Monday, May 12, 2008

அமீரக இந்தியர்கள், உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, சோயா எண்ணை மற்றும் ரப்பர்!!

போன பதிவைப் படிச்சுட்டு, மொக்கை போடறதே வழக்கமா வெச்சு இருக்கியே என்னிக்காவது கொஞ்சம் உருப்படியா எதாவது எழுதக் கூடாதான்னு நம்ம நண்பர் ஒருத்தர் தனிமடல் ஒண்ணு அனுப்பி ஆசீர்வாதம் பண்ணி இருந்தாரு. இவரை சந்தோஷப்படுத்தற மாதிரி பதிவு போட முடியுமான்னு பார்க்கத்தான் இந்தப் பதிவு.

எதை எழுதுவது என யோசிக்கையில் வழக்கம் போல் நம்ம மக்கள் கனகாரியமாக எழுப்பி இருக்கும் ஒரு கோரிக்கையைப் படிக்கப் போய் விஷயம் சிக்கியது. ஆனால் அதைப் பற்றி பேசும் முன் சில விளக்கங்கள்.

ஒரு பொருளை தற்போது வாங்காமல் சிறிது காலத்திற்குப் பின் குறிப்பிட்ட தொகைக்கு வாங்கவோ விற்கவோ செய்யப்படும் ஒப்பந்தங்கள் எதிர்(காலப்) பேரங்கள் (Futures Contracts) என அறியப் பெறுகின்றன. இவ்வகையில் வர்த்தகம் செய்யப்படும் பொருட்கள் அரிசி, கோதுமை, மாமிசம், எண்ணை என எது வேண்டுமானாலும் இருக்கலாம். அல்லது அந்நிய செலாவணியாகக் கூட இருக்கலாம். இவ்வகைப் பேரங்கள் எதிர்(காலப்) பேரங்கள் (Futures Contracts), விருப்பப் பேரங்கள் (Option Contracts) என இரு வகைப்படுகின்றன.

அதாவது ஜூலை இறுதியில் ஒரு கிலோ அரிசியை ரூபாய் 40க்கு வாங்கிக் கொள்கிறேன் என நான் மளிகைக் கடை அண்ணாச்சியுடன் ஒரு பேரம் செய்து கொண்டேன் என்றால் அது ஒரு விதமான எதிர் பேரம். அந்த தேதியில் அரிசி என்ன விலைக்கு விற்றாலும் நான் அண்ணாச்சியிடம் 40 ரூபாய்க்கு ஒரு கிலோ என வாங்கியே ஆக வேண்டும். அவரும் அந்த விலைக்கு விற்றாக வேண்டும். அன்றைய விலை 35 ரூபாயாக இருந்தாலும் சரி 60 ரூபாயாக இருந்தாலும் சரி. இதுவே சற்று வேறு விதமாக ஜூலை இறுதியில் ஒரு கிலோ அரிசியை 40 ரூபாய்க்கு நான் கேட்டால் தரவேண்டும் என மாற்றி ஒப்பந்தம் செய்து கொண்டால் அது விருப்பப் பேரமாகிவிடும். இதில் வர்த்தகம் செய்யப்படுவது ஜூலை இறுதியில் 40 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியைக் கேட்கக்கூடிய உரிமை மட்டுமே. அன்று அரிசியின் விலை நிலவரத்தில் கணக்கில் கொண்டு நான் 40 ரூபாய்க்கு வாங்கவோ அல்லது வாங்காமல் இருக்கவோ எனக்கு உரிமை உண்டு. இவ்வித பேரங்களில் இவ்வுரிமையை வாங்குபவர், அந்த உரிமையை விற்பவருக்கு ஒரு தொகை தந்தாக வேண்டும்.

பொதுவாக இது போன்ற வர்த்தகத்தில் இரு விதமானவர்கள் ஈடுபடுவார்கள் - அந்தத் தேதியில் அந்த பொருள் தமக்குத் தேவை என நினைப்பவர்கள் (Hedgers) அல்லது ஊக வியாபாரம் செய்பவர்கள் (Speculators) . ஒருவர் செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் இருந்து புதரகம் செல்ல திட்டமிட்டு இருந்தாரென்றால் இன்றே புறப்படும் பொழுது ஆயிரம் புதரக டாலர்களை, ஒரு டாலர் 35 ரூபாய் என பேரம் பேசி ஒப்பந்தம் ஒன்று செய்தாரானால் அது முதல் வகை. டாலரே தேவை இல்லாத ஒருவர் பிற்தேதியில் டாலரின் மதிப்பு அதிகமாகலாம் என நினைத்து தனக்குத் தனியாக தேவை இல்லை என்றாலும் கூட இன்றே குறைந்த விலைக்கு அதனை வாங்க ஒரு எதிர் பேரம் செய்தாரானால் அது இரண்டாம் வகை.

இந்த இரண்டாம் வகைப் பேரங்களினால் கூட ஒரு பொருளின் விலை அதிகமாகக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. இது போன்று செயற்கையான விலையேற்றங்களைக் குறைப்பதற்காக அரசாங்கம் இது போன்ற எதிர் பேர ஒப்பந்தங்கள் மீது பல வித கட்டுப்பாடுகளை விதிக்கின்றது. சமீப கால விலையேற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காக பல பொருட்களில் எதிர் பேரங்களே கூடாது என்றும் கூட கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துவிட்டது இந்திய அரசாங்கம். இதன் பகுதியாக சென்ற வாரம் சோயா எண்ணை, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை மற்றும் ரப்பர் ஆகியவற்றில் எதிர் பேரங்கள் கூடாது என அரசாங்கம் ஆணை பிறப்பித்து இருக்கின்றது.

தலைப்பில் கடைசி நான்கு வார்த்தைகளுக்கு பதிவில் விளக்கம் தந்தாயிற்று. அடுத்து அமீரக இந்தியர்கள் என்ன ஆனார்கள் என்று பார்க்கலாமா? அவர்கள் இந்திய அரசாங்கத்திற்கு ஒரு கோரிக்கை வைத்து இருக்கின்றார்கள். சமீப காலத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து விட்டதால் அவர்கள் இந்தியாவிற்கு அனுப்பும் அந்நிய செலாவணியின் மதிப்பு குறைந்து விட்டதாம். இதனால் இந்திய அரசாங்கம் இதற்குப் பொறுப்பேற்று அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டத்தை ஈடு கட்ட வேண்டுமாம். உதாரணத்திற்கு ஒரு டாலருக்கு 50 ரூபாய்கள் கிடைத்தது போய் இன்று 40 ரூபாய்கள்தான் கிடைக்கிறதாம். இந்த பத்து ரூபாய் நட்டத்தை அரசாங்கம் ஈடு கட்ட வேண்டுமாம். என்ன வாசாப்பு ஐயா இது?

இந்த ஈடு கட்டலுக்கு நீங்கள் என்ன இந்திய அரசாங்கத்துடன் ஒரு எதிர் பேரமா செய்து கொண்டு இருக்கிறீர்கள் இந்த நட்டத்தை அவர்கள் தர? இதையே சாக்காக எடுத்துக் கொண்டு 2100 வரைச் சென்ற இன்போசிஸ் பங்குகள் இன்று 1800 ரூபாய்க்குத்தான் விலை போகின்றது. இவ்வீழ்ச்சிக்கு அரசாங்கத்தின் பொருளாதார கொள்கையே காரணம். எங்கள் நட்டத்திற்கு ஈடு வேண்டும் என்று ஒரு சாரார் கிளம்பலாம். இன்னும் இது போன்று எத்தனையோ காரணங்களுக்கு மற்றவர்களும் கிளம்பலாம். இதெல்லாம் ரொம்பவே அதிகமாத் தோணலை? இதுவே ரூபாயின் மதிப்புக் குறைந்து டாலருக்கு 60 ரூபாய் ஆனால் இவர்கள் என்ன ஒரு பத்து ரூபாயை வேண்டாம் என்று அரசாங்கத்திற்கா தரப் போகிறார்கள்? என்ன ஒரு பொறுப்பில்லாத பேச்சோ தெரியலை.

செய்தியைப் படிக்கும் பொழுதே சிரிக்கவா அழவான்னு தெரியலை. அந்தத் தெரிவை நீங்களே செஞ்சுக்குங்க.

131 comments:

said...

ஆப்ஷன்ஸ், ப்யூச்சேர்ஸ் எல்லாம் பத்தி ரொம்ப மேலோட்டமாத்தான் சொல்லி இருக்கேன். கேள்விகள் இருந்தா பின்னூட்டத்தில் கேளுங்க. தெரிஞ்ச வரை சொல்லறேன்.

ஆனா அந்த அறிக்கையைப் படிச்சிட்டு எதைக் கொண்டு அடிச்சுக்கன்னு எல்லாம் கேட்கக்கூடாது. அதெல்லாம் நீங்களே முடிவு செஞ்சுக்கணும். :)

said...

////வாசாப்பு//???

said...

ஸ்டாக் மார்கெட் பத்தி ஒன்னும் தெரியாத என்னை மாதிரி ஆளுங்களுக்கு சுலபமா புரியற மாதிரி Options, Futures பத்தி எழுதிருக்கீங்க. நன்னி.
:)

said...

////வாசாப்பு//???

முழுப்பதிவும் கருப்பில் இருக்க உமக்கு ஒரே ஒரு சிகப்பு சொல் மட்டும்தான் கண்ணில் பட்டதா? கைப்புவே நீர் கூட திராவிட எதிர்ப்பு நுண்ணரசியல் செய்ய தொடங்கி விட்டீரே! நீர் கூடவா கைப்ஸ்? :))

said...

