Tuesday, December 13, 2011

சீசன் கச்சேரியை சிம்பிளாக் கேட்கலாம்!

சீசன் ஆரம்பிச்சாச்சே, நாமும் கலை சேவை செய்ய வேண்டாமா?! அதுக்காக பாடிட முடியுமா? நம்மாலானது ஒரு பதிவு எழுதியாச்சு. தமிழோவியத்தில் அப்பப்போ எழுதணும்ன்னு கணேஷ் சத்தியம் வாங்கி இருக்கார். அதனால அங்க அனுப்பிப் போடச் சொல்லிட்டேன்.

மார்கழிதான் ஓடிப் போச்சு போகியாச்சு – இப்படி ஆரம்பிக்கும் பிரபல திரைப்படப் பாடல் ஒன்று. ஆனால் மார்கழி ஆரம்பித்த உடனே ஒருத்தர் ரெண்டு பேர் என்று இல்லாமல் பெரும் குழாம் ஒன்று வேறு எங்கும் இல்லாத ஓட்டம் ஒன்றைத் தொடங்கும். அது டிசம்பர் சீசன் கச்சேரிகளைக் கேட்க என்றே சென்னையை நோக்கிப் படை எடுக்கும் ரசிகர் கூட்டம். சுமார் ஆறு வார காலம். அதில் ஆயிரக்கணக்கில் கச்சேரிகள். கூடவே நாட்டியங்கள், செய்முறை விளக்கங்கள் என வேறு பல நிகழ்ச்சிகள். பல வாரங்களுக்கு முன்பிருந்தே ஒவ்வொரு சபாவில் என்று எந்த நேரத்தில் யாருடைய கச்சேரி என நிகழ்ச்சி நிரலை பார்த்து தமக்கென ஒரு அட்டவணையை தயார் செய்து கொண்டு காலை, மதியம், மாலை, இரவு என நாள் முழுதும் கலை சேவை செய்ய தயாராகும் ரசிகர்கள். இந்த ஆர்ப்பரிப்பில் கலந்து கொள்ளவென்றே இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து மட்டுமில்லாமல் உலகெங்கிலும் இருந்து சென்னையை நோக்கிப் படையெடுப்பர் பல ஆயிரம் பேர்.


மேலும் படிக்க - தமிழோவியத்துக்கு போங்க

நண்பர் ஒருவரின் ஐயம். எனக்குச் சந்தேகம் எனச் சொல்ல வேண்டுமா இல்லை எனக்கு சந்தேகம் என்பதுதான் சரியா? என்பது அவர் கேள்வி. பதிவு எழுத சான்ஸ் கிடைச்சாச்சுன்னு இதுக்கும் ஒரு பதிவை எழுதிட்டேன். பதில் இங்க இருக்கு - http://tamildoubt.blogspot.com/2011/12/blog-post.html ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்திடுங்க.

0 comments: