Wednesday, October 29, 2008

புதசெவி - 10/30/2008

புயலுக்குப் பின்னே அமைதி அப்படின்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி நம்ம பதிவுல புதிருக்குப் பின்னே புதசெவிதானே. ஆனா ஒண்ணு பஞ்சார் கமெண்ட் எல்லாம் பார்த்தா இங்க அமைதிக்குப் பின்னே புயல் அப்படின்னுதான் சொல்லணும் போல!

செய்தி 1

வழக்கம் போல இல்லாம இந்த முறை முதல் செய்தி இந்தியாவில் இருந்து இல்லை. ஆனா வலையுலகில் இருந்து. நாம எல்லாம் பதிவு போடறோம் சரி. ஆனா ஜப்பானில் ஒரு செடி பதிவு எழுதுதாம் தெரியுமா? அதன் இலைகளில் சென்சார்களை பொருத்தி அங்கு ஏற்படும் ரசாயன மாற்றங்களைக் கணினியைக் கொண்டு வார்த்தைகளாக மாற்றி பதிவில் ஏற்றுகிறார்களாம். இன்றைக்கு நல்ல வெயில் என்ற ரேஞ்சுக்கு இருக்கிறது பதிவுகள். மேலும் செய்திக்கு
இங்கே.

பஞ்ச்: இலை பதிவு போட்டா சூரியனைக் குறை சொல்லும்ன்றது நம்ம ஊர் விதி! அது ஜப்பான் வரைக்கும் போயிடுச்சா? அதே மாதிரி சூரியன் பளிச்சுன்னு இல்லை, ஒரே மேக மூட்டம் அப்படின்னுதான் பதிவு போடுது. இலைப் பதிவா இலைக்காரன் பதிவான்னு சந்தேகம் வருது. நல்லாப் பாருங்க - மாங்கா செடி எழுதற பதிவா இல்லை செடி எழுதற மாங்காப் பதிவான்னு.. (மாங்கான்னா ஜப்பான்ல கார்ட்டூனாமே!)


செய்தி 2

ஜப்பானிய செடி பதிவு போட்டா ஆப்பிரிக்க யானை குறுஞ்செய்தி அனுப்பக்கூடாதா?! அனுப்புதே. கென்யா நாட்டில் காடுகள் அருகே இருக்கும் வயல்களில் வந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்வதால் அங்கு யானைகளோடு மக்களுக்குப் பெரிய போராட்டமே நடந்து வருகிறது. அதனால் இப்பொழுது ஒரு யானையின் கழுத்துப் பட்டையில் ஒரு சிம் கார்டைப் பொருத்தி அது ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி வரும் பொழுது பலருக்கும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பும்படி செய்து இருக்கிறார்கள். இதன் மூலம் யானை உலவும் இடத்தைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ற மாதிரி தற்காப்பு செய்து கொள்கிறார்களாம். மேலும் செய்திக்கு
இங்கே.

பஞ்ச்: யோவ்.. வரவர உம்ம செய்திகள்லே நம்பகத்தன்மை குறைஞ்சுகிட்டே வருது.. செடி ப்ளாக் எழுதுது, யானை எஸ் எம் எஸ் அனுப்புதுன்னு.. போற பாக்கைப் பார்த்தா தமிழ்நாட்டுல கரெண்ட் இருக்குது, காவிரில வெள்ளம் பாயுதுன்னு கூட எழுதுவீங்க போல! ஆனா, போலீஸ்காரன் வரான் அப்படின்னு எஸ் எம் எஸ் வந்தா அதைப் பார்த்துட்டு தமிழின உணர்வு பொங்கணுமா அல்லது வீட்டில் சத்தியமா அர்ஜெண்ட் ஜோலி இருக்குன்னு பம்மணுமான்னு முடிவு செய்ய வசதியா இருக்கும்.


