Tuesday, June 17, 2008

வித விதமாய் நுண்ணரசியல் (பெனாத்தலுக்கு நன்றி!)

பதிவு போட விஷயமே இல்லைன்னு சொல்லறவங்களைக் கட்டி வெச்சு உதைக்கணும். நேரம் இல்லை, ஆணி அதிகம் அப்படின்னு சொன்னா விஷயம் வேற. ஆனா இந்த பதிவுலகத்தில் எத்தனையோ எழுதலாமே. அன்பே சிவம், சிவாஜி, தசாவதாரம் என அப்பப்போ எதாவது திரைப்பட சீசன் வருது. அப்புறமா கேள்வி பதில் என்ற பெயரில் நமக்கு நாமே விளையாடிக்கலாம். அதுவும் இல்லையா, தொடர் விளையாட்டுக்கள் எத்தனையோ வருது - சிவாஜி வாயில் ஜிலேபி, அதைத் தொடர்ந்து இந்த கேள்விக்கென்ன பதில் விளையாட்டு. அப்புறம் என்ன விஷயப் பஞ்சம் அதான் எனக்குப் புரியவே இல்லை. நிற்க.

மேலே சொன்ன கேள்விக்கென்ன பதில் விளையாட்டில் நம்மளை பாத்து நாலு கேள்வி கேட்டுப்புட்டாரு நம்ம பெனாத்தல். அதுல கருப்பு வெள்ளையில் எழுது, கலரில் எழுதுன்னு ஆயிரம் நுண்ணரசியல். இருந்தாலும் அவர் ஆசைப்படி என் பதில்களோட பஞ்ச் அண்ணாவின் கருத்துக்களையும் வாங்கிப் போட்டாச்சு.

1. எழுத்தில் மட்டும் சந்திக்கும் பதிவர்களை நேரிலும் சந்திக்க ஆசைப்படுவீர்களா? யார் யார் உங்கள் லிஸ்டில்?

பதிவினால் பெற்ற பயன் யாதெனின் அப்படின்னு முன்னமே சொல்லி இருக்கேன் - "எந்த ஊர் போனாலும் பார்ப்பதற்கு நண்பர்கள். அதில் சிலர் பதிவுகளையும் தாண்டி நல்ல நண்பர்களாய் இருப்பது." அப்படிச் சொல்லி இருக்கும் போது பார்க்காம இருப்பேனா? லிஸ்ட் எல்லாம் இல்லை. எந்த ஊர் போனாலும் அங்க யார் இருக்காங்கன்னு பார்த்து முடிஞ்சா ஒரு சந்திப்பு போட்டுடறதுதான். முக்கியமா அதை வெச்சு நாலு பதிவு போட முடியுமே. அதுக்காகவாவது பார்க்க வேண்டாமா?

ஒரே ஒரு பிரச்சனை. அவங்க நம்மளைப் பார்க்க பிடிக்காம ஊரை விட்டே போயிடறாங்க நம்ம குமரன் மாதிரி . இல்லை நம்ம ஸ்ரீதர் வெங்கட் மாதிரி கடைக்குப் போனேன். கத்திரிக்காய் வாங்கினேன். அப்படின்னு தொலைபேசிக்கிட்டே அடுத்த முறை பார்க்கலாம் அப்படின்னு சொல்லிடறாங்க.

என்ன, நம்மை யாரு என்னான்னு தெரியாம, எதிர்வினைகளை முன்வைப்பதால் நம்மைப் பற்றிய முன்முடிவுகளுடன் காரசாரமாய் பதிவு / பின்னூட்டம் போட்டு காய்ச்சி எடுக்கிற பதிவர்கள் நேரில் பார்த்தா என்ன சொல்லுவாங்க. ஒரு முறை நேரில் பார்த்துப் பழகிய (பாப்பையா சொல்லும் பழகல் எல்லாம் இல்லை) பின் அந்த முன்முடிவுகளில் மாற்றம் இருக்குமான்னு தெரிஞ்சுக்க ஆசை.

பஞ்ச் அண்ணா: பெனாத்தலா கேள்வி கேட்டாரு? அந்த ஆளுக்கு கேள்வி கேக்கத் தெரியலையா இல்ல உம்மகிட்ட பயமான்னு தெரியல! இப்படி இருந்திருக்கணும் கேள்வி: எழுத்தில் மட்டும் சந்திக்கும் பதிவர்கள் உங்களை நேரில் பயமில்லாமல் சந்திப்பார்களா? இல்லை சாக்கு போக்கு சொல்லி ஓடிவிடுவார்களா?

2. திருநெல்வேலிலே ஆரம்பிச்சு அமேரிக்கா வரைக்கும் பல ஊர் பாத்திருக்கீங்க.. நேர்மையாச் சொல்லுங்க.. எந்த ஊர்லே சைட்டடிக்கும்போது தங்கமணிகிட்டே மாட்டினீங்க? அதன் பின் விளைவுகள் என்ன?


வைப்பாலஜியில் முனைவரான நீங்க என் கிட்ட இப்படி ஒரு கேள்வி கேட்டது சிரிப்பாத்தான் இருக்கு. முதலில் மாட்டாமல் இருக்க முடியாது என்ற உண்மையை மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டிய மனப்பக்குவம் வர வேண்டும். சரி. பார்த்தாச்சு, மாட்டியாச்சு. அடுத்தது என்ன செய்ய. முதலில் யாரைப் பார்த்தோமோ அவங்களை மட்டம் தட்டி விட வேண்டும். என்ன இது நீல சுரிதாருக்குப் பச்சை துப்பட்டா? அல்லது காதில் என்ன அது தோடா இல்லை கத்திச் சண்டைக்கு பயன்படும் கேடயமா? இப்படி எதாவது. இல்லையா, அந்த சேலையைப் பாரு. நீ வேண்டாம் என்று வீட்டில் வேலை செய்பவருக்குத் தந்தது மாதிரியே இருக்கே. இந்த மாதிரி வேற வியாபாரம் நடக்குதா? நீ அன்னிக்குப் போட்ட டிசைன் இன்னிக்கு இவங்க போட்டு இருக்காங்களே அப்படின்னு சொல்லணும். (நான் வந்து இன்னிக்கு இருக்கும் பேஷன் படி உடுத்தறது இல்லையா? என்ற கேள்வி வரலாம்).

எதுவும் வொர்க் அவுட் ஆகலைன்னா உனக்கு மனக்கஷ்டமா இருந்தா இனிமே பார்க்கலைன்னு சொல்லணும். அடுத்த முறை சினிமா போகும் போது படம் பூராவும் கண்ணை மூடிக்கிட்டு இருக்கணும். அதை அவங்களுக்குத் தெரியற மாதிரி செய்யணும். என்னன்னு கேள்வி வரும். கொத்ஸ் (இங்க உங்க பேரைச் சொல்லணும்) வாக்குக் குடுத்தா தவற மாட்டான். திரையில் வரும் பெண்களை எக்காரணம் கொண்டும் பார்க்க மாட்டேன் அப்படின்னு வசனம் பேசணும். நல்ல படமான சிரிச்சுக்கிட்டே பார்த்துத் தொலை அப்படின்னு வரும் இல்லை படம் குருவி ரேஞ்சுக்கு இருந்தா அந்தக் கடுப்பெல்லாம் சேர்ந்து ஒரு மிதி விட்டு இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. குடுத்த காசை வீணாக்காம நான் பெற்ற துன்பம் பெருக நீயும் என ஒரு பதில் வரும். ஆக மட்டும் பார்க்கலாம்.

