Sunday, October 02, 2011

கோவிலா? கோயிலா?

பலருக்கும் அடிக்கடி வரும் சந்தேகங்கள் லிஸ்டில் கட்டாயம் இதுவும் இருக்கும். இன்னிக்கு ரெண்டு விதமாகவும் பயன்படுத்தறோம். ஆனா கோவிலா கோயிலா எது சரி? 

இந்தக் குழப்பம் இன்னிக்கு நேத்திக்கு வந்தது இல்லை. ரொம்ப காலமாகவே இருக்கும் குழப்பம்தான். இது சம்பந்தமாப் படிக்கும் பொழுது பிழை இல்லாமல் எழுதுவோம் என்ற ஒரு புத்தகத்தில் அந்த காலத்திலேயே இளம்பூரணர் என்பவர் கோயில் என்றும் நச்சினார்கினியர் கோவில்ன்னு எழுதி இருக்கிறதாப் போட்டு இருக்காங்க. 

கோ என்ற சொல்லுக்கே நிறையா அர்த்தங்கள் இருக்கு. பசு, அரசன் என்றெல்லாம் பொதுவாகவே நமக்குத் தெரியும். இறைவன் என்பதும் ஒரு அர்த்தம். அதனால கோ+ இல் (இல்லம் என்பதன் மூலம்) அப்படின்னா கடவுள் உறையும் இடம் அப்படின்னு சொல்லலாம். 

இப்போ இலக்கண விதிகளை எடுத்துக்கிட்டா ரெண்டு வார்த்தைகள் சேரும் போது முதல் வார்த்தையோட கடைசியில் இ, ஈ, ஐ தவிர வேற எந்த உயிர் எழுத்து வந்து முடிஞ்சு, ரெண்டாவது வார்த்தை உயிர் எழுத்தில் ஆரம்பிச்சா, நடுவில் வகரம் வரும். பூ+அழகு இதனாலதான் பூவழகு அப்படின்னு ஆகுது. 

இப்படிப் பார்த்தா கோ+இல் கோவில்ன்னுதான் வரணும். 

ஆனா சிலப்பதிகாரம் போன்ற பழைய நூல்களில் கோயில் அப்படின்னே சொல்லி இருக்கு. கோஇல் அப்படின்னு எழுதி அதை கோயில் எனச் சொல்லி வந்திருப்பாங்களோ என்னவோ. 

பின்னாடி யாராவது கோயில்ன்னு எழுதினா இலக்கண விதிகள் படி சரியா இல்லையேன்னு நினைச்சு கோவில் அப்படின்னு எழுத ஆரம்பிச்சு இருப்பாங்கன்னு நினைக்கிறேன். எதனால் இந்த எக்ஸெப்ஷன்னு கேட்டு தெரிஞ்சா இங்க வந்து அதையும் எழுதறேன். 

முற்காலத்துல கோவில்ன்னு சொல்லாம கோயில்ன்னு சொல்லி இருக்கிறதுனால நாமும் அதை புணர்ச்சி விதிகளில் இருந்து ஒரு எக்ஸெப்ஷனா எடுத்துக்கிட்டு கோயில்ன்னே சொல்லலாம். 

 

Posted via email from elavasam's posterous

6 comments:

said...

கோவிலுக்குத் தான் போவோம். கோயிலுக்கு இல்லை; அது என்னமோ இலக்கண சுத்தமா இருக்கிறாப்போல் ஒரு பீலிங்சு!

said...

கோயில் - பேச்சு வழக்கிலும் கோவில் - இலக்கணமாகவும்னுதான் இவ்ளோநாள் நினைச்சுகிட்டிருந்தேன்

said...

கோயிலே இருக்கட்டும். அதுதான் ரொம்பவும் பழகி வந்திருக்கு. நெருக்கமாகவும் இருக்கு. :)

said...

கீதா
//கோவிலுக்குத் தான் போவோம். //

கோவிலுக்குத்தான் போவோம் என்று சொல்வதே சரி. "தான்" என்பது தனியே பொருள் தராது. அதனால் அதைத் தனியே எழுதுவது தகாது :-)

மற்றபடி, கோயில் என்பதே சரியாக இருக்கக்கூடும் எனத் தோன்றுகிறது.

said...

சரிதான். "தான்"ஐத் தனியாக எடுக்கக்கூடாதா? சரி. நன்றி.

said...

கோ + இல் இதில் இ வருவதால் கோயில் என்பது சரி