செய்தி 3

இவருக்கு வயசு 66. பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு வீட்டுக் கடன் மாசம் 600 டாலர் அதிகமாயிருச்சு. பணம் கட்டாததுனால வங்கி வந்து இவரோட காரைத் தூக்கிட்டுப் போயிடுச்சு. அதோட கூட தனியா சமாளிக்க முடியாம மகள் தன்னோட இரண்டு குழந்தைகளைக் கூட்டிக்கிட்டு இவர் வீட்டுக்கே வந்துட்டா. இவ்வளவு கஷ்டங்களும் போதாதுன்னு இப்போ இவரு ஜெயிலில் இருக்காரு. பெயில் கூடக் கிடையாது. ஏன்னு தெரியுமா? வீட்டு வாசலில் புல்லு வளர்க்கலையாம்! இவரு தங்கி இருக்கும் குடியிருப்பின் விதிகள் படி இவரு வாசலில் புல்தரை போட்டு இருக்கணுமாம். இவரு அப்படிப் போடாததுனால இவரு மேல கேஸ் போட்டு இருக்காங்க. அங்க இவருக்கு எதிரா தீர்ப்பு வந்தது. அதற்குப் பின்னும் புல்தரை போடாததுனால இவரைத் தூக்கி உள்ள வெச்சுட்டாங்க. ஒரு வங்கியைக் கொள்ளை அடிச்சுட்டு வேணா புல்தரை போடறேன். அப்படிச் செஞ்சு மாட்டிக்கிட்டாக்கூட பெயில் உண்டு. இது என்ன கொடுமை சரவணான்னு டயலாக் பேசறாரு
பாருங்க.

பஞ்ச்: கமெண்டு சொல்றதுக்கு செய்தியிலே சரியான விவரம் இல்லையே! "பக்கத்து வீட்டில் புல் வளர்க்காதவன் பல் தேய்க்கிறான்.. எதிர் வீட்டில் புல் வளர்க்காதவன் ஃபுல் அடிக்கிறான். இவருக்கு மட்டும் புல் வளர்க்காததால் தண்டனை என்றால் அந்த இறையாண்மையைக் கொளுத்திப் போடுவோம் வாருங்கள்"ன்னும் சொல்லலாம். "அரசு என்ன புலி வளர்க்கவா சொன்னது, புல் வளர்க்கத்தானே சொன்னது? இதைக் கூடக் கேட்கத் திராணியில்லாத நபர்கள் வந்த கணவாய் வழியே திரும்பப் போக வேண்டியதுதானே"ன்னும் சொல்லலாம். எல்லாம் அவர் என்ன இனம்ன்றதைப் பொறுத்தது. அந்தத் தகவலைச் சொல்லுங்க சாமி!


செய்தி 4

கழிவு நீர்க் குழாயை மாற்றுவதற்காக வேலை நடக்கிறது. எப்படி நடக்கிறது தெரியுமா? காலையில் வந்து 20அடி ஆழம், 20 அடி அகலம், 20 அடி நீளம் ஒரு குழி வெட்டறாங்க. அதில் வேலை நடக்கிறது. சாயங்காலம் ஆனா காலையில் வெட்டிய குழியை மூடிவிட்டு அதன் மேல் தார் பூசி வாகனங்கள் செல்ல வசதி பண்ணறாங்க. மீண்டும் அடுத்த நாள் காலையில் வந்து மறுபடியும் குழி வெட்ட ஆரம்பிக்கறாங்க! ஒரு நாளைக்குப் பன்னிரெண்டு மணி நேரம் வேலை பார்த்தா அதில் சரி பாதி இப்படி வெட்டறதுக்கும் மூடறதுக்குமே சரியாப் போகுதாம். இது எங்க தெரியுமா?
இங்க பாருங்க.

பஞ்ச்: ஆஹா .. இதான்யா விஞ்ஞானம்! குழி வெட்ட ஒரு காண்ட்ராக்ட், மூட ஒண்ணு, குழாய் போட ஒண்ணு.. அதுவும் நித்ய சிரஞ்சீவியா காமதேனுவா தினம் தினம் பொழிஞ்சுகிட்டு இருக்கு. ஆமாம் எதுக்கு நீ இதை எல்லாம் ஒரு நியூஸா போட்டுக்கிட்டு இருக்க? நம்ம ஊர் பொதுப்பணித்துறை கண்ணில் பட்டா அனுமதி வாங்காம எங்க டெக்னிக்கை யூஸ் பண்ணறதாச் சொல்லி கோப்பிரைற் வழக்குப் போடப் போறாங்க.

செய்தி 5

இவரு தன் பையனைக் கூப்பிட்டுக் கார் ஒட்டச் சொல்லுவாரு. அதுவும் மெதுவா ஓட்டணும். இவரு பக்கத்தில் உட்கார்ந்துக்கிட்டு கையை லேசா ஜன்னல் வழியா வெளிய நீட்டிக்குவாரு. அவரு கையில் இருக்கும் கயிற்றின் மறுமுனை அவரோட நாயின் கழுத்தில் இருக்கும். கார் ஓட ஓட நாயும் கூடவே வரும். ஒரு வாரத்தில் நாலு மைல் வரை இப்படி இந்தக் கார் ஓடுதாம். என்னடான்னா இவரு நாயை வாக்கிங் கூட்டிக்கிட்டுப் போறாராம். கேட்டா மழை பெஞ்சா நனைய மாட்டேன். என் கால் வலிக்காம இருக்குன்னு பதில் சொல்லறாரு. இது மட்டும் இல்லை. மாடியில் படுக்கையில் படுத்துக்கிட்டு டீவி பார்க்கும் பொழுது சேனல் மாத்தணமுன்னா ஒரு குரல் குடுப்பாராம். கீழ இருந்து பையன் வந்து சேனல் மாத்துவானாம். இவருக்கு சமீபத்தில் இவங்க ஏரியாவின் மிகப் பெரும் சோம்பேறி பட்டம் குடுத்து இருக்காங்க! மேலும் படிக்க
இங்க.

என் கேள்விகள் இவரு என்ன வேலை பார்க்கிறாரு? அரசாங்க உத்யோகமாத்தான் இருக்கணும். பையன் கார் ஒட்டறதுக்குப் பதிலா நாயை வாக்கிங் கூட்டிக்கிட்டுப் போகலாமே! டீவிக்கு ரிமோட் இல்லையா? அவரோட பசங்க இம்புட்டு நல்லவங்களா?


பஞ்ச்: இவரைப்பத்தி என்னான்னு சொல்றது.. வீட்டுக்குள்ளே அவர் சொல்ற வேலைய உடனே செய்ய ஒரு தற்கொலைப்படையையே தயார் பண்ணி வச்சிருக்காரு. எந்தப்பக்கம் பேசினாலும் கைது - பயம்! நாய் சங்கிலியை காரில் பிடிச்சுக்கிட்டு போறாரு. இதுக்கும் மனிதச் சங்கிலியைக் காரில் போய் பார்ப்பதற்கும் ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடின்னு சொன்னாலும் ஆட்டோ நிச்சயம். அதனால இவரு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எந்த இயர்லே பாஸ் பண்ணாருன்னு மட்டும் கேட்டுகிட்டு அப்பீட் ஆகிக்கறேன்.


செய்தி 6

கடைசியா நம்ம ஊர் செய்தி ஒண்ணு! ஹிமாசலப் பிரதேசத்தில் நடக்கும் மேட்டர் இது. குடும்பத்துக்கு இருக்கிறது கொஞ்சமே கொஞ்சம் நிலம். இதில் அண்ணன் தம்பி ரெண்டு பேரு சேர்ந்து விவசாயம் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. கல்யாணமாகி தனக்கென குடும்பம் ஒண்ணு வந்து அப்புறம் சண்டை சச்சரவு தொடங்கி இருக்கும் நிலத்தை ரெண்டா பாகம் பிரிக்க வேண்டி வந்தா ஆளுக்குக் கொஞ்சம் கூட மிஞ்சாதே என்ன செய்யன்னு பார்த்தாங்க. இந்த மாதிரி எல்லாம் நடக்காம இருக்க ரெண்டு பேரும் ஒரே பொண்ணைக் கட்டிக்கிட்டாங்க. இவங்க மட்டும் இல்லை இவங்க ஊரில் அனேகம் பேர் இப்படித்தானாம்.
இங்க பாருங்க.