தங்கமணியையும் பையனையும் கூட்டிக்கிட்டுக் கடைக்குப் போகும் போது எல்லாம் அவன் எதையாவது எடுக்க முனைந்தா 'Son, there are some rules in life. When you are in a public place, there are things you can see, but you can't touch!" அப்படின்னு சொல்லிக் குடுத்துடறது!

பஞ்ச் அண்ணா: நல்லாத்தான்யா ப்ளான் எல்லாம் பண்றீங்க.. ஆனா பேக்பயர் ஆச்சுன்னா வாழ்நாள் ஆப்பு ப்ரீ! இதே சிச்சுவேஷன்லே "அட.. ரொம்ப நல்லவன் தான்யா நீ.. எனக்காகத்தான் எல்லாத்தையும் சைட் அடிச்சே சரி.. அப்படித்தான் போற வற பொம்பளைங்க என்ன தோடு போட்டிருக்காங்க, எது லேடஸ்ட் டிசைன், துப்பட்டா போட்டிருக்காங்களா இல்லியான்னு டீட்டெயிலா நோட் பண்ணுவியா? என்னோட பேட்டைக்கு வா" ன்னு சொன்னா கொத்தனார் கொத்துக்கறியனார்!

3. நுண்ணரசியல்: சாதா பிராண்ட், பி ந பிராண்ட், இன்னும் வேற எதாச்சும் இருந்தா அதைப்பத்தியும் படம் வரைந்து பாகங்களைக் குறியுங்கள் பார்க்கலாம்?

அரசியல் என்றால் என்ன என்பது நமக்கெல்லாம் நல்லாவே தெரியும். திமுக, அதிமுக என பெரிய அளவில் செய்யும் அரசியல் நமக்கெல்லாம் ஓரளவு தெரியும். அலுவலகத்தில் ஒருத்தனுக்குப் பதவி உயர்வு கிடைத்தால் அதற்கு நாம் கற்பிக்கும் காரணமோ அல்லது வீட்டில் நம் மைத்துனர் குடும்பத்தில் நடந்த ஒரு நிகழ்வுக்கு நாம் கற்பிக்கும் காரணமோ நாம் நம்மளவில் செய்யும் அரசியல். இதெல்லாம் வெளிப்படையா நடப்பது.

இவ்வளவு வெளிப்படையா இல்லாம கொஞ்சம் நுணுக்கமா கொஞ்சம் யோசிச்சால் மட்டுமே புரிபடற மாதிரி செய்யும் அரசியல் நுண்ணரசியல். இன்றைக்குப் பெண்கள் முன்னேற்றத்திற்கு பெரும் பாடு படுவது திமுக அரசு அப்படின்னு ஒரு அறிக்கை வெளிவந்தா, அதை விமர்சனம் பண்ணி ஒரு பதிவு போடும் பொழுது, "அதுக்கு தமிழகத்தில் இன்று மதுரைதான் ஆட்சி!!" அப்படின்னு தலைப்பு வெச்சீங்கன்னா அது பல அடுக்குகளில் வேறு வேறு விதமான பொருள் தரும். பெண்கள்தான் சக்திவாய்ந்தவர்கள் என்ற நேரடி விளக்கம், அதற்கு ஒரு படி கீழே போனால் இன்று அமைச்சகத்தில் நடப்பதை விட கலைஞரின் வீடுகளில்தான் பல முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்று ஒரு கோணம். அதையும் தாண்டி அழகிரி கை ஓங்கி இருப்பதை சொல்லும் வேறு ஒரு கோணம். இப்படி பல விதமான கோணங்கள் பல விதமான முடிவுகளைத் தருவது என்பது நுண்ணரசியல். ஆனா இது எல்லாம் சாதா நுண்ணரசியல்.

அடுத்து வருவது கலர்கண்ணாடி நுண்ணரசியல். இதில் பல வலையுலக ஜாம்பவான்கள் எல்லாம் இருக்காங்க. ஒரு விளையாட்டு இருக்கும். ஒரு அட்டையின் ஒரு பகுதியில் கேள்வி இருக்கும். அதன் விடை அந்த அட்டையின் பின்புறத்தில் இருக்கும். ஆனா அது தெளிவாகத் தெரியாது. அந்த விளையாட்டோட ஒரு சிகப்புக் கண்ணாடி தருவாங்க. அதைப் போட்டுக்கிட்டுப் பார்த்தா விடை பளிச் எனத் தெரியும்.

அந்த மாதிரி இந்த க.க.நுண்ணரசியலில், முதலில் நீங்க முன்முடிவுகள் பலவற்றோட இருக்கணும். எந்த பதிவையும், எந்த நிகழ்வையும் இந்த முன் முடிவோடதான் அணுகணும். அப்படிச் செய்யும் போது, இந்த கலர் கண்ணாடியைப் போடாதவங்களுக்குத், அதாங்க அந்த முன்முடிவுகள் இல்லாதவங்களுத், தெரியாத பல விஷயங்கள் இவங்களுக்குத் தெரியும்.

உண்மையாச் சொல்லப்போனா இதுக்கும் வேண்டாத மருமக கைபட்டா குத்தம் -கால்பட்டா குத்தத்துக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. பிடிச்ச ஆளு காளை மாட்டுக்கு நாலு கொம்பு ன்னு சொன்னாக் கூட "100% உடன்படுகிறேன்" என்பதும், பிடிக்காத ஆளு ஜூலை மாசத்துக்கு 31 நாள்னாக்கூட சண்டை பிடிக்கறதும் நடக்கிறதைத்தான் பார்க்கறீங்களே.

மூணாவது பி.ந.நுண்ணரசியல். இது ஒரு பெரிய வாசாப்பு. இந்த நுண்ணரசியல் எழுதறவனுக்கும் ஒண்ணும் புரியாது. படிக்கிறவனுக்கும் ஒண்ணும் புரியாது. ஆனா எழுதறவன் தான் என்னமோ சாக்ரடீஸ் மாதிரி நினைப்பில் எழுதுவான். படிக்கிறவன் புரிஞ்சா மாதிரி பட்டையைக் கிளப்பிட்டீங்க வாத்தியாரே அப்படின்னு பின்னூட்டம் போடுவான். அதுவும் சில சமயங்களில் அவனுக்கும் அறிவு ஜீவி வியாதி தொத்திக்கும். அப்போ அவ்வளவுதான் ரெண்டு பேரும் மாறி மாறி எழுதிக்கிறதைப் படிச்சா நமக்கு மண்டையில் முடி எல்லாம் கொட்டிப் போயி உடம்பு சூடேறி கண்ணைக் கட்டிக்கிட்டு மயக்கமா வரும். இது உதாரணமா எதையாவது சொல்லப் போக உங்களுக்கு எதாவது ஆயிடிச்சுன்னா என்ற கவலையில் அதை எல்லாம் செய்யலை.

கடைசியா, (நுண்ணரசியல் பத்திப் பேசும் போது கடைசியான்னு சொல்லறதே தப்பு. ஏன்னா இதையும் தாண்டிப் புனிதமானது ஒண்ணு வரலாம்!) நாம பண்ணற நுண்ணரசியல். இதுல என்ன விசேஷமுன்னா செய்யறவங்களுக்கு இதெல்லாம் தெரியவே தெரியாது. ஆனா நம்ம கண்ணுக்கு இதெல்லாம் பளிச்சுன்னு படும். அதைச் சொன்னா அப்போதான் அதைச் செஞ்சவருக்கு நாமா இதெல்லாம் செஞ்சோம் அப்படின்னு தோணும். உதாரணத்திற்குப் போன பதிவில் நாம சொன்ன மாதிரி ஆஸ்கார் பிலிம்ஸ் என தசாவதாரத்தில் வரும் பொழுது அந்தப் பையன் சட்டையில் 'கேப்டன்' அப்படின்னு எழுதி இருக்கும். அது எதேச்சையா நடந்திருப்பது. அதன் மூலம் கமலை விட விஜயகாந்த் எவ்வளவோ மேல் அப்படின்னு ரவிசந்திரன் சொல்ல வராரு அப்படின்னு ஒரு பதிவு போட்டா அது இந்த மாதிரி நுண்ணரசியல்.

இதுல முக்கியமானது இதை வெளிப்படுத்தும் பொழுது உம் நுண்ணரசியல் என்னை பிரமிக்க வைக்கிறது, உமது நுண்ணரசியல் கண்டு பிரமித்து நிற்கிறேன் எனச் சொல்வது அவசியம். ஆனா ஒண்ணு, இதுதாங்க இருக்கிறதுலேயே ஆபத்தில்லாதது. படிச்சுட்டு சிரிச்சுட்டு, பின்னூட்டமா ஒரு சிரிப்பானாவது போட்டுட்டு போனா முடிஞ்சுது வேலை.

பஞ்ச் அண்ணா: யானையக் குருடனுங்க தொட்டு என்னவோ சொன்ன மாதிரி எங்கயோ ஒரு மேட்டரைப்பாத்துட்டு என்னவோ வாய்க்கு வந்தபடியோ மனசுக்கு வந்தபடியோ பேசறதுதான் நுண்ணரசியல் - அப்படின்னு ஒரு வரிலே முடிக்கவேண்டிய பதிலை வச்சுகிட்டு ஜிலேபி சுத்தியிருக்கீரே .. உம்மை!

4. பின்னூட்டப் பிதாமகரே, நீங்களும் பார்த்து வெறுத்து ஒதுக்கும் பதிவுகள் என்னவோ, ஏனோ?

முதல் இரண்டு வார்த்தைகள் என்னை ரீச்சருக்கு எதிரா கொம்பு சீவற மாதிரி இருக்கு. ஏன்யா இப்படி (நுண் இல்லாத)அரசியல் பண்ணறீரு. அது மட்டுமில்லாம வெறுத்து ஒதுக்கும் அப்படின்னு பெரிய பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்லறீங்களே!! அதிகம் படிக்காத பதிவுகள் அப்படின்னு வேணா சொல்லிக்கலாமா? அப்படிப்பட்ட பதிவுகளில் சில வகைகள் இருக்கு.

முதலாவது ஒருத்தர் எதாவது சொல்ல வந்த அவரு என்ன சொல்லறாரு என்பதை விட அவர் யாரு என்பதற்கு அதிக கவனத்தைக் குடுத்து நமக்குப் பிடிக்காதவரா இருந்தா அவரை விமர்சனம் செய்வதையே பதிலாகத் தருவது. இந்த மாதிரி தனிமனித தாக்குதல்களால் சொல்ல வந்த கருத்து காணாமப் போகுது. இது மாதிரி தொடர்ந்து நடக்கும் பதிவுகள் சிலவற்றின் பக்கம் போறது இல்லை. அனானியா வந்து ஒருத்தர் கேள்வி கேட்டா, பெயர் போடக்கூட பயப்படும் உனக்கெல்லாம் நான் ஏன் பதில் சொல்லணும் என்ற மேட்டிமைத்தனமும் இதில் அடங்கும்.

இரண்டாவது போன பதிவில் செல்லமா உவ்வேக் என அறியப்பட்ட வகை எழுத்துக்கள் இருக்கும் பதிவு. அதுக்கும் நமக்கும் ஏழாம் பொருத்தம். அதனால அந்தப் பக்கம் எல்லாம் போறது இல்லை.

மூணாவது இந்த ரொம்ப இலக்கியங்கள் மற்றும் ஆத்திகம் பற்றிய பதிவுகள். இதெல்லாம் நமக்கு ஏணி வெச்சாலும் எட்டாது. ரொம்பவே தீவிரமா விவாதங்கள் நடக்குற இடத்தில் நம்ம என்ன கும்மி ஆட்டையா போட முடியும். அதனால பொதுவா ஒண்ணு ரெண்டு பதிவு படிச்சாலும் அப்படியே சத்தம் காட்டாம நகர்ந்து போயிடறது.

கடைசியா இப்போ வர நிறையா பதிவுகளில் ஏகப்பட்ட எழுத்துப் பிழைகள். நிலக்கடலை சாப்பிடும் போது நடுவில் கெட்டுப் போன பருப்பு மாட்டினா மாதிரி படிக்கும் பொழுது என்னவோ செய்யுது. அதுவும் எதோ ஒண்ணு ரெண்டு இருந்தாலும் பரவாயில்லை. தட்டச்சுப் பிழைகள் அப்படின்னு ஒதுக்கிடலாம். ஆனா வரிக்கு வரிக்கு இதே மாதிரி தப்பு இருந்தா படிக்கவே பிடிக்க மாட்டேங்குது. "ற்" என்ற எழுத்துக்குப் பின் வரும் மெய்யெழுத்துக்கள், "ண,ந,ன' தவறுகள், "ற,ர" தவறுகள் எல்லாம் படிச்சா ரொம்பவே கடுப்பா இருக்கு. எவ்வளவுதான் சொல்லறது. அதனால இந்த மாதிரி எழுத்துப் பிழைகள் இருக்கும் பதிவுகளை இப்போ எல்லாம் புறக்கணிக்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன். ரொம்ப தெரிஞ்ச நண்பர்களா இருந்தால் மட்டும் சுட்டிக் காட்டறது.

பஞ்ச் அண்ணா:
அதாவது உங்களுக்கு பின்னூட்டம் போடாத பதிவர்கள் பக்கம் போறதில்லைன்னு சிம்பிளா முடிவெடுத்துட்டு, அதுக்கு காரணமா சந்திப்பிழை, மரியாதை இல்லை ன்னு தேடித்தேடி சொல்றா மாதிரி இல்ல இருக்கு!


கடைசியா நானும் யாரையாவது கேள்வி கேட்கணுமாமே. பதிவர்களில் பாதி பேர் கேள்வி பதில் எழுதும் பொழுது நாம யாரைன்னு போய் கேட்கன்னு யோசிச்சேன். பதிவு எழுதறவங்களை விட்டுட்டு பதிவே இல்லாதவரைக் கேட்டா என்னான்னு நினைக்கும் போது முதலில் நம்ம நினைவுக்கு வந்தது ஸ்ரீதர் வெங்கட்தான். ஸ்ரீதரே, நம்ம கேள்விக்கு பதிலை எல்லாம் எழுதி மின்னஞ்சல் பண்ணுங்க. நானே பதிவாப் போடறேன். இல்லை இதையே சாக்கா வெச்சு நீங்க பதிவு போடத் தொடங்கினாலும் சரிதான். உங்களுக்கான கேள்விகள்

  1. பதிவுலகில் தொடர்ந்து இயங்கும் நீங்க, பல பதிவர்களை விட பின்னூட்டங்களில் பட்டையைக் கிளப்பும் நீங்க ஏன் இதுவரை பதிவு தொடங்கலை?
  2. பதிவுகள் எழுதும் நாங்களெல்லாம் வீட்டில் வாங்கிக் கட்டிக் கொள்வது போல நீங்கள் படித்துப் பின்னூட்டமிடுவதற்காகவே வாங்கிக் கட்டிக் கொள்வது உண்டா?
  3. அடிப்படையில் ரஜினி ரசிகராக அறியப்படும் நீங்கள் தசாவதாரத்திற்கு கமலே நினைக்காத கோணங்களில் பின்னூட்டங்கள் போட்டு ஆதரவு திரட்டுவதின் பின் இருக்கும் நுண்ணரசியல் என்ன? (நான் ரஜினி ரசிகன் என்று யார் சொன்னது போன்ற மொக்கை பதில்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது)
  4. காலப் பயணம் செய்ய முடிந்து உங்கள் வாழ்க்கையில் ஒரே ஒரு சம்பவத்தை மாற்ற முடியும் என்ற சக்தி கிடைத்தால் எதனை மாற்றுவீர்கள்? எவ்வாறு மாற்றுவீர்கள்?

76 comments:

said...

பதிவு கொஞ்சம் பெருசாப் போச்சு! ஹிஹி... இப்படி எல்லாம் செஞ்சா அடுத்த தடவை நம்மளைக் கேள்வி கேட்க யோசிப்பாங்க பாருங்க... அதான்.. ஹிஹி....

said...

//பதிவு கொஞ்சம் பெருசாப் போச்சு//

கொஞ்சமா?

said...

அஸ் யூஷுவல் பதிவைப் படிக்கலை!! ஹேப்பி போஸ்டிங்!

said...

நல்ல கேள்விகள்....நல்ல பதில்கள்!!!புறிச்!!!
மேலாலே மேஞ்சதுக்கே இந்த கமெண்ட்!

said...

//அனானியா வந்து ஒருத்தர் கேள்வி கேட்டா, பெயர் போடக்கூட பயப்படும் உனக்கெல்லாம் நான் ஏன் பதில் சொல்லணும் என்ற மேட்டிமைத்தனமும் ..//

நுண்ணரசியல் ...ம்..?

said...

நுண்ணரசியலுக்கான விளக்கத்தை ரசித்துப் படித்தேன் :)

said...

//படிக்கிறவன் புரிஞ்சா மாதிரி பட்டையைக் கிளப்பிட்டீங்க வாத்தியாரே அப்படின்னு பின்னூட்டம் போடுவான்.//

இப்பல்லாம் படிக்காமலே பின்னூட்டம் போடறது தான் டிரண்ட். உமக்கு தெரியாததா? :p

said...

ப ப தன் பதில்களில் (பன்ச்களில்) தான் ஒரு ப்ராக்டிகல் பரமசிவம் என்று நிரூபித்திருக்கிறார்.:)

பதிவில்லாதவரை கேள்வி கேட்டு அவர் பதிலை மெயில்ல அனுப்புனா பிரசுரிக்கிறேன் அப்படீன்னு சொல்லி இன்னொரு பதிவுக்கு வழி பண்ணி வச்சுக்கிட்டீங்களே. குருவே...இரண்டு பதிவுகளுக்கு முன்னால் எனக்கு பின்னூட்ட சூட்சுமத்தை விளக்கிய நீங்கள் இன்று மற்றும் ஒரு புதிய பதிவுலக நுண்ணரசியல் வித்தையை அறிமுகப் படுத்தியுள்ளீர்கள்.:))

உங்கள் தமிழ் பதிவுலக ஞானம் பிரமிக்க வைக்கிறது.(இந்த வரி உங்கள் நுண்ணரசியல் விளக்கத்திற்கும் சேர்த்து)

:))

கி அ அ அனானி

said...

VAIPPOLOGY-IL MUNAIVAR

Idhil Ulla Nunnarasiaylai Paaraattugiren.

Venkatesh

said...

//கமலை விட விஜயகாந்த் எவ்வளவோ மேல் அப்படின்னு ரவிசந்திரன் சொல்ல வராரு

நான் அதுக்கு அர்த்தம் கேப்டன் சின்னப்பையன்னு சொல்ல வராருன்னுல நினைச்சேன்.

said...

//Son, there are some rules in life. When you are in a public place, there are things you can see, but you can't touch//

:))))

said...

/
அதாவது உங்களுக்கு பின்னூட்டம் போடாத பதிவர்கள் பக்கம் போறதில்லைன்னு சிம்பிளா முடிவெடுத்துட்டு, அதுக்கு காரணமா சந்திப்பிழை, மரியாதை இல்லை ன்னு தேடித்தேடி சொல்றா மாதிரி இல்ல இருக்கு!
/

:)

அந்த விஜய் டிவில வந்டஹ் லஷ்மி ப்ரொக்ராம் பேர் என்ன??

"கதையல்ல நிஜம்"

said...

//Son, there are some rules in life. When you are in a public place, there are things you can see, but you can't touch//

:))))

said...

yappaadi, ஒரு வழியாப் பதிவு திறந்துச்சு, ஆனால் ஏன் திறந்தது?? திறக்காமலேயே இருந்திருக்கலாமோ??/ தலையப் பிச்சுக்கணும் போலிருக்கா?? இல்லையே! படிக்கவே இல்லை, அம்மாடா, பின்னூட்டங்களைப் பார்த்துட்டேன் நிம்மதியாப் போச்சு! தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

said...

பதிவே இல்லாதவரைக் கேள்விகள் கேட்டு, அவர் பதிலையும் தனது பதிவாகப் போட்டுக் கொள்ள வழி கண்ட ஐடியா சிகாமணியே, உமது நுண்ணரசியல் பிரமிக்க வைக்குதய்யா!

said...

//மூணாவது இந்த ரொம்ப இலக்கியங்கள் மற்றும் ஆத்திகம் பற்றிய பதிவுகள். இதெல்லாம் நமக்கு ஏணி வெச்சாலும் எட்டாது.//

என்ன இகொ இப்படி சொல்லிட்டிங்க?
:-(
ஆன்மிகத்துல ஆர்வம் இல்லைனா சரி. அது வேற விஷயம்.
புரியாதுன்னு நினைக்கிறவங்களுக்காகவே ஒரு பதிவு எழுதிகிட்டு இருக்கேன்.
//http://anmikam4dumbme.blogspot.com/

introduction chapters மட்டும் படிச்சுட்டு அப்புறமும் புரியலைனா சொல்லுங்க. நான் என் பதிவு எழுதற விதத்தை திருத்திக்கணும்.
நன்ஸ்!

said...

நுண்ணரசியலுக்கு எந்த கண்ணாடி போட்டா எப்படி தெரியும்னு ஒரு விளக்கம் கொடுத்திருந்தா நல்லா இருக்கும் ;)

said...

//கடைக்குப் போனேன். கத்திரிக்காய் வாங்கினேன்.//

என்ன சொல்ல வர்றீங்க? இந்தியர்கள் அதிகமா கத்திரிக்காய் வாங்கறாங்க, அதுனால கத்திரிக்காய் விலையேறிடுச்சின்னா?

said...

//பதிவு போட விஷயமே இல்லைன்னு சொல்லறவங்களைக் கட்டி வெச்சு உதைக்கணும்.// கேள்வி கேட்டவனையே உதைக்கச் சொல்ற நுண்ணரசியலை, அதுவும் தலைப்புல நன்றின்னு சொல்லிட்டு முதல் வரியில குத்தற நுண்ணரசியலை.. உங்க லிஸ்ட்லே சேக்கலையே?

நீங்க மட்டுமா குத்தறீங்க? பஞ்ச் அண்ணாவும் முதல் கமெண்ட்லேயே குத்தறாரு! என்னவோ போங்க.. உங்க போதைக்கு நான் ஊறுகாய் ஆயிட்டேன்!!

said...

//'Son, there are some rules in life. When you are in a public place, there are things you can see, but you can't touch!" //

இதைக் கட்டுடைப்போம்.

