Wednesday, October 08, 2008

புதசெவி - 10/08/2008

செப்டம்பர் மாதம் புதிர், சாரு அப்படின்னு விறுவிறுப்பா போனதினால புதசெவி போடாமா விட்டுப் போச்சு. அதான் இந்த மாத துவக்கத்திலேயே, பஞ்ச் அண்ணா காதைப் பிடிச்சு திருகறதுக்கு முன்னாடியே, இதை போட்டாச்சு.

செய்தி 1

இது நம்ம ஊர் செய்தி. ஆனா நம்ம ஊர் பத்திரிகைகளிலேயோ அல்லது பதிவுகளிலேயோ படிக்கவே இல்லை. தில்லி அருகே நோய்டாவில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த கிட்டத்தட்ட நூறு பேர் பணி நீக்கம் செய்யப் பட்டார்களாம். அவர்களோடு பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த பொழுது தகராறு முற்றி அந்நிறுவனத்தின் தலைவரைப் போட்டுத் தள்ளிவிட்டனராம் அந்த ஊழியர்கள். முழு செய்திக்கு இங்கே போகலாம்.

பஞ்ச்:
வன்முறை மூலம் எந்தப்பிரச்சினைக்கும் தீர்வு வராது என்பதிலும், தொழில்முனைவோர் மீதான தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்பதிலும், இவ்வாறு செய்பவர்கள் நம் மாநிலத்தைப் பின்னுக்கு இழுத்துச் செல்கிறார்கள் என்பதிலும் எள்ளளவும் சந்தேகமில்லை - யோவ் முதல்லியே சொல்றதில்லையா? நம்ம ஊர் இல்லைன்னு.. பிரச்சினையை வேரோடும் வேரடி மண்ணோடும் களைந்த தொழிலாளச் சகோதரர்களுக்கு ஒரு செவ்வணக்கம்! பூர்ஷ்வாக்கள் தோழர்களின் ரத்தம் உறிஞ்சும்முன் சிந்திக்கவேண்டும் - இப்படி மாத்தி எழுதிக்கோ.


செய்தி 2

இது நேபாள் செய்தி. மனுசனுக்கு 49 வயசு ஆகுது. இதுவரை 24 கல்யாணம் பண்ணிப் பார்த்துட்டாரு. எதுவும் சரியா அமையலை. ஆனா சற்றும் மனம் தளராமல் 25ஆவது கல்யாணத்தையும் செஞ்சுக்கிட்டாரு. இந்தக் கல்யாணத்திற்கு அப்புறம் வாழ்வில் வசந்தம் வீசுதாம். பழைய மனைவிகள் பல பேரோட பெயர் கூட ஞாபகத்தில் இல்லையாம். ரொம்பவே சுவாரசியமான மனிதர்தான். நம்ம பெனாத்தல் வைப்பாலஜி வகுப்புக்கு வேணா பாடம் எடுக்க வரச் சொல்லலாம் போல இருக்கே! படத்தோட இருக்கும் செய்தி இங்கே.

பஞ்ச்: அந்தாளுக்கு அப்சசிவ் கம்பல்ஸிவ் டிஸ் ஆர்டர். இல்லாட்டி இத்தனை முறை தற்கொலை முயற்சி செய்வானா? பெர்ப்பெச்சுவல் ஹனிமூன்ல இருக்க ஆசைப்பட்டு பெர்ப்பெச்சுவல் நரகத்துல இருக்க பைத்தியக்காரன்! ஆனா ஒண்ணு.. இவரு நம்ம ஊருக்கு வந்தா அரசியல்வாதி ஆகறதுக்கான முதல் தகுதி பரிபூர்ணமா இருக்கு- எத்தனை மனைவி, துணைவி-- வாரிசு பத்தி ஒண்ணும் சொல்லல.. இல்லாமலா இருக்கும்?