//ஸ்டாக் மார்கெட் பத்தி ஒன்னும் தெரியாத என்னை மாதிரி ஆளுங்களுக்கு//

இதெல்லாம் வர்த்தகம் செய்ய Futures Exchange அப்படின்னே தனியா இருக்கு. பண்டை காலத்தில் இருந்தவைகளை விட்டோமென்றால் சிகாகோவில் 1800களில் இருந்து செயல்படும் Chicago Board of Trade என்பதுதான் மிகப் பழமையானது.

பங்குகள் வாங்க விற்க செய்யப்படும் பேரங்கள் பங்கு சந்தையில் நடக்கின்றன. இது மட்டுமில்லாது Over the counter என சந்தை இல்லாது தனிப்பட்ட இருவரிடையே கூட இது போன்ற பேரங்கள் நடக்கலாம்.

said...

மொழியில் ஒரு ஐயம்...

ரப்பர் - தமிழில் என்ன???

அதே மாதிரி கச்சா எண்ணெய் - இதுல கச்சா என்பது வடமொழிச் சொல்...Raw என்று பொருள் படும்.

ரப்பர், கச்சா எண்ணெய் இதப் பத்தி தமிழ் செய்திகளில் சொல்லும் போது கூட ரப்பர், கச்சா எண்ணெய்னு தான் சொல்லுறாங்க.

said...

//////வாசாப்பு//???

முழுப்பதிவும் கருப்பில் இருக்க உமக்கு ஒரே ஒரு சிகப்பு சொல் மட்டும்தான் கண்ணில் பட்டதா? கைப்புவே நீர் கூட திராவிட எதிர்ப்பு நுண்ணரசியல் செய்ய தொடங்கி விட்டீரே! நீர் கூடவா கைப்ஸ்? :))//

அர்த்தத்தைச் சொல்லுமய்யா. சரியான வாசாப்பு புடிச்ச ஆளா இருக்கீரே :))

said...

நமக்கு Currency Management-க்கும் ரொம்ப தூரம். வருகை பதிவேட்டுல கையொப்பம் மட்டும் போட்டுக்கிறேன்.

இந்த மாதிரி கோரிக்கைக்கு முன்மாதிரி இருக்கான்னு தெரியலை. ஆனா கோரிக்கை விநோதமாத்தான் இருக்கு.

நிறைய தகவல்களோடு எழுதியிருக்கீங்க. இந்த இடத்துல போய் பாருங்க. NRI Remittances-யும் FDI-யும் ஒப்பீடு செய்து போட்டிருக்காங்க. இதுவும் இன்ட்ரஸ்டிங்காத்தான் இருக்கு :-)

said...

இந்த வம்புக்குத்தான் காசே அனுப்பறதில்லை.


(அனுப்பும் அளவுக்கு இங்கே நஹி. என்பது நமக்குள் இருக்கட்டும்)

said...

//மொழியில் ஒரு ஐயம்...//

அதுக்கு வேற நல்ல டாக்டரா போய் பாருங்கன்னு சொல்ல வந்தேன். அப்புறம்தான் இது உடம்புக்கு ஒண்ணும் இல்லைன்னு ஞாபகத்துக்கே வந்தது. :)

//ரப்பர் - தமிழில் என்ன???//

ரப்பர்தான்.

அட உண்மையாச் சொல்லறேங்க. நம்பிக்கை இல்லைன்னா நம்ம கட்டற்ற பன்மொழி அகரமுதலியைக் கேட்டுப் பாருங்க. இயற்பியலா இருந்தா இரப்பராம். கட்டுமானவியலா இருந்தா இறப்பராம். வேதியலா இருந்தா இரப்பர், இறப்பர் எது வேணாலும் சொல்லலாமாம்.

//அதே மாதிரி கச்சா எண்ணெய் - இதுல கச்சா என்பது வடமொழிச் சொல்...Raw என்று பொருள் படும்.//

கச்சா எண்ணையா? அச்சா, அதே நல்லா இருக்கே! போகட்டும். சரியாச் சொல்லணமுன்னா சுத்திகரிக்கப்படாத எண்ணை. எங்க எல்லாரும் சேர்ந்து ஒரு தடவை சொல்லுங்க பார்ப்போம்!

//ரப்பர், கச்சா எண்ணெய் இதப் பத்தி தமிழ் செய்திகளில் சொல்லும் போது கூட ரப்பர், கச்சா எண்ணெய்னு தான் சொல்லுறாங்க.//

நல்ல வேளை தமிழில்தானே சொல்லறாங்க. :))

said...

//அர்த்தத்தைச் சொல்லுமய்யா. சரியான வாசாப்பு புடிச்ச ஆளா இருக்கீரே :))//

எனக்கு வாசாப்பு புடிக்கும் என்பதுதான் ஊரறிஞ்ச ரகசியமாச்சே. இப்போ எதுக்கு அதை எல்லாம் சொல்லிக்கிட்டு!! :))

said...

//நமக்கு Currency Management-க்கும் ரொம்ப தூரம். வருகை பதிவேட்டுல கையொப்பம் மட்டும் போட்டுக்கிறேன்.//

நீங்க எல்லாம் இப்படிச் சொல்லிட்டு அப்ஸ்காண்ட் ஆனா அப்புறம் நான் எங்க போயி ஐயா டார்கெட் செட் பண்ணறது!

//இந்த மாதிரி கோரிக்கைக்கு முன்மாதிரி இருக்கான்னு தெரியலை. ஆனா கோரிக்கை விநோதமாத்தான் இருக்கு.//

விநோதமாவா? சுத்த முட்டாள்த்தனமா இல்ல இருக்கு. பெனாத்தலார் வாயைத் திறக்கறாரான்னு பாருங்க! :))

//நிறைய தகவல்களோடு எழுதியிருக்கீங்க. இந்த இடத்துல போய் பாருங்க.//

சுட்டிக்கு நன்னி, போய்ப் பார்க்கறேன்.

said...

என்ன இது? எங்கே போனாலும் பாடம் எடுக்கிறது, ரிவிஷன், கேள்வினு கேட்டுட்டு, வேறே வேலை இல்லை?

பி.கு. அது சரி, டாலர் எக்ஸ்சேஞ்சிலே மதிப்பு ஏறப் போகுதா என்ன? இப்போ 1$-க்கு 41ரூ 40 காசுனு சொல்றாங்களே, நிஜமாவா??? :P

said...

மிகவும் மிருதுவான விளக்கங்களுக்கு நன்றி.

ஒரு பொதுவான கேள்வி.

கச்சா எண்ணையின் விலையேற்றம் / இறக்கம் உலக பொருளாதார பாதிப்புகளில் பிரதிபலிப்பது ஏன்?

said...

ஆனா அந்த அறிக்கையைப் படிச்சிட்டு எதைக் கொண்டு அடிச்சுக்கன்னு எல்லாம் கேட்கக்கூடாது. அதெல்லாம் நீங்களே //

said...

உண்மையாவே வாசாப்புன்னா என்ன அர்த்தம்.

மிச்சமெல்லாம் பொருளாதாரக் கைநாட்டு என்பதால்
ஒன்றும் சொல்ல முடியாது நிலையில இருக்கேன்.

said...

//நம்ம நண்பர் ஒருத்தர் தனிமடல் ஒண்ணு அனுப்பி ஆசீர்வாதம் பண்ணி இருந்தாரு..//

ஆசீர்வாதம் பண்ணிய நல்ல மனுஷருக்கு நன்னி...

said...

//வாசாப்பு//

புதசெவி (இப்ப என்ன செய்வீங்க? :p)

//டாலர் எக்ஸ்சேஞ்சிலே மதிப்பு ஏறப் போகுதா என்ன? இப்போ 1$-க்கு 41ரூ 40 காசுனு சொல்றாங்களே, நிஜமாவா???//

@geetha madam, ஆசை தோசை அப்பளம் வடை. :p

said...

இன்னும் அமீர பார்ட்டிகள் எல்லாம் வரலையா?

சரி, கச்சேரி களை கட்டியதும் சொல்லி அனுப்புங்க வரேன். :))

said...

//எனக்கு வாசாப்பு புடிக்கும் என்பதுதான் ஊரறிஞ்ச ரகசியமாச்சே. இப்போ எதுக்கு அதை எல்லாம் சொல்லிக்கிட்டு!! :))//

அப்போ வாசாப்புன்னா கொழுப்புன்னு சொல்ல வர்றீங்க. தெளிவான விளக்கம். தீர்ந்தது சந்தேகம். பாண்டிய மன்னனின் ஆயிரம் பொற்காசுகளும் எனக்கே!!!

said...

அருமையான விளக்கம். நன்றி.

said...

கொத்ஸ்,

நிறைய பொருளாதார abstract termsகளுக்கு புரியும்படியாக விளக்கங்களோட ஒரு பதிவப் போட்டு எனக்குக் கூட புரியுற மாதிரி மண்டைக்குள்ள ஏத்திட்டீங்க சரக்கை ;-).

அது சரி, எனக்கும் பலத்த நஷ்டம் சமீப காலமா டாலரை ரூபாயா மாற்றும் பொழுது ஒரு அஞ்சு ரூவா கூடப் போட்டு வாங்கித் தர முடியுமா :))??.

பி.கு: நமக்குள்ளயே இருக்கட்டும் இந்த ரகசியம்...;) துள்சிங்க சொன்ன மாதிரியே நானும் இந்தக் கட்சிதான் "இந்த வம்புக்குத்தான் காசே அனுப்பறதில்லை.

(அனுப்பும் அளவுக்கு இங்கே நஹி. என்பது நமக்குள் இருக்கட்டும்)..."
ஹி..ஹி..ஹி.

said...