பையனுக்கு பாடம் எடுக்கும் கொத்ஸ் 'சில கட்டளைகள் இருக்கின்றன' என்றுதான் குறிப்பிடுகிறார். அப்ப 'பல கட்டளைகள் இருப்பதில்லை'. இருப்பதற்க்கும் இல்லாததற்க்கும் கண்ணால் மட்டுமே பார்த்து வேறுபாடுகள் கண்டுபிடிக்கும் நுண்கலையை பற்றி விளக்குகிறீர்கள் என்று புரிகிறது.

அடுத்தது, பொது இடத்தில் கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகளை சொல்லித்தந்த கொத்தனார், தனியிடங்களின் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்று சொல்லவில்லை என்பதை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

said...

//அதை வெச்சு நாலு பதிவு போட முடியுமே. அதுக்காகவாவது பார்க்க வேண்டாமா?// அதானே.. கி அ அ அ சொன்ன மாதிரி, மூணாவது பதிவுக்கு இப்பவே மேட்டர் தேத்தற ஆளு பதிவர் சந்திப்பை விட்டா வைக்கப் போறீங்க?

//திரையில் வரும் பெண்களை எக்காரணம் கொண்டும் பார்க்க மாட்டேன் // இதெல்லாம் ஓவர்டூயிங்.. எப்பவாச்சும் இந்த சோதனையப் பண்ணி விளைவுகளை பாத்திருக்கீங்களா? சும்மா வாய்க்கு வந்ததைச் சொல்றதுதான் வைஃபாலஜியா? இதுல வைப்பாலஜின்னு போட்டு, அதை வேற வெங்கடேஷ் பாராட்டியிருக்காரு!

said...

//கேள்விக்கு பதிலை எல்லாம் எழுதி மின்னஞ்சல் பண்ணுங்க//

ஆச்சுங்கண்ணா! :-)

said...

//வைஃபாலஜியா? இதுல வைப்பாலஜின்னு //

இல்லாள் என்றாலே ஏன் 'ஆய்த'தத்துடன் மட்டுமே யோசிக்கிறீர்கள்?

தமிழ்ல 'ஜ'க்கு பதிலா 'ச' உபயோக்கிறதில்லையா? அந்த மாதிரி f க்கு பதிலா 'ப'தானே முறை. :-)

said...

//ஆனா எழுதறவன் தான் என்னமோ சாக்ரடீஸ் மாதிரி நினைப்பில் எழுதுவான். //

சாக்ரடீஸ் போன்று மேலை நாட்டில் மட்டும்தான் மேதைகள் உருவாகமுடியும், நம் உவ்வேக்காளர்கள் மேதைகளாக இருக்கமுடியாது - என்றூ சொல்ல வரும் ஆசிரியரின் திரிபுவாதமும், மரபுசார் இருத்தலியல்வாதத்தின் கூறுகளும் ஒருங்கே தெரிபடுவது, ழான் கோ மான் எழுத்துகளுக்குப் பிறகு இங்கேதான் நான் பார்க்கிறேன்.

//கடைசியா இப்போ வர நிறையா பதிவுகளில் ஏகப்பட்ட எழுத்துப் பிழைகள். // அடடா.. இந்தப்பதிவையே படிச்சிருக்கக்கூடாதோ?

said...

:-))))))))))))))))))))))))))

said...

//கொஞ்சமா?//

மனதின் ஓசை! அதான் ஒத்துக்கறோமில்ல. அப்புறம் என்ன அதையே குத்திக் காமிக்கறீங்க.

நான் ரெண்டு பகுதியாத்தான் போட இருந்தேன். இந்த பெனாத்தல்தான் இந்த மொக்கைக்கு ரெண்டு பகுதி வேறயான்னு ஒரே பதிவா போட உத்தரவு போட்டாரு.

said...

// அஸ் யூஷுவல் பதிவைப் படிக்கலை!! ஹேப்பி போஸ்டிங்!//

நேத்தி நைட் நல்லா தூங்கி இருப்பீங்களே!! நல்லா இருங்க சாமி!

said...

//நல்ல கேள்விகள்....நல்ல பதில்கள்!!!புறிச்!!!
மேலாலே மேஞ்சதுக்கே இந்த கமெண்ட்!//

நானானி அம்மா, அது என்ன புறிச்ன்னு துப்பறீங்க? :)

said...

//அனானியா வந்து ஒருத்தர் கேள்வி கேட்டா, பெயர் போடக்கூட பயப்படும் உனக்கெல்லாம் நான் ஏன் பதில் சொல்லணும் என்ற மேட்டிமைத்தனமும் ..//

நுண்ணரசியல் ...ம்..?//

யய்யா இதுல என்னாத்த நுண்ணரசியலைக் கண்டீரு? கேள்வி கேட்டா பதில் சொல்லணும். அது யாரா இருந்தா என்ன? கேள்வி சரியா இருந்தாப் போதும். மடத்தனமா இருந்தா அது பேரு போட்டு வந்தாலும் பேர் போடாம வந்தாலும் விட்டுத் தள்ளணும். இதான் சொல்லறேன். இதுல என்ன தப்பு? என்ன அரசியலு? கொஞ்சம் தெளிவாத்தேன் சொல்லறது....

said...

// நுண்ணரசியலுக்கான விளக்கத்தை ரசித்துப் படித்தேன் :)//

நன்றி ஜ்'யோவ்'ராம் சுந்தர்.

செல்லமா உங்களை யோவ் அப்படின்னு கூப்பிடறவங்க உண்டா?

said...

//இப்பல்லாம் படிக்காமலே பின்னூட்டம் போடறது தான் டிரண்ட். உமக்கு தெரியாததா? :p//

அதானே. எத்தனை பேரு நம்ம கிட்ட செய்யறாங்க. தெரியாமலேயாப் போகும்?

said...

//ப ப தன் பதில்களில் (பன்ச்களில்) தான் ஒரு ப்ராக்டிகல் பரமசிவம் என்று நிரூபித்திருக்கிறார்.:)//

வாங்க கி.அ.அ.அ. அவரு சும்மாவா? பஞ்ச் பரமசிவம் ஆச்சே!!

//பதிவில்லாதவரை கேள்வி கேட்டு அவர் பதிலை மெயில்ல அனுப்புனா பிரசுரிக்கிறேன் அப்படீன்னு சொல்லி இன்னொரு பதிவுக்கு வழி பண்ணி வச்சுக்கிட்டீங்களே. குருவே...இரண்டு பதிவுகளுக்கு முன்னால் எனக்கு பின்னூட்ட சூட்சுமத்தை விளக்கிய நீங்கள் இன்று மற்றும் ஒரு புதிய பதிவுலக நுண்ணரசியல் வித்தையை அறிமுகப் படுத்தியுள்ளீர்கள்.:))//

எல்லாம் முன்னமே சொன்னதுதான். பின்னூட்டக் கயமைத்தனம், பதிவுக் கயமைத்தனம் எல்லாம் பேசி இருக்கோமே. நீங்க இப்போதான் நம்ம பக்கம் வறீங்க. தேங்ஸ் டு பஞ்ச் அண்ணா!

உங்கள் தமிழ் பதிவுலக ஞானம் பிரமிக்க வைக்கிறது.(இந்த வரி உங்கள் நுண்ணரசியல் விளக்கத்திற்கும் சேர்த்து)

said...

//VAIPPOLOGY-IL MUNAIVAR

Idhil Ulla Nunnarasiaylai Paaraattugiren.

Venkatesh//

வெங்கடேஷ், பதிவை சரியாப் படிக்கலையா? பாராட்டக்கூடாது பிரமிக்கணும்!

எப்போ தமிழில் எழுதப் போறீங்க?

:))

said...

