என் தங்கமணி நினைக்கறாங்க. என்ன கொடுமை இது கொத்ஸ்? :p

said...

//இதே போல வலைப்பதிவுகளிலும் செய்த ஒரு வித்தகரின் வலைப்பூ முகவரி: http://penathal.blogspot.com//

போஸ்டர்?!

//பல ஆயிரம் டாலர்கள் கட்டணமாக செலுத்திப் படிக்க வேண்டிய பாடங்கள் உங்களுக்கு இலவசமாக கிடைப்பது இங்கேதான்!! :))//

இதுக்கு உம்ம பதில் இது? நல்லா இருங்கடே!! :)

said...

//நண்பரிடம் கேட்டு இன்னும் சில பதிவுகள் ஒரு தொடராக போடுங்களேன்.//

யோசிக்க வேண்டிய விஷயம்தான்.

//இலவச கொத்தனாரின் இலவச எம்.பி.ஏ?.... :)//

அப்புறம் ஹார்வேர்ட் பாடம் சொல்லித்தரதுனால நம்மளை சுப்பிரமணிய சுவாமி ரேஞ்சுக்குக் கொண்டு போயிடாதீங்க.

said...

//கடைசியா பியர ஊத்தி அத குடிக்கவும் நேரம் உண்டுன்னு சொண்ணீங்க பாருங்க, அங்க நிக்கறீங்க//

இந்த மாதிரி நிக்கறது நான் இல்லைங்க. வேற ஒருத்தர். ஆனா எம்புட்டு ஸ்டெடியான்னு எல்லாம் ஆராயப்பிடாது!! :))

said...

//ஆஹா..... நம்ம வகுப்புக்கும் ஒரு குரங்கு வேணும். உடனே ஏற்பாடு செய்யுங்க.//

ரீச்சர், நல்ல வேளை. க்ளாஸ் லீடரா குரங்கு இருக்கேன்னு சொல்லாம விட்டீங்களே!!

//அப்பாடா....கிளாஸ் லீடர்கிட்டே சொல்லிட்டேன். இனி அவர் பார்த்துக்குவார்:-)))))//

என்னத்த பார்த்துக்கணும்?! இப்போ சந்தேகமா இருக்கே.... :)

said...

//ரிப்பீட்டேய்!//

இதுக்கெல்லாம் மட்டும் சேர்ந்துக்கங்கப்பா!!

said...

//அய்யோ! ஒரு பாட்டில் பியரை வேஸ்ட் பண்ணிட்டானே படுபாவி! என்ற ஒரே பொருள் தான் எனக்கு தோணுது. இதை பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க? :))//

நம்ம ஊர்க்காரங்க நெனப்பு ஒரே மாதிரி இருக்கறதில் என்ன ஆச்சரியம் அப்படின்னு நினைக்கிறேன். பெனாத்தலார், ப்ளீஸ் நோட் திஸ் பாயிண்ட்! :)

//நீங்க நினைக்கறது ஒரு பக்கம் இருக்கட்டும், பூரிகட்டை இப்ப உடைய போகுது!னு என் தங்கமணி நினைக்கறாங்க. என்ன கொடுமை இது கொத்ஸ்? :p//

Somethings are best unsaid. அப்படின்னு நினைக்கிறேன்! :))

said...

அருமையாக இருக்கிறது ஜாடி பாடம். மிக்க நன்றி

said...

இலவசக்கொத்தனார் said...
பல ஆயிரம் டாலர்கள் கட்டணமாக செலுத்திப் படிக்க வேண்டிய பாடங்கள் உங்களுக்கு இலவசமாக கிடைப்பது இங்கேதான்!! :))///

அதில் பாதியாவது அவரிடம் கேட்டு வாங்கு நாம் வேறு நல்ல வாத்தியாராக பார்க்கலாம், கொத்தனார் எல்லாம் வேண்டாம் என்று பினாத்தல் சொல்ல சொன்னார்:))) நான் அப்படி எல்லாம் கேட்கமாட்டேன் முழுவதுமாக கொடுதுவிடுங்க:))

said...

//அருமையாக இருக்கிறது ஜாடி பாடம். மிக்க நன்றி//

பியரை ஊத்தின உடனே நல்லா இருக்குன்னு சொல்லிடுவீங்களே!! :)

said...

//அதில் பாதியாவது அவரிடம் கேட்டு வாங்கு நாம் வேறு நல்ல வாத்தியாராக பார்க்கலாம், கொத்தனார் எல்லாம் வேண்டாம் என்று பினாத்தல் சொல்ல சொன்னார்:))) நான் அப்படி எல்லாம் கேட்கமாட்டேன் முழுவதுமாக கொடுதுவிடுங்க:))//

நான் குடுக்கறதே இலவசம். அதுல பாதி என்ன முழுசு என்ன? எல்லாம் ஒண்ணுதான். என்ன வேணுமோ எடுத்துக்குங்கப்பா!! :)

said...

ஏன் சிலவற்றோடு நிறுத்தி விட்டீர்கள்? மற்றதில் உள்ள நல்லவற்றையும் போடலாமே....

said...

நன்றி இரவி. அதில் இவைகள் இணையத்தில் எளிதாக கிடைத்ததால் எடுத்து இட வசதியாக இருந்தது. மற்ற சிலவை அங்குள்ள பாடங்கள் சம்பந்தப்பட்டவையாக இருந்ததால், அவர்கள் அனுமதி இன்றி இப்படி பொதுவாக இட முடியாது. அதான் பிரச்சனை!!

said...

அட ஆமாங் சுத்தமா எனக்கு தெரியவே இல்லையே??

இலைங்க கொத்ஸ் அன்னிக்கு வைகுண்ட ஏகாதசி.நான் உப்வாசம் பாருங்க...கண்ல பூச்சி பரந்ததுனால இந்த கரடி மனுஷர் தெரியல (solid excuse!)

மத்தபடி நல்ல பாடம்.:)

said...

//பந்து விளையாடும் அரங்கில் கொரில்லா வேஷம் கட்டிய ஒருவர் நிதானமாக நடந்து வந்து ஒரு ஆட்டம் போட்டுவிட்டுப் போகிறார். //


என்னா இது சின்னப்புள்ளதனமா? அந்த கிராம(நாங்க ஏட்டிக்குபோட்டியாதான் பேசுவோம்) படத்திலே கரடி வந்தா என்ன? கன்னுக்குட்டி வந்த எங்களுக்கென்னா???

வெள்ளைக்கார பிகருகளிலே ஒருத்தி அழகா போனி டெயில் போட்டுக்கிட்டு என்னாமா இருக்கா? அதை பார்க்கிறத விட்டுட்டு கரடிய பார்க்கனுமாம்??? போங்கய்யா நீங்களும் ஒங்க MBA பாடமும்.... :(

said...

இப்பிடியெல்லாம் நாங்க கஷ்டப்படாமே அல்ரெடி டிகிரி வாங்கியாச்சு.... :)

said...

//அட ஆமாங் சுத்தமா எனக்கு தெரியவே இல்லையே??//

தெரியலையா? நல்லாப் பாருங்கக்கா!! தெரியும். :))

//இலைங்க கொத்ஸ் அன்னிக்கு வைகுண்ட ஏகாதசி.நான் உப்வாசம் பாருங்க...கண்ல பூச்சி பரந்ததுனால இந்த கரடி மனுஷர் தெரியல (solid excuse!)//

இதுதான் எஸ்க்யூஸா? ரொம்பவே பாவங்க நீங்க.

//மத்தபடி நல்ல பாடம்.:)//

பாடம் நான் சொல்லி கேட்டீங்களா! :)))

said...

//அந்த கிராம(நாங்க ஏட்டிக்குபோட்டியாதான் பேசுவோம்) படத்திலே கரடி வந்தா என்ன?//

நீங்க கிராம படம் அப்படின்னு சொன்னா, நாங்க வெயிட்டா போட்ட படத்தைக் டன் படம் அப்படின்னு சொல்லுவோம். அடுத்தவங்க வெயிட்டா போட்டா கிலோக்கணக்கில் நிறுத்திப்போம்.