பஞ்ச்: சொத்து நிறைய இருந்தா வடக்கு தம்பிக்கு, தெற்கு அண்ணனுக்கு, வடவடக்கு தங்கைக்குன்னு பாகம் பண்ணிடலாம். கம்மியா இருந்தா என்ன பண்ணறதாம்? ஆனா, இது பெருந்தன்மை எல்லாம் இல்லீங்க.. சம்சாரத்தோட தரும் தன்மை 100%னா, இவங்களுக்கு ஆளுக்கு 50% பெரும்தன்மை இருந்தா போதுமே! குழந்தை பெரும் தன்மை இன்னோரு மேட்டர் - அடல்ட்ஸ் ஒன்லி மேட்டர்.

கடைசியா ஒரு போனஸ்!



என்ன கொடுமை இது சரவணன்!


பஞ்ச்:
இந்தக்கொண்டாட்டத்தில் கூட ஆடினால் தப்பில்லை. ஆனால் அஃதை விவரித்து எழுதப் போந்தால் அஃது ரோம் நகரம் எரிகையில் நீரோ பிடில் வாசித்ததாகப் கொள்ளப்படும்! நம் இனத்தவர்கள் தினம் தினம் செத்துக்கொண்டிருப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் எழுதி வந்தேறிப் பட்டம் பெற இந்தப் பரமசிவம் விரும்பவில்லைல். நீரோவாகக் கருதப்படாமல் இருக்க, சினிமா விமர்சனங்களுக்கும் நமீதா போட்டோவுக்கும் மட்டும்தான் தற்போது பெரும் தன்மையோடு விலக்களிக்கப்பட்டிருக்கிறதுல். இருந்தாலும் வற்புறுத்துவதால் ஒரு கமெண்டைக் கூறிவிடுகிறேன்: இது கட்டவுட்டுக்குக் கல்யாணம்னு நான் எங்கே சொன்னேன்? கல்யாணமா இருந்திருந்தா நல்லா இருக்கும்னுதானே சொன்னேன்!

31 comments:

said...

பஞ்சார் திரும்ப பார்ம்முக்கு வந்தாச்சு போல! :))

said...

;) இப்படியே போனா உம்ம பஞ்சாரை நம்ம ஷியாமளி அத்தைக் கிட்ட சொல்லி அவங்க கதையில ஒரு பாத்திரமாக்கிட வேண்டியது தான்.

கடைசி நியூஸ் பாத்து நிறைய பேருக்கு கண்ணவிஞ்சிடப் போகுது. டிஸ்க்ளைய்மர் போடும்

said...

புதிர்களே போட்டிருக்கலாம்! :P:P:P அடுத்த முறையாவது ஒழுங்கா போடப் பார்க்கணும்னு சபதம் எடுத்திருக்கேன். இப்போ இது தேவையா??? :))))) பஞ்சார் எப்போ ஃபார்மிலே இல்லை?

said...

உங்க குறுக்கெழுத்துப்போட்டியை மிஸ் பண்ணிட்டனேன்னு புதசெவியைப்படிச்சா கடைசீக்கொடுமைய என்னன்னு சொல்லறது. ராதா கல்யாணம், சீதா கல்யாணம் பண்ற காசில யாராவது ஏழைங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு சொல்லுவேன். ஒண்ணும் சொல்லறதுக்கில்ல..

தாய்லாந்தில ஒரு தம்பதியர் வீட்ட சரிபாதியா பிரிச்சுக்கிட்டாங்களே. அதுவும் போடுங்க.

said...

ம்ம்ம், பாக்யாத லஷ்மி பாரம்மா எவ்வளோ நல்ல பாட்டு. மனசு கேக்கலை அதான் மறுபடியும்

said...

பகவதி பகவானின் கல்யாணத்தை இந்த அதிகாலை நேரத்தில் காண எத்தனை கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும். அம்மா பகவானுகி ஜே!

:-)

ஓ. அந்தப் பாட்டு பாக்யத லக்ஷ்மி பாரம்மா மெட்டா? கேட்ட மெட்டா இருக்கேன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்.

said...