//நான் அதுக்கு அர்த்தம் கேப்டன் சின்னப்பையன்னு சொல்ல வராருன்னுல நினைச்சேன்.//

இது கலர்க் கண்ணாடி நுண்ணரசியல். எப்பவுமே கேப்டனைப் பிடிக்காம எந்த சந்தர்ப்பத்திலும் அவரை மட்டம் தட்டும் கூட்டத்தைச் சார்ந்தவர் நீங்கள் என்ற பூனைக்குட்டி குதிக்கிறதே.

said...

//ஆயில்யன் said...

//Son, there are some rules in life. When you are in a public place, there are things you can see, but you can't touch//

:)))) //

ஆயில்யன், கண்ணுல வேற எதுவுமே படலையா? :P

said...

//அந்த விஜய் டிவில வந்டஹ் லஷ்மி ப்ரொக்ராம் பேர் என்ன??

"கதையல்ல நிஜம்"//

சிவா, எங்க வீட்டில் விஜய் ரீவி வராது!

said...

////Son, there are some rules in life. When you are in a public place, there are things you can see, but you can't touch//

:))))//

இதுக்கெல்லாம் சிரிச்சுடுங்க!! :))

said...

//yappaadi, ஒரு வழியாப் பதிவு திறந்துச்சு, ஆனால் ஏன் திறந்தது?? திறக்காமலேயே இருந்திருக்கலாமோ??/ தலையப் பிச்சுக்கணும் போலிருக்கா?? இல்லையே! படிக்கவே இல்லை, அம்மாடா, பின்னூட்டங்களைப் பார்த்துட்டேன் நிம்மதியாப் போச்சு! தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்//

கீதாம்மா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!! :)

said...

//ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.

"கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்
போராளியின் வெற்றிப்பேரிகை"

http://pugaippezhai.blogspot.com/2008/06/blog-post_3130.html

அன்புடன்,
விஜய்
கோவை//

ஐயா, உம்ம பதிவோட லிங்க்தான் தமிழ்மணத்தில் இருக்கும் எல்லாப் பதிவுலேயும் இருக்கே!!

said...

//மாணவன் said...

பதிவே இல்லாதவரைக் கேள்விகள் கேட்டு, அவர் பதிலையும் தனது பதிவாகப் போட்டுக் கொள்ள வழி கண்ட ஐடியா சிகாமணியே, உமது நுண்ணரசியல் பிரமிக்க வைக்குதய்யா!//

மாணவனே, நீர் நல்ல மாணவரய்யா!!

said...

//என்ன இகொ இப்படி சொல்லிட்டிங்க?
:-(
ஆன்மிகத்துல ஆர்வம் இல்லைனா சரி. அது வேற விஷயம்.
புரியாதுன்னு நினைக்கிறவங்களுக்காகவே ஒரு பதிவு எழுதிகிட்டு இருக்கேன்.
//http://anmikam4dumbme.blogspot.com/

introduction chapters மட்டும் படிச்சுட்டு அப்புறமும் புரியலைனா சொல்லுங்க. நான் என் பதிவு எழுதற விதத்தை திருத்திக்கணும்.
நன்ஸ்!//

திவா, ஆர்வம் இல்லை என்பதும் ஒரு காரணிதான். உங்க பதிவுக்கு வரேன். கொஞ்சம் டயம் குடுங்க.

said...

//நுண்ணரசியலுக்கு எந்த கண்ணாடி போட்டா எப்படி தெரியும்னு ஒரு விளக்கம் கொடுத்திருந்தா நல்லா இருக்கும் ;)//

வெட்டி அதை வீட்டுப் பாடமா எடுத்துக்கிட்டு ஒரு பின்னூட்டம் போடுங்க பார்ப்போம்.

said...

//என்ன சொல்ல வர்றீங்க? இந்தியர்கள் அதிகமா கத்திரிக்காய் வாங்கறாங்க, அதுனால கத்திரிக்காய் விலையேறிடுச்சின்னா?//

யோவ் ஸ்ரீதர், இப்படி எல்லாம் பேச நீ என்ன கமலஹாசனா? சாரி ஜார்ஜ் புஷ்ஷா? :)

said...

//கேள்வி கேட்டவனையே உதைக்கச் சொல்ற நுண்ணரசியலை, அதுவும் தலைப்புல நன்றின்னு சொல்லிட்டு முதல் வரியில குத்தற நுண்ணரசியலை.. உங்க லிஸ்ட்லே சேக்கலையே?//

பெனாத்தல் இது எந்த வகை நுண்ணரசியல் எனச் சொல்ல வேண்டாமா?

//நீங்க மட்டுமா குத்தறீங்க? பஞ்ச் அண்ணாவும் முதல் கமெண்ட்லேயே குத்தறாரு! என்னவோ போங்க.. உங்க போதைக்கு நான் ஊறுகாய் ஆயிட்டேன்!!//

கேள்வி கேட்டீரு சரி. அதுல கலர் கலரா போட்டுக் காமிச்சீரு பாருங்க. அங்கதான் மாட்டிக்கிட்டீரு.

said...

//பையனுக்கு பாடம் எடுக்கும் கொத்ஸ் 'சில கட்டளைகள் இருக்கின்றன' என்றுதான் குறிப்பிடுகிறார். அப்ப 'பல கட்டளைகள் இருப்பதில்லை'. இருப்பதற்க்கும் இல்லாததற்க்கும் கண்ணால் மட்டுமே பார்த்து வேறுபாடுகள் கண்டுபிடிக்கும் நுண்கலையை பற்றி விளக்குகிறீர்கள் என்று புரிகிறது.//

மிஸ்டர் ஸ்ரீதர், பதிவைப் படிக்கலைன்னு நல்லாத் தெரியுது. ற் என்ற எழுத்தைத் தொடர்ந்து மெய்யெழுத்து வரக் கூடாது. அப்படி வந்தால் நான் படிக்க மாட்டேன்.

//அடுத்தது, பொது இடத்தில் கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகளை சொல்லித்தந்த கொத்தனார், தனியிடங்களின் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்று சொல்லவில்லை என்பதை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.//

பொது இட வழிமுறைகளைப் பொதுவில் சொல்லுவோம். தனியிட வழிமுறைகளைத் தனியில் சொல்லுவோம்.

said...

//அதானே.. கி அ அ அ சொன்ன மாதிரி, மூணாவது பதிவுக்கு இப்பவே மேட்டர் தேத்தற ஆளு பதிவர் சந்திப்பை விட்டா வைக்கப் போறீங்க?//

தெரியுது இல்ல. அப்புறம் என்ன கேள்வி?

//சும்மா வாய்க்கு வந்ததைச் சொல்றதுதான் வைஃபாலஜியா? இதுல வைப்பாலஜின்னு போட்டு, அதை வேற வெங்கடேஷ் பாராட்டியிருக்காரு!//

நான் உம்ம பதிவைப் படிச்சு இருக்கேனே. :))

said...

////கேள்விக்கு பதிலை எல்லாம் எழுதி மின்னஞ்சல் பண்ணுங்க//

ஆச்சுங்கண்ணா! :-)//

இம்புட்டு சுறுசுறுப்பு கூடாது!! அப்புறம் இந்தப் பதிவுக்கான பின்னூட்டங்கள் எனக்கு வராது இல்ல. நாளைக்குத்தான் உங்க பதில் ரிலீஸ்!!

said...

////வைஃபாலஜியா? இதுல வைப்பாலஜின்னு //

இல்லாள் என்றாலே ஏன் 'ஆய்த'தத்துடன் மட்டுமே யோசிக்கிறீர்கள்?

தமிழ்ல 'ஜ'க்கு பதிலா 'ச' உபயோக்கிறதில்லையா? அந்த மாதிரி f க்கு பதிலா 'ப'தானே முறை. :-)//

அதெல்லாம் சரி. ஆனா இதை வெச்சு அவர் வீட்டில் நான் செய்யும் அரசியலைக் கண்டுதான் அவரு அப்படி எல்லாம் ஆய்தம் போடறாரு!!

said...