செய்தி 3

இது சீனாவில் நடந்தது. இவருக்கு வயசு நாலுதான் ஆகுது. இவரை வழிக்குக் கொண்டு வர வாழைப் பழத்திற்குள் ஹெராயின் போதை மருந்தை அடைத்து குடுத்து இருக்கிறார்கள். இவ்வாறு தொடர்ந்து நடந்ததால் போதைப் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டார் இவர். அதிகாரிகள் தக்க சமயத்தில் இவரைக் காப்பாற்றி போதை மருந்து பழக்கத்தில் இருந்து விடுபட மருத்துவமனைக்கு அனுப்பி விட்டார்கள். அங்கு சாதாரணமாக தரப்படும் மருந்தைவிட ஐந்து மடங்கு அதிகம் வலிமையுடைய மருந்தினைத் தந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட மூன்று வருட சிகிச்சைக்குப் பிறகு சமீபத்தில் வெளியே வந்திருக்கிறார் இவர். இவர் சிகுவாங் என அழைக்கப்படும் ஒரு யானை! செய்தி இங்கே.

பஞ்ச்:
இதான்யா கட்டாய மதமாற்றம். மதங் கொண்ட யானைக்கு மாற்று மதத்தைக் காட்டறாங்க பாருங்க - அதுவும் ஸ்ட்ராங்கா!
ஆனா இங்க கட்டாய மத மாற்றச் சட்டம் கொண்டு வந்தா யாரும் எதிர்க்க மாட்டாங்க.

செய்தி 4

வீட்டைத் தலைகீழா செய்யறான் அப்படின்னு பல பேர் சொல்லிக் கேட்டு இருப்பீங்க. இந்த வீட்டின் சொந்தக்காரர் சின்ன வயசா இருக்கும் போது அப்படி அடிக்கடி பேச்சு வாங்கி இருப்பாரு போல. வீட்டையே தலைகீழா கட்டி இருக்காரு பாருங்க. கூரை தரையில் இருக்கு. வீட்டுக்குள்ள எல்லாமே தலைகீழா இருக்கு. அந்த பாத்ரூமைப் பயன்படுத்த மாட்டாங்கன்னுதான் நினைக்கிறேன்!! செய்தி இங்கே. இங்க இன்னும் கொஞ்சம் படங்கள்.

பஞ்ச்: மாவுபோ லேமே மாவுபோ ழேகீ ள்பிப்ஆ லடுட்வீ தந்அ.. ட்வுட ருஒ. ஸ்டார் ஹோட்டலுக்கு முதல்முறையா போய், க்ளீன் பண்ண வெளியாளைக் கூப்பிட்ட சர்தார்ஜி ஜோக் ஞாபகம் வருதே!

செய்தி 5

இந்த அம்மாவின் கதை வழக்கமான ஒரு வறுமையில் இருந்து வந்து கோடீஸ்வரி ஆன கதைதான். ஆனால் கதை முழுவதும் திருப்பங்கள். யாரோடும் ஒத்துப் போகாத குணம், தேவையற்ற ஆடம்பரம், அரசாங்கத்துடன் கூட வரி கட்டாமல் சண்டை என வாழ்ந்த இவர் சமீபத்தில் இறந்து விட்டார். அவரது உயிலின் படி அவருடைய நாய்க்குக் கிடைத்தப் பங்கு கிட்டத்தட்ட 12 மில்லியன் அமெரிக்க டாலர்கள். அது போக இவர் ஒரு ட்ரஸ்ட் மூலம் நாய்கள் சம்பந்தப்பட்ட வேலைகளுக்காக தந்திருப்பது 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள்! என்னாத்த சொல்ல. நீங்களே படிச்சுக்குங்க.

பஞ்ச்: //யாரோடும் ஒத்துப் போகாத குணம், தேவையற்ற ஆடம்பரம், அரசாங்கத்துடன் கூட வரி கட்டாமல் சண்டை// பு த செ வி பதிவுல வழக்கமா நான் தான் லோக்கல் அரசியல் பேசுவேன் - இலவசம் - இப்ப நீங்களும் ஆரம்பிச்சுட்டீங்களா?

செய்தி 6

கடைசியா மீண்டும் நம்ம ஊர் மேட்டர். லக்னோ புகை வண்டி நிலையத்தில் குரங்குகள் தொல்லை அதிகமா இருக்காம். அவைகளை பயமுறுத்தி விரட்ட என்ன வழி அப்படின்னு யோசிச்ச பெரியவர்கள் கடைசியா மனுசன் ஒருத்தனுக்குக் குரங்கு வேஷம் போட்டுவிட்டு அங்க இங்க அலைய விட்டுட்டாங்களாம். இங்க போய் அந்த நகர்படத்தைப் பாருங்க. என்ன கொடுமை இது சரவணன்!

பஞ்ச்: சரியான ஐடியா! நாம் எத்தனை குரங்கைப் பாத்து மனுஷன்னு ஏமாந்திருக்கோம்! குரங்குகளுக்கும் ஏமாற ஒரு சான்ஸ் கொடுத்திருக்காங்க! பிரில்லியண்ட்! ஆனா சில சமயத்துல மத்த குரங்குகளுக்கும் நமக்கும் வித்தியாசம் காட்டணும். சில சமயத்துல காட்டக்கூடாது. தந்தி கொடுக்கவேண்டிய நேரத்துல சரியா கொடுத்திரணும். காலை வார வேண்டிய டயத்தில் அதையும் செய்யணும். இல்லாட்டி மத்த குரங்குங்க நம்ம இடத்தை ஆக்கிரமிச்சுடும். இதான்யா பகூத் அறிவு! அதை நல்லா எடுத்தாண்டு இருக்காங்க பாரு!

26 comments:

said...

பஞ்சார் ரொம்ப நல்ல மூடில் இருக்காரு போல. கொஞ்சம் காரம் கம்மிதான்.

said...

Bathroom..:))

said...

வாஸ்தவம். காரம் கம்மிதான். ஏன் இல்லவே இல்லைன்னு கூட சொல்லலாம். பஞ்சார் பஞ்சர் ஆயிட்டாரா?

said...

ஆப்பிள் எப்படிப் போனா என்ன? பாத்ரூம் எப்படி போறது?!?!

said...

very worried what will they do for washing:)

said...

//சர்தார்ஜி ஜோக் ஞாபகம் வருதே!//

அது என்ன ஜோக்கு?

நல்லா இருக்கு எல்லா மேட்டரும். குட் கலெக்ஷன் :-))

said...

//Bathroom..:))//

யப்பா ராசா, காலங்கார்த்தால பதிவைப் படிச்சியா வேற ஒண்ணுமேவா தோணலை? ஹூம்!!

said...

//வாஸ்தவம். காரம் கம்மிதான். ஏன் இல்லவே இல்லைன்னு கூட சொல்லலாம். பஞ்சார் பஞ்சர் ஆயிட்டாரா?//

சரி இந்த முறையாவது செய்திகளைப் பத்தி சொல்லி இருக்கலாமுல்ல...

said...

//இதான்யா கட்டாய மதமாற்றம். மதங் கொண்ட யானைக்கு மாற்று மதத்தைக் காட்டறாங்க பாருங்க// இந்த பஞ்ச் நல்லா இருந்தது. லியோனா பழைய நியூஸ். மத்ததெல்லாம் எங்கிருந்து தான் புடிக்கிறீங்களோ!

//தந்தி கொடுக்கவேண்டிய நேரத்துல சரியா கொடுத்திரணும்// "மந்தி"(ரி) சபையில் பங்கு...னு பஞ்ச் இருந்துருக்கணுமே?

வல்லிம்மா //very worried what will they do for washing:)... // ஒரு பதில் இருக்கு. எஸ்...

said...

//எத்தனை மனைவி, துணைவி-- வாரிசு பத்தி ஒண்ணும் சொல்லல.. இல்லாமலா இருக்கும்?
//

ஹிஹி, வளர்ப்பு மகன்களை வேணும்னு விட்டுடீங்களா? இல்ல
... :p


அமெரிக்காவுக்கு ஆட்டோ வராது!னு தைரியமா? :))

said...

// ஆப்பிள் எப்படிப் போனா என்ன? பாத்ரூம் எப்படி போறது?!?!//

என்னாது? ஆப்பிள் போகுமா? அது எப்படி?

யோசிப்பவரே, உம்ம கூட சேர்ந்து எப்படி எல்லாம் யோசிக்கத் தோணுது?

said...

//very worried what will they do for washing:)//

அது சரி!! வல்லிம்மா உங்க கவலை உங்களுக்கு!!

said...

பஞ்ச் எப்போதும் போல இல்லைன்னாலும்.........எத்தனை குரங்குகளை மனிதர்ன்னு நினைச்சு ஏமாந்திருக்கோம்...இது கலக்கல் :)

ஆமாம், நான் அந்த நோய்டா கதை படிச்சேன்...கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சு படிக்கும் போது

said...

////சர்தார்ஜி ஜோக் ஞாபகம் வருதே!//

அது என்ன ஜோக்கு? //

என்னடா, யாரும் கேட்கலையேன்னு நினைச்சேன். நீர் வந்து மாட்டிக்கிட்டீரா? மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் மாதிரி இப்போ ஒண்ணு ஆரம்பிக்கப் போகுதுன்னு எனக்குத் தோணுது!! ஆல் தி பெஸ்ட்!

//நல்லா இருக்கு எல்லா மேட்டரும். குட் கலெக்ஷன் :-))//

நன்னி தல!

said...

//இந்த பஞ்ச் நல்லா இருந்தது. //

இப்போதைக்கு பஞ்ச் அண்ணாவோட பேவரேட் பதிவராகிட்டீங்க. வாழ்த்துகள்!!

//லியோனா பழைய நியூஸ். மத்ததெல்லாம் எங்கிருந்து தான் புடிக்கிறீங்களோ! //

உனக்காக எல்லாம் உனக்காக
இந்த சுட்டியை வெட்டி ஒட்டிவிடுவதும் உனக்காக!! :))

//"மந்தி"(ரி) சபையில் பங்கு...னு பஞ்ச் இருந்துருக்கணுமே?//

ஆஹா!! நீங்கதான் பஞ்ச் அண்ணாவா? ச்சீ அக்காவா? இப்படி இந்த ஐடியில் வந்து கரெக்‌ஷன் தரீங்க!!

//வல்லிம்மா //very worried what will they do for washing:)... // ஒரு பதில் இருக்கு. எஸ்...//

பதில் ப்ளீஸ்!!

said...

//ஹிஹி, வளர்ப்பு மகன்களை வேணும்னு விட்டுடீங்களா? இல்ல
... :p//

ஆத்தா ஆடு வளக்கல, கோழி வளக்கல ஆனா பூனையை மட்டும்தானே வளத்திச்சு..... :))

//அமெரிக்காவுக்கு ஆட்டோ வராது!னு தைரியமா? :))//

நான் உள்ளதைத்தான் சொன்னேன். அந்த கனெக்‌ஷன் செஞ்சது எல்லாம் பஞ்ச். ஆட்டோ அவர் ஊருக்குப் போகுமான்னு தெரியாதே...

said...

//பஞ்ச் எப்போதும் போல இல்லைன்னாலும்.........எத்தனை குரங்குகளை மனிதர்ன்னு நினைச்சு ஏமாந்திருக்கோம்...இது கலக்கல் :)//

நீரும் அவரோட டாப் பதிவர் லிஸ்டில் சேர்ந்தாச்சு போல!! ஆனா பஞ்சாரைப் பார்த்தா உம்ம ஆன்மீகப் பதிவு எல்லாம் படிக்கிற ஆளாத் தெரியலையே!!

//ஆமாம், நான் அந்த நோய்டா கதை படிச்சேன்...கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சு படிக்கும் போது//

ஒண்ணும் இல்லாததுக்கு எல்லாம் ஐடியை விமர்சிக்கும் தோழர்கள் இதைப் பத்தி மூச்சு கூட விடாததுதான் ஆச்சரியம் அப்படின்னு சொல்ல வந்தேன். அப்புறம் இதில் என்ன ஆச்சரியம் இருக்குன்னு தோணிச்சு. இல்லையா!!

said...

This article came on TOI Delhi edition on 6th October.