//தாய்லாந்தில ஒரு தம்பதியர் வீட்ட சரிபாதியா பிரிச்சுக்கிட்டாங்களே. அதுவும் போடுங்க.// அது மிஸ்ஸிங்கு!

பஞ்ச் சார், கடைசி தான் சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்யான பஞ்சு! சிரிக்கறதா அழுவறதான்னு தெர்யாம என் கட்டவுட்ட்டை அழுதுட்டே சிரிக்கச் சொல்லிட்டேன்:-)

said...

கொத்ஸ் எப்படி இப்படி:) பஞ்ச் அடிக்கறது எல்லாத்தையும் க‌ல‌ந்துக‌ட்டி.

அமைதிக்குப் பின்னே புயல்தான் ச‌ரி.

said...

எனக்கு மட்டும் பாட்டு கேட்க முடியலியே கொத்ஸூஊ

said...

எல்லாப் பஞ்ச்சும் நல்லாஇருந்தாலும், முதலும் கடைசியும் ரசிச்சேன்.

said...

//;) இப்படியே போனா உம்ம பஞ்சாரை நம்ம ஷியாமளி அத்தைக் கிட்ட சொல்லி அவங்க கதையில ஒரு பாத்திரமாக்கிட வேண்டியது தான்.//

அதாவது உயிரோட இருக்கும் ஒருவரைக் கதாபாத்திரமா ஆக்கப் போறீங்க. ஆட்டோ அனுப்பப் போறீங்களா? :)


//கடைசி நியூஸ் பாத்து நிறைய பேருக்கு கண்ணவிஞ்சிடப் போகுது. டிஸ்க்ளைய்மர் போடும்//

டிஸ்கி: இந்த நகர்படத்தை அளித்தது ஜீவ்ஸ். இது சம்பந்தமாக வழக்குத் தொடர நினைத்தால் நீங்கள் நேரடியாக அவரை அணுகலாம்! :)

said...

//புதிர்களே போட்டிருக்கலாம்! :P:P:P //

போட்டா அப்படியே வந்து விடை சொல்லப் போறீங்க!!

//அடுத்த முறையாவது ஒழுங்கா போடப் பார்க்கணும்னு சபதம் எடுத்திருக்கேன். இப்போ இது தேவையா??? :))))) //

தேவையா? தெரிஞ்சா சரி!

//பஞ்சார் எப்போ ஃபார்மிலே இல்லை?//

போன பதிவில் கொஞ்சம் வீக். அதெல்லாம் ரெகுலரா வரவங்களுக்குத் தெரியும்.

said...

// உங்க குறுக்கெழுத்துப்போட்டியை மிஸ் பண்ணிட்டனேன்னு புதசெவியைப்படிச்சா கடைசீக்கொடுமைய என்னன்னு சொல்லறது. ராதா கல்யாணம், சீதா கல்யாணம் பண்ற காசில யாராவது ஏழைங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு சொல்லுவேன். ஒண்ணும் சொல்லறதுக்கில்ல..//

ராதா கல்யாணம் சீதா கல்யாணம் எல்லாம் விடுங்க. இந்தியாவில் இருக்கிறவங்களுக்கு கனடாவில் கட் அவுட் கல்யாணம் அதுவும் இம்புட்டு செலவு பண்ணி.....

//தாய்லாந்தில ஒரு தம்பதியர் வீட்ட சரிபாதியா பிரிச்சுக்கிட்டாங்களே. அதுவும் போடுங்க. //

அது எல்லாருக்கும் தெரிஞ்ச மேட்டரா இருக்கே! அதான் போடலை!

said...

//ம்ம்ம், பாக்யாத லஷ்மி பாரம்மா எவ்வளோ நல்ல பாட்டு. மனசு கேக்கலை அதான் மறுபடியும்//

ரொம்பவே அப்செட் ஆகிட்டீங்க போல! :)

said...

//பகவதி பகவானின் கல்யாணத்தை இந்த அதிகாலை நேரத்தில் காண எத்தனை கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும். அம்மா பகவானுகி ஜே!