என்ன நடக்குதிங்கே?....வாசாப்பு, ஈசாப்புன்னு ....இருங்க பதிவை படிச்சுட்டு வர்ரேன்...

said...

ஆப்ஷன்ஸ், ப்யூச்சர்ஸ் ஏதோ புரிஞ்சமாதிரி இருக்கு..ஆமாம், டிபென்ஞ்சர் அப்படின்னா என்னங்கண்ணா?

said...

//இதையே சாக்காக எடுத்துக் கொண்டு 2100 வரைச் சென்ற இன்போசிஸ் பங்குகள் இன்று 1800 ரூபாய்க்குத்தான் விலை போகின்றது. இவ்வீழ்ச்சிக்கு அரசாங்கத்தின் பொருளாதார கொள்கையே காரணம். எங்கள் நட்டத்திற்கு ஈடு வேண்டும் என்று ஒரு சாரார் கிளம்பலாம்//

அதானே!, யாரெல்லாம் வரீங்கப்பா?, மொத்தமா சேத்து ஒரே கேஸா போடலாம்.

said...

வாசாப்புன்னா வாக்குவாதம் சரியா?

said...

//வாசாப்புன்னா வாக்குவாதம் சரியா?//

இல்லை வல்லிம்மா!! :)))

said...

அப்படியே கமாடிட்டி செல்லிங் பத்திச் சொல்லி, அதனால எப்படி விலைவாசி ஏறுதுன்னு சொல்லி முடிக்கறது :)

said...

வாசாப்புன்னா அதிகார பிச்சை, சரியா?

said...

வாசாப்பு = நக்கல்/நையாண்டி?

said...

வாசாப்பு = நக்கல்/நையாண்டி?

said...

//சோயா எண்ணை, ரப்பர், கொண்டைக்கடலை மற்றும் ரப்பர் //

உருளைக்கிழங்கை காணோம். வாயுனு விட்டுட்டீங்களா? ;)

said...

நல்லா புரியற மாதிரி சொல்லியிருக்கீங்க... சூப்பர் :-)

said...

புதரகம் - அமெரிக்கா ; பெயர்க்காரணம் என்ன?

said...

//உருளைக்கிழங்கை காணோம். வாயுனு விட்டுட்டீங்களா? ;)//

இது, இது சூப்பர் பாலாஜி.... :)

said...

யோவ் இலவசம்

நீரு ஒரு வெளங்காவெட்டிங்குறதை இப்படி பதிவு போட்டு நிரூபிக்கணுமா?

இந்த பாலைவனத்துல வாழ்ந்தாலும் எங்களோட நகைச்சுவை உணர்வு கொஞ்சமும் குறையலைங்குறதை உலகத்துக்கு எடுத்துச் சொல்லத்தான் அப்படி ஒரு அறிக்கை.

இதெல்லாம் தெரியாம...நீரு ஒரு பதிவு அதுக்கு நாலு பேரு நாட்டாமை

இதுல வாசாப்பு வேற. போய் வேலையப் பாருய்யா

சாத்தான்குளத்தான்

said...

//ஸ்டாக் மார்கெட் பத்தி ஒன்னும் தெரியாத என்னை மாதிரி ஆளுங்களுக்கு சுலபமா புரியற மாதிரி ஓப்டிஒன்ச், Fஉடுரெச் பத்தி எழுதிருக்கீங்க. நன்னி.
:)
//

வழிமொழிகிறேன்.

//தருமி said...
//நம்ம நண்பர் ஒருத்தர் தனிமடல் ஒண்ணு அனுப்பி ஆசீர்வாதம் பண்ணி இருந்தாரு..//

ஆசீர்வாதம் பண்ணிய நல்ல மனுஷருக்கு நன்னி...
//

இன்னொரு வழிமொழிகிறேன்.

//முரளிகண்ணன் said...
புதரகம் - அமெரிக்கா ; பெயர்க்காரணம் என்ன?
//

அமீர் ஆண்டால் அமீரகம். புதர் (Bush) ஆண்டால் புதரகம் தானே?! அடுத்த வருடம் இது புதரகமாக இருக்காது. புதிய பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

said...

//ஸ்டாக் மார்கெட் பத்தி ஒன்னும் தெரியாத என்னை மாதிரி ஆளுங்களுக்கு//

நல்லா புரியுற மாதிரி சொன்ன தலைவா

said...

வாசாப்பு vācāppu : (page 3579)

வாசாதி vācāti
, n. cf. vāsādanī. Malabar-nut. See ஆடாதோடை. (மலை.)

வாசாப்பு vācāppu
, n. Corr. of வாசகப்பா. (W.)

வாசாமகோசரம் vācāmakōcaram
,



--------------------------------------------------------------------------------
2. வாசாப்பு vācāppu : (page s410)

+. Benediction; வாழ்த்து. வல்லோர் வகுத்த வாசனைவாக்கியம் பல்லோர் பகர (பெருங். உஞ்சைக். 34, 27).

வாசாப்பு vācāppu
, n. See வாசகப்பா. Pond.

வாசியோகம் vāci-yōkam
, n. prob. வாசி +. A kind of

- From http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/

said...

அண்ணாச்சி வந்து அருமையாச் சொல்லிட்டு போயிட்டாரு.. எங்க நகைச்சுவை உணர்ச்சியக் காமிக்கத்தான் அப்படி ஒரு கடிதம் போட்டிருக்காங்க! இதைப்போய் பெரிய மேட்டரா எடுத்துகிட்டு பதிவு, இதுல நான் என்னவோ அமீரக இந்தியர் பிரதிநிதி மாதிரி "பெனாத்தலார் வாயைத் திறக்கறாரான்னு பாருங்க!"ன்னு பின்னூட்டம்,

யாருக்குய்யா வாசாப்பு?

said...

//இந்த வம்புக்குத்தான் காசே அனுப்பறதில்லை.//

இந்தியாவுக்கு அனுப்பறதில்லைன்னு சரியாச் சொல்லுங்க!! :)))


//(அனுப்பும் அளவுக்கு இங்கே நஹி. என்பது நமக்குள் இருக்கட்டும்)//

நமக்குள் இருக்கணுமுன்னா அதுக்கு ஒரு தனி ரேட் இருக்கு. பில் அனுப்பறேன். செட்டொல் பண்ணிடுங்க.

said...

//என்ன இது? எங்கே போனாலும் பாடம் எடுக்கிறது, ரிவிஷன், கேள்வினு கேட்டுட்டு, வேறே வேலை இல்லை?//

அங்க ஒரு பெரியவர் வந்து மொக்கை போடற நேரத்தில் உருப்படியா எழுதலாமுன்னு சொல்லறாரு. நீங்க என்னடான்னா இப்படிச் சொல்லறீங்க. இருந்தாலும் இப்படி எல்லாம் செஞ்சாவது எங்க ரீச்சருக்கு ஏத்த மாணவன்னு சொல்லிக்கலாமுல்ல.

//பி.கு. அது சரி, டாலர் எக்ஸ்சேஞ்சிலே மதிப்பு ஏறப் போகுதா என்ன? இப்போ 1$-க்கு 41ரூ 40 காசுனு சொல்றாங்களே, நிஜமாவா??? :P//

இப்போ கூகிளாண்டவர் சொல்வது படி 1 U.S. dollar = 40.549856 Indian rupees. கூகிள் பக்கத்தில் போய் 1 USD = ? INR அப்படின்னு போடுங்க. அவர் ரேட் சொல்லிடுவார்! :))

said...

சிரிக்கத்தான் வேணும்!
ஜவாப் > சவாப் > வசாப் >வாசாப்பு ????? கரீட்டா?

said...

//மிகவும் மிருதுவான விளக்கங்களுக்கு நன்றி.//

நன்றி சிவா.

//ஒரு பொதுவான கேள்வி.

கச்சா எண்ணையின் விலையேற்றம் / இறக்கம் உலக பொருளாதார பாதிப்புகளில் பிரதிபலிப்பது ஏன்?//

ரொம்ப விஸ்தாரமாச் சொல்ல வேண்டிய விஷயம். சுருக்கமாச் சொன்னா நீரின்றி அமையாது உலகு என்பது போய் கச்சா எண்ணை இன்றி அமையாது இவ்வுலகு என்று இருப்பதால்தான் இப்படி. இன்னொரு நாளில் இது பற்றி விளக்கமாக எழுதலாம்.

said...

//ஆனா அந்த அறிக்கையைப் படிச்சிட்டு எதைக் கொண்டு அடிச்சுக்கன்னு எல்லாம் கேட்கக்கூடாது. அதெல்லாம் நீங்களே //

என்ன செஞ்சீங்க? அதையும் சொல்லிடுங்க! :))

said...

/கட்டுமானவியலா இருந்தா இறப்பராம்//
எவர் இறப்பர்?

said...

//உண்மையாவே வாசாப்புன்னா என்ன அர்த்தம்.//

அம்மா, நீங்களே கேட்கறீங்க. சொல்லிட வேண்டியதுதான். வாசாப்பு என்பது நாம் தமிழில் காமெடி என்று சொல்கிறோம் இல்லையா. அதற்கு ஒரு மாற்றுச் சொல். பொதுவாக நாடகத்தை ஒட்டி பயன்படுத்தப்படும் சொல் என்றாலும், இன்று எல்லாவிதமான காமெடிக்குமே வாசாப்பு என்று சொல்லலாம் என்பது என் எண்ணம்.

இது பற்றி நான் பாவிக்கும் அகரமுதலியில் இருக்கும் குறிப்பு இது. .

//மிச்சமெல்லாம் பொருளாதாரக் கைநாட்டு என்பதால்
ஒன்றும் சொல்ல முடியாது நிலையில இருக்கேன்.//

படிச்ச வரை புரிஞ்சுதான்னு சொல்லலாமே!

said...

//ஆசிப் மீரான் said...
யோவ் இலவசம்

நீரு ஒரு வெளங்காவெட்டிங்குறதை இப்படி பதிவு போட்டு நிரூபிக்கணுமா?

இந்த பாலைவனத்துல வாழ்ந்தாலும் எங்களோட நகைச்சுவை உணர்வு கொஞ்சமும் குறையலைங்குறதை உலகத்துக்கு எடுத்துச் சொல்லத்தான் அப்படி ஒரு அறிக்கை.

இதெல்லாம் தெரியாம...நீரு ஒரு பதிவு அதுக்கு நாலு பேரு நாட்டாமை

இதுல வாசாப்பு வேற. போய் வேலையப் பாருய்யா

சாத்தான்குளத்தான்
//

ஹி.... ஹி... ரிப்பீட்டே :)))

said...

//ஆசீர்வாதம் பண்ணிய நல்ல மனுஷருக்கு நன்னி...//

தருமி!! :)))

said...

//ஆசீர்வாதம் பண்ணிய நல்ல மனுஷருக்கு நன்னி...//

இதுக்கு ஒரு 'மறுக்காசொல்லேய்' போட்டுகிடறேன்.

அப்படியே இங்ங்ன ஒரு 50 அடிச்சிகிறுவோம் :-))

said...

// அடுத்த வருடம் இது புதரகமாக இருக்காது//

இப்பவே அடுத்த வருஷத்துக்கு ஒரு பெயர் ரெடி பண்ணுங்களேன் . அதில நீங்க எந்த கட்சின்னும் தெரியட்டுமே..

said...

Kalukuringa kothanarae..arumaiyaana poochu!! thodarnthu ezhuthavum.. it would be useful if you can educate people on how to trade in F&O.

said...

என்னோட பின்னூட்டம் ஏதாவது வந்துதா?......ஏதோ எர்ரர் மெசெஜ் வந்துது அதான் கேட்டேன்??

said...

//வாசாப்பு//

புதசெவி (இப்ப என்ன செய்வீங்க? :p)//

அம்பி,

புதசெவி = புன்னகை தரும் செய்தியும் விளக்கமும்தானே!
சரிதான். இந்த மாதிரி வாசாப்புகளைப் படிச்சா அப்படித்தான் இருக்கும்!

//@geetha madam, ஆசை தோசை அப்பளம் வடை. :p//

அம்பி, காதலா காதலா படம் பார்க்க வெச்சுட்டீங்க!! இன்னிக்கு நைட் பார்த்துட வேண்டியதுதான். ஆனந்த விகடானந்தா, ஜூனியர் விகடானாந்தா!! :))

said...

//அண்ணாச்சி வந்து அருமையாச் சொல்லிட்டு போயிட்டாரு.. எங்க நகைச்சுவை உணர்ச்சியக் காமிக்கத்தான் அப்படி ஒரு கடிதம் போட்டிருக்காங்க//

இதுதான் குப்பற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டல்லன்றதோ :)

said...

//இன்னும் அமீர பார்ட்டிகள் எல்லாம் வரலையா?//

வந்து என்னமோ சொல்லி இருக்காங்க பாரு.

//சரி, கச்சேரி களை கட்டியதும் சொல்லி அனுப்புங்க வரேன். :))//

களை கட்டியாச்சு. வாப்பா.

இதைச் சொல்லும் போது ஒரு கதைதான் ஞாபகத்துக்கு வருது. ஒரு கணவன் மனைவி. அவர்களிடையே ஊடல் (அதான் தெரியுமேன்னு எல்லாம் சொல்லக்கூடாது!! ) பேச்சு வார்த்தை இல்லை.

அடுத்த நாள் காலையில் வெளியூர் செல்ல வேண்டும். அதனால் காலையில் எழுப்ப சொல்ல வேண்டும் என நினைத்து கணவன் மனைவிக்கு காலை 5 மணிக்கு எழுப்பவும் என ஒரு சின்ன கடுதாசி எழுதி தலையணை மேல் வைத்து விட்டுத் தூங்கிவிட்டான்.

அடுத்த நாள் காலை அவன் எழுந்த பொழுது மணி பத்து. அவன் தலையணை மேல் ஒரு சின்ன கடுதாசி. மணி 5 ஆகிவிட்டது. எழுந்திருக்கவும்.

இங்க களை கட்டிவிட்டது வாருங்கள் என இங்கேயே பின்னூட்டம் போட்ட உடனே எனக்கு இந்த ஞாபகம்தான் வந்தது. :))

said...

//அப்போ வாசாப்புன்னா கொழுப்புன்னு சொல்ல வர்றீங்க. தெளிவான விளக்கம். தீர்ந்தது சந்தேகம். பாண்டிய மன்னனின் ஆயிரம் பொற்காசுகளும் எனக்கே!!!//

எனக்குப் பிடிக்கும் எனச் சொன்னேனே தவிர என்னைப் பிடிக்கும் எனச் சொல்லவில்லை. அதனால நீங்க சொன்னது டிஸ்குவாலிபைட்!

said...

//அருமையான விளக்கம். நன்றி.//

என்ன ரவி கொஞ்ச நாளா இந்தப் பக்கமே காணும். நன்றி!!

said...

//நிறைய பொருளாதார abstract termsகளுக்கு புரியும்படியாக விளக்கங்களோட ஒரு பதிவப் போட்டு எனக்குக் கூட புரியுற மாதிரி மண்டைக்குள்ள ஏத்திட்டீங்க சரக்கை ;-).//

தெக்கி, ரொம்ப நாள் கழிச்சு நம்ம பதிவுக்கு வருகை போல. அதெல்லாம் அப்ஸ்ட்ராக்ட் வார்த்தைகள் எல்லாம் இல்லைங்க. ஆனாலும் புரியுதுன்னு சொன்னதுக்கு நன்னி!

//அது சரி, எனக்கும் பலத்த நஷ்டம் சமீப காலமா டாலரை ரூபாயா மாற்றும் பொழுது ஒரு அஞ்சு ரூவா கூடப் போட்டு வாங்கித் தர முடியுமா :))??.//

யோவ் எதோ தெரிஞ்சதைச் சொன்னா ஹவாலா ப்ரோக்கர் ஆக்கிடுவீங்க போல!!

said...

//என்ன நடக்குதிங்கே?....வாசாப்பு, ஈசாப்புன்னு ....இருங்க பதிவை படிச்சுட்டு வர்ரேன்...//

வாங்க தல. ஒரு விதத்தில் ஈசாப்பும் கூட வாசாப்புதான். பெரியவங்க என்ன சொன்னாலும் அது சரியாவே இருக்கு!!

said...

//ஆப்ஷன்ஸ், ப்யூச்சர்ஸ் ஏதோ புரிஞ்சமாதிரி இருக்கு..ஆமாம், டிபென்ஞ்சர் அப்படின்னா என்னங்கண்ணா?//

டிபெஞ்சர்ன்ன ஒரு வகை கடன் பத்திரம். அம்புட்டுதாங்கண்ணா. இன்னும் ஒரு சமயத்தில் விரிவாச் சொல்லறேன்.

said...

//அதானே!, யாரெல்லாம் வரீங்கப்பா?, மொத்தமா சேத்து ஒரே கேஸா போடலாம்.//

ரொம்பத் தெளிவா இருக்கீங்க!!

said...

//அப்படியே கமாடிட்டி செல்லிங் பத்திச் சொல்லி, அதனால எப்படி விலைவாசி ஏறுதுன்னு சொல்லி முடிக்கறது :)//

அது சரி. விட்டா பொருளாதார வகுப்பே நடத்தணும் போல! ஆனா அம்புட்டு அறிவு எல்லாம் கிடையாது.

said...

//வாசாப்புன்னா அதிகார பிச்சை, சரியா?//

இதை எங்க இருந்து பிடிச்சீரு.

said...

//வாசாப்பு = நக்கல்/நையாண்டி?//

கிட்டத்தட்ட!! பொதுவான கமெடிக்குன்னு சொல்லிடலாமா!

said...

//உருளைக்கிழங்கை காணோம். வாயுனு விட்டுட்டீங்களா? ;)//

வெட்டி,

குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும்.....


இருந்தாலும் சொன்னதுக்கு நன்னி. சரி பண்ணிட்டேன். வாயுவே என்னவோ நமக்கு வேணுமுன்னா உருளைக்கிழங்கை சேர்த்துக்க மாட்டோம்!!

said...

//நல்லா புரியற மாதிரி சொல்லியிருக்கீங்க... சூப்பர் :-)//

என்ன உருளைக்கிழங்கு வாயுன்னா!!! :))

நன்னி தல!

said...

//புதரகம் - அமெரிக்கா ; பெயர்க்காரணம் என்ன?//

முரளி, நீங்க புதுசு இல்ல, அதான் இப்படி. நிறையா பேரு சொல்லுவாங்க பாருங்க. ஆனா இது இன்னும் கொஞ்ச நாள்தான்!

said...

////உருளைக்கிழங்கை காணோம். வாயுனு விட்டுட்டீங்களா? ;)//

இது, இது சூப்பர் பாலாஜி.... :)//

மதுரையம்பதி, இப்படியா சொல்லணும்? இம்புட்டு நாளா வலைப்பதிவில் இருக்கீங்க இது கூட தெரியலை. எப்படிச் சொல்லணுமுன்னு சரியாச் சொல்லுங்க பார்க்கலாம்.

said...

//யோவ் இலவசம்

நீரு ஒரு வெளங்காவெட்டிங்குறதை இப்படி பதிவு போட்டு நிரூபிக்கணுமா?

இந்த பாலைவனத்துல வாழ்ந்தாலும் எங்களோட நகைச்சுவை உணர்வு கொஞ்சமும் குறையலைங்குறதை உலகத்துக்கு எடுத்துச் சொல்லத்தான் அப்படி ஒரு அறிக்கை.

இதெல்லாம் தெரியாம...நீரு ஒரு பதிவு அதுக்கு நாலு பேரு நாட்டாமை

இதுல வாசாப்பு வேற. போய் வேலையப் பாருய்யா

சாத்தான்குளத்தான்//

வாங்க அண்ணாச்சி. நீங்க என்ன சொல்லுவீங்க. எல்லாம் உங்க பாவனா தேச நண்பர்கள் செய்யறது.

இருக்கிறது பாலைவனம். நீங்களே சொல்லிட்டீங்க. முகத்தில் பெரிய மீசை. ப்ரோபைல் படத்தில் நானே பார்த்துட்டேன். அப்புறம் ஒட்டாமப் போகுமா? சும்மா துடைச்சுக்கிட்டுப் போய்கிட்டே இருக்க வேண்டியதுதான். நாம இதுக்கெல்லாமா அசரர ஆளுங்க?

என்ன சொல்லுதீய? :)

said...

//இதுவே ரூபாயின் மதிப்புக் குறைந்து டாலருக்கு 60 ரூபாய் ஆனால் இவர்கள் என்ன ஒரு பத்து ரூபாயை வேண்டாம் என்று அரசாங்கத்திற்கா தரப் போகிறார்கள்//

ஓ....கொத்ஸ் நீங்க இத்தாலி அம்மையார் கட்சியா? அதிலும் ப.சிதம்பரம் கோஷ்டியா? புரியுதுப்பா புரியுது! :-)

//அமீர் ஆண்டால் அமீரகம். புதர் (Bush) ஆண்டால் புதரகம் தானே?! //

@குமரன்...எப்படிங்க இப்பிடி எல்லாம் புதர் புதரா...சாரி புதுசு புதுசா சிந்திக்கிறீங்க? சரி அப்ப கிளண்டன் ஆண்ட போது என்ன பேரு இருந்திச்சி-ன்னும் சொல்லிருங்க! கற்பனைக் குதிரையைத் தட்டி வுடுங்க பார்ப்போம்! :-)

said...

குமரன், ஒரே பின்னூட்டத்தில் ரெண்டு வழியை மொழியறீங்க!! :))

//அமீர் ஆண்டால் அமீரகம். புதர் (Bush) ஆண்டால் புதரகம் தானே?! அடுத்த வருடம் இது புதரகமாக இருக்காது. புதிய பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.//

Khan ஆளும் இடம் கானகமா? :))) புதரகத்தின் அடுத்த பெயருக்கு போட்டி வைக்கலாமா?

said...

//நல்லா புரியுற மாதிரி சொன்ன தலைவா//

நன்றி ஜெய்சங்கர்.

said...

// - From http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex///

குமரன், நான் பயன்படுத்தும் அகரமுதலியின் சுட்டி குடுத்து இருக்கேன் பார்த்தீங்களா? அதே இடத்தில் வேறொரு அகரமுதலி!! :))

said...

//இதைப்போய் பெரிய மேட்டரா எடுத்துகிட்டு பதிவு, இதுல நான் என்னவோ அமீரக இந்தியர் பிரதிநிதி மாதிரி "பெனாத்தலார் வாயைத் திறக்கறாரான்னு பாருங்க!"ன்னு பின்னூட்டம்,//

அண்ணாச்சிக்கு சொன்ன பதில்தான் உங்களுக்குன்னு சொல்லிடலாம். ஏன்னா இப்போ உமக்கு மீசை இருக்கே!

said...

//சிரிக்கத்தான் வேணும்!
ஜவாப் > சவாப் > வசாப் >வாசாப்பு ????? கரீட்டா?//

திவா, என்னாத்த சொல்ல. தமிழ்மணத்தில் ரொம்ப நேரம் இருக்கீங்க போல!! வேணாமய்யா இது உடல்நலத்துக்கு நல்லதில்லை. தமிழ்மணமேட்டிஸ் அட்டாக் வந்திரும்.

said...

///கட்டுமானவியலா இருந்தா இறப்பராம்//
எவர் இறப்பர்?//

நம்ம வடுவூராரைக் கேளுங்க. தகுந்த பாதுக்காப்பு வழிமுறைகளை பின்பற்றாதவங்கதான் இறப்பர்ன்னு சொல்லுவாரு.

said...

//ஹி.... ஹி... ரிப்பீட்டே :)))//

யப்பா சென்ஷி, நீயும் ஒரு மீசை வெச்ச ஆம்பிளையா?

said...

//இவ்வித பேரங்களில் இவ்வுரிமையை வாங்குபவர், அந்த உரிமையை விற்பவருக்கு ஒரு தொகை தந்தாக வேண்டும்//

இதற்கு premium என்று பெயர்.
-----------------------------
Future=அந்த தேதியில் அரிசி என்ன விலைக்கு விற்றாலும் நான் அண்ணாச்சியிடம் 40 ரூபாய்க்கு ஒரு கிலோ என வாங்கியே ஆக வேண்டும்!

இது சரி தான் கொத்ஸ்!

Option=அன்று அரிசியின் விலை நிலவரத்தில் கணக்கில் கொண்டு நான் 40 ரூபாய்க்கு வாங்கவோ அல்லது வாங்காமல் இருக்கவோ எனக்கு உரிமை உண்டு.

இதில் நீங்க சொன்னது ஓரளவே சரி!

வாங்கும் உரிமையைச் (call option) சொன்ன நீங்கள்,
விற்கும் உரிமையைச் (put otion) சொல்லாம விட்டுட்டீங்க.

இதுலயே call option/put option-ன்னு ரெண்டு இருக்கு! நீங்க சொன்னது call option-kku மட்டுமே!
-----------------------------

முப்பது ரூபாய் அரிசியை ரெண்டு மாசம் கழிச்சி "வேண்டுமானால்" 40 ரூபாய்க்கு வாங்கிக்கறேன்-ன்னு ஒப்பந்தம்.
call option=அன்னிக்கி 50 ரூபாய்க்கு விற்றால், 40 ரூபாய் கொடுத்து அரிசி
வாங்கிக் கொள்ளலாம்! வாங்கியவனுக்கு 10 ரூபாய் லாபம். அண்ணாச்சிக்கு 5 ரூபாய் லாபம் (Premium 5 ரூபாய்)

இதே அரிசி அன்னிக்கு 30 ரூபாய்க்கு விற்றால் எதுக்கு அண்ணாச்சியிடம் 40ரூபாய்க்கு வாங்க வேண்டும்? வெளியில் வேற எங்காச்சும் வாங்கிக்கலாமே! அப்போ வாங்கியவனுக்கு லாபம் ஏதுமில்லை!
அண்ணாச்சிக்கு 5 ரூபாய் லாபம் (Premium 5 ரூபாய்)

இந்த call option விலை ஏறும் என்பதற்கான பொருட்கள் மீது செய்யப்படுவது.
-----------------------------

put option=இந்த put option விலை இறங்கும் என்பதற்கான பொருட்கள் மீது செய்யப்படுவது.

முப்பது ரூபாய் அரிசியை ரெண்டு மாசம் கழிச்சி "வேண்டுமானால்" 20 ரூபாய்க்கு "அண்ணாச்சிக்கே விற்கிறேன்"-ன்னு ஒப்பந்தம் போட்டுக்கறது. (உங்களுக்குச் சும்மா ஊர்ல நிலம் இருக்குது-ன்னு வச்சிக்குங்க). (அண்ணாச்சிக்கு Premium 5 ரூபாய் கொடுத்துறணும்)

இதே அரிசி ரெண்டு மாசம் கழிச்சி 10 ரூபாய்க்கு விற்றால், வெளியில் இருந்து 10 ரூபாய்க்கு வாங்கி, 20 ரூபாய்க்கு அண்ணாச்சியிடம் விற்று விடலாம்! அண்ணாச்சி வாங்கியே தீர வேண்டும்!அண்ணாச்சிக்கு 5 ரூபாய் லாபம்! நமக்குப் பத்து ரூபாய் லாபம்! - இது தான் put option!

புரிஞ்சிருக்கும்-னு நினைக்கிறேன்!
புரிபவர் புரியலும், பொங்கிப் பொரிபவர் பொரியலும் போகட்டும் கொத்தனாருக்கே :-)))

said...

//இதுக்கு ஒரு 'மறுக்காசொல்லேய்' போட்டுகிடறேன்.

அப்படியே இங்ங்ன ஒரு 50 அடிச்சிகிறுவோம் :-))//

இதெல்லாம் சொல்லி 50ஆவது பின்னூட்டம் போட்ட நம்ம ஸ்ரீதர் அண்ணாச்சிக்கு என் வாழ்த்துகள்!! :))

said...

//இப்பவே அடுத்த வருஷத்துக்கு ஒரு பெயர் ரெடி பண்ணுங்களேன் . அதில நீங்க எந்த கட்சின்னும் தெரியட்டுமே..//

50ஆவது பின்னூட்டத்தை ஜஸ்டில் கோட்டை விட்டு மொய் பின்னூட்டம் போட்ட தருமிக்கு நம் நன்றிகள்.