//யோவ் ஸ்ரீதர், இப்படி எல்லாம் பேச நீ என்ன கமலஹாசனா? சாரி ஜார்ஜ் புஷ்ஷா? :)//

சொன்னதையும் சொல்லிட்டு அதை என் பேர்ல திருப்பி வேற விடறீங்க பாருங்க நீங்க புஷ்ஷைவிட ஆபத்தமான ஆதங்கவாதி.

இன்னிக்கு என்ன இங்கயும் ஒரு 50 போல? வாழ்த்துகள் :-)

said...

//சாக்ரடீஸ் போன்று மேலை நாட்டில் மட்டும்தான் மேதைகள் உருவாகமுடியும், //

நான் சொல்ல வந்தது எல்லாம் அடுத்த நாள் காலையில் விஷம் குடிக்கப் போறவன் பேசற மாதிரி இருக்கும் எழுத்துக்கள் என்பதை. அதற்குள் மேதை என்ற போதையில் சிக்கித் தள்ளாடி சின்னாப்பின்னமாகிட்டீரே!!

//நம் உவ்வேக்காளர்கள் மேதைகளாக இருக்கமுடியாது - //

இப்போ அவங்களை ஏன் இழுக்கறீங்க?

//ழான் கோ மான் எழுத்துகளுக்குப் பிறகு இங்கேதான் நான் பார்க்கிறேன்.//

கோ மான் என்று சொல்லும் பொழுதே அதிகாரத்தில் இருப்பவர்களுக்குக் காவடி தூக்கும் உம் அடிவருடித்தனம் தெரிகிறதே. கோமான் எனச் சொல்லத் தெரிந்த வாய்க்குப் பாட்டாளி என்று சொல்லத் தெரியாதது ஏன்?

said...

///கடைசியா இப்போ வர நிறையா பதிவுகளில் ஏகப்பட்ட எழுத்துப் பிழைகள். //
அடடா.. இந்தப்பதிவையே படிச்சிருக்கக்கூடாதோ?//

ஏன்? எழுத்துப் பிழைகள் என்ற குறைகள் உடைய நிறையா(த) பதிவுகளைப் படிப்பதில்லை என நான் சொன்னதுக்கும் நீர் சொல்வதற்கும் என்ன தொடர்பு என்பதே தெரியவில்லையே!!

(நாங்க க்ளீன் ஷேவனாக்கும்!)

said...

//துளசி கோபால் said...

:-))))))))))))))))))))))))))//

ரீச்சர், இப்படி வில்லன் சிரிப்பு சிரிச்சா என்ன அர்த்தம்?

said...

//சொன்னதையும் சொல்லிட்டு அதை என் பேர்ல திருப்பி வேற விடறீங்க பாருங்க நீங்க புஷ்ஷைவிட ஆபத்தமான ஆதங்கவாதி.//

எனக்கு என்ன ஆதங்கம்? நல்லாத்தானே இருக்கேன்!!

//இன்னிக்கு என்ன இங்கயும் ஒரு 50 போல? வாழ்த்துகள் :-)//

நன்னி. எல்லாம் உங்க ஆசீர்வாதம்தான்!! :)

said...

//கீதாம்மா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!! :)//

இதையே எத்தனை வாட்டி ஜி3 பண்ணுவீங்க?? கொஞ்சம் மாத்துங்க இ.கொ. போரடிக்குது! :P

said...

//Son, there are some rules in life. When you are in a public place, there are things you can see, but you can't touch//

touch-y! :-))

said...

//பார்த்தாச்சு, மாட்டியாச்சு. அடுத்தது என்ன செய்ய. முதலில் யாரைப் பார்த்தோமோ அவங்களை மட்டம் தட்டி விட வேண்டும்//
இதுக்குன்னே நான் ஒரு பதிவை மோகனோட ப்ளாக்ல போட்ருக்கேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்க
http://mohankandasami.blogspot.com/
//எழுத்துப் பிழைகள் இருக்கும் பதிவுகளை இப்போ எல்லாம் புறக்கணிக்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன்//ஐயய்யோ அப்டின்னா என் பதிவுப் பக்கம் வரவே மாட்டீங்களா?
//ஆஸ்கார் பிலிம்ஸ் என தசாவதாரத்தில் வரும் பொழுது அந்தப் பையன் சட்டையில் 'கேப்டன்' அப்படின்னு எழுதி இருக்கும். அது எதேச்சையா நடந்திருப்பது. அதன் மூலம் கமலை விட விஜயகாந்த் எவ்வளவோ மேல் அப்படின்னு ரவிசந்திரன் சொல்ல வராரு அப்படின்னு ஒரு பதிவு போட்டா அது இந்த மாதிரி நுண்ணரசியல்//ஆஹா இப்படியும் பண்ணுவாங்களா? இதுக்குப் பேருதான் நுண்ணரசியலா? நான் இப்படி எழுதறவங்களை சுப்ரமணியம் சாமியின் அடிப்பொடிகள்னு நெனைச்சிருந்தேன். அவிங்களுக்கு நுண்ணரசியல்வாதிங்கன்னு ஒரு பேரு வேற இருக்கா?

said...

//பின்னூட்டமா ஒரு சிரிப்பானாவது போட்டுட்டு போனா//

:))

வால்பையன்

said...

//சரவணகுமரன் said...
//கமலை விட விஜயகாந்த் எவ்வளவோ மேல் அப்படின்னு ரவிசந்திரன் சொல்ல வராரு
நான் அதுக்கு அர்த்தம் கேப்டன் சின்னப்பையன்னு சொல்ல வராருன்னுல நினைச்சேன்.//

இதுவும் நுண்ணரசியல் தான்

வால்பையன்

said...

ஆமா நுண்ணரசியல் அப்படின்னா என்னாங்க ? அடிக்கடி கொத்ஸ் இது பத்தியே பேசிட்டு இருக்கார்?

பேசாம " இலவச நுண்ணரசியக் கொத்தனார்" அப்படின்னு பேர் வச்சுக்கும்வோய்!!

//1. எழுத்தில் மட்டும் சந்திக்கும் பதிவர்களை நேரிலும் சந்திக்க ஆசைப்படுவீர்களா? யார் யார் உங்கள் லிஸ்டில்?//
இதுக்கான பட்டியலில் என் பெயரைக் காணவில்லை. அதனால இந்தப் பதிவை நான் புறக்கணிக்கிறேன்

said...

'Paaraattugiren' enbadhil ulla nunnarasiyalai paarthu piramikkavum!!!

Enakkum thamizhil ezhudha aasaidhaan.

Eppadi endruthaan thriyavillai.

said...

//இதையே எத்தனை வாட்டி ஜி3 பண்ணுவீங்க?? கொஞ்சம் மாத்துங்க இ.கொ. போரடிக்குது! :P//

கீதாம்மா, அவற்றின் பெயர் ரெம்பிளேற் பின்னூட்டங்கள். சும்மா மொக்கையா தகவலுக்கு நன்றி, சூப்பர் பதிவு, உள்ளேன் ஐயான்னு எல்லாம் பின்னூட்டம் போட்டா அதுக்கெல்லாம் என்ன பதில் சொல்லறது. அதுக்குன்னு இருக்கும் சில பாரம்பரியமான பின்னூட்டங்கள் ரெம்பிளேற் பின்னூட்டங்கள்.

உங்களுக்கு அடிக்கடி ரெம்பிளேற் பின்னூட்டங்கள் பதிலா வருதுன்னா.....

said...

//touch-y! :-))//

ரவி, அதான் டச் பண்ணக்கூடாதுன்னு சொல்லியாச்சே. வெறும் லக்கி, சாரி, லுக்கி!! :))

said...

//இராம்/Raam said...

:))//

இராம், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. (எதுக்கும் கீதாம்மாவிற்குச் சொன்னதைப் பார்க்கவும்)

said...

////பார்த்தாச்சு, மாட்டியாச்சு. அடுத்தது என்ன செய்ய. முதலில் யாரைப் பார்த்தோமோ அவங்களை மட்டம் தட்டி விட வேண்டும்//
இதுக்குன்னே நான் ஒரு பதிவை மோகனோட ப்ளாக்ல போட்ருக்கேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்க
http://mohankandasami.blogspot.com///

ராப், பாத்துட்டாப் போச்சு!! (நல்லாப் போஸ்டர் ஓட்டறாங்கப்பா!!)

//ஐயய்யோ அப்டின்னா என் பதிவுப் பக்கம் வரவே மாட்டீங்களா? //

ரொம்பப் படுத்தினா வர மாட்டேன்!

//ஆஹா இப்படியும் பண்ணுவாங்களா? இதுக்குப் பேருதான் நுண்ணரசியலா? நான் இப்படி எழுதறவங்களை சுப்ரமணியம் சாமியின் அடிப்பொடிகள்னு நெனைச்சிருந்தேன். அவிங்களுக்கு நுண்ணரசியல்வாதிங்கன்னு ஒரு பேரு வேற இருக்கா?//

நவ் யூ நோ!! :))

said...

//
:))

வால்பையன்//

வால்ஸ், ராமுக்குச் சொன்னதுதான்!

said...

//இதுவும் நுண்ணரசியல் தான்

வால்பையன்//

அதான் சொல்லியாச்சே, அதுவும் நுண்ணரசியல்தான். அதுவும் க.க.நு. :))

said...

//ஆமா நுண்ணரசியல் அப்படின்னா என்னாங்க ? அடிக்கடி கொத்ஸ் இது பத்தியே பேசிட்டு இருக்கார்?//

யோவ் பக்கம் பக்கமா நுண்ணரசியல் என்றால் என்ன என வரைந்து பாகம் குறித்து வெச்சு இருக்கேன். அப்படின்னா என்னான்னு கேட்டா என்ன அர்த்தம். பதிவைப் படியுமய்யா!

//பேசாம " இலவச நுண்ணரசியக் கொத்தனார்" அப்படின்னு பேர் வச்சுக்கும்வோய்!!//

எழுத்துப் பிழை இருக்கு போல. அதை சரி செய்யுமய்யா!!

//இதுக்கான பட்டியலில் என் பெயரைக் காணவில்லை. அதனால இந்தப் பதிவை நான் புறக்கணிக்கிறேன்//

பட்டியல் இடாப்புன்னு எதாவது போட்டு இருக்கேனா? ப.ப. (அதாங்க பதிவைப் படியுமய்யா. அதையே சொல்லி சொல்லி மாளலை!)

said...

//'Paaraattugiren' enbadhil ulla nunnarasiyalai paarthu piramikkavum!!!//

அது சரி

//Enakkum thamizhil ezhudha aasaidhaan.

Eppadi endruthaan thriyavillai.//

ரொம்ப சிம்பிள்தானே. கூகிளாண்டவர் கிட்ட ekalappai அப்படின்னு வேண்டிப் பாருங்க. அவரு அதைத் தரவிறக்கச் சொன்ன இடத்தில் இருந்து தரவிறக்கம் செய்து உங்க கணினியில் இருத்திக் கொண்டால் தமிழில் தட்டச்சலாம்.

அஞ்சல் முறையைப் பயன்படுத்தினால் ammaa என அடித்தால் அம்மா என வரும் என்று நான் சொன்னேனானால் அதனைக் கொண்டு க.க.நு செய்ய முடியுமாதலால் தமிழ்99 விசைப்பலகையையும் பாவிக்கலாம் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்மண முகப்பில் கூட தமிழில் எழுதுங்கள் என சில சுட்டிகள் இருக்கிறது பாருங்கள்! :)

said...

மிக்க நன்றி இ கொ அவர்களே.

வெங்கடேச்
(SH i could not find now). I will learn and post later.

said...

வெங்கடேஷ், சூப்பர்!! ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. அஞ்சல் வழி எழுதறீங்களா இல்லை தமிழ் 99? அஞ்சலா இருந்தா sh போட்டா ஷ் வரும்.

said...

கேள்வி #3 & #4க்கு கொடுத்த விடைகளில் பதிவுகளில் இருந்து உதாரணம் கொடுத்திருந்தால், இன்னும் சூடாக இருந்திருக்கும். எங்களுக்கு எடுத்துக்காட்டின மாதிரி இருக்கும் ;)

said...

பாபா, நீங்க ஊரில் இருந்தா சுட்டி எல்லாம் குடுத்து இருக்கலாம். நீங்க இல்லையா, அதான் முடியாமப் போச்சு. என்ன இப்போ இதை ரெபர் பண்ணி நீங்க ஒரு பதிவு போடுங்களேன்!! :))

said...

எனக்கெல்லாம் படிக்கத்தான் தெரியும்; நீங்க எழுதியதற்கு விளக்கவுரை எல்லாம் தெரியாதே...

பொருத்தமான சுட்டி கொடுத்தால் எதை சொல்றீங்கன்னு, எந்த மாதிரி எழுத்தை குறிப்பிடுறீங்க என்பதெல்லாம் தெளிவா விளங்கும் இல்லையா...

said...

பதிவே எழுதாதவராக பார்த்து கேள்வியை கேட்டு... இந்த கேள்வி பதிலை முடிக்க சிறந்த வழியை எப்படி கண்டுபிடித்தீர்கள்?? இல்லை இதுவும் நுண்ணரசியலா?

said...

//எனக்கெல்லாம் படிக்கத்தான் தெரியும்; நீங்க எழுதியதற்கு விளக்கவுரை எல்லாம் தெரியாதே...//

விளக்கம் எல்லாம் நாங்க பாத்துக்கிடுவோம். ஆனா தகுந்த சுட்டியைத் தேடித் தர உம்மை விட்டா யாரு....

//பொருத்தமான சுட்டி கொடுத்தால் எதை சொல்றீங்கன்னு, எந்த மாதிரி எழுத்தை குறிப்பிடுறீங்க என்பதெல்லாம் தெளிவா விளங்கும் இல்லையா...//

இதெல்லாம் கொஞ்சம் பூடகமா (சரியாப் படிங்க ஊடகம் இல்லை) சொன்னாலே நம்ம ஆளுங்க எல்லாம் புரிஞ்சுப்பாங்கன்னு ஒரு நம்பிக்கைதான். அது மட்டும் இல்லை. உங்களுக்குத் தெளிவா விளங்கும் நேரத்தில் எனக்கு ஆட்டோ வரும் இல்லையா....அதான்.

said...

//பதிவே எழுதாதவராக பார்த்து கேள்வியை கேட்டு... இந்த கேள்வி பதிலை முடிக்க சிறந்த வழியை எப்படி கண்டுபிடித்தீர்கள்?? இல்லை இதுவும் நுண்ணரசியலா?//

குமார், என்ன இவ்வளவு லேட்டு? பதிவே எழுதாதவர் பதிவெழுதி அதையும் போட்டாச்சே. இதில் என்ன நுண்ணரசியல்.

ஆனா என்னமோ பதிவுக் கயமைத்தனமாம். எதுக்கும் அடுத்த பதிவோட டிஸ்கியைக் கொஞ்சம் படிச்சிடுங்க.