//போங்கய்யா நீங்களும் ஒங்க MBA பாடமும்....///

அதெல்லாம் கிடைக்காது. இது Leadership qualities அப்படின்னு ஒரு ப்ரோகிராம்.

said...

//இப்பிடியெல்லாம் நாங்க கஷ்டப்படாமே அல்ரெடி டிகிரி வாங்கியாச்சு.... :)//

ஆமாம் இந்த மாதிரி எம்பிஏ வாங்கத்தான் க்ரேட் க்ரேட்டா பியர் வாங்கறீங்க போல.

நாங்களும் அந்த பியர் எல்லாம் வெச்சுதானே க்ளாஸ் எடுக்கறோம். (உடனே நாங்க பாட்டிலோட குடிப்போமேன்னு எல்லாம் சொல்ல வேண்டாம். நான் சொன்னது Glass.)

said...

உங்களுக்கு ஓர் அழைப்பு: ஈ - தமிழ்: A tag

முன்கூட்டிய வணக்கங்கள் :)

said...

இ.கொத்ஸ் - புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

புகைப்படத் தொடருக்கு அழைப்பு : http://domesticatedonion.net/tamil/?p=716

நேரமிருக்கும்பொழுது எழுதுங்கள்

said...

இந்த முறை விட்டடிச்சாச்சு... (கஷ்டமா இருந்திச்சில்ல...) அடுத்த முறை கலந்துக்கறேன்!

said...

பாபா, நீங்கள் கேட்டுக் கொண்டபடி போட்டாச்சு. உங்கள் மூன்கூட்டிய வாழ்த்துகளுக்கு நன்னி.

said...

வெங்கட், உங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். ஒரு பதிவு போட்டா போதும்தானே. போட்டாச்சுங்க. நன்றி.

said...

//இந்த முறை விட்டடிச்சாச்சு... (கஷ்டமா இருந்திச்சில்ல...) அடுத்த முறை கலந்துக்கறேன்!//

இப்போ எல்லாம் எங்க நம்ம பக்கம் வறீங்க? இது கஷ்டமா இருந்துதா? சரி போகட்டும். நான் ஒண்ணும் சொல்லப் போறது இல்லை.

said...

////இலவசக்கொத்தனார் said...
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!////

இந்த இன்பத்தை 3 வருடங்களுக்கு முன் அறியத்தர முயன்றிருக்கிறேன் :)


http://ssankar.blogspot.com/2005/07/blog-post_23.html

உங்க பதிவை இப்பதான் படித்தேன்.அதான் இவ்வளவு லேட்டா ஒரு பின்னூட்டம் :)

அன்புடன்...ச.சங்கர்

said...

சங்கர், இப்போதான் உங்க பதிவைப் பார்த்தேன். தேநீர் எல்லாம் குடிக்கக் கூப்பிட்டா இந்தப் பசங்க வருவாங்க? அதான் அதை கொஞ்சம் கொத்தி இப்படி!! :)

said...

///சங்கர், இப்போதான் உங்க பதிவைப் பார்த்தேன்.///

அப்பாடி...ஒரு வழியா 3 வருஷம் கழிச்சு ஒருத்தரை நம்ம பதிவைப் படிக்க வச்சாச்சு :) அந்தக் காலத்துல முதல் பின்னூட்டம் "டெஸ்ட் பின்னூட்டம் " அப்படீனுல்லாம் போடத் தெரியாத அப்புராணியா இருந்திருக்கேன் பாருங்க :)


///தேநீர் எல்லாம் குடிக்கக் கூப்பிட்டா இந்தப் பசங்க வருவாங்க? அதான் அதை கொஞ்சம் கொத்தி இப்படி!! :)
////

நடத்துங்க நடத்துங்க :)


அன்புடன்...ச.சங்கர்