நீங்கள் கேட்ட முக்கியமான கேள்வி எங்கள் கட்சித் தலைமையினால் ஏற்கனவே விவாதிக்கப்பட்டு இதனை ஆராய்ந்து முடிவு தர இரு நபர் கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டு வெகு சிரத்தையாக செயல்பட்டு வருகிறது. கட்சியின் மூத்த தலைவர்கள் இருவர் இணைந்து செயல்பட்டு வரும் இந்த கமிஷன் தனது அறிக்கையை விரைவில் தலைமையிடம் சமர்பிக்கும் எனத் தெரிகிறது.

அதிகாரபூர்வ அறிக்கை இன்னும் வெளி வராத இந்த நேரத்திலே நம் வாசகர்களுக்காக ஒரு முன்னோட்டம்.

தெரிவு செய்யப்பட்டிருக்கும் பெயர்கள்

சாணகம் (ஜான் என்பதின் தமிழ்ப்படுத்தல்தாங்க)

மலையகம் (ஹில் எனச் செல்லமாக அழைக்கப்படும் ஹிலாரி வென்றால்)

பராகபுரம் (பராக்ககம் மற்றும் பராகபுரி எனற பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிகிறது.)

said...

//Kalukuringa kothanarae..arumaiyaana poochu!! thodarnthu ezhuthavum.. it would be useful if you can educate people on how to trade in F&O.//

விவேக் எப்போ ஈகலப்பை தரவிறக்கி, ஐயய்யோ தப்பா சொல்லிட்டேனோ? தமிழ் 99 தரவிறக்கி தமிழில் தட்டச்சப் போறீங்க? :))

எனக்குத் தெரிஞ்சதை சொல்லறேன். ஆனா இதில் பணம் சம்பாதிப்பது எப்படின்னு எல்லாம் தெரிஞ்சா நான் ஏங்க பதிவு எழுதிக்கிட்டு இருக்கப் போறேன்! :P

said...

//என்னோட பின்னூட்டம் ஏதாவது வந்துதா?......ஏதோ எர்ரர் மெசெஜ் வந்துது அதான் கேட்டேன்??//

போட்டாதானே வரும்!! :)))

ராதாக்கா, இதுவரை ஒண்ணும் வரலை இந்த பின்னூட்டத்தைத் தவிர. திரும்பப் போடுங்க ப்ளீஸ்.

said...

//இதுதான் குப்பற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டல்லன்றதோ :)//

நான் சொல்ல நினைத்ததையே சொல்லிட்டீங்க!! சூப்பரப்பு. :))

said...

//ஓ....கொத்ஸ் நீங்க இத்தாலி அம்மையார் கட்சியா? அதிலும் ப.சிதம்பரம் கோஷ்டியா? புரியுதுப்பா புரியுது! :-)///

ஆஆ!! கண்ணைக் கட்டுதே!! எப்படி எல்லாம் வளைஞ்சு நெளிஞ்சு வராங்கப்பா!! :))

//@குமரன்...எப்படிங்க இப்பிடி எல்லாம் புதர் புதரா...சாரி புதுசு புதுசா சிந்திக்கிறீங்க? சரி அப்ப கிளண்டன் ஆண்ட போது என்ன பேரு இருந்திச்சி-ன்னும் சொல்லிருங்க! கற்பனைக் குதிரையைத் தட்டி வுடுங்க பார்ப்போம்! :-)//

ரவி, இதெல்லாம் இன்னைக்கு நேத்தி வந்ததில்லை. காலம் காலம வருது. உதாரணத்திற்கு நீங்கள் கேட்ட கேள்விக்கு கற்பனைக் குதிரையை எல்லாம் தட்டி விடவே வேண்டாம். இந்தப் பதிவுக்குப் போய் பாருங்க. எங்க தல இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்லி இருக்காருன்னு தெரியும்.

said...

அமீரக மக்கள் தந்த ஐடியாவுக்கு நன்றி.

இங்க புஷ் எனக்கு ஸ்டிமுலஸ் கிடையாதுண்ணு சொல்லிட்டாரு. (மனைவிக்கு SSN இல்லைண்ணு.)

இப்பவே TO: மன்மோகன் சிங் CC: புஷ் BCC: பின் லேடன் போட்டு ஒரு மடல் அனுப்பிடுறேன்.

said...

//தெரிவு செய்யப்பட்டிருக்கும் பெயர்கள்

சாணகம் (ஜான் என்பதின் தமிழ்ப்படுத்தல்தாங்க)

மலையகம் (ஹில் எனச் செல்லமாக அழைக்கப்படும் ஹிலாரி வென்றால்)

பராகபுரம் (பராக்ககம் மற்றும் பராகபுரி எனற பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிகிறது.)//

முதல் பார்வைக்கு இந்தப் பெயர்கள் சரியாகத் தோன்றினாலும் பொருட்குற்றம் (அதுவும் பெரிய பொருட்குற்றம் இருக்கிறது). அமெரிக்காவின் தற்போதைய பெயர் புதரகம் தான்; சார்சகம் இல்லை என்பதை நினைவூட்டுகிறேன். உங்கள் பரிந்துரைகளில் என்ன குற்றம் என்று புரிகிறதா?

said...

புஷ்= புதர்

புதரகம் காரணப்பெயர் கரீட்டுதான்.

க்ளிண்டன் ஆட்சியில் பெயர் வைக்கத்தோணலை. ஏன்னா அப்ப யாரும் தமிழ்மணத்துலே இல்லையே..

அப்பத் தமிழ்மணமே இல்லையேப்பா..........

வச்சிருந்தா.... மோனகமுன்னு வச்சுருப்போம்:-)))

said...

ரவி,

விரிவான விளக்கங்களுக்கு நன்றி. எனக்கே புரியற மாதிரி எழுதி இருக்கீங்க. அதனால மத்தவங்களுக்குப் புரியறதுல பிரச்சனை இருக்காது.

நான் முதல் பின்னூட்டத்தில் சொன்ன மாதிரி இது ஒரு அறிமுகம்தான். இன்னும் American, European, Bermudan Options, Mark to Market என்றெல்லாம் போய்க் கொண்டே இருக்கலாம்.

அதற்கு ஒரு வேளை வாய்க்கட்டும் நீங்கள் எழுதாமலேயா போய்விடுவீர்கள்!! :))

said...

//***வச்சிருந்தா***.... மோனகமுன்னு வச்சுருப்போம்:-)))//

டீச்சர், உங்களுக்குக் கிளிண்டனைப் பற்றிய ஐயம் இன்னும் தீரவில்லையா ?
:-)

said...

//அமீரக மக்கள் தந்த ஐடியாவுக்கு நன்றி.

இங்க புஷ் எனக்கு ஸ்டிமுலஸ் கிடையாதுண்ணு சொல்லிட்டாரு. (மனைவிக்கு SSN இல்லைண்ணு.)

இப்பவே TO: மன்மோகன் சிங் CC: புஷ் BCC: பின் லேடன் போட்டு ஒரு மடல் அனுப்பிடுறேன்.//

அதைச் செய்யுங்க!! நல்ல வேளை நம்ம அம்மிணிக்கு அந்த நம்பரெல்லாம் வாங்கி வெச்சது இப்போ உபயோகப்படுது!!

said...

//முதல் பார்வைக்கு இந்தப் பெயர்கள் சரியாகத் தோன்றினாலும் பொருட்குற்றம் (அதுவும் பெரிய பொருட்குற்றம் இருக்கிறது). அமெரிக்காவின் தற்போதைய பெயர் புதரகம் தான்; சார்சகம் இல்லை என்பதை நினைவூட்டுகிறேன். உங்கள் பரிந்துரைகளில் என்ன குற்றம் என்று புரிகிறதா?//

நீங்கள் குற்றம் என எதைச் சொல்ல வருகிறீர்கள் என்பது நன்றாகவே புரிந்தாலும், தவறு என்னிடமில்லை தங்கள் புரிதலில்தான் இருக்கிறது என்பதைத் தாழ்மையுடம் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்கள் தானைத் தலைவர் முகமூடி அவர்கள் இட்ட பாதையிலே செல்ல எங்களுக்கு எவருடைய ஒப்புதலும் தேவை இல்லை என்பதை இந்த கணத்திலே தெரிவிக்க ஆசைப்படுகிறேன். இன்னும் சொல்லப் போனால் நீங்கள் சரி எனக் கருதும் புதரகம் என்ற சொல்லில்தான் பிழை இருக்கிறது. ஆனால் அதனை எங்கள் தலைவர் பெருந்தன்மையுடம் மதித்து ஏற்றுக் கொண்டதால் அதனை உலக மக்கள் பயன்படுத்த இசைந்தோம் என நாங்கள் வெளிக்காட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டது.

இதற்கு முந்தைய ஆட்சியைப் பற்றி சொல்லுகையில் பில் கிளிண்டன் அதிபராக இருப்பதால் அன்று ரசீதகம் என அறியப்பட்டிருக்க வேண்டும் என்ற வரலாற்று உண்மையை எங்கள் தலைவர் வெளிக் கொணர்ந்த படியே நாங்கள் இன்று சாணகம், மலையகம், பராகபுரம்/புரி என்ற பெயர்கள் பரிந்துரைக்கப் பட இருப்பதாக செய்திகள் வந்திருப்பதைச் சொல்கிறேன்.

இக்குழுவில் நானும் இருப்பதாக நினைத்து "உங்கள் பரிந்துரைகளில்" என நீங்கள் குறிப்பிட்டு இருப்பதைப் பற்றி நான் பொதுவில் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

தொடர்ந்த வருகைக்கும் ஆதரவுக்கும் நான் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்!

said...

//புதரகம் காரணப்பெயர் கரீட்டுதான்.//

ரீச்சர், நன்றி. உங்கள் பெருந்தன்மைக்கு முன் தலைவணங்குகிறேன்.

//வச்சிருந்தா.... மோனகமுன்னு வச்சுருப்போம்:-)))//

ரீச்சர், பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் மறக்கப்படக் கூடாதென்ற உங்கள் நல்லெண்ணம் புரிந்தாலும், தலைவர் தன் எண்ணத்தைச் சொல்லிவிட்ட பின் அதனை மீறி வேறு கருத்து சொல்வது என்பது தகாத காரியம் என்பதால் அது ஏற்றுக் கொள்ளப் படாததாகவே இருக்கிறது. தலைவர் பரிந்துரைத்த ரசீதகம் இருக்க இந்த மோன நிலை எதற்கு?!

said...

வாங்க பாலா,

என்ன ரொம்ப நாளா ஆளையே காணும்? பதிவு, மற்ற பின்னூட்டங்கள் எதையும் படிக்காம நேரா கடைசி பின்னூட்டத்தை மட்டும் படிச்சுட்டு கமெண்டா?

நடாத்துங்க!!

said...

பாகீ.

நலமா?

'சரியாக் கண்டுபிடிச்சதுக்கு' ஒரு தேங்க்ஸ்:-)))

said...

ரீச்சர், மோன நிலை பத்திப் பேசின என்னை ஒண்ணும் சொல்லாம கடைசியா வந்த பாகீக்கு உங்கள் பாராட்டுக்களா?

நான் பழனிக்குப் போறேன்.

(எவண்டா அவன், பேண்டை உருவறது? நான் சாமி கும்புட்டு ரீச்சருக்கு என் மேல பாசம் வர வைக்க ஏற்பாடு பண்ணப் போறேன். நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லை. பேண்டை விடுங்கடா!!)

said...

இ.கொ.,

இது என்ன ஓரவஞ்சனை? 'அமீரகம்' மாதிரி ஒரு நிரந்தரப் பெயர் இல்லாம எதுக்கு இந்த அல்லாடல்? ஒவ்வொரு 4 வருசத்துக்கும் (அதிகபட்சம் 8 வருசம்) பெயர் மாத்திட்டே இருந்தா எப்படி வரலாறை பதியப் போறீங்க?

போதும் போதாததுக்கு டீச்சர் வேற 'வச்சிருந்த' வைக்காத பெயர் எல்லாம் வைக்கிறாங்க :-)

இதற்கு நிரந்தர தீர்வு என்ன?

said...

//இது என்ன ஓரவஞ்சனை? 'அமீரகம்' மாதிரி ஒரு நிரந்தரப் பெயர் இல்லாம எதுக்கு இந்த அல்லாடல்? //

அதானே...

said...

// விதத்தில் ஈசாப்பும் கூட வாசாப்புதான். பெரியவங்க என்ன சொன்னாலும் அது சரியாவே இருக்கு!!//

யோவ்!, யாருய்யா பெரியவங்க....வேணாம் அழுதுடுவேன்.

said...

சரி, 100ஆவது இதுலயாவது நான் போட்டிருக்கேனா?...பார்த்துச் சொல்லும்.

said...

சரி, 100ஆவது இதுலயாவது நான் போட்டிருக்கேனா?...பார்த்துச் சொல்லும்.

said...

//இம்புட்டு நாளா வலைப்பதிவில் இருக்கீங்க இது கூட தெரியலை. எப்படிச் சொல்லணுமுன்னு சரியாச் சொல்லுங்க பார்க்கலாம்//

புதசெவி

said...

//சாணகம் (ஜான் என்பதின் தமிழ்ப்படுத்தல்தாங்க)

மலையகம் (ஹில் எனச் செல்லமாக அழைக்கப்படும் ஹிலாரி வென்றால்)

பராகபுரம் (பராக்ககம் மற்றும் பராகபுரி எனற பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிகிறது//

இதெல்லாம் தமிழ் படுத்தலா, இல்லை தமிழைப்படுத்தலா?...அளவேயில்லயா...:)

said...

சூப்பரு!!! இ.கொ ஞாயஸ்தன் தான்....போன பதிவுல தானே போட்டு தாக்கி 100யும் அடிச்சாலும், இந்த பதிவுல விட்டுக் கொடுத்துட்டாரே!!! :)

said...

ஸ்ரீதர், பேசாம ஒரு வேலை செய்யலாமா? இந்த புஷ், கிளிண்டன் குடும்பத்தாருக்கு காந்தி அப்படின்னு பேர் வெச்சுடலாம். அப்போ வழி வழியா காந்திகளே இந்த நாட்டுக்கு தலையா இருப்பாங்க. நம்ம ஊர் மாதிரி. அப்புறம் என்ன பெயர் மாற்றம் எல்லாம் தேவையே இல்லை பாருங்க!! :))

பெரோஸ் கான் காந்தி ஆனா புஷ் ஆகக்கூடாதா என்ன?

said...

//அதானே...//

இப்படியா சொல்லுவாங்க? இதை எப்படிச் சொல்லணும்? சரியா சொல்லுங்க.

said...

அப்படிப்போடு அருவாளை:-))))



ஐயோ...டீச்சரையே பி.க. பண்ண வச்சுட்டீங்களே(-:

said...

//யோவ்!, யாருய்யா பெரியவங்க....வேணாம் அழுதுடுவேன்.//

அவ்வ்வ்வ்வ்வ்!! போடாததுனால இந்த பின்னூட்டம் டிஸ்குவாலிபைட்!!

said...

//சரி, 100ஆவது இதுலயாவது நான் போட்டிருக்கேனா?...பார்த்துச் சொல்லும்.//

நீர்தான்யா போட்டு இருக்கீரு. நீர்தான் போட்டு இருக்கீரு!! :))

said...

//புதசெவி//

சரியான விடை. ஆனா இந்தப் பதிவில் புதசெவியின் அடுத்த பரிமாணத்தைப் பார்த்தீரா? :))

said...

//இதெல்லாம் தமிழ் படுத்தலா, இல்லை தமிழைப்படுத்தலா?...அளவேயில்லயா...:)//

இதன் பின் இருக்கும் நுண்ணரசியல் பற்றி தனிப்பதிவே போட வேண்டும் போல இருக்கிறதே.. இருந்தாலும் தனித்தமிழ் மேல உங்களுக்கு இவ்வளவு வெறுப்பு இருக்கக்கூடாதுங்க. ஆனா ஒண்ணு உங்களைச் சொல்லி குத்தமில்லை! :))

said...

//சூப்பரு!!! இ.கொ ஞாயஸ்தன் தான்....போன பதிவுல தானே போட்டு தாக்கி 100யும் அடிச்சாலும், இந்த பதிவுல விட்டுக் கொடுத்துட்டாரே!!! :)//

மீண்டும் மீண்டும் அபாண்டமாக் குற்றம் சாட்டும் மதுரையம்பதியே. போன பதிவில் இது போன்ற குற்றச்சாட்டை நீர் வீசிய பொழுது நான் உரைத்த பதிலை இங்கு மீண்டும் தருகிறேன்.

---------------------------
மதுரையம்பதி, என்னதான் நீங்க இந்த பதிவின் ஆட்ட நாயகனா இருந்தாலும் இப்படி எல்லாம் வாய்க்கு வந்த படி பேசக்கூடாது.

எவ்வளவுதான் பின்னூட்ட விளையாட்டு விளையாடினாலும் அதுக்காக இருக்கும் விதிகளை (அது நாமே போட்ட ரூலா இருந்தால் கூட) மீறுவதே கிடையாது.

உதாரணத்திற்கு மைல்கல் பின்னூட்டங்களை பதிவின் ஆசிரியர் போட்டுக் கொள்ளக் கூடாதென்பது. இந்தப் பதிவையே எடுத்துக் கொண்டால் 50ஆவது பின்னூட்டமாகட்டும், 100ஆவது பின்னூட்டமாகட்டும். போட்டது பதிவின் நாயகன் பெனாத்தல்.

அது போகட்டும் சார் 120ஆவது பின்னூட்டம். எப்பேர் பட்ட மைல்கல்? அதைப் போட்டது யாரு? நானா? இல்லையே. சாட்சாத் நீங்கள்தானே?

உண்மை இப்படி இருக்க, அபாண்டமாக நானே 100ஆவது பின்னூட்டம் போட்டுக் கொண்டதாக புழுதியை வாரி இறைப்பது எந்த விதத்தில் நியாயம்?

நீங்கள் உடனேயே இந்த குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற்றுக் கொண்டு பொதுவில் மன்னிப்பு தெரிவிக்க வேண்டும். இல்லையேல் 100 கோடி ரூபாய்க்கு மான நஷ்ட வழக்கு போடுவேன்.
--------------------------

said...

சரி சரி இந்த பதிவு கொஞ்சம் விஷயத்தோடத்தான் இருக்கு.!!

(நெம்ப லேட்டுன்னு தெரியும்.:):))


ஆனா ஒண்ணு மட்டும் இங்க சொல்லிடறேன்
நம்ம ராம்ஸ் வந்து இந்த பதிவுக்கு போட்டியா." ரஷ்ய இந்தியர்கள்,சேப்பங்கிழங்கு,வேர் கடலை,தவிட்டு எண்ணை மற்றும் காஸ்கெட்" அப்படின்னு ஒண்ண எழுதினார்னா ரொம்ப டென்ஷன் ஆயிடுவேன்.!!

said...

//அப்படிப்போடு அருவாளை:-))))//

ரீச்சர், எத்தனையோ மேட்டர் பேசி இருக்கோம். எந்த மேட்டருக்குன்னு அருவாளைத் தூக்கச் சொல்லறீங்க?!!