:-)//


கும்ஸ்! கரெக்ட்டா வந்துட்டீரே! சும்மாவா உம்மை ஆ.சூ.ஸ். அப்படின்னு சொல்லறது!! கடைசி சிரிப்பானைப் படிக்காம நீங்க சொல்வதை எல்லாம் சீரியஸாப் படிக்கப் போறாங்க. பார்த்து!

//ஓ. அந்தப் பாட்டு பாக்யத லக்ஷ்மி பாரம்மா மெட்டா? கேட்ட மெட்டா இருக்கேன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்.//

ஐயப்பா ஐயப்ப்பா டோண்ட் வொரி ஐயப்பா மலையேறி நாங்க வாரோம்பான்னு பாடறதுக்கும் இதுக்கும் ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்கவும்!

said...

//என்ன கொடுமை இது சரவணன்!//

எவ்வளவோ பாத்துட்டோம்... இத பாக்க மாட்டோமா?

அதுவும் 2:56ல ஒரு மாமா மாலை போடறார் பாருங்க! என்னா பவ்யம்.. என்னா மரியாதை! அடடா...

இதப்பாக்குறதுக்கே, ஹோமம் நடக்குதுனு அம்மாவும் அப்பாவும் அடுத்தவாட்டி பேப்பர்ல அட்வர்டைஸ்மெண்ட் கொடுக்கறச்சே, ஒரு நடை போயிட்டு வரலாம் போலிருக்கு.

said...

அம்மா பகவான் விடியோவை சென்ற வாரம் தான் ஒரு நண்பர் காட்டினார்.

பரவசம் அடைந்தேன் :)

//நம் இனத்தவர்கள் தினம் தினம் செத்துக்கொண்டிருப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் எழுதி வந்தேறிப் பட்டம் பெற இந்தப் பரமசிவம் விரும்பவில்லைல். //

இப்படி எல்லா டிஸ்கியையும் நீங்களே எழுதி விட்டால் பின்னூட்டம் போடுறவங்க கதி ?

said...

செடி பதிவு எழுதுது..யானை குறுஞ்செய்தி அனுப்புது...நமக்கு எங்கிருந்தெல்லாம் போட்டி வருது சாமி :))

அந்த வீடியோ...கொல கொடும! யாரு அவிங்கல்லாம்? எங்கிருந்து வர்றாங்க? என்ன பண்றாய்ங்க? ஏன் இப்படி?? ம்ம்ம்ம்முடியல!

said...

அடக் கடவுளே......
ஏம்ப்பா ஒட்டு மொத்தமா இவ்வளோ பேருக்கா மெண்ட்டல்?

ஆஸ்பத்ரியில் இடம் இல்லைன்னு கல்யாண மண்டபத்தில் தங்க வச்சுருக்காங்களா?
(-:

said...

நம்ம ஊரில இந்தப் பள்ளம் வெட்டற கொடுமை. இங்க கூடவா!!

பஞ்சபாண்டவர் பூமின்னு நிரூபிக்க ரெண்டு பேரு கலயாணம் செய்துகிட்டாங்களா:(

கனடாவில கட்டவுட் செய்து கல்யாணமா.
ஹைய்யோ,ஹைய்யோ. அதுவும் அந்த ஜோடிக்கா.

said...

//புதிருக்குப் பின்னே புதசெவிதானே//

நல்லா தேடிப் பிடிக்கிறாங்கைய்யா செய்திகளை. செடி ப்ளாக் எழுதறது என்ன, பொம்மை ப்ளாக்குறது எல்லாம் நாங்க ஏற்கெனவே கதையா எழுதிட்டோம்ல :).

//இப்படி எல்லா டிஸ்கியையும் நீங்களே எழுதி விட்டால் பின்னூட்டம் போடுறவங்க கதி ?//

அட அதுக்காக இப்படியே விட்டுட முடியுமா? பஞ்ச்சாரை பஞ்சராக்காம விடுறதில்லை :-) தோ வந்திட்டோம்ல

said...