The untold story about CEO’s murder

Contrary to what Oscar Fernandes led us to believe, the labour unrest at Graziano was not a result of the company’s ‘hire-and-fire’ policy. Manoj Mitta finds out it was just a case of 5 trainees — out of 70 — not being confirmed

Labour minister Oscar Fernandes did apologize for describing the murder of a CEO in a labour dispute as a ‘‘warning’’ to managements. He has however got away with a misrepresentation that the strike in Graziano Transmissioni’s Greater Noida plant was by ‘‘contract workers’’ who were protesting the ‘‘hire-and-fire policy’’ and ‘‘disparity in wages’’.
The protestors were actually permanent workers and, since they were anyway better paid than recently recruited contract workers, there was no question of their protesting against disparity in wages. The dispute wasn’t about any hire-and-fire policy either because none of the permanent workers was dismissed or even suspended before the strike started on May 12. The strike that led to the lynching of CEO Lalit Chaudhary on September 22 in the MNC’s factory premises had been triggered by an absolute non-issue: the management’s sole discretion to decide whether a trainee is fit to be offered regular employment.
The workers initiated ‘‘go slow’’ tactics on May 12 simply because the management had decided at the end of a six-month training programme that five out of as many as 70 trainees did not deserve to be offered regular employment. The rejection rate works out to less than 10% of the trainees, a fair proportion by any standards.
Yet, Birendra Sirohi, the external union leader associated with the strike, claimed to TOI that Graziano’s permanent workers were justified in demanding the retention of those five trainees in order to counter the management’s ‘‘machination’’ to replace them with contract workers. ‘‘You can’t go only by the book,’’ Sirohi said, when it was pointed out the management’s free hand in sacking trainees was universally recognized.
Deputy labour commissioner B K Singh recalls that his colleagues then tried in vain to convince Sirohi and other worker representatives that since they legally had no say in the confirmation of trainees, they could not resort to strike on such an issue. ‘‘Whatever gloss they may put on it, the workers cannot wish away this infirmity in their case,’’ Singh told TOI.
Since the strike continued despite the intervention of the labour department, the management suspended 27 workers a week later on May 19 on the charge of ‘‘serious misconduct’’ and asked them to participate in a domestic inquiry in keeping with the prescribed procedure. The workers however boycotted the inquiry, which was therefore conducted ex parte as provided in law.
It was as a result of this inquiry against the 27 suspended employees that, two months later on July 15, the management terminated the services of 15 of them while reinstating the rest. While the reinstated members resumed duty the next day, the striking workers demanded that the terminated ones should also be taken back. Their justification, according to Sirohi, was that the terminated employees happened to be the ones leading the strike.
The fight for the terminated employees in turn affected a settlement concerning 250 other workers who had meanwhile been subjected to a ‘‘lockout’’. Under the settlement brokered by the labour department on July 8, the locked out workers were then being re-inducted in three phases. Though the lockout was due to be lifted in the second phase for a batch of 55 workers on July 21, none of them reported for duty on that day as an expression of solidarity with the 15 terminated employees. In the subsequent talks on August 6, it was the turn of the management to walk out as the terminated employees insisted that they would continue to represent the workers. Three days later, the two government representatives, including B K Singh, submitted a report to the Noida DM, recommending that a reference be made to the labour court to decide the legality of the strike as well as the lockout.
As the stalemate dragged on for another month, the management returned to negotiations and on September 16, Chaudhary offered in the presence of B K Singh and Sirohi that, other than the 15 terminated employees, he would take back all those locked out workers if they gave individual undertakings to maintain discipline and productivity. The deadline fixed for such applications was September 22, the fateful day on which Chaudhary was killed and 23 injured in an incident without a precedent in post-reforms India.
Since it did not yield on the issue of terminated employees, the response of the striking workers to the September 16 settlement was poor. By the last day, the management received only eight applications and B K Singh had received another seven, out of some 250 locked out workers. There are conflicting versions on how exactly the striking workers gatecrashed into the factory. While the striking workers found in and around the factory were rounded up, Sirohi himself escaped arrest since he was not present on that crucial day. He blames the lawlessness on the management’s ‘‘covert attempts to prevent the workers from unionizing and to replace permanent workers with contract workers.’’
The management is equally aggrieved with permanent workers for disrupting work even after they had all been given a generous hike under a government-brokered settlement only this January. As for the absence of a registered trade union in the 10-year-old plant, spokesperson Gianni Sarti wrote to TOI from Europe that there was never a request to form one till the end of last year.
If the workers still could not register a trade union despite repeated efforts since November 2007, the company disclaims responsibility for it as the registration has to be done by the government. ‘‘We respect the right of the employees and welcome a legal union to discuss and negotiate on issues of mutual concern in the spirit of win-win environment,’’ Sarti said. Indeed, Fernandes would do well to introspect on the contribution of UP’s registrar of trade unions to the crisis at Graziano.
Sarti also denied the labour minister’s insinuation that the company had precipitated the problem by resorting to a hire-and-fire policy. ‘‘Given the high-tech mechanical products made by Graziano, it takes enormous investment in terms of time as well as human and financial resources to train and grow the capability of our work force.’’
All the same, the company could reopen the factory within a week of the tragedy largely on the strength of contract workers. The lessons from Graziano are rather different from the knee-jerk reaction of Fernandes.

Times View

Labour minister Oscar Fernandes was not just being insensitive about the murder of L K Chaudhury, the Noida CEO who was bludgeoned to death by workers, he was as it now turns out talking through his hat. Graziano, the Italian company, had not laid off any permanent worker; in fact, it hadn’t sacked temporary workers either.It had only used its discretion and not confirmed five of its 70 trainees. This is a common practice and entirely legal. In this case, the labour union leaders had ignored the pleas of the labour commissioner, taken the law into their own hands and were pressing a case that was tantamount to blackmail of the management. Quite apart from apologizing for his facile remarks, Fernandes should now actively seek exemplary punishment for the murderous workers so that a warning goes out to every reckless labour leader against adopting strong-arm tactics.

-Arasu

said...

அரசு, செய்திக்கு நன்றி. ஆனா படிச்ச பின்னாடி அடப்பாவிங்களான்னுதான் தோணுது. இந்த மந்திரியை எல்லாம் கட்டி வெச்சு உதைக்க வேண்டாம்? :((

said...

///சில சமயத்துல மத்த குரங்குகளுக்கும் நமக்கும் வித்தியாசம் காட்டணும். சில சமயத்துல காட்டக்கூடாது. தந்தி கொடுக்கவேண்டிய நேரத்துல சரியா கொடுத்திரணும். காலை வார வேண்டிய டயத்தில் அதையும் செய்யணும். இல்லாட்டி மத்த குரங்குங்க நம்ம இடத்தை ஆக்கிரமிச்சுடும். இதான்யா பகூத் அறிவு! ///

இது ஒண்ணுதான் பன்ச் அண்ணாவின் ரேன்சு. மத்ததெல்லாம் பன்ச்சோட போலி எழுதுன மாதிரி இருக்கு

said...

//இது ஒண்ணுதான் பன்ச் அண்ணாவின் ரேன்சு. மத்ததெல்லாம் பன்ச்சோட போலி எழுதுன மாதிரி இருக்கு//

வாய்யா சங்கரு. ஆனாலும் வெறும் பஞ்ச் கமெண்ட் மட்டும் படிச்சுட்டு பின்னூட்டம் போடறது எல்லாம் உமக்கே இரண்டாம் மாடியாத் தெரியலை? (அதான்யா டூ மச்சு)

ஆனா நீர் சொல்லறதைப் பார்த்தா பஞ்ச் அண்ணா கால்ஷீட் கிடைக்காம நானே அவரு கமெண்டை எழுத்திட்ட மாதிரி சந்தேகப்படறீரோ?

said...

//நீர் சொல்லறதைப் பார்த்தா பஞ்ச் அண்ணா கால்ஷீட் கிடைக்காம நானே அவரு கமெண்டை எழுத்திட்ட மாதிரி சந்தேகப்படறீரோ?//


என்னதிது பூனைக்குட்டி, யானைக்குட்டி எல்லாம் வெளில வரது :)))

said...

//என்னதிது பூனைக்குட்டி, யானைக்குட்டி எல்லாம் வெளில வரது :)))//

நீர் சந்தேகப்படறீரான்னு கேட்டதை என் கன்பெஷனாவே எடுத்துக்கிட்டா என்ன செய்ய! :))

said...

//என்னதிது பூனைக்குட்டி, யானைக்குட்டி எல்லாம் வெளில வரது :)))//

பரமசிவத்தோட பஞ்ச்-ங்கிறதினால யானைக்குட்டிங்கிறதுதான் கரெக்ட்.

//நீர் சந்தேகப்படறீரான்னு கேட்டதை என் கன்பெஷனாவே எடுத்துக்கிட்டா என்ன செய்ய! :))//

லைட்டா ஸ்லிப் ஆனாலும் என்னா க்ரிப்பா நிக்கிறாரு பாருங்க. அதான் கொத்தனார் :-)

said...

///இலவசக்கொத்தனார் said...

ஆனா நீர் சொல்லறதைப் பார்த்தா பஞ்ச் அண்ணா கால்ஷீட் கிடைக்காம நானே அவரு கமெண்டை எழுத்திட்ட மாதிரி சந்தேகப்படறீரோ?////

என்ன இப்படிக் கேட்டுடீங்க இலவசம். பஞ்சாரோட போலி ரேஞ்சில கூட உங்களைச் சொல்லுமளவிற்கு பகூத் அறிவு(இருக்கான்னு தெரியாது...ஒரு வேளை இருந்தா) குறைந்து விடவில்லை எனக்கு.:)

நீங்க அதையும் தாண்டிப் புனிதமானவர் அப்படீன்னு சொல்ல வந்தேன் அப்படீன்னு நெனைச்சு மனசைத் தேத்திக்கோங்க :)

said...

//வாய்யா சங்கரு. ஆனாலும் வெறும் பஞ்ச் கமெண்ட் மட்டும் படிச்சுட்டு பின்னூட்டம் போடறது எல்லாம் உமக்கே இரண்டாம் மாடியாத் தெரியலை?//

இப்படிச் சொல்லுதீரே, ஒமக்கே அடுக்குமா இது? செய்தியாவே... போடுதீரு?இங்கன அன்புமணி அய்யா போட்ட தனி மனித உரிமைப் பறிப்பு சட்டத்துனால பப்ளிக் கன்வீனியன்ஸுல நெறைய பப்ளிக்கால போக முடியுமா/ முடியாதான்னு அவனவன் கவலைப்பட்டுக்கிட்டு கெடக்கான். இதுல வீட்டத் தலை கீளா கட்டி வச்ச எவனோ கோட்டி புடுச்ச பய அந்த வூட்டுல இருக்குற கம்மோட்ல உக்காந்து போவானா மாட்டானானு ஆச்சரியப்பட்டு பதிவு போடுதீரே.இதுதான் ஒமக்கிருக்கிற சனநாயக அக்கறையா?

இல்லை,கணினி கடைச்சுருச்சு,யாரு வேணா பொட்டி தட்டலாம், கட்டற்ற பதிவுச் சுதந்திரத்தை எப்படி வேணா யூஸ் பண்ணலாம் என்குற ஆணவமா?

அதுவுமில்லாம பதிவைப் படிச்சீரா அப்படீன்னு என்னைப் பின்னூட்டத்துல(அதுவும் பூடகமா) கேக்கீரே?இதுதான் என்னைப் போல மூத்த பதிவரைக் கேக்குற முறையா?என்னையெல்லாம் கேக்குறதுக்கு ஒரு முறை வேணாமா?நான் உம்ம பதிவையெல்லாம் படிச்சு/படிக்காம பின்னூட்டம் போடுதேன் அப்படீங்குறதுக்காக என் தலை மேல ஏறி என்னையே களுதை மேய்க்கப் பாக்குறீரா?இப்பவும் குடி முளுகலை.'சாரு'க்கானை(அவரு கூட ஃப்ளாக் வச்சிருக்காராமே)பதில் சொல்லச் சொல்லும் உம்ம பதிவப் படிச்சாரா அப்படீன்னுட்டு அப்புறம் நானும் பதில் சொல்லுதேன்.சரியா ?:)