//ஐயோ...டீச்சரையே பி.க. பண்ண வச்சுட்டீங்களே(-://

ரீச்சர், நீங்க இன்னிக்கு ரீச்சரா இருந்தாலும் என்னிக்குமே நீங்க பின்னூட்ட நாயகி. அதை மறந்துடக்கூடாது! :))

said...

//சரி சரி இந்த பதிவு கொஞ்சம் விஷயத்தோடத்தான் இருக்கு.!!//

அப்படியா? அப்பக்கூட கொஞ்சம்தானா?

//(நெம்ப லேட்டுன்னு தெரியும்.:):))//

ரெம்பிளேற் பின்னூட்டப் பதில் - லேட்டா வந்தாலும் ........

//ஆனா ஒண்ணு மட்டும் இங்க சொல்லிடறேன்
நம்ம ராம்ஸ் வந்து இந்த பதிவுக்கு போட்டியா." ரஷ்ய இந்தியர்கள்,சேப்பங்கிழங்கு,வேர் கடலை,தவிட்டு எண்ணை மற்றும் காஸ்கெட்" அப்படின்னு ஒண்ண எழுதினார்னா ரொம்ப டென்ஷன் ஆயிடுவேன்.!!//

சத்தியமா செய்ய மாட்டாரு. புதரகத்தில் இருக்கும் நான் அமீரக இந்தியர்கள் பற்றி எழுதி இருக்கும் பொழுது ருசியாவில் இருக்கும் அவர் அங்குள்ள இந்தியர்கள் பற்றி எழுதுவாரா? அந்த அளவு லாஜிக் இல்லாத ஆளா?

கென்யா இந்தியர்கள், சேப்பங்கிழங்கு,வேர் கடலை,தவிட்டு எண்ணை மற்றும் காஸ்கெட் என்று வேண்டுமானால் போடலாம். ஆனா அப்போ லாஜிக் உதைக்காததினால் நீங்க ரென்சனாக மாட்டீங்க இல்ல?

(யோவ் டாக்குடரு, அடுத்த பதிவுக்கு மேட்டர் இருக்கோ இல்லையோ, தலைப்பு கிடைச்சாச்சய்யா!!) :))

said...

//இதன் பின் இருக்கும் நுண்ணரசியல் பற்றி தனிப்பதிவே போட வேண்டும் போல இருக்கிறதே.. //

ஆமாம் , இலவசத்தை ரெகுலரா படிக்க ஆரம்பிச்சுட்டேன்ல...அதான், தானா வருது நூண்ணரசியல் பின்னூட்டங்கள்......ஸர்வம் இ.கொ.அர்பணம்... :))

said...

// இந்தப் பதிவில் புதசெவியின் அடுத்த பரிமாணத்தைப் பார்த்தீரா? :))//

புதசெவி = புன்னகை தரும் செய்தியும் விளக்கமும், இதத்தானே சொல்றீங்க?..:))

said...

//மலையகம் (ஹில் எனச் செல்லமாக அழைக்கப்படும் ஹிலாரி வென்றால்)//

ஹில் என்றால் குன்று!
அப்படின்னா குன்றகம்-னு தான் செல்லமாச் சொல்லனும்!

நாட்டாமை - தீர்ப்பை மாத்தி எழுது!
இல்லீன்னா சொல் ஒரு சொல் வலைப்பூவில் வழக்குரைத்து தரவு தரப்படும்-னு தாழ்மையுடன் தெரிவிச்சிக்கிறேன்! :-)

//இதெல்லாம் தமிழ் படுத்தலா, இல்லை தமிழைப்படுத்தலா?...அளவேயில்லயா...:)
//

சரியாச் சொன்னீங்க மதுரையம்பதி அண்ணா! :-)

said...

சரி வாசாப்பு புரிஞ்சது. பொருளாதாரமும் புரிஞ்சது. என்ன எந்தப் பக்கமும் பேச முடியலை. பசங்க அல்லாக் கண்டத்திலயும் இருக்கறதனால மேட்டரை விட்டு நழுவிக்கிறேன்.

ஆனாலும் அவங்க அதாங்க அரபிக்கடலுக்கு அப்பால இருக்கறவங்க செய்யறது வாசாப்புதான்.:)

said...

//உதாரணத்திற்கு ஒரு டாலருக்கு 50 ரூபாய்கள் கிடைத்தது போய் இன்று 40 ரூபாய்கள்தான் கிடைக்கிறதாம். இந்த பத்து ரூபாய் நட்டத்தை அரசாங்கம் ஈடு கட்ட வேண்டுமாம். //

:))))))

said...

முடியலீங்க!பின்னூட்டம் அத்தனையும் படிக்க.அதுபாட்டுக்கு ராமர் பாலம் மாதிரி போய்கிட்டே இருக்கு.வாசாப்புக்கு அர்த்தம் சொல்லியாச்சு.புதரகத்துக்குப் புதுப்பெயர் யாராவது வையுங்களேன்.நான் யோசிச்சிட்டு அப்புறம் வர்ரேன்.

said...

புதரகம் என்று பெயர் வைத்த அண்ணன் முகமூடியிடம் அமெரிக்காவிற்கு அடுத்த பெயர் வைக்கும் தரும்படி வலையுலக மக்களை தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

அந்த பெயர் பாரகம் (பராக் அதிபர் ஆகும் நம்பிக்கையிலும், அமெரிக்காவில் சதாகாலமும் நான் பாரில் (Bar)இருப்பதால்) என்று இருந்தால் நான் மகிழ்வேன்

said...

//ஆமாம் , இலவசத்தை ரெகுலரா படிக்க ஆரம்பிச்சுட்டேன்ல...அதான், தானா வருது நூண்ணரசியல் பின்னூட்டங்கள்......ஸர்வம் இ.கொ.அர்பணம்... :))//

இது வேற. நீங்க இப்படி அர்பணம் பண்ணறீங்க. அங்க சுப்பையா வாத்தியார் ஒரு பதிவு போட்டு சமர்ப்பணம் பண்ணறாரு. யாரு வந்து தர்ப்பணம் பண்ணப் போறாங்களோ தெரியலை!! :))

said...

//புதசெவி = புன்னகை தரும் செய்தியும் விளக்கமும், இதத்தானே சொல்றீங்க?..:))//

ஆமாம். ஒரு ஐடியா இருக்கு. அதை வெச்சு என்ன செய்யறதுன்னு பார்க்கலாம்!!

said...

//ஹில் என்றால் குன்று!
அப்படின்னா குன்றகம்-னு தான் செல்லமாச் சொல்லனும்!//

Fair Enough!! அப்படியே செஞ்சுட்டாப் போகுது.

//நாட்டாமை - தீர்ப்பை மாத்தி எழுது!
இல்லீன்னா சொல் ஒரு சொல் வலைப்பூவில் வழக்குரைத்து தரவு தரப்படும்-னு தாழ்மையுடன் தெரிவிச்சிக்கிறேன்! :-)//

மாத்தி எழுதிடலாம். அதுக்காக தரவு கேட்டுப் பதிவெல்லாம் போடாதீங்க. நான் ரொம்பச் சின்னப்பையன்.

said...

//ஆனாலும் அவங்க அதாங்க அரபிக்கடலுக்கு அப்பால இருக்கறவங்க செய்யறது வாசாப்புதான்.:)//

அதே அதே சபாபதே. அவங்க புண்ணியத்தில் நமக்கு ஒரு பதிவு கிடைச்சுது. அம்புட்டுதான்.

said...

//:))))))//

ரசிகன். எம்மாம் பெரிய வாசாப்பு. அதுக்கு ஒரு சிரிப்பான் மட்டும்தானா?

said...

//முடியலீங்க!பின்னூட்டம் அத்தனையும் படிக்க.அதுபாட்டுக்கு ராமர் பாலம் மாதிரி போய்கிட்டே இருக்கு.வாசாப்புக்கு அர்த்தம் சொல்லியாச்சு.புதரகத்துக்குப் புதுப்பெயர் யாராவது வையுங்களேன்.நான் யோசிச்சிட்டு அப்புறம் வர்ரேன்.//

நட்டு, இதுக்கே அசந்தா எப்படி? அப்புறம் 500, 600ன்னு அடிச்ச பதிவுகளை என்ன செய்யப் போறீங்க? :))

புதரகத்துக்குப் புதுப் பெயர் வெச்சாச்சு பாருங்க.

said...

//புதரகம் என்று பெயர் வைத்த அண்ணன் முகமூடியிடம் அமெரிக்காவிற்கு அடுத்த பெயர் வைக்கும் தரும்படி வலையுலக மக்களை தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.//

சிவாண்ணா தலைவர் வெச்ச பெயர் ரசீதகம். புதரகம் அவரா வெச்சாரு? ச

//அந்த பெயர் பாரகம் (பராக் அதிபர் ஆகும் நம்பிக்கையிலும், அமெரிக்காவில் சதாகாலமும் நான் பாரில் (Bar)இருப்பதால்) என்று இருந்தால் நான் மகிழ்வேன்//

பராக் என இருப்பதால் பராகபுரம் பராகபுரி அல்லது பராக்ககம்.

said...

ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் கண்ண கட்டுது படிச்சுட்டு வந்து பின்னூட்டுறேன்

said...

//ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் கண்ண கட்டுது படிச்சுட்டு வந்து பின்னூட்டுறேன்//

கண்ணைக் கட்டுதாம், இவரு அப்படியே படிச்சுட்டு வந்து பின்னூட்டறாராம். பதிவைப் படிக்காமலேயே பின்னூட்டம் போடறேன் அல்லது பிக செய்யறேன்னு சொல்ல வேண்டியதை எப்படி எல்லாம் நுண்ணரசியல் பண்ணறாங்கப்பா!! அடேங்கப்பா!!