//நல்லாப் பாருங்க - மாங்கா செடி எழுதற பதிவா இல்லை செடி எழுதற மாங்காப் பதிவான்னு.. (மாங்கான்னா ஜப்பான்ல கார்ட்டூனாமே!)//

ஜப்பான் மாங்கா (கார்டூன்) டேனிஷ் மொழியில பதிவு எழுதுமா? அட பஞ்ச்சாரால ஒரு பஞ்ச் கொடுக்க முடியுமா?

said...

//தமிழ்நாட்டுல கரெண்ட் இருக்குது, காவிரில வெள்ளம் பாயுதுன்னு கூட எழுதுவீங்க போல!//

என்ன திரிபு வாதம் பாருங்க.. தமிழ்நாட்டுல கரெண்ட் இருக்குதுங்கிறது நம்பத்தன்மை இல்லாத செய்தியாம். கரெண்ட் இல்லைன்னா, கரெண்ட் கட் எப்படி இருக்கும்? தமிழ்நாட்டுல மின்சாரத் தடையே இல்லைன்னு போகிற போக்கில் திரிச்சுப் பேசறார்... இப்ப உங்க முகமூடி கிழிஞ்சு, தொங்கி, கழண்டு, விலகி இன்னும் என்னென்னலாமோ ஆயிடுச்சிப் பாருங்க.

said...

//பக்கத்து வீட்டில் புல் வளர்க்காதவன் பல் தேய்க்கிறான்.. எதிர் வீட்டில் புல் வளர்க்காதவன் ஃபுல் அடிக்கிறான்//

//அவர் என்ன இனம்ன்றதைப் பொறுத்தது//

அதாவது பாதிக்கப்பட்டவர் என்ன இனம்-னு தெரிஞ்சா, அதாவது 'அவர் புல் வளர்க்காதவன்னு' தெரிஞ்சா நீங்க ஆதரவு கொடுப்பீங்க. வேற இனமா இருந்தா 'சரியான விவரம் தெரியலையே'ன்னு ஜகா வாங்கிடுவீங்க. நல்லா பல் இளிக்குதய்யா உம்ம ஆணாதிக்க சுயரூபம்.

said...

இன்னும் சில அர்ஜெண்ட் ஆணிகள் இருப்பதால் பிறிதொரு வேளையில் பஞ்சர் தொடரும் :-))

said...

பஞ்ச் அண்ணன் திரும்பவும் ஃபார்முக்கு வந்ததுக்கு ஒரு ஓஓஓஓஒ.

ஸ்ரீதர் நாராயணன், ஏன் இந்தக் கொலை வெறி ?:)

said...

இந்த தடவ பஞ்ச் அண்ணா செம பார்முல இருக்காரு போல. :))

said...

பஞ்சார் பார்ம் நல்லா இருக்கு. இப்படியே போனா கொத்ஸை நீ கம்மியா எழுதுப்பா பஞ்ச் க்கு அதிக இட ஒதுக்கீடு வேணும்ன்னு சொல்ல ஆரம்பிச்சுடுவாங்க!
:-))

ஆமா, யானை எஸ் எம் எஸ் அனுப்பினா புலி என்ன அனுப்பும்?

said...

ம்ம்ம் தலைவரே போற போக்கைப் பாத்தா நெக்ஸ்ட் எழுச்சி மாநாடா? இல்லை ரசிகர் சந்திப்பான்னு தெரியல்லயே.... எதுக்கும் மதுரை பத்தி அதிகம் புதசெவியிலே எழுதாதீங்க சொல்லிபுட்டேன்...

said...

அட நாதாறிகளா...

இது எதுக்கு... வீடியோவாக்கா?

தெரியலையே...

இருந்தாலும் இருக்கலாம்.. இல்லாமலும் இருக்கலாம்...

எதையும் இப்ப தைரியமா சொல்ல முடிய மாட்டேங்குது :(

said...

இன்னிக்கு நவம்பர் 16 இரவு எட்டே முக்கால் இங்கே! குறுக்கெழுத்து எங்கே சாமி? வார கடசில நேரம் இருக்கும் போட்டுடலாம்ன்னு பாத்தா......